Thursday, November 26, 2009

விபச்சார தடை உயிரியலுக்கே முரண்

விபச்சாரத்தை தடை செய்யனும்னு அயனான வாதங்களை எடுத்துவச்சிருக்காரு. அய்யா திரு பீர் அவர்கள். வலைப்பூவின் பெயர் பல சந்தேகங்களை கிளப்பினாலும் அதெல்லாம் இல்லப்பா என்று மனதைஆற்றிக்கொண்டு இந்த எதிர்வினை பதிவை போடுகிறேன்

எதை தடை செய்யவே முடியாதோ அதன் மீதான தடையை விலக்கிக்கிட்டு அனுமதிச்சுர்ரதுதான் புத்திசாலிதனம்.குடிக்கிறத ஒழிக்க முடியலனு (குடிக்கலனா செத்துப்போயிரமாட்டான் எவனும் . கை கால் உதறும் தட்ஸ் ஆல் )  கள்ளசாராயத்தை காரணமா காட்டி டாஸ்மாக்கை திறந்து விட்ட தமிழகத்துல வாழ்ந்த பீர் எப்படி இந்த பதிவை போட்டாரு தெரியல. பாதிதான் இந்த பதிவுல இருக்கு மீதி அடுத்த பதிவுல வுடு ஜூட்

http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_24.html

மேற்காணும் சுட்டியை க்ளிக்கி விபச்சாரத்துக்கு தடை கேட்கும் பதிவை படித்துவிட்டு இதை படித்தால் நலம்.


//வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது.//

இது தம்பதிகளில் பெரும்பாலானோரின் உறவுக்கும் டெஃபனிஷனாக இருப்பதை பாருங்கள். திருமணமானவர்களை எல்லாம் இரண்டு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று பிரிந்து விட்டவர்கள் இரண்டு பிரிய முடியாதவர்கள்.

தம்பதிகள் கதியே இதென்றால் காதலர்கள், ஒரு தலை காதலர்கள், காமம் (மட்டும்) வேண்டுவோர் கதியென்ன?

அதனால் தான் நான் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறேன்.

தாளி "அது"க்காகவே காதல் பண்றவன், "அது"க்காகவே கல்யாணம் பண்றவனெல்லாம்  ட்ராப் ஆயிருவான்.

மேன்ஷன்ல தங்கி, மெஸ்ல சாப்பிட்டே காலம் தள்றவங்க எண்ணிக்கை என்ன தெரியுமா? அவன் நிலைமை என்ன? ஒன்று சுய இன்பம் இல்லைன்னா ? ஒரு பாலியல் தொழிலாளியை அணுக வேண்டியதுதான்.

// இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும்.//

வரதட்சிணை, பட்டுப்புடவை, கலர் டிவி, வைர அட்டிகை இதெல்லாம் அடங்காதோ

//இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.//

அது அந்தக்காலம் தலை. இப்ப காலம் மாறியிருக்கு. முக்கியமா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. ஆன் லைன் ல வியாபாரம் பண்ணி அரிசி பருப்பு விலையெல்லாம் ஏத்திவிடலாம் . ஆன் லைன்ல விபச்சாரம் மட்டும் நடக்கக்கூடாதா? விபச்சாரத்துக்கு அனுமதியில்லாததால வித விதமான பேர்ல ஃப்ரெண்ட்ஷிப் க்ளப், மசாஜ் க்ளப், ப்யூட்டி பார்லர்னு வச்சு ஒன்னுக்கு பத்தா வசூலிக்கிறாங்க. அதுல ஆயிரத்துல ஒரு பங்கு கூட அந்த செக்ஸ் ஒர்க்கருக்கு சேர்ரதில்லை.  சட்ட அனுமதியிருந்தா இந்த போலீஸ்,ப்ரோக்கர் பசங்க , லாயர் பசங்க, நாலணா டாக்டர் பசங்க பருப்பு வேகாதில்லை . அவிகளுக்குனு ஒரு சங்கம் வரும், ஒரு அமைப்பு வரும், சேமிப்பு, எல்.ஐ.சி எல்லாம் வரும். சட்டம் மட்டும் மாறிப்போச்சுன்னா தேர்தல் நிதி கேட்டு எம்.எல்.ஏ, எம்.பி வேட்பாளர்கள் எல்லாம் வரிசைல நிற்க வேண்டியதுதான்.அப்போ இந்த " நித்ய கல்யாணிகள் " போட்டதுதான் சட்டமாகும்னேன்

//புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள்,  கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.//

இது அந்த காலத்துல இருந்த கல்வியின்மை, சாதீய அமைப்பு, மன்னராட்சில சாத்தியமாச்சு. இப்போ வச்சுருவாங்கல்ல ஆப்பு

// பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது //

அப்போ ஸ்ரீராமனோட தந்தை தசரத மகாராஜாவோட அரண்மனைய என்னன்னு சொல்லனும் சார் ? இப்போ கூட சில தலைங்க ட்ரெயின்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் கூபேல பயணம் பண்ணும் போது சில ஸ்டேஷன்ல சில பார்ட்டிங்க ஏறி கம்பெனி தருதாம்ல / எல்லாம் குமுதம், விகடன் உபயத்துல கேள்வி ஞானம் தான். எலிக்கு அறுவடை காலத்துல அறுவது பெண்டாட்டினு கேட்டிருக்கிங்கல்லா..இவ்ள ஏன் சாஃப்ட் வேர் ஆசாமிகள் பண்ண அலம்பல் தெரியாதா ? இதையெல்லாம் எதுக்கு சொல்லவரிங்கனு தெரியலிங்கண்ணா
பாயிண்டு பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி தரணுமா தரக்கூடாதாங்கறதுதானே .

ராஜா காலம் போச்சு தலைவா ! ( இருந்தாலும் ராகுல்ஜி வந்தா இந்த கதர்சட்டைங்க பண்ற அலப்பறைய பார்த்தா இன்னம் இருக்குதோனு ஒரு சம்சயம் வந்துருப்பு)

//ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.//

நல்ல விசயம் தானே. நம்மாளுங்களை அமைதி காக்க சொல்லி இலங்கைக்கு அனுப்பிச்சா நாறடிச்சுட்டாங்கல்ல. காரணம் என்ன இந்த மாதிரி காம புதிரா இல்லாததுதானே லாக்கப்ல வச்சு ரேப்ப குறைக்கவும் இது நல்ல ஐடியாதான் தலைவா  நோட் பண்ணிக்கிறேன்

//நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது.//

எப்படியோ நிஜத்தை நிர்பயமா ஒத்துக்கிட்டிங்க. ஆனால் தலீவா .. வேலை வெட்டியில்லாத வெட்டிப்பய, சோம்பேறிக்கு சோறெடுத்துட்டு போற சோப்ளாங்கி பசங்கல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு வரதட்சிணை ,வரதட்சிணை நு பிடுங்கி எடுக்கிறானுங்களே.. விபச்சாரம் பெருக இவனுகளும் ஒரு காரணம் தலீவா .. உலக மயம், தாராளமயம், கன்ஸ்யூமரிசம் எல்லாம் சேர்ந்து விபச்சாரமயம் ஆயிருச்சுப்பு . இதுல மட்டும் சாதி,மதம், ஆளும் வர்கம், உழைக்கும் வர்கங்கற வித்யாசமே கிடையாது. எண்ணிக்கைமட்டும் ஜோரா விடுது ஜூட். கணவனுக்கு,பிள்ளைக்கு தெரிஞ்சே .. வெறுமனே லக்சரிக்காக கூட நடக்கு. போலீஸ் இந்த கொழுப்பெடுத்த ............களை விட்டுட்டு அம்பதுக்கும் நூறுக்கும் ஒதுங்குறவகளை போட்டு இம்........சை பண்ணிர்ராங்கப்பு. இதை எல்லாம் தவிர்க்க தான் சட்ட அனுமதி

//ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது.//

பொது இடத்துல புகைக்கிறத தடுத்தமாதிரி. அப்படிதானே.. (காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டு மூணு பத்திக்கு முன்னாடி சிலும்புனேனில்லயா .. சீக்ரட் காதை கொண்டாதலை..  சட்டம் எட்டிப்பார்க்காத கிராமம், மலை கிராமம் மஸ்தா கீது. அங்கேல்லேம் தேவதாசி முறை இல்லேனு யார் சொல்ல முடியும் ?

// பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.//

அவிங்களுக்கு எது சுகத்தை தருதோ அதை கடவுள் பேரால நட‌த்திக்கிறதுதானே அவிக வழக்கம் .

//அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது.//

அரசாங்க கணக்கையெல்லாம் நம்பறிங்களா பீர் ? நான் முதியோர் ஓய்வு தொகை பிரிவில் சில காலம் வேலை செய்தவன். அப்போ டேட்டா கொடுக்கும்போது சில ஐட்டம்ஸ்ல ரவுண்ட் நெம்பர் வரும் ( நான் உண்மையிலயே செய்தபோது) உடனே எங்க எஸ்.டி.ஓ " என்னய்யா நீ வம்புல மாட்டி விட்ருவ போலிருக்கு. எப்பவுமே ரவுண்ட் நெம்பரை போடாதேம்பாரு. இந்த டேட்டாதான் டி.டி.ஓ /டைரக்டர்/ஃபைனான்ஸ் செக்ரடரி/மந்திரினு போய் சட்டமன்றத்துலயோ, பாராளுமன்றத்துலயோ வப்பாங்க 28 லட்சம்னா நான் நம்ப‌வே மாட்டேன். இது எத்தனை சதவீதம் 0.28 சதவீதமா ?
ஆரை ஏமாத்துறாங்க.. குறைஞ்ச பட்சம் 5 சதவீதமாவது இருக்கும் (பார்ட் டைம், ஃபுல் டைம் எல்லாத்தயும் சேர்த்தா அதாவது 5 கோடி )


 //இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம்.//

இதுவும் நான் சொன்ன மாதிரி டுபாகூரு கணக்குதான். குழந்தைகளிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள துடிப்பவர்கள் முக்கால் செக்ஸில் தோற்றவர்களாக இருப்பார்கள்/ இதற்கு காரணம் சட்டப்பபூர்வமான வாய்ப்புகள் இல்லமைதான். கால் வாசி கபோதிங்க இளமை வரும் இத்யாதி மூட நம்பிக்கை காரணமா இறங்குறாங்க. இதுக்கும் செக்ஸ் குறித்த மனம் திறந்த கருத்து பரிமாற்றம், விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளுக்கு வாய்ப்புகள் இன்மைதான்.

// இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது.//

த பார்ரா ! தெனாலி ராமன் காக்கா கணக்குதான் ஞா வருது

// புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், //

காரணம் என்ன ? ஏழ்மை அத நோட் பண்ணனும் பீர் சாப் !

//மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு.//
இதுக்கு காரணம் என்ன ? செல்வம் அத நோட் பண்ணுங்க பீர் சாப் !

// வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், //
சட்டம் போடு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
இந்த விசயத்துல திருடற கூட்டம்னு கூட சொல்ல முடியாது. செக்ஸ் என்பது உயிரியல் கடமை. உயிரியல் உரிமை தலைவா !

//சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். //

அப்படியா ?

//வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். //

இந்தியாவுல மட்டும் எவனுக்கும் அது இல்லவே இல்லையா? அறுத்து ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்களா. இங்கே மட்டும் வீட்டு வேலைக்கு போற பெண்களின் கற்புக்கு அக்மார்க் கியாரண்டி இருக்கா என்ன ?


//இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம்.//

தனி வகை இல்லிங்க. உட் பிரிவுனு சொல்லுங்க‌

// அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.//

நல்ல முன்னேற்றம் தான்.


//விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது.//

வலி, சிரமம் எல்லாம் அது சட்ட வீரோத செயலா இருக்கிறவரைக்கும் தான் சார்
// பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம்.//

எனக்கு தெரிந்து ஜீன்களிலேயே இருந்தால் தவிர , செக்ஸ் மேனியாக்குகள் தவிர எவளும் சாரி எந்த சகோதிரியும் இதை விரும்பி ஏற்பதில்லை. எவரும் தாமாய் வருபவர்கள் அல்ல .. படுகுழிக்குள் தள்ளப்படுபவர்களே.. (சட்ட விரோத தொழிலாக இருப்பதால் படுகுழி  என்று கூறுகிறேன்

// மேலும்,

    * கூடா நட்பு.
    * மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
    * பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
    * போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
    * இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
    * ஊடகங்கள்.
    * வன்புணர்ச்சி.
    * காதல், 'ஓடிப்போதல்'.
    * சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
    * மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
    * பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.//

கர்ணனின் சாவுக்கு எத்தனை காரணங்கள் இருந்ததோ அதற்கு இரட்டிப்பு காரணங்கள் இதற்குண்டு. முழுமுதல் காரணம் :
பொருளாதார சமத்துவமின்மை ,சுரண்டல் ,பசி பட்டினி , உற்பத்திகாரணிகள் மூன்றும் ஆளும் வர்கத்திடமே சிக்கியிருத்தல் ( லேண்ட், கேப்பிடல், ஆர்கனைசேஷன்), சாதீயம் காரணமாய் சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டமை

// இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே.//

இது கால் வாசி பேர் விசயத்துல கரெக்டா இருக்கலாம். முக்கால் வாசி ஆப்பசைச்ச குரங்கு கதை தான்/ இதெல்லாம் ஒன் வே ட்ராஃபிக் மாதிரி (இல்லீகலா இருக்கிறதால) இதையே லீகலா மாத்திட்டா தந்தில வரி விளம்பரம் கொடுத்துட்டு திடீர் பத்தினியாவும் மாறலாம்.

// இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. //

இப்டியே ஏன் சொல்லனும் ? கல்வி கொள்ளை, பெண்ணுரிமை நசிவு, மருத்துவ கொள்ளைனும் சொல்லலாமே. ஏன் ஒரு அரசாங்கம் இருபாலாருக்கும் சாரி முப்பாலாருக்கும் சமத்துவம், இலவச கல்வி, இலவச மருத்துவம் தர முடியாதா என்ன?

ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் இத்யாதி வெத்து சொத்துக்களை க்ளோபல் டெண்டர் ல ஏலம் விட்டு ஸ்டார் ஓட்டலாக்குங்க. வந்த பணத்தை வச்சி பண்ணுங்க. மக்கள் உயிரை விட, மானத்தை விட கல் கட்டிடமா பெரிசு?

//இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். //
பார்த்திங்களா ? நடைமுறைய மறந்துட்டு பேசறிங்க இது டின் ஃபுட், ஃபாஸ் ஃபுட், ஜங்க் ஃபுட் காலமப்பா. ரிலையன்ஸ் காரன் சீக்கிரமே இட்லி கடை கூட வைக்கப்போறாம்பா

//பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.//
இது சட்ட விரோத செய‌லா  இருக்கிறதாலதானப்பு இந்த நிலை . அந்த காலத்துல விதவை மறுமணம் செய்தா கூட "தேவடியாதனம் " செய்துட்டதா அலம்பல் பண்ணாங்க இன்னிக்கு.

//பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.//

சட்டவிரோத தொழிலாக இருப்பதால் தான் ஒரு பாவமும் அறியாத பாலியல் தொழிலாளிகளின் வாரிசுகள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். சட்ட அனுமதி இருக்கும் பட்சத்தில் இந்த நச்சு கலாச்சாரத்துக்கு தூரமாக நல்லதொரு பள்ளியில் கல்வி பெற முடியுமே

//இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். //

நான் கூட தான் சாரு ! என்ன இழவுக்குன்னா .. இந்த பன்னாடைங்க "அது" ஒன்னுதான் வாழ்க்கைனு நினைச்சு ஜொள் விட்டே நாறிபோகுதுங்க அது இவ்ளதான்னு தெரிஞ்சுட்டா திருந்துமேங்கற நல்லெண்ணம்தான். மேலும் அந்த பா.தொழிலாளிகளின் /அவர் தம் வாரிசுகளின் இழி நிலை/ இதை வைத்து அதிகாரம், தனபலம்,பதவி பெற வாய்ப்பிருக்கும்  இழி நிலை கூட ஒரு காரணமே

//அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். //
நிச்சயமாங்க இல்லாட்டி மசாக்கிஸ்ட்,சேடிஸ்ட், ரேப்பிஸ்டுன்னு விதவிதமா பாதை மாறிப்போயிர்ராங்கப்பு. மூனு வயசு குழந்தையக் கூட நம்பி விட முடியாத நிலை

//இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.//

அநியாயம்னு நான் சொல்லலை. செக்ஸுக்கான தகுதியிருந்து, துடிப்பிருந்து அதை பெறாம வாழறது  உயிரியல் விதிக்கே புறம்பானது. மன நலத்துக்கு , சமூக நலத்துக்கு கேடானதுனு தான் நான் சொல்றேன்

//ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,//

திருத்திக்கொள்ளுங்கள் தயவு செய்து.. நம் மனைவியர் கூட ஊரான் வீட்டு பெண்கள் தான்.

//   1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?//

அப்படி போறவ இன்னைக்கே / சட்டம் வரதுக்கு முந்தியே திருட்டு தனமா கூட போவா . போகாதவ எத்தினி சட்டம் வந்தாலும் " போடா ங் " என்று இருப்பாள் இது சைக்காலஜி.
//   2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...//

சர்வ நிச்சயமாக நான் ஏற்கிறேன்.   ஆணின் கேரக்டருக்கும் /அவன் தொழிலுக்கும் எப்படி தொடர்பில்லை என்று சமூகமேற்கிறதோ ( சில மதம்/ நடத்தை சார்ந்த தொழில்கள் தவிர)  அதே போல் பெண்ணும் ஏற்கப்படவேண்டும். பாலியல் தொழில் என்பது அவளது இன உறுப்புக்கு தொடர்பான சங்கதி. அவளுடன் பேசவோ,பழகவோ, சகோதிரியாக ஏற்கவோ,அவளுடன் சேர்ந்து பணி புரியவோ இன உறுப்பு குறித்த சர்ட்டிஃபிகேட் தேவையற்ற ஒன்று. அட அவளை மணப்பதாகவே இருந்தாலும் தேவை ஹெச் ஐ வி டெஸ்ட் குறித்த சர்ட்டிஃபிகேட் தானே தவிர க.கால நடத்தை பற்றியதல்ல

  // 3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?//

இப்பத்தான் ஒரு ரேஞ்சுக்கு வர்ரிங்க. என்னடா இந்த கேள்வி வரலியேனு பார்த்தேன் வந்துருச்சு. நாலு பேருக்கானதுதாங்க நமக்கும் (சாரி ..எங்களுக்கும்) என் உறவினர்களிலேயே சிலர் அப்படித்தான் வாழ்கிறார்கள் . அதற்காக அவர்களை நாடு கடத்தனுமா? தூக்கில் போடனுமா? பகிஷ்கரிக்கனுமா என்ன சார் சொல்ல வர்ரிங்க.

பெண் என்றால் வெறும் துளைதானா? துளையின் சுத்தம்  பற்றித்தானா இத்தனை பெரிய பதிவு . ஷிட் ! பெண் என்பவள் ஃபர்ஸ்ட் அஃபால் ஒரு மனிஷி.அப்புறமாத்தான் ஆணா பெண்ணாங்கற கேள்வி.

//   4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?//

வரட்டும்னேன். வெறுமனே கலர் தண்ணிய பாட்டில்ல கொடுத்து கொள்ளையடிக்கலாம் . நம் நாட்டுப்பெண்கள் அரிய ,அத்யாவசிய சேவை தந்து பொருளீட்டக்கூடாதா?

//முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். //
நம்ம பேராசிரியர்கள் எழுதி ,பாடம் நடத்தினா அல்ஜீப்ராவே ஈஸினு ஆயிரும் . அட விடுங்க சார் .

//குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். //

எவனும்/எவளும்  சுமையா நினைச்சு தனிச்சு வாழலை சார். ஏழ்மை. வாய்ப்புகளீன்மை, குடும்ப சூழல் இப்படி எத்தனையோ. மானசிக காரணங்கள் உள்ளவர்களுக்கு வேணமனா கவுன்சிலிங் தரலாம்.

//இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல.//

இந்த அமைப்ப வச்சுக்கிட்டு. இந்த அரசாங்கங்களை வச்சுக்கிட்டு. ஷிட்.

 //ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.//

உங்களுக்கு ஏங்க இந்த கெட்ட எண்ணம் இன்னும் 20 வருசத்துல எல்லா இரவு ராணியும் (?) கிழவியாயிருவா சார்

//நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை.//
அப்படிங்கறிங்க .. அப்ப ஏன் ரெய்டு,அரெஸ்ட், ஃபைன்,

 //மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது.//

கிழிஞ்சது கிருஷ்ணகிரி. தலை நீ எதுனா தனியா ஐ.பி.சி எழுதி வச்சிரிக்கயா

// இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை.//

ஆண்கள் போட்டோ வெளியாயிட்டா மறுபடி வரமுடியாதுல்ல. தொழில் படுத்துருமில்லை . ரெய்டு போக முடியாதில்ல. மாமூல் வராதில்ல‌


 //முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். //
ஜெயில்ல போய் ஹோமோ செக்ஸுவல்ஸாகி  ஜெயில்களை எயிட்ஸ் பரப்பு மையமாக்கட்டுங்கறது ரேணுகா சவுதரி எண்ணமா  சகோதரா ?

//விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.//

அப்டியா ?

//ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(

விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.//

என்னப்பா இது லாட்டரிக்கு கம்பேர் பண்ணிட்டே. இதுல ஒவ்வொருத்தனுக்கு பரிசு நிச்சயம்பா. கேண்டோம் யூஸ் பண்ணலேன்னாதான் பிரச்சினை. லாட்டரி
வெளிச்சம் தர்ரது அரசுக்கும், சில வெகுசில பிரஜைகளுக்கும்தான்.

ஆனா இது சகலருக்கும். பிறக்கப்போறவங்களுக்கும் கூட நன்மை தரக்கூடிய விசயம் சாரு.