ராஜ பக்சே திருமலை வந்து தர்ஜாவாய் கோவிந்தனை தரிசித்து பந்தாவாய் போனதை வைத்து கருப்புச்சட்டைக்காரர்களும், தமிழுணர்வு மிக்கோரும் மனம் நொந்து நிறையவே எழுதினர்.
ஏழுமலையானுக்கு கண் தெரியாது, காது கேட்காது இத்யாதி ரேஞ்சில் கூட எழுதினர். பாவம் அவர்களுக்கு தெரியாது. இதுவும் ஒரு வகை ஸ்துதியே. இதை நிந்தா ஸ்துதி என்பார்கள். வஞ்சப்புகழ்ச்சிக்கு எதிர்பதம். வஞ்சப்புகழ்ச்சியில் புகழ்வது போல் புகழ்வார்கள். நிந்தா ஸ்துதியில் இகழ்வது போல் புகழ்வார்கள்.
அவர்களுக்கு பாவம் எங்கள் ஏடு கொண்டலவாடுவின் சைக்காலஜி தெரியாது.ஈஸ்வர் ஏக் என்றார் ஷிர்டி பாபா. இறைவனின் திரு நாமங்களில் "மாக்கிர்" என்பதையும் ஒன்றாக குறிப்பிடுகிறது இஸ்லாம். இதற்கு சதிகாரன் என்று பொருள். ஏடு கொண்டலவாடு & துலுக்க நாச்சியார் கதை தெரியுமல்லவா ? சகவாச தோசத்தால் மாக்கிர் என்ற பெயரையும் உரிமையாக்கிக்கொள்ளவோ என்னமோ தெரியாது. ஏடு கொண்டலவாடுவின் ரூட்டே செப்பரேட்.பக்சேவ தன் எதிரில் நிற்க வைத்து ச்சும்மா அப்டி ஒரு லுக் விட்டாப்ல இருக்கு. இலங்கைல பக்சே வுக்கு பொன்சேகாவுக்கும் தகராறு. கொத்தபயாவுக்கும், சேகாவுக்கும் தகராறு. பொன் சேகா அப்ரூவரா மாறப்போறாருனு செய்தி. அமெரிக்கா க்ரீன் கார்டை அமுக்கி வச்சு அழுத்தம் கொடுக்கிறதா சேதி. இப்போ சேகா ராஜினாமா. குவார்ட்டர்ஸை காலி பண்ணிட்டு வீடு பார்த்துக்கிட்டிருக்கார். போக போக பாருங்க.மேலுக்கு தான் சாஃப்டு. உங்க அழகிரிய விட மோசமான கேரக்டரு எங்காளுது. ராவணன் கதை தெரியுமா? நவகிரகங்களை குப்புறப்போட்டு முதுகை மிதிச்சிக்கிட்டுதான் அரியணை ஏறி உட்காருவானாம். ஒரு நாள் நாரதர் பேச்சை கேட்டு மல்லாத்தி வச்சு ஏறினான். என்னாச்சு ? சனி பகவான் சும்மா அப்படி பார்த்தார். பல்ப் மாட்டிக்கிச்சு அதே இழவுதான் பக்சே கதியும். (பாருங்க கதையும்னு அடிக்கப்போனா கதியும்னு டைப்பாகுது)
ஏற்கெனவே ஒரு பதிவில் பக்சே நாற்காலியிலிருந்து தவறி விழுந்தார் இது அவருக்கு ஆப்பு வருவதற்கான அறிகுறி என்று எழுதியிருந்தது ஞா இருக்கிறதா?
இந்த சமாசாரத்தை ப்ளாக் விட்ஜெட் பகுதியில் வச்சிருந்தேன் ஆரும் கண்டுக்கிடலை அதான் பதிவாவே போட்டுட்டன் . ஹி ஹி
பலான ஜோக்குகள் சரிதானா ?
மனசாட்சியுடன் ஒரு விவாதம்
மனசாட்சியுடன் ஒரு விவாதம்
மனசாட்சி: இன்னாபா ஏதோ இந்தியாவ பணக்கார நாடா ஆக்கிட்டுதான் மறுவேலைன்னே ..இப்ப பார்த்தா பலான ஜோக்காவே இருக்கு
முருகேசன்: மிஸ்டர்.ம.சா ! உனக்கு உலகம் போற போக்கே புரியலே. நான் வெறுமனே 10 கோடி இளைஞர்களை கொண்டு நதிகளை இணைப்போம்னு சொல்லிக்கிட்டே இருந்திருந்தா 2006 டு 2009 மே கதை தான் நடந்திருக்கும். தெரியும்ல.. மொத்தமே 2006 பேர்தான் பார்த்திருந்தாக
ம.சா: அப்போ பேப்பர் காரன் சர்குலேஷனுக்குஅடிமை நீ ஹிட்ஸுக்கு அடிமை அப்படிதானே
முருகேசன்: தோ பார் ம.சா.. நான் வித்யாசமா யோசிக்கிறவன். பேப்பர்காரனுக்கு வெறும் சர்க்குலேஷன் தான் லட்சியமே. ஆனா நமக்கு லட்சியம் நிறைவேற ஹிட்ஸும் முக்கியம் தட்ஸ் ஆல்
ம.சா: இன்னாவோபா நீ போற போக்கே சரியில்ல. ஆப்பரேஷன் இந்தியாவுக்கு மங்களம் பாடிட்டியா என்ன தெரியல
முருகேசன்: நீ சும்மா எதிர்கட்சி மாதிரி வெறுப்பேத்தாத. நான் தனி ஒரு ஆசாமி என்னால என்ன செய்ய முடியுமோ அதைதான் செய்ய முடியும்
ம.சா: த பார்ரா அப்போ பந்தாவா ஒன்லி ஒன் வூ கமிட்டட் டு மேக் இண்டியா ரிச்னு போட்டுக்கிட்டப்ப தெரியலையா நீ சிங்கிள்னு
முருகேசன்: அப்ப ஏதோ சாமியெல்லாம் துணையா இருக்குனு நினைச்சேன்
ம.சா: இப்ப மாத்திரம் என்ன ? சாமியெல்லாம் கொடைக்கானலா போயிருச்சு
முருகேசன்: இல்லப்பா வேற ஒரு பார்ட்டி அம்மனோட சத நாமாவளி பாக்கெட் புக் போட பணம் கொடுக்க நான் அதை ரெகுலர் இஷ்யூஸுக்கு திருப்பி விட்டுட்டன். செப்டம்பர் 26 லருந்து நவம்பர் 26 வரை நமக்கு ஆத்தாளுக்கு டெர்ம்ஸ் சரியில்லே
ம.சா: அப்போ நாளைக்கு டைரக்ட் எலக்ஷன்ல உன்னை ஜனாதிபதியா தேர்ந்தெடுத்தபிறகு படக்குனு ஒரு நாள் இப்படி ஆத்தாளுக்கும் எனக்கு டெர்ம்ஸ் சரியில்லெனு கை தூக்கிருவியா
முருகேசன்: என்ன நீ இப்படி மடக்குறே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மக்கள் என் பக்கம் இருந்தா ஆத்தாளுக்கெல்லாம் பயப்படமாட்டேன் தெரியுமில்லே. கங்கையம்மன் திருவிழால ட்ரெயினேஜ் முழுக்க கூழோடறதை தடுக்க கூழ் ஊத்தறத தடை செய்து நொய், கேழ்வரகு மாவு கலெக்ட் பண்ணி பாக்கெட் போட்டு கொடுக்க திட்டம் போட்டவன் நான்
ம.சா: உனக்கு சாமி முக்கியமா ஆசாமி முக்கியமா ?
முருகேசன்: ஆசாமிக்கு ஏதோ செய்யனும் , செய்ய முடியும், அதுக்கு சாமி சகாயம் செய்யும்னு நான் நினைக்கிறதால சாமி முக்கியம். ஆசாமிக்காகதான் சாமி
ம.சா: இதான் ஃபைனலா ?
முருகேசன்: அட ஆமாப்பா
மசா: உறுதியாக /இறுதியாக
முருகேசன்: டிட்டோ டிட்டோ . என்ன ஏதாச்சும் சேனல்ல திருவிளையாடல் படம் போட்டுட்டானா
ம.சா: இப்போ நீ வலைப்பூல எழுதி என்னத்த சாதிக்கிற மாதிரி? பத்திரிக்கைல வாய்ப்பு கிடைக்காதவன் ப்ளாக்ல எழுதுறது பெண் கிடைக்காத சமயம் சுய இன்பம் காண்ற மாதிரி தெரியுமா உனக்கு ?
முருகேசன்: என்ன க்ராஸ் பண்றதா நினைப்போ ? வெயிட் அண்ட் சீ ! கூகுல் ஆட் சென்ஸ் காரன் தமிழ் வலைப்பூக்களுக்கும் விளம்பரம் தரப்போறான். அதுல வர்ர காசை வச்சு ப்ளாகை டெவலப் பண்ணி
ம.சா: அத்தைக்கு மீசை முளைச்சு ..
முருகேசன்: கிட்டே வா . கஸ்மாலம் இப்போ நிறைய பெண்களுக்கு மீசை வர்ரது தெரியுமோ ?
மசா: என்னவோப்பா எனக்கு நம்பிக்கையே இல்லை . கைப்பழக்கம் இத்யாதி பத்தி நிறைய போன் வராப்ல இருக்கு
முருகேசன்: வருது இப்ப என்ன அதுக்கு
ம.சா: இல்லப்பா ஃபுல் டைம் கன்சல்டன்ட் ஆயிரப்போறியோனுதான்
முருகேசன்: யு சீ.. என் ஆ.இ. திட்டத்துல முக்கிய அம்சம் 10 கோடி இளைஞர்களை கொண்டு நதிகளை இணைக்கிறது.அவங்களோட பிரச்சினைய தீர்த்து வச்சா அட தலை சொன்னா சரியாதான் இருக்கும்னு குரல் கொடுப்பாங்கல்லியா
மசா: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடறே
முருகேசன்: அடேய் ம.சா ! நான் சொல்றதை எழுதி வச்சுக்க .. ரெட் இங்க்ல அண்டர்லைன் பண்ணிக்க. சனம் அவங்க லட்சியத்துல (?) ஜெயிச்சாலும் நாறிருவாங்க (வீடு,வாசல், வேலை,வெட்டி இத்யாதி) நான் என் லட்சியத்துல தோத்தாலும் சீறியெழுவேன்
மசா: கிழிஞ்சது போ.
முருகேசன்: த பார் ம.சா என் லட்சியத்துக்கு பின்னாடி ஒரு தேசமிருக்கு. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கியாரண்டி இல்லாத 40 கோடி சனமிருக்கு
ம.சா: அட்றா சக்க அட்றா சக்க அவிக சனியெல்லாம் உனக்கு அடிச்சு கீரைதான் போ
முருகேசன்: அங்கேதான் தப்பு பண்றெ ம.சா. அவிக கிரகமெல்லாம் எப்படியாவது அவிகளுக்கு நல்லது பண்ணனும்னு தவிக்கிது. இந்த பன்னாடைக அவிக தட்டு சோத்தயும் தட்டி பறிக்குதுங்க. அந்த கிரக பலமெல்லாம் எனக்கு வேலை செய்ய போவுது பார். சிறு துளி பெரு வெள்ளம்.
ம.சா: எப்படி ஒய்.எஸ்.ஆருக்கு வேலை செய்த மாதிரியா ?
முருகேசன்: ம.சா. ! இதான் எனக்கு எரியறது. நான் கூட எப்படி எப்படியெல்லாமோ வாழ்ந்தேன் அதுக்குண்டான பலன் எப்ப கிடைச்சது ? திருந்தி வாழ ஆரம்பிச்ச பிறகு. அதே மாதிரிதான் அவர் விசயத்துலயும் நடந்திருக்கும் இப்போ நான் சுட்டெரிக்கப்பட்ட சொக்க தங்கம். நம்ம ஸ்லோகன் தெரியுமில்லே
" ஆத்தா நீ குடுத்தா பிரசாதம், வாங்கினியா காணிக்கை"