Thursday, November 5, 2009

கம்போடியாவில் 1016 இந்து கோவில்கள்

பிராமணீயம் குறித்து என்னதான் மென்மையாக எழுதவேண்டும். முடிந்தவரை எழுதவே கூடாது என்று நினைத்தாலும் அதுகுறித்த செய்திகளே என்னை இர்ரிட்டேட் செய்கின்றன. முடிந்தவரை இது போன்ற செய்திகள் கிட்டக்கூடிய ஊடகங்களை தவிர்ப்பதே என் வழக்கம். ஆனாலும் என்ன செய்ய

ஜெயேந்திரர் இன்று திருப்பதி வந்து ஒரு நூலை வெளியிட இருக்கிறார். அந்த நூலின் உள்ளடக்கம் என்ன ? காம்போடியாவில் 1016 இந்து கோவில்கள் இருக்கிறதாம். அந்த கோவில்களின் விவரம் மற்றும் அவை குறித்த டூரிஸ்ட் தனமான விவரங்கள் அடங்கியது அந்த நூல் ( நாட்டுக்கு ரொம்ப தேவை பாருங்க.. ஒரு டாஸ் மாக் திறந்தாலும் நாலு சூத்திரனுக்கு பிழைப்பு நடக்கும் கோவில் திறந்தால் ? ஒரு பார்ப்பானுக்கு நடக்கும் ‍ இதற்காக நான் டாஸ்மாக்கை ஆதரிக்கிறேன் என்று வக்ர பாஷ்யம் கூற வேண்டாம்)

விஷ‌யம்தான் இப்படி என்றால் அதை எழுதின பார்ட்டி சித்தூர்முன்னாள் எம்.பி. வெங்கடேஸ்வர சவுதரி. கம்மவார் வகுப்பை சேர்ந்தவர். ஏற்கெனவே ஒரு முறை பிராமணீய குணங்களில்பாதிவரை உள்ள வகுப்புகள் என்று ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தேன் அதில் இந்த வகுப்பும் ஒன்று.

இந்த ஒரே குடும்பம் சித்தூர் பாராளுமன்ற தொகுதி அரசியலை தன் கையில் வைத்திருந்தது. ராமசந்திரன் என்று ஒரு வன்னிய குண்டனை கைக்குள் வைத்துக்கொண்டு இவர்கள் போடாத ஆட்டமில்லை. என்.டி.ஆரும் கம்மவார் வகுப்பை சேர்ந்தவராயினும் அவர் என்றுமே பிராமணீயத்துக்கு தலை வணங்கியவர் அல்லர். (திருமலையில் அவர் அய்யர்களுக்கு வைத்த ஆப்பு ஒன்று போதும்) ஆனால் அவர் வந்த புதிதில் அவரை எப்படியோ வளைத்து தெலுங்கு தேச அரசியலையும் ஹைஜாக் செய்தனர்.

ஆனால் சி.கே.பாபு என்ற ரெட்டி வகுப்பை சேர்ந்தவர் தமிழர்களை, பி.ப, தா.ப.மைனாரிட்டி வகுப்பினரை அணைத்து பிடித்து இவர்களின் ஆதிக்கத்துக்கு வைத்தார் ஆப்பு.

அவர் மட்டும் இவர்களை எதிர்த்து அரசியல் செய்யாதிருந்திருந்தால் இவர்கள் ஜெயேந்திர சரஸ்வதியை வைத்து புத்தகம் என்ன மாவட்டத்தில் காஞ்சி மடத்தின் கிளையையே நிறுவியிருப்பார்கள் . (இப்போது கம்மவார் அரசியல் ஓய்ந்து பலிஜா அரசியல் ஓங்கி, அதுவும் இன்டென்ஸிவ் கேரில் இருப்பது வேறு விஷயம்)

நான் கேட்பது ஒரே கேள்விதான். தாளி புஸ்தவம் எழுத விசயமா இல்லே (இந்த முன்னாள் எம்.பி. இப்போ பாஜக ல இருக்காருங்கோவ்)போட்டது போட்டாங்க அதை வெளியிட இந்த பார்ப்பான் வரனுமா. சரி நீ என்ன பால குமாரன் தம் நாவல்களில் ஆதர்ச பிராமண குணங்களாக வருணித்துள்ளவற்றில் ஒன்றையேனும் பெற்றிருக்கிறாயா?

ஆஸ்பத்திரி இல்லாம , ஸ்விம்ஸ் மருத்துவமனைய காட்டி மெடிக்கல் காலேஜ் கட்டி கல்லா கட்ட வந்த நாயி ..உனக்கு காம்போடியால கோவிலிருந்தா என்ன காங்கோல கோவில் இருந்தா என்ன ?

பலரும் நினைப்பது என்னவென்றால் ஜெயேந்திரர் தான் கேப்மாறி மகா பெரியவாள் உத்தமர். நான் ஏதும் வக்ரித்து கூறவில்லை. இந்த அமுத சுரபிலதான் ரமணி அண்ணாங்கறவர் எழுதின தொடர்ல படிச்ச விஷயத்தை சொல்றேன்.

ஒரு மிராசு ருத்ர யாகம் பண்றார். அதுல ஒரு கிழவாடி அய்யர் மந்திரம் சரியா சொல்லலை. மிராசு அதட்டறார். சம்பாவனை (ஃபீஸ்) கொடுக்கும்போது எல்லாருக்கும் 10ரூ, இவருக்கு 7 ரூ கொடுக்கிறார். பந்தி நடக்கும்போது கிழவாடி அய்யர் சர்க்கரை பொங்கலுக்கு ஜொள்ளு விட இவர் கண்டுக்காம போறார்.

பிறகு பிரசாதம் எடுத்துக்கிட்டு பெரியவாளை தேடிவரார். பெரியவாள் அங்கு நடந்ததை எல்லாம் சொல்றார். அதுக்கப்புறம் என்னாச்சு தெரியுமா கிழவாடி அய்யர் கோவிலுக்கு போய் சபதம் போட்டுட்டாராம் இனி ஸ்வீட்டே சாப்பிடமாட்டேனு.

மிராசுக்கு பேதியாகி பரிகாரம் கேட்க அதை நான் சொல்லமாட்டேன்.போய் கிழவாடிய பிடி. உனக்கு பிராப்தமிருந்தா கிடைக்கும்னிட்டாரு பெரியவரு. மிராசு ஓடோடிபோனாராம் கிழவாடி அய்யரை தேடி அவர் அதுக்குள்ள எமலோகத்துக்கு டிக்கட் வாங்கிட்டாராம்.

மிராசு திவாலாகி செத்துப்போனாராம்.மிராசு செய்தது ஐபிசி படி குற்றமா? யாகங்கறதே அன் ப்ரொடக்டிவ். அதுக்கு மந்திரம் சொல்ல வந்துட்டு தூங்கி வழிஞ்சா ஏன்னு கேட்க கூடாதா? இது எந்த செக்ஷன்படி குற்றம். இன்னும் சொல்லப்போனா கிழவாடிய வேணம்னா கன்ஸ்யூமர் ஃபோரத்துக்கு இழுக்கலாம்.

இந்த இழவெடுத்த சம்பவத்தை 4 பக்கம் எழுதியிருக்காங்க. அதை காட்டை அழிச்சு தயாரிச்ச காகிதத்துல அச்சிட்டு அதுவும் 2009 ல இது எத்தனையாவது பதிப்பு தெரியலை..

நாம ஏதாச்சும் கேள்வி கேட்டா அபிஷ்டு, அம்பாள் சபிச்சுருவா இத்யாதி. அட டுபாக்கூருங்களே..