Saturday, November 14, 2009

சாதிகள் உண்டு சாதிக்கொரு புத்தி உண்டு

ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடும்போது ஆணின் உடலிலிருந்து வீரியம் வெளிப்படும்போது அதனுடன் ஆணின் உடலிலிருந்து ஒரு ஒளி (ஓஜஸ்) அதனுடன் கலக்கிறதாம். அந்த ஒளி தலையிலிருந்து புறப்பட்டால் பிராமண குணங்களுடனும் (ஆள் காட்டி குணங்களுடன் அல்ல) தோளில் இருந்து புறப்பட்டால் சத்ரிய குணங்களுடன், வயிற்றிலிருந்து புறப்பட்டால் வைசிய குணங்களுடன், காலில் இருந்து புறப்பட்டால் சூத்திர குணங்களுடன் குழந்தை பிறக்கும் என்று எங்கோ படித்தேன். ஒரே தந்தைக்கு நான்கு விதமான குணங்கள் கொண்ட குழந்தைகள் பிறக்க இதுவே காரணம். அவ்வை லட்சியவாதி "இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்னு சொல்லி விட்டுட்டாங்க. நான் விசயத்தை கொஞ்சம் பிராக்டிக்கலா அணுக நினைக்கிறேன்.

சாதி என்பது ஒரு குழுவை குறிக்கிறது. ஒரே குழுவுக்குள் திருமண‌ங்கள் நடப்பதால் ஒரே விதமான ஜீன்கள்( குணங்கள்) கொண்ட குழந்தைகள் பிறக்கின்றன. ஏதோ பெரியார் போன்ற பகுத்தறிவு வாதிகள் காரணமாய் கலப்பு திருமணங்கள் பெருகியதில் இந்த இம்சை குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். யாரேனும் இது குறித்து விருப்பு வெறுப்பற்ற சர்வே ஒன்று நடத்தலாம். என்னைக்கேட்டால் ஒரே சாதிக்குள்/ அடச்சே ஒரே மதத்துக்குள் திருமணங்கள் தடை செய்யப்படவேண்டும். தாளி.. கேவலம் பசுமாடு போடற குட்டி உயர்சாதியா இருக்கணும்னு பசுவை இஸ்துக்கினு போய் பணம் கட்டி ஏற விட்டு கூட்டி வர்ரிங்கல்ல. நாளைய சமுதாயம் பவர் ஃபுல்லா இருக்கனூம்னா தயவு செய்து மதம் கடந்த திருமணங்களை நடக்க விடுங்கள்.

அப்புறம் முகத்தை பார்த்து சாதி சொல்றேன், சாதிய வச்சு புத்திய சொல்லிர்ரேன் என்று ஜல்லியடிக்கும் என்னை போன்றவர்கள் மேல/கீழ பொத்திக்கிருவம்ல.

அதுக்காக சாதிசங்கம் , சாதி கட்சியை நான் எதிர்க்கமாட்டேன். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.முதல்ல உன் சாதிக்காரனோட ஒன்று படு. எவனோ கரை வேட்டிக்கட்டினவன் நாலு பேரு வாழ உன்னை போல சோத்துக்கு அல்லாடற இன்னொரு சாதிக்காரனை வெட்டாதே. சாதி சங்கங்கறது எத்தனையோ வகைல தன் சாதி முன்னேற்றத்துக்கு பயன்படலாம்.

வெறுமனே இட ஒதுக்கீடு கேட்டு அலம்பல் பண்றதால பிரயோஜனமில்லை. முன்னேறிய ஒரு ஆசாமி நாலு ஆசாமிக்கு கைட்பண்ணா போதும். (அய்யருங்களை பார்த்து கத்துக்கங்கண்ணா)
அஞ்சு வருசத்துல சாதியே முன்னேறிடும்.

சாதி சங்கங்கள் வைங்கனு சொல்லமாட்டேன். ஏற்கெனவே வச்சிருந்தா அதை எப்படி பயன்படுத்தலாம்னுதான் சொல்றேன். எல்லாரையும் படிக்க வைங்க., படித்த இளைஞர்களை கொண்டு ஃப்ரீ கோச்சிங் தரலாம். கம்ப்யுட்டர் பயிற்சி தரலாம். ஜிம் வைக்கலாம். வருசம் ஒருதரம் டூர் போகலாம். மாசம் ஒரு தரம் பிக்னிக் போலாம். பத்திரிக்கை நடத்தலாம். ஒரு வெப்சைட் வைக்கலாம்.

மனுசனுக்கு காலைல இருந்துராத்திரி வரை, பிறந்ததுல இருந்து சாகற வரை பிரச்சினைதான். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவலாம். இதுக்கு அதே சாதில இருக்கிற இன்டெலக்சுவல்ஸை உபயோகிக்கலாம். இலவச /அல்லது நாமினல் ஃபீயுடன் மேட்ரிமோனி நடத்தலாம். நல்லா படிக்கிற (ஏழை) பசங்களுக்கு ஸ்காலர்ஷிப் தரலாம். வசதியான பசங்களை உற்சாகப்படுத்தலாம். அரசு திட்டங்களில் பலன் பெற உதவலாம். எத்தனையோ செய்யலாம்.

அரசுவேலைய நம்பி வாழறவன் எத்தனை சதம். விவசாயத்தை நம்பி வாழறவன் எத்தனை சதம் ? யோசிச்சு பாருங்க. இட ஒதுக்கீடு கேட்டா விவசாய நிலத்தில ஒதுக்கீடு கேட்கனும் அதை விட்டுட்டு நாலணா அரசு வேலைக்கு அலை பாயறது கேணத்தனம். வெத்து அரசியல் . ஒரு சாதி சங்கம் நினைச்சா நிதி திரட்டி கூட்டுறவு பண்ணை விவசாயம், விவசாயம் சார் தொழிலகங்கள் நடத்தலாம். ஃபேக்டரி வைக்கலாம்.

எல்லா சங்கதியும் ஒளிவு மறைவில்லாம ஜன நாயகபூர்வமா நடக்க ஆன்லைன் உதவும். அதை விட்டுட்டு சாதியே இல்லைனு கண்ணை மூடிக்கிறதும் தப்பு. சாதிக்காக கண்ண மூடிக்கிட்டு எகிர்ரதும் தப்பு.

நான் முதலியார்..இன்னொரு முதலியார் வந்து கத்தில குத்தமாட்டான்னு என்னா கியாரண்டி? இல்லே குத்தினாலும் கத்தி உள்ள இறங்காதா.. என்னத்த சாதி..

அவாளை பாருங்க ! பஞ்ச கச்சம்கட்டினாலும் சரி, ஜீன் போட்டாலும் சரி,ஐ.ஏ.எஸ் ஆனாலும் சரி ஹோம்கார்ட் ஆனாலும் சரி . தன் இனத்தை எப்படியெல்லாம் தூக்கிவிடறாங்க. நாம ஏன் அப்படி செய்யகூடாது.

ஏற்கெனவே சொல்லியிருக்கேன். எம்.எல்.ஏ என்னவோ தலித்துதான் செக்ரட்ரி ? அய்யரு..

உங்கள்ள வசதி வந்ததும் ஆடிட்டர் வேணம்னா அய்யரை தேடறிங்க
திருட்டு கணக்கு கரெக்டா எழுதுவான்னு. ஏன் இப்படி ?