நண்பர் சுரேஷ் அவர்களின் கட்டளைக்கிணங்க (ஹி ஹி ஏற்கெனவே பதிவா போடறேனு கமிட் ஆன விஷயம் தான். மகா பாரதத்தை வச்சு எத்தனையோ படம் வந்திருக்கு. கட்ட கடைசியா மணிரத்தினம் அய்யர் கூட தளபதினு ஒரு படம் எடுத்து மூட்டை கட்டினார். (ஆமா ஜி.வி.தற்கொலைக்கப்புறம் என்னாச்சு ? ) இப்படி மகா பாரத கதைய வச்சு என்.டி.ஆர் சொந்தமா தயாரிச்சு டைரக்ட் பண்ண படம் தானவீர சூர கர்ணா. இதில் ஒரு காட்சி. கவுரவ,பாண்டவர் படிப்பு முடிகிறது. அவர்களுக்கு டேலன்ட் டெஸ்ட் நிர்வகிக்கிறார்கள். எல்லா வெரைட்டிலயும் கவுரவங்க சரிக்கு சரியா போட்டி போடறாங்க.கடைசில அர்ஜுனன் வரான். சவால் விடறான். துரியோதனன் தவிக்கிறான்.( இந்த பாத்திரத்தை என்.டி.ஆர் தரித்தார். இதுவல்லாது மேற்கொண்டு 2 வேடங்கள் என்.டி.ஆருக்கு. கிருஷ்ணன்,கர்ணன்) அப்போ கர்ணன் என்ட்ரி கொடுக்கிறான்.(இதுவும் என்.டி.ஆர் தான்) நான் சவால் என்கிறான். அப்போ பெரிசுங்க கிராஸ் பண்ணி இவன் க்ஷத்திரியன் கிடையாது சூத்திரன்னு அப்ஜெக்ட் பண்றாங்க.
என்னதான் என்.டி.ஆர் ராமன், கிருஷ்ணன் வேடம் போட்டாலும் அவர் கடவுளுக்கும் தனக்கும் இடையில எந்த புரோக்கரையும்(பார்ப்பனையும்)அனுமதிச்சதில்லே. கீழ் காணும் அதுல துரோணாச்சாரி, கிருபர் போன்ற அய்யருங்களும் அடக்கம். அப்போ தாளி ஜாதி என்னடா ஜாதி எல்லாம் க்ராசிங் தானே என்று ஒரு நீள டயலாக் படத்தில் வரும். அந்த டயலாகில் பார்ப்பனர்கள், மற்றும அவர்கள் கூறும் வேதகால பாத்திரங்களின் கள்ள உறவுகள், கஸ்மால உறவுகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகின்றன. அந்தவசனத்தை தான் இப்போ படிக்கப்போறிங்க ( தமிழ்படுத்தியிருக்கேன்)இதை அனைவரும் படிக்கவேண்டும் என்பதற்காக ரஜினி காந்த் ஸ்டைலில் எழுதியிருக்கிறேன். (பாவம் ரஜினி எப்பயோ அவங்க வீட்டு நாய்க்குட்டி ஆயிட்டாலும் அந்த ஸ்டைலாவது பார்ப்பன எதிர்ப்புக்கு பயன் படட்டும்.
" என்னா குரு (துரோணரிடம்).... சாதிய சாக்கா வச்சு சூத்திரனுக்கு இந்த டேலன்ட் டெஸ்ட்ல இடமில்லேங்கிறியா ..என்னா பேச்சு என்னா பேச்சு ..இது டேலன்ட் டெஸ்டே தப்ப க்ஷத்திரிய டெஸ்டில்லே . அப்படி ஆகவும் கூடாது. சரி இது சாதி டெஸ்டுன்ரியா.. உங்கப்பன் பரத்வாஜன் எப்டி பொறந்தான் தெரியுமா? ரொம்ப புனிதமானவனு உன்னை ஏத்து ஏத்துனு ஏத்தறாங்களே உன் பொறப்பு எப்டியா பட்டது தெரியாதா ? சட்டியில பிறந்தவனாச்சே உன் சாதி என்னா கண்ணா ?
(பீஷ்மரை பார்த்து)
இந்த க்ஷத்ரிய குலத்து முன்னோடி சந்துனு சமுத்திர ராஜனோட பொண்டாட்டி கங்காவ கணக்கு பண்ணதில பொறந்தவந்தானே நீ ..எங்க வம்சத்துக்கு மூல புருஷன்னு சொல்ற வசிஷ்டன் தேவலோகத்து பலான பார்ட்டியான ஊர்வசிக்கு பிறக்கலியா ?
வசிஷ்டன் பஞ்சம ஜாதி குட்டியான அருந்ததிய கண்ணாலம் கட்டிக்கிலயா?, அந்த அருந்ததியம்மா சண்டாளனோட சேர்ந்து ( இந்த வரியை தடை செய்ய வேண்டும். வடிவேலு கூட தன் காமெடியில் அதிகம் உபயோகிக்கிறார்.. சாதிக்கலப்பின் தீவிரம் அய்யமாருக்கு உறைக்கனும்னு நான் உபயோகிச்சிருக்கேன்)பராசரனை, அந்த பராசரன் மீனவப்பெண்ணான மத்ஸ்ய கந்தியை மெறிச்சு (கோழி மாதிரி)வியாசரை,அந்த வியாசன் எங்க பாட்டி அம்பிகையோட படுத்து எங்கப்பனை, எங்க சின்ன பாட்டி அம்பாலிகையோட படுத்து எங்கசித்தப்பன் பாண்டுவை, எங்க வீட்டு வேலைக்காரிய மெறிச்சு நீங்க உத்தமோத்தம்னு தூக்கற விதுரனை பொறக்க வைக்கலியா ? ஜாதியெல்லாம் எப்பயோ சமாதி ஆயிருச்சு கண்ணா .. இன்னைக்கு வந்து நீ மறுபடி ஜாதி ஜாதினு லொள்ளு பண்றே
பார்ப்பன ஆங்காரத்துக்கு ஆதாரம்
கச்ச தேவயானி கதை தெரியுமா தோழா !
அசுரேந்திரன் என்று ஒரு அரசன். அவன் மகள் சர்மிஷ்டை .இளவரசிக்கு தோழி தந்தையின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் (பார்ப்பன பெண்) இவர்கள் குளிக்க போகிறார்கள். கழட்டி வைத்த ஆடைகள் காற்றுக்கு ஒன்றோடு ஒன்று கலந்து விடுகின்றன. உடனே சுக்கிராச்சாரி மகள் வெகுண்டு சபிக்கிறாள்.
சாபத்தை வாபஸ் வாங்க சுக்கிராச்சாரி பஞ்சாயத்து செய்கிறார். என்னா செட்டில் மென்ட் தெரியுமா? ராஜா மகள் ஓசி தீனி திங்கிற பார்ப்பான் சுக்கிராச்சாரி மகளுக்கு கல்யாணம் ஆனா சீர்வரிசையா/தாசியா அவளோட போகனுமாம். அவளுக்கு யயாதியோட தகப்பனோட கல்யாணம் நடக்குது. (யயாதி தெரியுமோல்லியோ ? தன் தகப்பனுக்கு இளமை திரும்ப தன் இளமையை தியாகம் பண்ணினவன்) அந்த சத்ரிய பெண் நாட்டு நலம் நாடி செல்கிறாள். தாசியாக. (இல்லன்னா நான் நாட்டை விட்டு போயிர்ரேனு சுக்கிராச்சாரி ப்ளாக் மெயில் செய்கிறாள்.
அங்கே கதை வேறு மாதிரி திருப்பம் காண்கிறது. சுக்கிராச்சாரியின் மகளை கட்டிக்கொண்டவன் சர்மிஷ்டையை கற்பழித்து விடுகிறான். இதனால் வெகுண்ட சுக்கிராச்சாரி மகள் தன் தந்தையிடம் புகார் செய்கிறாள். உடனே பிடி சாபம்.
என்னா சாபம் தெரியுமா ? சர்மிஷ்டைய வேல பார்த்ததால இனி எவளையுமே வேலையெடுக்க முடியாதபடி முதுமை.. இளமையிலேயே முதுமையை அனுபவிக்கும்படி சாபம்.
இதெல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி என்ன ? காற்று காரணமா கலந்து போன துணிய தெரியாம மாத்தி கட்டிக்கிட்டதுதான் இதை விட பார்ப்பன ஆங்காரத்துக்கு ஆதாரம் என்ன வேணும் ?