Saturday, January 2, 2010

செக்ஸ் பவர் அதல பாதாளத்துக்கு

பேக் டு தி நேச்சர்
தலைப்பை பார்த்ததுமே ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான். எல்லாரும் அவுத்து போட்டுட்டு திரிங்க. யார் வேணம்னா யாரோட வேணம்னா படுத்துக்கலாம் அதான் நேச்சர்னு எழுதப்போறான்னு நினைச்சா மொத்தமா இல்லாட்டியும் கொஞ்சமா ஏமாந்துருவிங்க.

நாம ஆடை கட்ட ஆரம்பிச்சதுமே உடம்புல இருந்த ரோம ராஜ்ஜியமெல்லாம் உதிர்ந்து போய் இப்ப பிறந்த குழந்தைக்கு கூட முடி உதிர்ர ஸ்டேஜுக்கு வந்தாச்சு. இந்த நிலைமைல மனித உடம்புக்கு குளிர்,வெயில்,மழைய தாங்கிக்கற சக்தி இல்லே. ஸோ அவுத்து போடறதை சினிமா காரிங்களுக்கும் பைத்தியக்காரிகளுக்கும் மட்டும் விட்டுருவம். ஆனால் 24 மணி நேரம் பட்டை கட்டின நாய் மாதிரி கழுத்துபட்டை கோட்டு சூட்டோட திரியற சனம் மட்டும் கொஞ்சமா ரோசிச்சு பார்த்து மாறனும்.

ஒர் மூட்டை உப்பு, ஒரு குடம் எண்ணை ஊத்தி தயாரிச்ச ஊறுகாய்ல சூரிய வெளிச்சம் படலன்னா பூரணம் பூத்துப்போகுது. துவச்ச துணிய வீட்டுக்குள்ளாற காய போட்டா ஊச நாத்தம் வந்துருது. அதான் சூரிய வெளிச்சத்துக்கிருக்கிற சக்தி. ஃபாரினர்ஸ் சன் பாத்தே எடுக்கிறாங்க. நாம என்னடான்னா ஆண்,பெண்கள் உடம்பை பொத்தி பொத்தி நாற அடிச்சுர்ரம். பெண்கள் விசயத்துல புடவையிலயாவது இடுப்பு,மார் பகுதில கொஞ்சமா வெளிச்சம், காத்து பட வாய்ப்பிருந்தது. இப்போ நைட்டில அந்த இழவும் கிடையாது,

ஆண்கள் 24 மணி நேரம் டென்டெக்ஸ் போட்டு விரை கொட்டைகளை அழுத்தி வைக்கிறதால விந்துல உயரணுக்களோட கவுண்ட் குறைஞ்சி போயிருது. மனித உடலின் சராசரி உஷ்ண நிலை 98.4 டிகிரி. இதுல உயிரணு உயிர் வாழமுடியாதுனுதான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளிய விட்டிருக்கு.

இந்த பதிவுல கச்சா முச்சானு இங்கிலீஷ் வார்த்தைகளை உபயோகிச்சிருக்கேன். தனித்தமிழ் என்று சிலும்புபவர்களை பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. நச்சுன்னு இருந்தா அது எந்த மொழியா இருந்தாலும் லபக் பண்ணிருவன். பூனையோட நிறமா முக்கியம் அது எலிய பிடிக்குதாங்கறதுதான் முக்கியம்.

ரூஷோகிட்டே மனித வாழ்வு ஏன் இத்தனை சிக்கலாயிருச்சு இதுக்கெல்லாம் என்ன தான் தீர்வுனு கேட்டப்ப இயற்கைக்கு திரும்பிப்போ " என்றாராம். அதென்ன இயற்கைக்கு திரும்பி போறதுனு கேட்கிறிங்களா?

அதுக்கு இயற்கைல இருந்து எவ்ளோ விலகி வந்துட்டோம்னு தெரியனும். இந்த படைப்புக்கு மூலம் சூரியன் ( சூரிய ஒளிலதான் தாவரங்கள் உணவு தயாரிக்குது. அந்த தாவரங்களை தின்னுதான் மன்சங்க வாழறோம். சீயா சாப்பிடறவன் நானுங்கறிங்களா ? அந்த மிருகம் கூட ஒன்னு தாவரத்தை சாப்பிட்டு வாழுது. ( ஆடு, மாடு) இல்லெனா ,தாவரத்தை சாப்பிட்டு வாழுற உயிரை சாப்பிடுது (கோழி , பாம்பு)

சூரியனோட குட்டி தம்பி சந்திரன் , சந்திரனுக்கு தண்ணீர் மேல அப்படி ஒரு கவர்ச்சி. அதனாலதான் பவுர்ணமி சமயத்துல கடல்ல அலைகள் ரொம்ப உக்ரமா இருக்கும். மனித உடல்ல 70% தண்ணி தான். . கருப்பைல குழந்தை நீச்சலடிக்குதே அந்த பனிக்குடத்துல இருக்கிறதும் தண்ணீதான்.அதனாதான். நாலு தடவை வாயால வயித்தால போனா உடனே டீ ஹைட் ரேஷன் ஆகி தோல் சுருங்கி செத்துக்கூட போயிர்ரம்.

மேலும் கடல் தண்ணி, பனிக்குட தண்ணி, மனித உடல்ல இருக்கிற வாட்டர் கன்டென்ட் எல்லாத்துக்கும் கெமிக்கல் காம்பினேஷன் ஒன்னு தான். கர்பமா இருக்கிற பெண் உப்பு,சாம்பல்,புளி, மாங்கானு சாப்பிடறது பனிக்குட தண்ணியோட கெம்மிக்கல் காம்பினேஷனை கடல் நீருக்கு ஈக்வலா மாத்ததான். ( நன்றி: ஓஷோ)

நீங்களோ நானோ அப்படி வண்டி வண்டியா உப்பு,சாம்பல்,புளி, மாங்கானு சாப்பிட்டா மூச்சா வராது, பேதியாகும். சொல்ல முடியாத இடத்துல கட்டி வரும். அப்புறம் சங்குதான். ஆனால் ப்ரக்னென்ட் லேடிக்கு மட்டும் ஒன்னும் ஆகறதில்லே. ஏன்னா எல்லா ஜூஸும் பனிக்குடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருதுல்ல

கடல் தண்ணீரை அட் ராக்ட் பண்ணி ரவுசு விடற சந்திரன் நம்ம உடல்ல அதே கெமிக்கல் காம்பினேஷனோட 70 சதமா இருக்கிற வாட்டர் கன்டென்டை அட் ராக்ட் பண்ணமாட்டானா என்ன ? அதனால தான் ஜோதிடவியலை வடிவமைச்ச ரிஷிகள் மகரிஷிகள் சந்திரன் ஜலகாரகன்னு குறிச்சிருக்காங்க. அதுமட்டுமில்லே மனோகாரகன் கூட சந்திரனே.

ஒரு வாரம் தண்ணி குடிக்காம, குளிக்காம இருந்து பாருங்க. மென்டலாயிரும், ( என் ஃப்ரண்டு ஒருத்தன் இருக்கான் மாசம் ஒருதரம் தான் குளிப்பான். அவன் உட்கார்ந்தா ஏ.சி. ஆன் பண்ணி ஸ்ப்ரேயர் போட்ட காரே நாறும். குரல் உதறும். ரோட்டை க்ராஸ் பண்ணகூட தடுமாறுவான். ஆண்கள் சுய இன்பம் செய்ற பலான நீலப்படங்களை மட்டும் டிவிடில கலெக்ட் பண்ணீ வச்சிருக்கான்.

வெறும் சந்திரனோட எஃபெக்டே இவ்ளோன்னா இன்னம் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கிட்டு ஆக்சிஜன் தர்ர மரங்கள், மரங்கள் தர்ர கனிகள், நிலத்துல விளையற அரிசி,பருப்பு இப்படி எத்தனையோ இருக்கு. சகல உயிர்கள், உயிர்களின் உடல்கள் இயற்கையுடன் பின்னிப்பிணைஞ்சிருக்கு. இந்த பூமிக்கு உயிர் இருக்கு. அதை சாரம்ங்கறாங்க. அதனாலதான் விதை முளைவிடுது.

அது தொடரனும்னா எக்கலாஜிக்கல் பேலன்ஸ் இருக்கனும், டவுன்ல பார்த்தா எலித்தொல்லை உச்சத்துல இருக்கு. காரணம் உணவுக்கழிவுகள். பூனைகள் கம்மி. ஏன்னா நாய்கள் அதிகம்.

தெலுங்கு பேப்பர்ல பார்த்திங்கனா தினசரி அரைடஜன் பேராவது பாம்பு கடிச்சு சாவறதை செய்தியா படிக்கலாம். நகரமயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் காரணமா பாம்பை உண்ணக்கூடிய கீரி இத்யாதி இனம் காணோம். பாம்பு பெருகிப்போச்சு.

இந்த எக்கலாஜிக்கல் பேலன்ஸ் இருக்கனும்னா எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ, இரை தேட, இனப்பெருக்கம் செய்ய சம வாய்ப்பு இருக்கனும் சுத்தமான காத்து, தண்ணி இருக்கனும், பூச்சிக்கொல்லி மருந்துகள் வேர்வழியா , இலை வழியா தாக்காத அரிசி,பருப்பு, காய் கறி வேணம். செல்லிலிருந்து வெளிப்படும் அலை வீச்சு இருக்க கூடாது.

பறவை காதலர்கள் அய்யோ அந்த பறவை இல்லே இந்த பறவை இல்லேனு மூக்கால அழுதுக்கிட்டிருந்தாங்க. இப்ப என்னடான்னா காக்கா,குருவிய கூட காணோம். முன்னொரு காலத்துல ஒரு எலி செத்து போனா காக்கா கூட்டமே வந்து 10 நிமிசத்துல காலி பண்ணிரும். (எப்படியும் நகராட்சி காரவுக கண்டுக்க மாட்டாங்க)

பெரியவங்க" ஊருடன் ஒத்து வாழ்" னாங்க . இல்லாட்டி ஊர் நம்மை பைத்தியம்னிரும்னாங்க . நான் என்ன சொல்லவரேன்னா இயற்கையுடன் ஒத்துவாழ் இல்லாட்டி உண்மையிலேயெ பைத்தியமாயிருவே.

இந்த இயற்கையை கவனிங்க. இயற்கையோட இயைந்து வாழற பறவைகளை பாருங்க அதுகளோட லைஃப் ஸ்டைல பாருங்க. சூரியன் உதிச்சா கூட்டை விட்டு கிளம்புதுங்க. ( இப்ப சென்னைல இருக்கிற பெரிய மன்சன் பசங்க எல்லாம் இந்த நேரத்துல தான் கூட்டுக்கே போறாங்களாமே நிஜமாலுமா?) சூரியன் மறைஞ்சா கூட்டுல போய் அடங்கிருதுங்க.

இதனால என்ன லாபம்னா? அடுகளோட உயிர் கடிகாரம் இந்த பூமியோட அஜெண்டாவோட (இரவு,பகல், பருவங்கள் முதலானவை) ஒத்து போறதால அதுகளுக்கு மன்சனுக்கு பிரத்யேகமா வர்ர நோய்கள் வர்ரதில்லை . அடுத்து இந்த பூமில என்ன நடக்குங்கறது முன் கூட்டியே தெரியுது.(உ.ம்: பூகம்பம், புயல் வெள்ளம்) இது மாதிரி சந்தர்ப்பங்கள்ள மாடு கன்னு சாகறது கூட அதை நாம கட்டிப்போட்டு வச்சதால, அதை அறுத்துக்கிட்டு போக முடியாததாலடான்

ச்சும்மா தமாசுக்கு ஒரு வாட்டி கற்பனை பண்ணிக்கிடுங்க,

சூரியன் உதிக்கறப்ப வேலை செய்ய ஆரம்பிச்சு , சூரியன் மறைஞ்சதுமே வீட்டுக்கு வந்துர்ரிங்கனு வைங்களேன். பவர் இருக்காது. டிஷ் டிவி இருக்காது. செல்ஃபோன் வேலை செய்யாது. வேணம்னா ரேடியோக்கு எக்செப்ஷன் குடுத்துருவம். என்னாகும். இப்ப நாம கட்டிவச்சிருக்கிற வீடுகள்ள ஃபேன் இல்லாம பத்து நிமிசம் இருக்க முடியுமா? நம்மாளுங்கள்ள நிறைய பேருக்கு நாஸல் கஞ்செஷன் (மூக்கடைப்பு தலீவா) இருக்க காரணமே ஃபேன் தான். இந்த மயித்துல கொசு வத்தி புகை வேற ,இல்லாட்ட ஆல் அவுட். ஒரு ஜன்னலை திறந்துவைக்க முடியாது. திறந்தா தொரட்டி போட்டு லவட்டிட்டு போக காத்திருக்காக. ஏசிங்கறிங்களா அதுல குசு விட்டா அந்த நாத்தம் கூட வெளிய போகாது.

டி.வி இல்லாம இருக்க முடியாது . ஏன் ? நாமெல்லாம் சொந்தமா எதையாவது செய்யறத விட்டு பல காலமாச்சு. எவனோ செய்றத பார்த்துக்கிட்டு இருக்கம். உடலுறவு உட்பட.எங்க பாட்டி,அம்மா காலத்துல கூட ஊறுகாய் ,வத்தல்,வடகம் ,அந்த பொடி இந்த பொடினு என்னென்னமோ செய்வாங்க. ரசத்துல இருந்து எடுத்து போட்டுருவமே அந்த மிளகாய்களை சேகரிச்சு அதுல ஒரு சட்னி பண்ணும் என் பாட்டி . இன்னைக்கும், கல்யாணமாகி 18 வருசமாகியும் என் பெண்டாட்டிக்கு நான் தான் தான் டிப்ஸ் தரேன். ஏதோ ரெண்டு மூனு பொடி வரைக்கும் பண்ற மாதிரி, நல்லதா டீ போடற அளவுக்கு கொண்டு வந்திருக்கேன்.

அப்பல்லாம் குர்ல் ஆன் பெட் எல்லாம் ஏது ? பத்து பழம்புடவைய சேர்த்து தச்சுருவாங்க அதுக்கு தெலுங்குல பொந்தானு பேரு. (Bontha) தாத்த சஸ்தே பொந்த நாதி (தாத்தா செத்தா அவர் படுக்கிற பொந்தா எனக்கு தானு அர்த்தம்) ன்னிட்டு ஒருபழமொழி கூட இருக்கு.

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா மனுசனுக்குள்ள சக்தியிருக்கு. அது உருவாக்கிற சக்தி. எப்படியும் கு.க. கட்டாயமாயிருச்சு. , செக்ஸ் பவர் அதல பாதாளத்துக்கு சரிஞ்சு போச்சு. ஆனால் அந்த சக்தி மட்டும் ஊறிக்கிட்டே இருக்கு. அது உடலளவு சக்தியா இருந்தா நோ ப்ராப்ளம். அது மனோசக்தி. மன்சன்னா உருவாக்கனும்.

இப்ப என்னா மயித்த உருவாக்கறம். டீ வடிகட்டி முதல் சாமான் தேய்க்கிற நார் வரை ரெடி மேட். அந்த உருவாக்குற சக்தியை செலவழிக்க முடியாம பார்த்தே செலவழிக்கிற நிலைக்கு வந்துட்டம். பஞ்சேந்திரியானாம் நைனம் பிரதானம். அதாவது மெய்,வாய்,கண்,மூக்கு செவிங்கற ஐந்து பொறிகள்ள கண்ணு தான் பவர் ஃபுல். மனிதனி சக்தில பாதி கண்ணு வழியாதான் வீணாயிருது. அதனாலதான் தியானத்துல கண்ணை மூடுங்கறாங்க.

ஸோ டி.வி க்கு தடா ( சூரியன் மறைஞ்ச பிறகு)

பவர்:
மறுபடி தெலுங்குல ஒரு பழமொழி. "தீபம் உண்டகானே இல்லு சக்க பெட்டு"
இதுக்கு விளக்கு இருக்கிறப்பவே வீட்டை சீர்படுத்திக்க" ன்னு அர்த்தம். இன்னைக்கு எனக்கு 43 வயசுதான் . ஆனால் நான் பார்த்திருக்கேன். மதியம் 3 அ 4 மணிக்கு ஹரிக்கேன் விளக்கை துடைச்சிக்கிட்டிருப்பாங்க .அப்படின்னா என்ன அர்த்தம் எல்லாரும் சாப்டு முடிச்சு குட்டி தூக்கம் போட்டு அ கெட் ட் கெதர் எல்லாம் முடிஞ்சுருச்சுன்னுதானே . இப்ப 3 மணிக்குதான் சாப்பாட்டு வே(லை) ளையே முடியுது. அது எங்க செரிச்சு வெளிய வர்ரது. அப்போ ஒரு டெட்லைன் இருந்தது.
பொழுது சாய ஆரம்பிச்சுருச்சு வேலைய முடி இன்னம் எப்ப வீட்டுக்கு போய் எப்ப சாப்பிடறதுனு பறப்பாங்க. அம்மி அரைச்சு, யந்திரம் சுத்தி, துணி துவைச்சி, தண்ணி சுமந்து , களி கிளறி ஜிம்முக்கு போக வேண்டிய அவசியமே இல்லாம ஆரோக்கியமா இருந்தாங்க. விதவைகள் பவழ மணிமாலை போடுவாங்க. அது எதுக்குனா மென்ஸ்ட் ருவல் சைக்கிள்ள பிரச்சினை வராம இருக்க . செவ்வாய் கிரகம் தான் இதுக்கு பொறுப்பு. அதுக்குரிய ரத்தினம் பவழம். செம்பு வளை போடுவாங்க. செம்புக்கு உரிய கிரகம் செவ்வாய். இப்ப அந்த இழவெல்லாம் இல்லை பாட்டி கூட ஃபேரன்ட் லவ்லி கேட்குது. இயற்கைலருந்து மனிதன் ஓடினான் ஓடினான் வாழ்வின் அழிவுக்கே ஓடினான்னு சொல்ல இன்னம் ஆயிரம் ஆதாரம் இருக்கு.மீதியை அடுத்த பதிவுல பார்ப்போம் .ஓகே உடு ஜூட்