Friday, November 20, 2009

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வ‌ழ‌ங்குவ‌தால் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ந‌ன்மைக‌ளை பார்ப்போம்.
1.உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வ‌ன்முறையாக,அதிகார வெறியாக, பண பித்தாக வெடிக்கின்ற‌ன. எனவே இவை யாவும்குறையும்.

2.ம‌னித‌ர்க‌ள் ப‌ல்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டு வேலைக‌ளைத்தான்.1.சாத‌ல் 2.சாகசடித்தல் .இவை இர‌ண்டுமே செக்ஸில் சாத்திய‌மாவ‌தால் ஸ்தூலமான கொலைகள், தற்கொலைகள், மறைமுக, தவணை முறை கொலை, தற்கொலைகள் குறையும்

3.செக்ஸை மீண்டும் மீண்டும் அடைய மனிதர்கள் எதற்கும் துணிகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அதை குற்ற உணர்ச்சியுடன் அணுகி, அரைகுறையாக ஈடுபட்டு, ஆழத்துக்கு செல்லாது பாதி வழியில் திரும்புகிறார்கள். கவிஞனின் மனம் தான் முடிக்காத‌ கவிதையையே எண்ணி மருகுவது போல் மனித மனம் மீண்டும் மீண்டும் அதையே வட்டமிடுகிறது
இதனால் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பங்களிப்புகள் குறைகின்றன.

4.மனிதனை நீ மிருகம் என்று ருசுப் படுத்துவது உயிர்பயமும்,பசியும்,
செக்ஸும் தான். மனிதன் மிருகமாகிவிட்டால் அவனை அரசு, சமுதாயம் ,மதம் இத்யாதி எதுவும் கட்டுப் படுத்த முடியாது.


5.ம‌னித‌ருக்குள் இருப்ப‌து ஒரே ச‌க்தி. அது பாலிய‌ல் ச‌க்தி. பாலிய‌ல் ச‌க்தியே ப‌டைப்பு ச‌க்தியாக‌வும்,வ‌ன்முறையாக‌வும், ப‌ண‌,அதிகார வெறியாக‌வும்,யோக‌ச‌க்தியாக‌வும் வெளிப்ப‌டுகிற‌து. அது மேனோக்கி பாய்ந்தால் (ஸ்தூலமாக அல்ல உன்னதங்கள் நோக்கி என்று புரிந்துகொள்ளுங்கள்) அது யோகிக் பவர். கீழ் நோக்கி பாய்ந்தால் அது செக்ஸ் பவர்.

6.மேனோக்கியா, கீழ் நோக்கியா (எல்.ஜி. இல்லையா) என்பது கேள்வியல்ல. முதற்கண் அந்த சக்தி அசைய வேண்டும் எதையோ நோக்கி பாய வேண்டும். அது அசையவோ,பாயவோ துடித்துக்கொண்டே இருக்கும். தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாதென்ற பாஸ்கலின் விதி தெரியுமல்லவா? அதை அழுத்தி வைத்தால் வெடிக்கிறது. சிலர் ரேப்புகிறார்கள், சிலர் பணத்தை துரத்துகிறார்கள்

6.ம‌னித‌ர்க‌ள் எது செய்தாலும் அதை தூண்டுவ‌து செக்ஸ்தான். அத‌ன் பின் இருப்ப‌து செக்ஸ்தான். ப‌ண‌ம்,புக‌ழ்,ஒழுக்க‌ம்,துற‌வு,தியாக‌ம் எத‌ன் பின்னும் இருப்ப‌து செக்ஸ்தான். பொத்தி பொத்தி வைத்து அவனவன்/அவளவள் ஆய் போக ஒதுங்கறச்ச கூட தப்பு பண்ணிட்டு கண்ட நோயை வாங்கி/கொடுத்து நாறிப்போனது ஒரு பக்கம், அதால கொலை/தற்கொலை மறு புறம் , இன்னொரு பக்கம் பார்த்தா அடுத்த தலைமுறை ? அதன் ஆரோக்கியம் (உடல் மனம் ) .

உதவாத விசயங்கள், பிரிலிமினரி ஃபேக்ட்ஸ்...

1.பெண்களுக்கு தாயே மாதாந்திர விலக்கின் போது சுத்தப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் தேவையற்ற ரோமங்களை நீக்கிவிடு என்று எந்த தாயாவது கூறியிருக்கிறாளா ? இல்லை .

2.இரவில், தூக்கத்தில் கண்ட கனாவின் பலனாய் தான் தன் ஜட்டியில் போட்ட மேப் காரணமாய் அரண்டு போன பையனை " தம்பி அதெல்லாம் ஒன்னுமில்லடா அணை நிரம்பி வழியறமாதிரி தான் என்ரு எந்த தகப்பனாவது கூறியிருக்கிறானா ? இல்லை

காரணம் என்ன ஹிப்பாக்ரசி .அவள் வயிற்றில் வாங்கி கொண்டு வந்துவிட்டாலோ ? இவன் கொனேரியா, சிஃபிலிஸ் வாங்கிக்கொண்டு விட்டாலோ வாயிலும் வயிற்றிலும் அடித்து புலம்புவது . தேவையா /


ஆணுறை க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ இந்த‌ யுக‌த்தில் கூட இளைஞர்களும்,யுவதியரும் தாம் பருவமடைந்த பிறகும் ஏறக்குறைய இருபது வருடங்கள் தங்கள் உறுப்புகளை சிறு நீர் கழிக்க மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நினைப்பது ம‌டிச‌ஞ்சிதனம் மட்டுமல்ல. முட்டாள் தனம். ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌ம்.

இது அவர்களை மன நோய்களுக்கு ஆளாக்குமே தவிர, தகாத உறவு, கள்ள உறவு, சுய இன்பம் இத்யாதிக்கு துரத்துமே தவிர ஒரு இழவும் நடக்காது.

என‌வே பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கிவிட்டால் செக்ஸ் என்ப‌தை மிக எளிதாக மாண‌வ‌,மாண‌விய‌ர் க‌ட‌ந்துவ‌ந்துவிடுவார்க‌ள்.

அதில் ஈடுபட்டால் வரும் தீமைகளை விட ( வித் அவுட் காண்டோம்) அதை நினைப்பதால், அதை பேசுவதால் / பேச முடியாததால் வரும் தீமைகள் அதிகம்.

பெரியவர்கள் ஹிப்பாக்ர‌ட்டுக‌ளாய் வாழ்ந்து இளைய‌த‌லைமுறையை ப‌லி கொண்ட‌து போதும்.

இப்போதாவ‌து ய‌தார்த்த‌வாதிக‌ளாகி நேர்மையுடன் சிந்திப்போம். 40 வ‌ய‌துவ‌ரை இளைய‌ த‌லைமுறையை செக்ஸ் த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ங்க‌திக‌ளை யோசிக்க‌விடாம‌ல் செய்த‌து போதும். இனியாவ‌து புதிய‌ இளைய‌ பார‌த‌த்தை ப‌டைப்போம்

மேலும் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதால். நிறைவான செக்ஸுக்கு வாய்ப்பில்லாத போலீசார்,ரவுடிகள், குட்டித்தலைவர்கள் கூட பலன் பெறுவார்கள். லாக்கப் டெத் குறையும், குற்றமும் குறையும் . அரசியலில் ஊழல் கூட குறையும்

மனிதன் பணம் சம்பாதிப்பதே உள்ளூற அதை பலான விசயத்துக்கு பயன்படுத்தலாம் என்ற ஊமை எண்ணமே என்று மனோதத்துவம் கூறுகிறது