Friday, January 8, 2010

ஒய்.எஸ்.ஆர் கொலை ? மந்திரி புதிய தகவல்


ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம்?
ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம் தீட்டியதாக ரஷ்ய வலைதளம் ஒன்றை மேற்கோள் காட்டி சில தனியார் தெலுங்கு டிவி சேனல்கள்  செய்திகள் வெளியிட்டதை அடுத்து மானிலமெங்கும் ரிலையன்ஸ் தொடர்பான வியாபார தலங்கள், டவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. பல மாவட்டங்களில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஜகன் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:

ரஷ்ய வலைதளம்    ஒன்று 2009 செப்டம்பர் 4 ஆம் தேதி ஆந்திர முதல்வர் டாக்டர்  ஒய்.எஸ்  மரணத்துக்கு பின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சதி இருப்பதாக செய்தி வெளியிட்டது. ஐந்து நாட்களூக்கே அந்த வலைதளம் அப்டேட் செய்யப்படுவதும் நின்று  போய் விட்டது.  ( நேற்றுவரை காட்சி தந்த அதன் பழைய பக்கங்கள் கூட  பின்பு காணப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

 டிவி5, டிவி9 மற்றும் ஒரு தெலுங்கு சேனல்களில் இந்த விசயம்  நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து ஃப்ளாஷ் ஆகின.

இந்த ரஷ்ய செய்தி குறித்து ஏற்கெனவே "ஜனம் கோசம் ஜகன்"( மக்களுக்காக ஜகன் என்ற வலைப்பூவில் விவாதம் கூட நடந்துள்ளது.  ஆனால் அப்போதெல்லாம் கூட  இது பெரிதாய் வெடிக்கவில்லை.

தற்போது தெலுங்கு சேனல்களில் வெளிவந்த ரஷ்ய இதழ் செய்தியின் சாரம்:
 கே.ஜி. பேசினில்  எரிவாயுவை கண்டு பிடித்த ரிலையன்ஸ் தன் வியாபார ஜாலக்குகளை பயன் படுத்தி அந்த எரிவாயுவை வைத்து தீபாவளி பட்டாசு வெடித்து நோகாமல் நோன்பு  கொண்டாட பார்த்தது. இதை ஒய்.எஸ்.தடுத்து நிறுத்திவிட்டார்.முதலில் ஆந்திர மானிலத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு குழாய் கனெக்ஷன் மூலம் எரிவாயு வழங்கி மிச்சமானா யாருக்கு வேணா எவ்ள்வுக்கு வேணம்னா வித்துக்கோனு சொல்லிட்டாரு . இதன் மூலம் ரிலையன்ஸுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம்.   .இதனால் கடுப்பான  ரிலையன்ஸ் ஒய்.எஸ்.ஆரை கொல்ல சதி திட்டம் தீட்டியது. இதற்காக சில நூறு கோடி ரூபாய்களை செலவழித்தது.

 பத்து நாட்களுக்கு முன் சாட்சி தினசரியில் வெளிவந்த செய்திகள்  அடிப்படையில் பார்த்தால் :
 ஒய்.எஸ்ஸுடன் பயணம் செய்த ஒருவரின் வாரிசுகளும் ரிலையன்ஸ் க்ரூப் நிறுவனங்களில் உன்னத பதவிகளில் இருந்ததாக  தெரிகிறது. அந்த சகபயணிக்கு  டஜனுக்கு மேல் வங்கி கணக்குகள் இருந்தாலும்  விபத்துக்கு (?) சில நாட்களுக்கு  முன் திறக்கப்பட்ட புதிய  கணக்கில் இரண்டு தவணைகளாக பெரும்பணம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்..தற்போது முன்னாள் மந்திரி மாரப்பா புதிதாக திகில் கிளப்பியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து தினத்தின் போது பாட்டியா என்ற பைலட் காலை 5.30 மணிக்கு வீட்டிலிர்ந்து புறப்பட்டுள்ளார். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் பேகம் பேட்டை விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.  இடையில் உள்ள இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை வீடு To  விமான நிலைய  பயண நேரமாக  வைத்துக்கொண்டாலும் ஒன்னரை மணி நேரத்தில் அவர் யாரை சந்தித்தார். என்ன பேசினார்

முதல்வரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி  வெஸ்லி கையிலிருந்த துப்பாக்கியின் குண்டுகள் அடங்கிய மேகசின் என்ன ஆனது ?  முதல்வரின் சித்தூர் பயணம் அவரது மரணத்தில் முடியும் வரை முடியாத புதிய ஹெலிகாப்டரின் மராமத்து ஒரு சில தினங்களிலேயே நடந்து  முடிந்தது எப்படி ?  கரிய மேகங்கள் சூழ்ந்துள்ளது அதிக உயரத்தில் ( விமானங்கள் மட்டும் பறக்க அனுமதிக்கப்படும் உயரத்தில் ) பறக்க அனுமதி கேட்ட பைலட்டுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நேரம் ,அந்த உயரத்தில் அவ்வழியில் விமானமேதும் பறந்து கொண்டிருந்ததா? இப்படி எத்தனையோ கேள்விகளை சாட்சி எழுப்பியது.



இந்த சதியின் நிழல் அமெரிக்க வெள்ளை மாளிகை வரை பரவியுள்ளதாகவும் கேள்வி. இந்த மிஷனில் ரிலையன்ஸ் மேலாண்மை அமெரிக்காவில் ஒபாமாவின் உள்வட்டத்தில் இருக்கும் தனது முன்னாள் மேல் நிலை ஊழியர் ஒருவரைகூட  பயன் படுத்தியதாக தகவல்.

இதழ் என்னவோ ரஷ்ய வெப்சைட் தான். அப்டேஷன்  நிறுத்தப்பட்டுவிட்ட வலை இதழ்தான். ஒய்.எஸ்.செத்த மறு நாளே வெளியிடப்பட்ட அரை வேக்காட்டு  செய்திதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் இந்த செய்தியை நாட்டின் உன்னத விசாரணை நிறுவனமான சி.பி.ஐ ஏன் கருத்தில் கொள்ளவில்லை. விசாரித்து "அடிப்படையற்றது" என்று தீர்த்து வைத்திருக்கலாமே.

4 மாதங்கள் கழித்து இந்த அரத பழசான செய்தியை 3 சேனல்கள் ஒரே நேரத்தில் ஃப்ளாஷ் செய்ய என்ன காரணம்? எதிர்கட்சிகளும், காங்கிரசில் கிழவாடிகள் குரூப்பும் (பெரும்பாலும் இவர்கள் தனித்தெலுங்கானா கோருபவர்கள்)  இது ஒய்.எஸ்.மகன் ஜகன் வேலை என்று குற்றம் சாட்டிவருகின்றனர்

சரி ரொம்பவே இலக்கண தமிழ்ல எழுதி கடுப்பேத்தியாச்சு . இப்ப பேச்சுதமிழுக்கு வந்துருவம். அதுதான் சுருக்குனு இருக்கும். ஆந்திரத்துல நடக்கிறது அரசியல் சதுரங்கம். இதுல அரசியல்வாதிகளோட ஆட்டம் தனி. மீடியா ராட்சதர்களோட ஆட்டம் தனி.  நேற்று ஃப்ளாஷ் ஆன செய்திக்கு பின்னாடி அரசியல் சதுரங்கம் மட்டுமில்லே மீடியா சதுரங்கமும் இருக்கு.

ஆந்திரத்துல ராமோஜி ராவோட  ஈ நாடுதான் ( 100 சதம்  தினத்தந்தி மாதிரின்னு சொல்ல முடியாது) மோனாபலியா இருந்தது.  ஆனால் இவர் தனி ராஜாங்கமே நடத்த பார்த்த வெறுப்புல வார்த்தா ( இதன் எம்.டி பின்பு  காங். எம்.பி யானார்) வந்தது. போட்டியா இருந்த உதயம் பத்திரிக்கைய ரா.ராவ் மூடவச்சார். மூடிக்கிடந்த ஆந்திர ஜோதி பத்திரிக்கை ரீ ஓப்பன் ஆச்சு.  இவருக்கு சொந்தமான ஈ டிவி ,ஈடிவி 2 வுக்கு கடந்த பத்துவருடங்களா தலைவலி. தற்சமயம் இந்த சேனல்கள் இரண்டுமே மெயின் ஸ்ட்ரீம்ல இல்லை. போதும் போதாததுக்கு ஜகனின் சாட்சி இதழ் வேறு ( இது தினகரன் மாதிரி)

இப்போ  இன்னைய தேதிக்கு போட்டியிலிருந்து ஈ நாடு க்ரூப் விலகிட்ட மாதிரிதான். ( நாளைக்கு தேர்தல் வந்தா தெ.தேசத்தை தூக்கி பிடிச்சு /அந்த கட்சி ஜெயிச்சுட்டா மீண்டும் வசந்தம் தான்)

சேனல்களிடையில் கடும் போட்டி:

ஆந்திர மானிலத்தின் தெலுங்கானா பகுதிகள் தெலுங்கானா பிரச்சினையால் பற்றி எரிந்து அடங்கி, ராயல்சீமா கோஸ்தா ஆந்திரா பகுதியில் பற்றிக்கொண்ட  சமயம்  ஏபிஎன் (ஆந்திர ஜோதி ) சேனல் கவர்னரின் காமக்களியாட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டது. இதன் தாக்கத்தால் கவர்னர் ராஜினாமா செய்து விட்டு  போனதும் தெரிந்ததே. நான் கவர்னர் உத்தமர் என்று வக்காலத்து வாங்க முனையவில்லை. அதன் ரேட்டிங்  டாப்புக்கு போனது.

சுவாமி காரியம்+ சுய காரியம்:
திவாரி  சீனியர் சிட்டிசன். ஒய்.எஸ்.ஆர் லௌகீகம் தெரிந்த மனிதர். யாரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்வதென்பதை அறிந்த ப்ராக்டிக்கல் மேன். ஒய்.எஸ்.ஆருக்கு பின் ஜகன் மேலும் திவாரியின் அன்பு தொடர்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படும் போது கவர்னரின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை நான் தனியே விவரிக்க வேண்டியதில்லை

ஒய்.எஸ். மரணத்துக்கு பின் முதல்வர் பதவி யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது கவர்னர் திவாரி வெளி நாட்டு சுற்றுப்பயணத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டர். கூடுதல் பொறுப்பாக கர்னாடக கவர்னர் ஆந்திர கவர்னர் பொறுப்பை ஏற்றார்.
ரோசய்யா முதல்வரானார்.

ரோசய்யா முதல்வராவதில் பலருக்கு பலவிதத்தில் லாபம்.முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்தவர்களுக்கு  அவர் சினிமா  தியேட்டர் நாற்காலியில் போடப்பட்ட கர்சீஃப் மாதிரி தெரிந்தார் (முக்கியமாய் சந்திரபாபுவுக்கு) ஜகன் சி.எம். ஆகிவிட்டால் கு.பட்சம் 5 வருடத்துக்கு முதல்வர் பதவியை மறந்துவிட வேண்டியதுதான் என்பது பாபுவுக்கு தெரியும்.

தெலுங்கானா நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. ரோசய்யாவின் பதவி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அனைத்து கட்சிகளும் ப்ராந்திய அடிப்படையில் பிளவு கண்டுவிட்டன.  130 க்கு மேலான எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அரசியல் குழப்பம் துவங்கியது.
ஆந்திர ஜோதி, ஈ நாடு இரண்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே கொள்கையாக கொண்ட பத்திரிக்கைகள். இவர்களின் லொள்ளு தாங்க முடியாமல்தான் ஜகன் சாட்சி தினசரி, சாட்சி சேனல் ஆரம்பித்தார்.

ஆந்திர ஜோதி சேனலின் நோக்கங்கள் இரண்டு:

ஒன்று : ஜகன் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டும். அதற்கு திவாரி கவர்னர் என்ற வகையில் உதவ முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் (அப்படி உதவக்கூடிய மனிதர் இன்னொருவரும் உண்டு.அவர் காலி ஜனார்தன் ரெட்டி /பிரஹ்மினி ஸ்டீல்ஸ். அவருக்கும் எந்த அளவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமோ வைத்தாயிற்று)

இரண்டு: தன் ரேட்டிங்கையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும். இரண்டுமே நிறைவேறியதில் அதன் எம்.டி.ராதாகிருஷ்ணாவுக்கு செமை குஜிலி.அவர்களே மகளிர் சங்கத்தினரை பேட்டிக்கு அழைத்து விவாதத்தில் பங்கு கொள்ளவைத்து அவர்களே " கவர்னர் மாளிகைக்கு போவிங்கதானே ..தர்ணா பண்ணுவிங்க தானே" என்று கேட்டதெல்லாம் கேலிக்கூத்து.  திவாரிக்கு இந்த பலான முகம் இருப்பது பல காலமாக ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தெரியும் .அதை இப்போ இங்கே வெடிக்க செய்ததற்கான அவசியம் யாருக்கு ஏன் வந்தது என்றால் ஆந்திர ஜோதி சேனலையும் சந்திரபாபுவையும்தான் கேட்க முடியும்.

சாதாரணமாகவே போட்டியாளர்களுக்கு எத்தை தின்னால் பித்தம் தெளியுமென்ற நிலை வந்துவிடுமல்லவா?  கவர்னரின் காமக்களியாட்டங்கள் இதர   சேனல்காரர்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிட்டன. புகுந்து விளையாடிவிட்டன. விளைவு ரிலையன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. எனக்கு ரிலையன்ஸ் கம்பெனி மீது காதலேதுமில்லை. பொதுவாக எந்த கேப்பிடலிஸ்ட் மீதும் எனக்கு நல்ல அபிப்ராயமில்லை. மளிகை கடை நாடார்கள் முதல் கறிவேப்பிலை கொத்தமல்லி விற்கும் கிராமத்து விதவை பாட்டிகள் மடியில் வரை கை வைத்த ரிலையன்ஸ் நொறுக்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறேன் என்றால் இந்த தாக்குதல் நடவடிக்கைகளால்
அவர்களது குற்றங்கள் ( சதி உட்பட) ப்ள்ர் ஆகிவிடுகின்றன. அதை விட ஆழமான விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். விசாரணை முடிவு வரும்வரை அவர்களது தயாரிப்புகளை பகிஷ்கரித்திருக்கலாம். அது தான் சரியான தண்டனை. நொறுக்கப்பட்டதால் ரிலையன்ஸ் இழந்தது ஒரு மயிரும் இல்லை. எல்லாம் இன்ஷியூரன்ஸ் கம்பெனி பார்த்துக்குமே

சதியே இல்லை என்றாலும் இது கொலைதான்:
அதிகாரிகள், முக்கியமாய் பாதுகாப்பு அதிகாரிகள் வானிலை கட்டுப்பாட்டுமைய அதிகாரிகள், பைலட்டுகள்,சென்னை ஏவியேஷன் இப்படி  பலரின் பொறுப்பற்ற தன்மையால் நடந்த விபத்தே என்று நிரூபணமானாலும் அதை கொலை என்று தான் கூற வேண்டும்.

ஒரு லொடக்கானி சைக்கிளை ஓவர் ஆயிலிங்கிற்கு விட்டால் கூட என்னாச்சு ஏதாச்சு என்று விசாரிப்போம். கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஹெலிகாப்டரை சர்வீஸுக்கு விட்டுவிட்டு நாற்காலிகளை சூடுபடுத்திக்கொண்டு ,வாயு வெளியேற்றிக்கொண்டிருந்த செயல் கொலை இல்லை என்றால் எங்கே போய் முட்டிக்கொள்ள?

விபத்து /கொலை நடந்தது ஒரு புறம் என்றால் காலையில் நடந்த சம்பவம் பற்றி மாலை 4.30 வரை மாய்ந்து மாய்ந்து கூடி கூடி பேசி வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் காட்டுக்குள் போய் பார்க்க வேண்டும் என்று பேசினார்களே அவர்களையாவது தூக்கில் போடாவிட்டால் அதற்கு ஜன நாயகம் தடையாகுமானால் ஜன  நாயகத்தை தூக்கி போடுங்கப்பா !

அந்த மனிதர் ஹெலிகாப்டர் மோதிய கணமே இறந்துவிட்டார் என்றால் அது அவர் செய்த புண்ணீயம். ஒரு வேளை படு காயமடைந்து இரவில்/மழையில்/குளிரில்/கொடூர மிருகங்களிடையில் இருக்க வேண்டி வந்திருந்தால் ? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

ஆந்திர மானிலத்துக்கு என்னதான் கேடு காலம் வந்துவிட்டதோ தெரியவில்லை. இத்தனைக்கும் இன்று தமிழக அரசு அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்கும் அளவுக்கு ஒய்.எஸ்.ஆர் ஆண்ட மானிலம் இது. ஒரு கிழவாடியை சி.எம் ஆக்கி (ஏறக்குறைய நெடுஞ்செழியன் கேஸ் இது) சோனியா அம்மையார் ஆந்திரத்துக்கு  ஆப்பு வைத்துவிட்டார்கள் . முந்தா  நாள் வெள்ளம், நேற்றுவரை தெலுங்கானா இப்போ இந்த இழவு. தூத்தேறி!