Sunday, November 29, 2009

தமிழரங்கம் கழிவறை சுவரல்ல‌

வலைப்பூ என்பது கழிவறை சுவரல்ல
இந்த பதிவை வேதனையுடன் துவக்குகிறேன். இதுவரை எத்தனையோ மோசமான பதிவுகளை கண்டிருந்தும் கண்டும் காணாமல் போகிறவன் நான். ஆனால் தமிழரங்கம் வலைப்பூவில் தனபால் என்பவர் ஒரு பதிவை போட்டுள்ளார். இது ஜன நாயக நாடு யார் வேண்டுமானாலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.ஆனால் தவறான செய்திகளை தருவதும் , இட்டுக்கட்டுவதும் நல்லதல்ல. எவர் மீதாவது காழ்ப்புணர்வு இருந்தாலும் முதலில் ஃபேக்ட் என்ன என்பதை சேகரித்து அதன் பிறகே நம் கருத்துக்களை அதில் இணைத்து எழுத வேண்டும். இதை ஒப்பினியேட்டட் ஜர்னலிசம் என்பார்களாம். ஆனால் தமிழரங்கத்தில் எழுதியுள்ள தனபால் அப்பக்கத்தை வலைப்பக்கமாக கருதாது கழிவறைச்சுவராக எண்ணிவிட்டாரா என்ற ஐயம் பிறக்கிறது. நூறு கலைஞர்கள் ( நல்ல பக்கம்) , நூறு எம்.ஜி.ஆர் ( நல்ல பக்கம்)  சேர்ந்தாலும் ஒய்.எஸ்.ஆருக்கு ஈடாகாது.  அவர் ஏறக்குறைய காந்தி,காமராஜரை கூட எட்டிப்பிடித்தவர் என்பேன் நான். இதில் மாற்றுக்கருத்திருக்கலாம். மறுக்கலாம். அதற்காக தவறான செய்திகளை பரப்புவது என்ன நியாயம். அதிலும் மறுப்பு தெரிவிக்கவும் வாய்ப்பில்லாதவர்களை பற்றி இப்படி எழுதக்கூடாது என்பதே என் கருத்து. இனி அவரது கருத்துக்களுக்கான எனது மறுமொழியை பாருங்கள் (இது பாதிதான்  மீதி இன்னும் கடுப்பேற்றுவதாயிருப்பதால் என் நாறவாய் /அடச்சீய் கை எதையாவது அடித்துவிடப்போகிறதென்று மீதியை நாளை எழுதுகிறேன்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6439:2009-11-12-23-25-08&catid=278:2009

தனபால் அவர்களே ,
தாங்கள் யார், தங்கள் பின்னணீ என்ன எதுவும் தெரியவில்லை. தங்கள் கட்டுரை ஒருதலைப்பட்சமானது. லட்சக்கணக்கான மக்களின் அபிமானத்தை பெற்ற ஒய்.எஸ். ஜகன் பற்றி தாங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கண்டித்து தனிப்பதிவே போட்டுள்ளேன். உம் விளக்கத்தை தாரும் .. நேர்மை துணிவிருந்தால்.தங்கள் கருத்துக்களின்   தெலுங்கு மொழி பெயர்ப்பை என் தெலுங்கு ப்ளாகில் வைக்க நான் ரெடி. நீங்க ரெடியா ? எதுக்குங்க இப்படி ..ஷிட்
//முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து, யாரை முதல்வராக்குவது என்ற நாய்ச்சண்டை அங்கே ஆரம்பித்தது. //

ஹலோ ! இதை நாய் சண்டைனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டா எப்படி. ஆந்திரா புலி ஒய்.எஸ்.ஆரோட மகன் குட்டிப்புலி ஜெகன்மோகன் ரெட்டிக்கும் , ரோசய்யா என்ற சப்தர்ஜங் வீட்டு கிழட்டு நாய்க்கும் தான் போட்டி .
//அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகள் சாவுச்செய்தி அறிவிக்கப்படும் முன்பே தொடங்கின.//

இந்திரா காந்தி செத்தப்ப துவங்கலியா. எம்.சி.யாரு செத்தப்ப துவங்கலியா. அப்படி துவங்கியே கையில கொடுத்துட்டாங்க. அது காங் கலாச்சாரம் . அது ஒரு கட்சி. அதுக்கொரு சிஸ்டம் இருக்காம் ப்தூ..சட்டை, வேட்டி கிழியாம ஒரு கூட்டமாச்சும் போட்டிருக்கானுகளா
ஆந்திரத்தில் ஒரே ஒரு ராஜசேகர் ரெட்டி முதல்வரா இருந்த  காலத்தில் மட்டும்தான் மானம் மரியாதையோடு கட்சி கூட்டங்கள் நடந்தது. இது சரித்திரம்.

சுபாஷ்போஸ் தலைவரா தேர்வாகியும் காந்தி தடுத்தாட்கொண்ட வரலாறுதான் காங். கட்சுக்கு சொந்தம்
// ராஜசேகர ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.//
இது தவறான செய்தி அண்ணா. உறுப்பினர் சேர்க்கைக்காக கட்சி ஆஃபீஸ்ல நடந்த கூட்டத்துல ரேணுகா சவுதரி பேனர கிழிச்சதால அந்த கூட்டம் ஃபணாலாச்சு. தட்ஸ் ஆல். அது கூட அந்தம்மா ஏற்கெனவே தெ.தேசத்துல இருந்தவங்க. கம்மவார் வகுப்பை சேர்ந்தவங்க. பிரபல பத்திரிக்காதீசர்கள் (ஈனாடு, ஆந்திர ஜோதி), எதிர்கட்சி தலைவர்கள் எல்லாரும் அதே வகுப்பை சேர்ந்தவங்க. இந்தம்மா அவிகளோட அண்டர்ஸ்டாண்டிங் வச்சுக்கிட்டு சி.எம்.போஸ்ட் காலியில்லயே அது இதுனு நக்கல் பண்ணுச்சி. காங்.தொண்டர்கள் கட்சி அலுவலகத்துல இருந்த பேனர்ல அந்தம்மா படத்தை மட்டும் கிழிச்சு எதிர்ப்பு தெரிவிச்சாங்க‌
 // இருப்பினும், காங்கிரசு மேலிடம் ஆந்திர காங்கிரசின் மூத்த தலைவரான ரோசய்யாவை தற்காலிக முதல்வராக்கியது.//

நீங்க தற்காலிகம்னு சொல்றிங்கண்ணா அந்தாளு அப்படியெல்லாம் இல்லவே இல்லேனு மாஃப் காட்னாரு. முந்தா நேத்து சட்டமன்ற கட்சி கூட்டம் நடந்தது முதல்வரை தேர்வு செய்ற அதிகாரத்தை இத்தாலியை சேர்ந்த சோனியாவுக்கு கொடுத்து தீர்மானம் போட்டுச்சு, மேடம் நேத்து ரோசய்யா பேரை அறிவிச்சாங்க‌

//ஜெகன்மோகனின் ஆதரவாளர்களோ 120 எம்.எல்.ஏ.க்களிடமும், 40 எம்.பி.க்களிடமும் அவரை முதல்வராக்க விரும்புவதாகக் கையெழுத்து வாங்கியும், சோனியாகாந்திக்குத் தந்தியடித்தும் மேலிடத்தை மிரட்டினர்.//

ஜன நாயகத்துல பெரும்பான்மைபலம் தான் முக்கியம்னு அரசியல் சாசனம் சொல்லுது . மக்களுக்கே ரைட் டு ஒபினியன் இருக்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ , எம்.பி.க்களுக்கிருக்காதா . இதை தெரிவிச்சா அது மிரட்டலா ?

//அம்மாநில அமைச்சர்கள், ரோசய்யா கூட்டிய எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். சில அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக மிரட்டினார்கள். //

கனகபு சிம்ஹாசனம் பை சுனகமு என்று தெலுங்கில் ஒரு சொலவடை உண்டு. தங்க சிம்மாசனத்துல நாய் உட்கார்ந்த மாதிரினு. இப்பவாச்சும் ஜகனை எப்படியோ சமாதானப்படுத்தி சட்டமன்ற கட்சி கூட்டம் கூட்டி ரோசய்யாவ தேர்வு செய்துட்டாங்க. முந்தா நாள் வரை ? சினிமா தியேட்டர் சேர்ல போட்ட கர்சீஃப் மாதிரிதானே அவரு. ஒய்.எஸ்.ஆர் மாதிரி லீடரோட வேலை செய்துட்டு இந்த மாதிரிமொக்கைகளோட வேலை செய்யனும்னா மானசிகமா பிரிப்பேர் ஆக நேரம் பிடிக்கும் தலை !

//ஆந்திராவில் நோய் வாய்ப்பட்டும், வேறுகாரணங்களால் தற்கொலை செய்து கொண்டும் இறந்து போன 420 பேர்கள், ராஜசேகர ரெட்டியின் சாவினால் அதிர்ச்சியடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து சுற்றுக்கு விட்டனர்.//

பார்த்திங்களா .. இதனாலதான் எனக்கு தமிழ் ஊடகம் மேல நம்பிக்கையே வர்ரதில்லை. எந்த பத்திரிக்கைகள் (ஈனாடு, ஆந்திர ஜோதி) ஒய்.எஸ்.ஆருடன் பங்காளி சண்ட கணக்காய் மோதி வந்தனவோ அதே பத்திரிக்கைகள் தான் ஒய்.எஸ்.ஆர் மரணத்தை அடுத்து 600 பேர் வரை இறந்ததா செய்தி வெளியிட்டன. இதை சுற்றுக்கு விட்டாங்க வட்டிக்கு விட்டாங்கனு எந்த மேதாவி சொன்னான் ? உங்க சோர்ஸ் என்ன சொல்லுங்க பார்க்கலாம்


// இதன் மூலம் மக்களிடையே ராஜசேகர ரெட்டிக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், மக்கள் அனைவரும் ஜெகன்மோகன்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என விரும்புவதாகவும் சித்தரித்தனர். //

இல்லாத ஒன்னை தான் சித்தரிக்கனும். கண்ணகி பத்தினினு சித்தரிக்க வேண்டிய அவசியமில்லே தலை ! சூரியன் கிழக்கிலதான் உதிக்கிறானு ருசுப்படுத்த வேண்டிய அவசியமில்லே .. நீ வா நான் காட்டறேன். ஒய்.எஸ்.ஆர் ஆயில் ப்ரிண்ட் படம் ஃப்ரீனு அந்த ஒரு நாள் மட்டும் சாட்சி பேப்பருக்காக குத்து கொலையே நடந்தது.

//மேலும், தங்களது தரப்பை வலியுறுத்த டெல்லியில் முகாமிட்டு, காங்கிரஸ் மேலிடத்திடம் ஆதரவு திரட்டும் வேலையிலும் இறங்கினர்.//

இது அரசியலமைப்பு சட்டப்படியோ, ஐ.பி.சி படியோ, இல்லே உலக மகா ஜன நாயக இயக்கம் காங் கட்சி விதிகளின் படியோ குற்றம்னு எங்கயுமே சொல்லப்படலியே

//ஆனால் இதற்கெல்லாம் மசியாத சோனியாகாந்தி, ""புதிய உத்தரவுகள் வரும் வரை ரோசய்யாவே முதல்வராக நீடிப்பார்'' என அறிவிக்கச் செய்தார்.//

ஒரு வரில முடிச்சுட்டிங்க தலை .. தலைதலைக்கு பெர்தனம்னு என் அம்மா சொல்லுவாங்க . அப்படிகூத்தடிச்சானுங்க.சோனியா மசிய/மசியாம போக அவிக என்ன ஒடச்ச கடலை சட்டினியா. ஒய்.எஸ்.ஆர் 2003 ல பாதயாத்திரை ஆரம்பிச்ச உடனே மானில காங். சோனியா கைய விட்டு போயிருச்சு. ஒய்.எஸ். ஏதோ பழைய விஸ்வாசத்துல சோனியாவ கோபுர பொம்மை மாதிரி விட்டு வச்சாரு .
அந்த ஒபிடியன்ட் இமேஜை காப்பாத்திக்கனுங்கற ஒரே காரணத்தால ஜகன் அடக்கி வாசிச்சாரு. திருமதி. விஜயலட்சுமி ராஜசேகர் மட்டும் மனோகரால கண்ணாம்பா மாதிரி "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு"னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாறிப்போயிருக்கும்

// இதனால் பிரச்சனை தற்காலிகமாக ஒய்ந்தாலும், ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் தக்க தருணத்துக்காகக் காத்துள்ளனர்.//
தக்க தருணம் வந்துக்கிட்டேதான் இருக்கு. இன்னைக்கு தனித்தெலிங்கானா கோரிக்கையோட சாகும்வரை உண்ணாவிரதம் துவங்குவதாய் அறிவித்த  கே.சி.ஆரை கோழைத்தனமா  அரெஸ்ட் பண்ணீட்டாங்க. தெலிங்கானா மாவட்டங்கள் பற்றியெரியுது. நான் தரேன் தெலிங்கானானு பூச்சி காட்டின சோனியா தில்லில பல்லு குத்திக்கிட்டிருக்க அவர் வச்ச நாய் ஒன்னு கண்டவனையும் புடிச்சி கடிச்சிக்கிட்டிருக்கு. ரோசய்யா ஆட்டம் க்ளோஸ். ஜகன் சி.எம் ஆவது ஷ்யூர்.
//தற்போது முதல்வராக முன்னிறுத்தப்படும் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியலில் குதித்தவர்; //
இதெல்லாம் டுபாகூரு பேச்சு நைனா. தெரிஞ்சா பேசனும் இல்லேனா பொத்திக்கிட்டிருக்கனும்.

கடந்த பொது தேர்தலின் போது தெலிங்கான தரேனு தராததால (சோனியா) கே.சி.ஆர் விலகினார், அமெரிக்காவோட அணு ஒப்பந்தம் போட்டதால (சோனியா) கம்யூனிஸ்டுகள் வெளியேறினார்கள். ஒத்தைக்கு ஒத்தை வாடானு கிராமங்கள்ள பேசுவாங்க. அந்த இழவுக்கு கூட துணீயாம மகா கூட்டமினு கோந்துபோட்டு ஒட்டிக்கிட்டு நின்ன எதிர்கட்சிகளை , மெகா ஸ்டார்னு சிலும்பின சிரஞ்சீவியோட பிரஜாராஜ்ஜியம் கட்சியை ஒண்டியா நின்னு ஒய்.எஸ்.ஆர் மோதி ஜெயிச்சார்.

காங்கிரசுக்கும், மகாகுட்டமிக்கும் வாக்கு வித்யாசம் எவ்ளோ தெரியுமா
ஒரே ஒரு சத‌வீதம். ஆந்திர‌த்து பத்திரிக்கைகள் எல்லாம் எதிர்கட்சிகளோட துண்டு ப்ரசுரமா ஆகி சேறு வாரி இறைச்சப்ப சாட்சி பேப்பரை வச்சுஆப்பு வச்சது ஜகன் தான். ஒய்.எஸ்.ஆர் வேணம்னா எதிர்கட்சி வாக்குகளை சமப்படுத்தியிருக்கலாம். ஆனால் வித்யாசம் ? அது ஜகன் கொடுத்தது. ஜகனோட சாட்சி பேப்பர் கொடுத்தது. சாட்சியோட ரீடர்ஷிப் எவ்ளோ தெரியுமா ? வேணா ஹார்ட அட்டாக் வந்துரும்.

//தெலுங்கில் ஒழுங்காகப் பேசக்கூடத் தெரியாதவர்; //
பதிவுலகத்துல பம்மி பம்மி பேசினாலும் என் வாய் நாற வாய். இது உமக்கெப்படி தெரிந்தது. ஹைதராபாத் கார்ப்போரேட் எலக்ஷன் பிரச்சாரத்துல ஜகன் பேசின ஒவ்வொரு வார்த்தைக்கு கைதட்டல், விசில் பறந்தது கண்ணா 1
(To be cont.