Tuesday, November 17, 2009

பெரியார் பல்கலை மானம் போயே போச் !



பெரியார் பல்கலை மானம் போயே போச் !
ஆமாங்க Cudappa (AP)மாவட்டத்துல நடந்த பெரியார் பல்கலை முதுகலை (பி.ஜி) தேர்வுகள் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அரசியல் வாதி வீட்ல நடந்திருக்கு. மாஸ் காப்பியிங் நடந்திருக்கு. குப்பையா புக்ஸை பரப்பி பார்த்து எழுதியிருக்காங்க. இதுல ஒரு ஜெராக்ஸ் மிஷினை வேற வச்சு ஜெராக்ஸ் எடுத்து காப்பி அடிச்சுருக்கானுவ.

சேலம் பெரியார் பல்கலை பத்தி நான் கேள்வி படாத சமாச்சாரமே கிடையாது. என்னதான் ரிப்போர்ட்டரா இருந்தாலும் தினத்தந்தி மாதிரி ரெப்புட்டேஷனுள்ள பத்திரிக்கைல இருந்தும் நாம எலும்பு பொறுக்குற வேலைக்கு போகாட்டாலும் தாளி சேலத்துல இருந்து எவனெவன் வரான். எந்த ஓட்டல்ல ரூமு, எந்த ட்ராவல்ஸ் கார்ல திருமலைக்கு போனான். அங்கே என்ன செலவு யார் செலவழிச்சது எல்லாம் காதுக்கு வந்துக்கிட்டுதான் இருக்கும் .

அதனோட க்ளைமாக்ஸ்தான் இது. சாட்சி நாளிதழ்ல வெளிவந்த செய்தியை தமிழாக்கியிருக்கேன் தட்ஸ் ஆல் .

இனி இது சாட்சி பெரியார் பல்கலை சம்பந்த பட்ட விஷயம் . ஓகே வா ஜூட் 1


தெலுங்கு தேசம் தலைவர் வீட்டில் முதுகலை தேர்வுகள்
( 10/11/2009 சாட்சி தெலுங்கு நாளிதழில் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம்)

ஃபோட்டோவுக்கான ஃபுட் நோட் :
தலைவர் வீட்டில் மாஸ் காப்பியிங் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள்)

* பார்த்து எழுதுதல்
*ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல்
*தலை மறைவான தேர்வு நிர்வாகி
*இப்படி நடக்குமுன்னு எதிர்பார்க்கலை - தலைவர்
ஒன்ட்டி மிட்டா , ந்யூஸ் லைன்
மேற்படிப்புகளுக்கான தேர்வுகள் ஏதேனும் கல்லூரிகளில் நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் மாதவரத்தில் மட்டும் தேர்வு நிர்வாகி ஒரு அரசியல் தலைவரின் வீட்டில் தேர்வை நடத்தி புதிய சாதனை படைத்துள்ளார். இன்னும் கேட்க வேணுமா அனைவரும் கும்பலாக உட்கார்ந்து கொண்டு புத்தகங்களை முன்னே வைத்துக்கொண்டு பார்த்து எழுதினார்கள். இது குறித்த விவரம் வருமாறு தமிழ் நாடு, சேலம் பெரியார் பல்கலை கழகத்தின் முதுகலை தேர்வுகள் மூன்று நாட்களுக்கு முன் துவங்க்கின. ஒன்ட்டி மிட்டா மண்டலம் ,மாதவரத்தை சேர்ந்த பண்டாரு ரத்ன சபாபதி ஜூனியர் காலேஜை தேர்வு மையமாக நிர்ணயித்து ஏற்பாடு செய்திருந்தனர். காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை தேர்வுகள் நடை பெற வேண்டும். ஆனால் கல்லூரியில் நடக்க வேண்டிய தேர்வை ஒரு அரசியல் தலைவர் வீட்டில் நடத்துகிறார்கள் என்ற செய்தி கசிந்தது. உண்மையை கண்டறிய திங்க்கள் கிழமை ந்யூஸ் லைன் களத்தில் குதித்தது. தேர்வு மையமான கல்லூரிக்கு சென்ற போது அங்கு தேர்வு நடப்பதற்குண்டான எவ்வித அடையாளமும் இல்லை. தெலுங்கு தேசம் தலைவரும் மாஜி மண்டல பிரஜா பரிசத் தலைவருமான மண்டூரி ஸ்ரீ ராமுலு வீட்டில் மாணவர்கள் தேர்வு எழுதுவதாய் கிடைத்த தகவலை அடுத்து ந்யூஸ் லைன் அந்த வீட்டுக்கு சென்றது. சுமார் 50 பேர் மாணவர்கள் அங்கு மாஸ் காப்பியிங் செய்வதை காணமுடிந்தது. ந்யூஸ் லைன் கேமராவை கண்டதுமே மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் முகத்துக்கு குறுக்கே கைகளை வைத்து மறைக்க முயன்றனர். இதற்கிடையில் தகவலறிந்த போலீசார் களமிறங்கினர். மாஜி மண்டல பிரஜா பரிசத் தலைவர் மண்டூரி ஸ்ரீ ராமுலு வீட்டிலிருந்த ஜெராக்ஸ் மிஷினை பறிமுதல் செய்தனர்.

தேர்வு நிர்வாகியை போலீசார் தேடினர். சம்பவம் குறித்த முழு விவரங்களை பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து ந்யூஸ் லைன் ஸ்ரீ ராமுலுவை விளக்கம் கேட்டபோது ஏதோ தேர்வு நடத்த இடம் கேட்டதால் கொடுத்தேன் இது இந்த அளவுக்கு போகும் என்று நினைக்கவில்லை எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது என்று கூறினார்.