Monday, November 23, 2009

எடிட்டோரியல் மீட்டிங்

தினமலம், தினசரண், தின சனி இப்படி ஏதோ ஒரு நாளிதழ் . அதன் எடிட்டோரியல் மீட்டிங் நடக்குது. அதை இந்த பதிவுல படிக்கப்போறிங்க. அச்சு ஊடகம் எப்படி இருக்கணுங்கற என்னோட கொள்கை முடிவை

நான் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற ஆப்பரேஷன் இந்தியா 2000 பெயரில் ஒரு திட்டம் தீட்டி அதன் பிரச்சாரம்,மற்றும் அமலுக்கு உழைத்து வருவது தெரிந்ததே. அதில் ஒரு அம்சம் என்ன வென்றால் எல்லா தினசரிகளையும் தடை செய்து. பாரத் என்ற பெயரில் ஒரே பத்திரிக்கையை வெளிக்கொணர்வது. அதன் எடிட்டர்கள் நாள் தோறும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.( எவன் என்னைக்கு எடிட்டர்னு கம்ப்யூட்டர் டிசைட் பண்ணும்) 18 மொழிலயும், அனைத்து மானில செய்திகளையும் தாங்கி வரும். அந்தந்த மானிலத்து எடிஷன் அந்தந்த மானிலத்துக்கு போகும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் டச் ஸ்க்ரீனுடன் கூடிய கம்ப்யூட்டர் இருக்கும். அதில் வாசகன் தனக்கு தேவையான பகுதியை மட்டும் அச்சிட்டு எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கும். அல்லது இதனை தனியாருக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் தரலாம். அவன் டிமாண்ட் சப்ளையை பொருத்து முன் கூட்டி அச்சிட்டு வைத்து விற்கட்டும்.

தற்போதுள்ள அதே பப்ளிஷர்ஸ், அதே எடிட்டர்ஸ், அதே நிருபர்ஸ் அதே ஏஜெண்டுகள் ஒரு தேர்வுக்கு பிறகு செலக்ட் செய்யப்படுவார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்றால் வந்து தான் தீர வேண்டும். ஒரே செய்தியை விதவிதமான தொணிகளில் வெளியிட எத்தனி மெஷினரி. மேனேஜ்மென்ட் கொடுக்க நினைத்த  செய்தியை தான்  வாசகன் படிச்சாகனும். தலையெழுத்தா ?
டிஸ்கஷனை


பப்ளிஷர்: என்னய்யா சர்க்குலேஷன் பாட்டுக்கு விழுந்துக்கிட்டே போகுது. என்னத்த இழவு பத்திரிக்கை நடத்தறிங்கய்யா
எடிட்டர்: அய்யா ..எலக்ட்ரானிக் மீடியா வந்துருச்சு. ரஜினி பாத்ரூம்ல வழுக்கி விழுந்தா விழுந்த பத்தாவது நிமிசம் டி.வி.ல வந்துருது  நாம ஆட்டிக்கிட்டு மறு நாள் காலைல கொடுத்தா எவன் படிக்கிறது

பப்ளிஷர்: என்யா டி.வி.ல அவன்( எலக்ட்ரானிக் மீடியா)  எப்படி விழுந்தானுதான் காட்டுவான். நீ நல்லா விசாரிச்சு ஏன் விழுந்தார், விழறதுக்கு முன்னாடி என்னசாப்பிட்டார், என்ன குடிச்சாரு, முதல்ல போய் பார்த்தது யார் இப்படி எழுத வேண்டியது தானே

எடிட்டர்: என்னத்த விசாரிக்கிறதய்யா .. நாய்களுக்கு, நிருபர்களுக்கும் அனுமதியில்லெனு அவனவன் போர்டே போட்டு வச்சிருக்கான்

பப்ளிஷர்: காத்து நுழையாத இடத்ல கூட நுழையனும்யா அவந்தான் ரிப்போர்ட்டர்.
எடிட்டர்: விளம்பர பொறுப்பையும் நாம ரிப்போர்ட்டருக்கே கொடுத்திருக்கமா விளம்பரம் கேட்கதான் வரானு அவனவன் ஒளிஞ்சுக்கறான் சார்

சப் எடிட்டர்: பரபரப்பான செய்தி கொடுத்தா நிறைய விக்கும்சார்..
பப்ளிஷர்: எங்கே தொண்டையிலயா ?
எடிட்டர்: சார் .. அந்த விச பரீட்சை வேணாம் சார். ப்ரஸ்ஸை கொளுத்திட்டு போயிருவானுக‌

நிருபர்: யூத்த அட்ராக்ட் பண்ணனும் சார் ..அவிக பத்தி நிறைய எழுதனும் சார்.

பப்ளிஷர்: அதான் அவுத்து போட்ட படம்லாம் போடறிங்களே இன்னும் என்ன ?
நிருபர்: வேலை வாய்ப்பு செய்திகள், இன்டர் நெட் , கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் நிறைய போடறோம் சார்

பப்ளிஷர்: போட்டு கிழிச்சிங்க. இன்டர் நெட்ல சக்கை போடு போட்டு சக்கையாயிட்ட சமாச்சாரத்தை ஒரு வருசம் கழிச்சு போடறிங்க. வேலை வாய்ப்பு செய்தின்னா எல் ஐ சி ஏஜெண்டாகறது எப்படினு பக்கத்தை நிரப்பறிங்க‌

எடிட்டர்: சார் நாங்க நல்லாவே .. பண்றோம். ரெஸ்பான்ஸ் தான் இல்லே
பப்ளிஷர்: எப்படியா இருக்கும் முதல் பக்கத்துல கலைஞர் ஸ்டேட்மென்ட் , இரண்டாம் பக்கம் அம்மா ஸ்டேட்மென்ட் . நாட்ல இதை விட்டா வேற இழவு கிடையாதா?

எடிட்டர்: அப்படியில்லெ சார் நம்ம ட்ரஸ்ட், மெடிக்கல் காலேஜு

பப்ளிஷர்: சரி சரி நான் கொஞ்சம் உ.வ. பட்டுட்டேன்

எடிட்டர்: சார் விஷுவல் மீடியாவோட போட்டிப்போடனும்னா கலர் ஃபுல்லா, விஷுவலா
பப்ளிஷர்: அதான் படமா போட்டு ரொப்பறிங்களே அப்புறம் என்ன இழவு விஷுவல் . விஷுவலா பாருங்க சர்க்குலேஷன் விழுந்துக்கிட்டே போகுது

எடிட்டர்: இந்த ஜோசியம்லாம் போட்டு
பப்ளிஷர்: அட தத் . வித விதமா போட்டாச்சு,ராசி பலன்ல்  ரஜினி படம், நயன தாரா படம் கூட போட்டாச்சு. முகத்துக்கு, உதட்டுக்கு, காலுக்கு ...க்கு கூட பலன் போட்டாச்சு என்ன இழவுய்யா இது சர்க்குலேஷன் உயரலைன்னா உங்க பேண்டெல்லாம் தாழ்ந்துரும் ..  உங்களுக்கு வேற என்னய்யா வேலை தெரியும்

நிருபர்: இதை நான் அப்ஜெக்ட் பண்றேன்.

பப்ளிஷர்: அது சரி எங்கே ஸ்கர்ட் உயருது, எங்கே பேண்ட் இறங்குதுனு பார்த்துக்கிட்டே இருந்ததுல பேண்டை இறக்கிற வேலை கூட தெரியாம போயிருச்சா

எடிட்டர்: சாரி.. சார். நீங்க ரொம்ப அசிங்கமா பேசறிங்க.
பப்ளிஷர்: நீங்க மஜா, டிஸ்கஷன், பஜனைனு  அசிங்கமா எழுதலாம் நான் பேசக்கூடாதா
எடிட்டர்: சரிசார் பேசுங்க கேட்டுக்கறோம்

பப்ளிஷர்: பார்த்துய்யா சாட்சி பேப்பர்ல ஏசுவோட படத்தை ஃபுல் பாட்டிலோட போட்ட மாதிரி பண்ணிர போறிங்க

எடிட்டர்: அப்படியெல்லாம் பண்ணமாட்டோம் சார்
பப்ளிஷர்: அதவிட கோரமா பண்ணி வேட்டி அவுர வச்சிர்ரேங்கிறிங்களா ?

(டிஸ்கஷன் தொடர்கிறது பரிகாரதலம்,சமையல், கிசுகிசு, இலக்கிய கிசு கிசு, தீபாவளி மலர், நாலு புஸ்தகம், இலவச கேர்ஃப்ரீ, விலைகுறைப்பு, விலை அதிகரிப்பு, பரிசு, பெண்கள் பகுதி, சேல்ஸ் ட்ரெயினீஸ் , மாணவ நிருபர், நிருபர்கள்  சம்பளம், ஏஜெண்டுகள், விளம்பரம், பணம் , இத்யாதி பற்றியெல்லாம் தொடரும் டிஸ்கஷனை அடுத்த பதிவில் படிக்க காத்திருங்கள்