Saturday, November 21, 2009

ச்சீ ச்சீ சின்னப்பையனோட

சின்னப்பையனுக்கு ஜே !
ஆமாங்க இவர்தான் அந்த காலத்து ஓலை மாதிரி இருந்த நம்ம வலைப்பூவ ஷோ கேஸ் மாதிரி ஆக்க ரூட் போட்டவரு. அதான் அவருக்கு ஜே சொல்லி இதை ஆரம்பிக்கிறேன். சி.பை. தன் வலைப்பூவுல பேஜ் ப்ரேக் கொடுத்து ஒரே பக்கத்துல பத்து விஷய்த்தை கூட சாம்பிள் காட்டி படக்குனு சூ காட்டி அடுத்த விஷயத்துக்கு தாவற வழிய காட்டினாரு வாழ்க.

(இப்படி தலைப்ப போட்டாதான் நீங்க எனக்கு செஞ்ச உதவி பத்து பேருக்கு தெரியும் தம்பி கண்டுக்கிடாத‌)


ஆனால் பாருங்க எழுத்தாளர் சுஜாதாவுக்கு இந்த விசுவாசம்லாம் கிடையாது.அவர் தன் முதல் கதை பற்றி (பாதிராஜ்யம்) விலாவாரியா எழுதினாரே தவிர பத்திரிக்கை பேரை சொன்னாரே தவிர ஆசிரியர் பேரை சொல்லல்லே. அவர் பேரு

திருலோக சீதாராம் (ஆதாரம்: திரிசக்தி தீபாவளி மலர்)

இத்தனைக்கு அவரேதும் குமுதத்தனமான பத்திரிக்கை நடத்தலை. ஒரு தரம் பத்திரிக்கைய‌ வெளிக்கொண்டுவர காசு போதாம வெளியூர் போறார் (உதவிக்காக) உதவக்கூடியவர் அவுட் ஆஃப் ஸ்டேஷன். கூட இருக்கிறது தி.ஜா.ரா.

சுமை தாங்கி மேல உட்கார்ந்து பாரதிதாசன் ஃபேன்ஸ் ஊர்வலமா வரச்சே தாசனோட பாட்டை பாடி ஊர்வலத்தை தன் பக்கம் திருப்பி ரோடெல்லாம் பாட வாய்ப்பு வாங்கி தட்டு கலெக்ஷனை (ரூ.52 சில்லறை) கொண்டு சிவாஜிய ரிலீஸ் பண்றாரு.

இன்டர் நெட் சோஷியல் நெட் வொர்க்கிங் பற்றி இந்த பத்திரிக்கைகள் ஏதேதோ கொளுத்திப்போடுகின்றனவே தவிர எல்லாம் சுக்லாம் பரதரம் கேஸ்தான் (பார்ப்பனர் என்று பொருள் கொள்ளவேண்டாம் ஆரம்ப சூரத்தனத்துக்கு என் வொக்காபிலரி இது
ஆமாம் நான் வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்ற மாதிரி யாஹூ சாட், க்ரூப், மை ஸ்பேஸ்,ஆர்க்குட்,லிங்க்ட் இன், இன்ட்யா ராக்ஸ்,ஹி5,பாரத் ஸ்டூடெண்ட் இப்படி கண்டதையும் பார்த்தேன். எல்லாமே மெம்பராகறவரைக்கும்தான். அப்புறம் ? தேர் ஈஸ் எனி ஆன்ட்டி டு ஸ்லீப் வித் மி தான்

பாவம் கடந்த பதிவுக்கு மறுமொழிபோட்ட ஃபெர்ணான்டோ என்ன நினைச்சுக்கிட்டாரோ ? தலை ! மறுமொழி நீளமாயிருச்சு அதான் இந்த பதிவுல கோர்த்து விட்டிருக்கேன் டோன்ட் வொர்ரி பி ஹேப்பி !

ஜோ அமலன் ராயன் ஃபெர்னாண்டோ அவர்களே,
அடுப்பா? வாணலியா ? எனும்போது வாண‌லியை தான் தேர்வு செய்ய முடியும். பாலியல் உணர்வுகளை அடக்கி மன நோயாளிகளாவதை காட்டிலும் வாழ்வை தி.மு , தி.பி என்று பிரித்துக்கொண்டு வாழ்வது மேல் என்ற கருத்தில் தான் சட்ட அங்கீகாரம் குறித்து பிரஸ்தாபித்தேன்.

ஏற்கெனவே நான் சொன்னபடி எலலாரும் கேண்டோம் கையில் வைத்து அலைய வேண்டும் என்பது என் கருத்தல்ல.

கையில் பிடித்து அலைவதை காட்டிலும்
காண்டோம் மேல் என்பதே என் கருத்து.
மேலும் தற்போதுள்ள பாலியல் தொழிலாளர்களின் பொருள் லாயர்கள்,ரவுடிகள்,போலீசாரால்,டாக்டர்களால் சுரண்டப்பட்டு அவர்களுக்கு நோய்களும், சிறையும் மட்டுமே மிஞ்சுகின்றன.

ஏற்கெனவே நான் சொன்னபடி துக்கத்தில் இருப்பவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான். இந்த பாலியல் தொழிலாளர்கள் துன்பத்தில் உழல்வதால் தம்மிடம் வரும் டீன் ஏஜ் குழந்தைகளை அலறடித்து அவர்களின் எதிர்கால தாம்பத்ய வாழ்விற்கே சாவு மணி அடித்து விடுகிறார்கள்.

சட்ட அங்கீகாரம் இவற்றை தவிர்க்கும். மேலும் புதியவர்களை ஈர்க்கும். எல்லா பெண்ணும் ஒரே ஆண் நாயின் கடியை , சொறியை, நாற்றத்தை தாங்கிக்கொண்டு வாழ வழி வகை செய்யும் ஜாதகத்தில் பிறப்பதில்லை. 1990 க்கு பிறகு பிறந்த பெண்கள்/ஆண்கள் ஜாதகத்தில் பாதிக்கு மேல் தோச ஜாதகங்கள் தான். இவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் சங்கு தான் இல்லை மகளிர் காவல் நிலையம் / ஃபேமிலி கோர்ட்டுதான்.

20 வருடங்களுக்கு முன்னிருந்த கல்வி,சமூக,அரசியல்,பொருளாதார நிலைகள் வேறு இப்போதுள்ள நிலைகள் வேறு. எனவேதான் வேறு வழியின்றி பல கோணங்களில் யோசித்து நல்லது கெட்டதை ஆராய்ந்த பிறகே இந்த ஸ்டாண்டை எடுத்தேன்

//சட்ட அங்கீகாரம், தற்போது காணப்படும் ஆண் பெண்ணை நாடும் (விபச்சாரம் என அழைக்கப்படும்) பாலியல் செயலுக்காக.//

என் பதிவில் நான் எங்குமே ஒரே பாலினம் பற்றி ( ஆண்களை பற்றி )

கதைக்கவில்லை. இருவருக்கும் பொதுவாகவே எழுதியுள்ளேன் தற்போது கால் கேர்ள்சில் எண்ணிக்கைக்கு சரி பாதி அளவுக்காவது கால் பாய்ஸ் எண்ணிக்கை உள்ளதை மறந்து விடாதீர்கள் .

உலக மயம், தனியார் மயம், தாராள மயம் கன்ஸ்யூமரிசம், படாடோபம்,ஆடம்பரம், உள்ளீடு ,மதிப்பீடற்ற வாழ்வு, மேம்போக்கான சிந்தனைகள் ,கவைக்குதவாத கல்வியறிவு, பெண் சுதந்திரம், எல்லாம் சேர்ந்து இந்த நிலையை உருவாக்கியுள்ளன. என்னா இழவு வந்தாலும் என் அக்கா, தங்கச்சிகளுக்கு மட்டும் அது ஆப்பாவே இருக்கு . பொருளாதார சுதந்திரம்னாங்க. வேலைக்கு போலாம்னாங்க . இப்ப டபுள் ட்யூட்டி ஜீரோ கூலினு ஆயிருச்சு.

//இதில் பெண்களை மூலதனமாக வைத்து ‘மாமாக்கள்’ எனும் ஆண்கள் பணம்சேர்த்து கொழுத்து வாழ்வதற்கா?//

சட்ட அங்கீகாரம் இல்லாத இழவால் தான் மாமாக்கள் கொள்ளை யடிக்கின்றனர். அவர்களை அதிலிருந்து விரட்டத்தான் சட்ட அங்கீகாரம்

//ஆந்திராவில் வாழ்கிறீர்கள். அங்கு இத்தொழில், ஒரு organised industry. //

அ நியாயத்துக்குஅப்பாவியா இருக்கிங்களே . ஆண்,பெண் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இது ஆர்கனைஸ்ட் இண்டஸ்ட்ரி தான் தலை

இது சட்ட விரோதமா நடக்கிறதால மாஃபியா, ஆள் கடத்தல் , இல்லீகல் ட்ராஃபிக்கிங், கள்ளக்கடத்தல்,தீவிர வாதம் இத்யாதிக்கும் துணை போகும் நிலை உள்ளது. இதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டால் இந்த பீடைகள் எல்லாம் குறைந்த பட்சம் ஒதுங்கி நிற்கும். சேவை நிறுவனங்கள் பாலியல் தொழிலாளிகளை அணுக, எயிட்ஸ் தடுப்பு முறைகளை போதிக்க , மாற்று வாழ்க்கை முறைகளை சிபாரிசு செய்ய ஏதுவாகும்

//பெரும் தொழிலதிபர்கள் ஆட்களை (பெண்களும் மாமாக்களும்) வைத்து இத்தொழிலை செய்து வருகிறார்கள் என்று உங்களுக்கு நன்றாகவேத் தெரியும்.//
த பார்ரா அங்கயும் இதே தானா?

//இப்பாலியல் தொழிலை அங்கீகாரம் பண்ணுவதன் மூலம் இவர்கள் தொழிற்புரட்சியே பண்ணுவர். //

நடக்கட்டும்னா.. வாரபத்திரிக்கை நடத்தறது, அரசியல் கட்சி நடத்தறதவிட இது நாணயமான தொழில்னு தான் நான் நினைக்கிறேன்

//பணம் எவ்வளவு அதிகம் சேர்க்கமுடியும் என ஓபனாகத் திட்டமிடுவர். //

திட்டமிடட்டுமே. தப்பே இல்லே. நான் ஏற்கெனவே என் ஆப்பரேஷன்

இந்தியா திட்டத்தில் ஸ்விஸ் வங்கி தனமான வங்கி ஒன்றை துவங்க வேண்டும். கேள்வி நாழி இல்லாது அதில் கருப்புபணத்தை டிப்பாசிட் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டால் பத்தினி யாரு பரத்தை யாருனு க்ளியரா தெரியும்னா . தெருவுக்கு ஒரு வீடு இருக்குங்கண்ணா ? சட்ட அங்கீகாரம் கொடுத்து ஊருக்கு வெளிய ஒரு காலனியே கட்டிக்கொடுத்தரலாம்.

//பல தொழிலதபர்கள், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுவர். மேலும், அத்தொழிலில், பெண்கள் ஒரு அடிமட்டத்தொழிலாளர்கள் ஆவர்//

இதை நான் ஒப்ப மாட்டேன். இந்த தொழிலில் பெண் என்று மட்டும் ஏன் குறிப்பிடுகிறீர்கள். ஆண் இருக்க மாட்டானா என்ன?

ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் அவன் தான்/அவள் தான் பிராடக்டே. போட்டி வரும். விலை உயரும், தரம் உயரும்,

// அவர்களுக்கு மேலே மாமாக்கள்.//

தொழில் துறைல இல்லியா மாமாக்கள், அரசியல்ல இல்லையா டபுள் எம் எல் ஏக்கள் மாமாக்கள் இல்லேன்னா உலகமே இல்லேங்க‌

//பெண்களுக்கு என்ன இலாபம் என சிந்தித்தீர்களா?//
விபச்சாரம்னா அது பெண்களுக்குண்டானதுங்கற எண்ணம் ஆணாதிக்க மனப்பான்மைய காட்டுது. மகளிர் சங்கங்களுக்கு தெரிஞ்சா ஜீன்ஸை உருவிருவாங்க (உங்களோட) ஜட்டி போட்டிருக்கிங்கல்ல . காமம் எப்படி பொதுவோ .. விபச்சாரம் கூட பொதுதான் அண்ணே ..


முரண்பாடுக்கு உதாரணம்:
விளக்கேற்றி வைக்க வந்த பெண் அறைக்குள் நுழைந்ததுமே விளக்கை அணைப்பது.

விரைவில் எதிர்பாருங்கள்:
விழுந்து இழுக்கும் சர்க்குலேஷனை உயர்த்த எடிட்டோரியல் போர்டு மீட்டிங் நடக்கிறது. அதன் முழு விவரம் அடுத்த பதிவில்

உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை இப்படி எத்தனையோ இருக்கு
"மண"ப்பான்மை பற்றி தெரியுமா ? ஆண், பெண்களுக்கு திரு"மண"மான பின்
வருவது இது

இந்திய சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் ரா ( RAW ?) குல் ஜி ஆந்திர யூனிவர்சிட்டி பொடியன் களுடன் இன்டராக் ஆனார். அப்போது நிறைய பசங்க ரிசர்வேஷனை தூக்க சொன்னாங்க துக்கு ராகுல் ஜி என்ன சொன்னாரு தெரியுமா?
அந்த காலத்துல கிழவாடிங்க வச்சாங்க.. நேரம் வரும் தூக்கிரலாம்னாராம். அடங்கொக்கா மக்கா ? அரசு வேலை வாழவைக்கிறது எத்தனை பேரை? விவசாயம் வாழவைக்கிறது எத்தனை பேரை என்னமோ விவசாய நிலத்துல ஒதுக்கீடு கொடுத்துட்டா மாதிரி தூக்கிருவாங்களாம்ல.. புதிய தலைமுறையை தூக்கிப்பிடிக்கும் மாலனுக்கு இந்த மென்ட்டாலிட்டி தெரியாதாக்கும்.

தாளி இந்த பயல்களுக்கு பால்னா அது காமத்துப்பால் தான். தீனின்னா நூடுல்ஸ்தான், தாகம்னா பீர்தான் இவனுகளோட இன்டரேக்ட் ஆயி ராகுல் பாவம் ராகு காலமாயிரப்போறாரு.