Tuesday, November 10, 2009

தவளைக்கூச்சல் Vsபாய்ச்சல்.

யாராவது முட்டாள் தனமாக பேசினால்,செய்தால் மண்டு என்கிறோம். மண்டு என்ற வார்த்தை மண்டூகம் என்ற வார்த்தையிலிருந்துவந்தது. இதற்கு தவளை என்று பொருள். குளமிருக்கும். குளத்தில் தாமரை இருக்கும் (கவிதாயினி இல்லிங்கோ), தாமரைல தேனிருக்கும். தவளைகள் இருக்கும். எங்கயோ இருக்கிற வண்டுக்கு தேன் சங்கதி தெரிஞ்சு வரும். தேனை பருகும். போகும். குளத்துலயே இருக்கிற தவளைக்கு தேன் சங்கதியே தெரியாது. தவளைக்கு ச்சும்மா இருக்க தெரியாது. முருகேசன் என்ற டூ இன் ( பிறப்பால் சூத்திரன் , தேடலில் அக்மார்க் பார்ப்பான் அய்யருங்க வித்தைங்கல்லாம் நமக்கு அத்துப்படின்னா) ராஜ நாகம் இருக்கும்போது நம்ம ஓம்கார் பீலாவிட்டாரே அது போல பாம்பு வரச்ச கூச்சல் போட்டு தன் இடத்தை தானே காட்டிக்கொடுக்குமாம். அதனாலயும் அதை மண்டூகம்னு சொல்றாங்க.

சிலர் இதையே முண்டம்னு சொல்றாங்க. முண்டம்னா தலையில்லாத உடல். (தின‌த்தந்தில அப்பப்ப செய்தியா வரும்) கணவனை இழந்த பெண்ணை முண்டை என்று அய்யர் வீடுகளில் கூட சொல்வதுண்டு. அதாவதுகணவன் தான் தலையாம். தலை போன பிறகு மிச்சமிருக்கிற உடல் முண்டம் தானே .

அட டுப்பாக்கூருங்களே ! ஏன் தலை அது இதுனு சுத்திவளைக்கிறிங்க .. துளன்னு சொல்லிப்போடவேண்டியதுதானே . தலைய வெட்ட முடியாத குறைக்கு மொட்டை போட்டானுங்க. இந்த ப்ரோக்ராமுக்கும் அய்யர் வருவார். அரிசி பருப்பு எல்லாத்தயும் வாங்கிக்கினு தான் போவார்.

அந்தணன் என்றால் என்ன பொருள் ? அம் என்பது குளிர்ச்சியை குறிக்கும். கூல் ! சந்திரனைகூட அம்புலி என்று சொல்வதுண்டு , நிலவொளி கூல் என்பதால். புர்சன் செத்தப்ப பெண்டாட்டிய அவன் பிணத்தோட கட்டி வச்சு கொளுத்தி "சதி " பண்ணுவாங்களே அதுக்கும் அய்யரு அட்டெண்ட் ஆயிருவார். கூல் கூல் ! அதனால தான் அவிங்களுக்கு அந்தணர்னு பேரு.

கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்னு பைபிள் சொல்லுது. நான் சொல்றேன் பெண்ணை வியத்தலே ஞானத்தின் ஆரம்பம். பெண்ணை மதித்தலே ஞானம். பெண் படைப்பின் போன்சாய்க் பிரதி.(ஆண் கூடத்தான். ஆனால் அவனுக்கு தான் பலசாலிங்கற எண்ணம் பலமா உண்டு. இதனால அவன் இயற்கைக்கு எதிரா போராடறதிலயே தன் சக்தியை செலவழித்தான். ஆனால் பெண் இயற்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவள். தனக்கு நிகழ்வதை யாருக்கோ நிகழ்வதாய் வாழும் சக்தி படைத்தவள். இல்லாவிட்டால் சமூகத்தில் அவள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் கொடுமைகளை அவள் தனக்கு நிகழ்வதாய் உணர்ந்து எதிர்வினை புரிந்திருந்தால் பாதி ஆண்களுக்கு லுல்லா கட் ) அந்த எல்.கே.ஜி. கூட இல்லாத தாளிங்க வேதம், கீதம்னு ஜல்லி.

கீதைல கண்ணன் சொல்வாரு. " நீ எந்த ரூபத்தில் நினைத்தால் நான் அந்த ரூபத்தில் அருள்கிறேன்". பெண் கிருஷ்ணன் மாதிரி. நீ துளையா நினைச்சா துளை. பிரபஞ்ச தாய்மை என்ற கடலின் அலையாய் பார்த்தால் அலை.

சரி எங்கே விட்டோம் மண்டு, மண்டூகம், முண்டம், முண்டை, தலை, துளை, பிரபஞ்ச தாய்மையின் அலை. ஓகே. தவளை என்னதான் முட்டாள்தனமான தா இருந்தாலும் அதுங்கிட்டே ஒரு அருங்குணம் உண்டு. தண்ணி சல சலக்கிற சவுண்டு கேட்டா முன்ன பின்ன யோசிக்காது படக்குனு குதிச்சுரும்.

தேரையர் கதை தெரியுமா? மூளைல ஒட்டியிருந்த தவளைகுஞ்சை எடுக்க கிண்ணத்துல தண்ணி வச்சு ஆட்டி காட்டினாராம். உடனே தவளைகுஞ்சு தொபுக்கடீர்.

எல்லாத்துலயும் ப்ளஸ் மைனஸ் ரெண்டும் உண்டு. தவளைக்கிட்ட இருக்கிற மைனஸ் கூச்சல். ப்ளஸ் பாய்ச்சல். அதனாலதான் தவளைப்பாய்ச்சல்னு ஒரு நடையே இருக்கு. இன்னைக்கு வேதம், கீதை, ஆகமம்னு ஆளுக்கொரு விதமா பீலா விடறாங்க. இதுல மேற்படி ஐட்டம்லாம் எழுதினவங்க யாரு ? அவங்களுக்கிருந்தது ஞானமா ? வெறுமனே கேள்வி ஞானமா? தெரியாது. அவங்களோட நோக்கம் நல்லதாவே கூட இருந்திருக்கலாம். கால தேச வர்த்தமானமுனு சொல்றாங்களே அதாங்க இடம்,பொருள்,ஏவல் இதெல்லாம் பார்க்காம வேதத்துல இருக்கு, புராணத்துல இருக்குனு அடம் பிடிச்சா அதை என்னாங்கறது. தங்கமேயானாலும் உரசிபார்த்துதான் வாங்கனும் ( நம்ம பசங்க காதல்ல கூட இதே ஃபார்முலாவ பின்பத்துறாங்க)

அப்போ இருந்த ஆட்சி முறை, சமூக நடைமுறை, சொற்ப மக்கள் தொகை, மாசத்துக்கு 3 மழை, சுபிட்சம் இதையெல்லாம் மனசுல வச்சுதான் மேற்படி சமாச்சாரம்லாம் எழுதப்பட்டது. மாறாதது மாற்றம் ஒன்றே. நேற்றிருந்தது இன்றில்லை. பையனை பால் எங்கே கிடைக்கும்னா ஆவின்லனு சொல்ற நாள் வரும்னு நினைச்சமா ? சோத்தை விப்பான்னு நினைச்சமா? அடங்கோ... தண்ணி தண்ணிய விப்பான்னு நினைச்சமா ? எல்லாமே மாறிப்போச்சு.

கம்பனுக்கு வால்மீகி இன்ஸ்பிரேஷன், வால்மீகிக்கு யார் இன்ஸ்பிரேஷன்? ஒரு தகவல் ஒரேதகவல் இந்த தொழில் நுட்ப புரட்சி காலத்துலயே ஒவ்வொரு பத்திரிக்கைல ஒவ்வொரு மாதிரி வருது.அதே போல உண்மை ஒன்றே. அது பைபிளில் ஒருமாதிரி, குரானில் ஒருமாதிரி, புராணங்களில் ஒரு மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வுண்மைய கண்டவர்களின் பெர்சனாலிட்டி உண்மையை வெளிப்படுத்தும் விதத்தை பாதித்திருக்கிறது. உண்மைகள் லேசாக திரிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் அதிகமாகவே. பசியில் இருப்பவனுக்கு இட்லி ஒரு சுற்று பெரிதாக தெரியுமாம். தவளைக்கூச்சலை கேட்பதால் நமக்கு கிடக்கும் நன்மை மழை வரப்போகிறது என்ற தேசலான ,குன்சான உண்மையை அறிய முடிவதே. இது போன்றதே ஆன்மீக கூச்சலும் .

என்னமோ இருக்குது ..மர்மமா இருக்குது என்று அகந்தை வாலை சுருட்டிக்கொண்டு மர்மத்தை பிளக்க முயற்சிக்கலாம். இந்த முயற்சியில் தவளை போன்ற பாய்ச்சல் தேவை. கூச்சல் தேவையில்லை. உண்மையில் ஆன்மீக சாதனை என்பது காலைக்கடன் கழிப்பது போன்று ரகசியமாக செய்யப்படவேண்டியதாகும். அதனால் நமது ஆன்மீக சாதனை நேரு சொன்னது போல் ( இவர்கள் ரகசியமாய் உண்பார்கள். பகிரங்கமாய் மலம் கழிப்பார்கள்) ஆகிவிடக்கூடாது.
ஆன்மீக தவளை கூச்சல்களை புறம்தள்ளுவோம் . ஆன்மீக பரிசோதனை களத்தில் குதிப்போம். அதில் நாமே முயல்கள் ,எலிகளாவோம். கட்டுச்சோறு எட்டு நாளைக்கு என்று ஒரு பழமொழி உண்டு. இப்போவர்ர அரிசி காலைல வடிச்சா சாயந்திரத்துக்கே பூனை பீ மாதிர் ஆகிவிடுகிறது. கட்டுச்சோறேல்லாம் வேணாம்னே. அதுல அய்யருங்க எலிய வச்சு கட்டிப்புட்டானுங்க.

ஆன்மீகம் என்பது வாழ்வில் தோற்ற‌வர்களின் கடைசி புகல். அதை பிழைப்புக்கு உபயோகிப்பது கொலைக்குற்றத்தை விட மோசமானது.