Tuesday, November 3, 2009

ஓம்கார் Vs நான் = கோ.வி X கல்வெட்டு


ஓம்கார் சாமிகளை கண்டித்து நான் எழுதிய பதிவுக்கான கோ.வி.கண்ணனின் மறுமொழிக்கு கல்வெட்டு அவர்கள் தந்த மறுமொழி இது .அவரது முன் அனுமதியுடன் இங்கு வெளியிடுகிறேன்.

* * *

அய்யா..அம்மா கல்வெட்டை மட்டும் பார்த்துட்டு போயிராதிங்கய்யா .. காஞ்சி மடம் திருப்பதில ஒரு மெடிக்கல் காலேஜ் வச்சு நல்லா கல்லா கட்ட பார்க்குது ஆஸ்பத்திரியில்லாம மெடிக்கல் காலேஜ் கட்டறாங்களாம் ஸ்விம்ஸ் தான் அவங்களுக்கு ஆஸ்பத்திரியாம் கடை தேங்கா வழிப்பிள்ளையார் கதையையும் அடுத்த பதிவுல போட்டிருக்கேன் படிங்க..

* * *

கல்வெட்டு அவர்கள் தந்த மறுமொழி :



கோவி,
எது சாதுவான விலங்கு என்பதை யார் வரையறை செய்வது?
கோழி மனிதனுக்கு அப்பிராணி சாது , ஆனால் அதே கோழி புழுவிற்கு எமன்.

நீங்கள் கோழியை சாப்பிடக்கூடாது என்று சொல்லலாம். ஆனால் புழு அப்படிச் சொல்லாது. சிடியை மரம் படிக்கும்போது பிளாக்கை ஏன்புழுபடிக்காது? அதனிடம் கேட்டுவிட்டே நான் சொல்கிறேன்.

**
சரி விடுங்கள் சிங்கம் , புலி சாது அல்ல (உங்கள் பார்வையில்) அதை அடித்துச் சாப்பிடலாமா? அதை தீர்மானிக்க நீங்கள் யார்? உணவுச்சங்கிலியின் அத்தாரிட்டியா?

***

தாவரம் பெரிய டவுசர் என்று சொல்லும் ஓம்கார் , தாவரத்தைக் கொன்று சாப்பிடும் பசு புனிதம் என்று சொல்கிறார். என்ன கொடுமை கோவி இது??

**

உணவுச்சக்கரத்தில் புனிதம் என்பது உண்ணுவதற்கு பல சாய்ஸ் உள்ளவர்கள் தீர்மானிப்பது. எல்லா விலங்குகளும் அவற்றின் வாழும் சூழலுக்கு ஏற்ப சில தனிப்பட்ட‌ குணங்கள் கொண்டவை.

கோவையில் அல்வா சாப்பிட்டுக் கொண்டு , ஆர்டிக்கில் வாழ்பவன் (தாவரம் என்பதே இல்லாத இடத்தில்) கடல்சிங்கத்தைச் சாப்பிட்டால் ....அய்ய அது பாவம் என்று சொம்படிப்பது அறியாமை.

**

உங்களுக்கு பசு பால் கொடுக்கிறது அதனால் கொல்லக்கூடாது.
உங்களுக்கும் எனக்கும் தாய் பால்கொடுத்தார் எனவே அவர்களைக் கொல்லக்கூடாது. எல்லாம் சரிதான்.

1.ஆடு அதன் குட்டிக்கு பால்கொடுக்கிறது.
2.சிங்கம் அதன் குட்டிக்கு பால்கொடுக்கிறது
3.தாவர இலைகள் மரத்திற்கு தேவையான மற்றும் அதன் கருவான பூக்கள்/விதைகளுக்கு உணவு சேகரிப்பவை, முருங்கைக்கீரையை பிடுங்குவதும் பால் கொடுக்கும் தாயைக் கொல்வதும் ஒரே செயலே.

மேலே சொல்லியுள்ள மூன்றில் எதைக் கொல்லலாம்?

**

காசே இல்லாமல் திருவண்ணாமலை போனதை தெய்வவித்தையாக காட்சிப்படுத்திய ஓம்காரின் பதிவில்... காசே இல்லாமல் உலகை நடந்தே கடந்தவர்கள், இந்தியாவை நடந்தே சுற்றுபவர்கள் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி , அவற்றுடன் ஒப்பிடும்போது "காசே இல்லாமல் திருவண்ணாமலை போவது" ஒரு மேட்டரே இல்லை சுசுபி சமாச்சாரம் என்று சொன்னால் அதை வெளியிடமாட்டார்.

***

ஓம்காரின் தொழில் ஜோசியம் பார்ப்பது மற்றும் பக்திக்கதைகள் சொல்வது தவறில்லை. ஆனால் அறிவியலை ஜல்லியாக மாற்றக்கூடாது.

எப்படியோ போங்கள்.

***

மாமிசம் உண்பது / பசு புனிதம் போன்ற விசயங்கள் பேசு அலுத்துப்போனவை.



கோவி,
எது சாதுவான விலங்கு என்பதை யார் வரையறை செய்வது?
கோழி மனிதனுக்கு அப்பிராணி சாது , ஆனால் அதே கோழி புழுவிற்கு எமன்.

நீங்கள் கோழியை சாப்பிடக்கூடாது என்று சொல்லலாம். ஆனால் புழு அப்படிச் சொல்லாது. சிடியை மரம் படிக்கும்போது பிளாக்கை ஏன்புழுபடிக்காது? அதனிடம் கேட்டுவிட்டே நான் சொல்கிறேன்.//

கல்வெட்டு அண்ணா,

உங்கள் சிந்தனைகளின் கடனாகத்தான் நான் எழுதி வருகிறேன். அந்த வகையில் உங்கள் விமர்சனங்களை நான் மிகவும் மதிக்கிறேன். நான் விலங்குகளைக் கொள்வதை பாவம் புண்ணியம் என்கிற வரையரையில் இதைச் சொல்லவில்லை. பன்றியை ஏன் திங்கக் கூடாது என்று கேட்பவர்களும் ஞாயத்தையே கேட்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு நாடப்புழு போன்ற சப்பைக் காரணங்கள் செல்லப் படுவதும் கூட நிராகரிக்கக் கூடியதே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. மரத்துக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்கிற ஆராய்சியைவிட மரங்கள் வெட்டப்படுவதினால் மனித குலத்திற்கு நேரிடும் துன்பங்களைத்தான் இன்று உலகளாவிய பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். எனவே பேசப்படுவது பாவ புண்ணியம் புணிதம் குறித்த கண்ணோட்டதில் நான் எதையும் சொல்லவரவில்லை.

//
**
சரி விடுங்கள் சிங்கம் , புலி சாது அல்ல (உங்கள் பார்வையில்) அதை அடித்துச் சாப்பிடலாமா? அதை தீர்மானிக்க நீங்கள் யார்? உணவுச்சங்கிலியின் அத்தாரிட்டியா?

தாவரம் பெரிய டவுசர் என்று சொல்லும் ஓம்கார் , தாவரத்தைக் கொன்று சாப்பிடும் பசு புனிதம் என்று சொல்கிறார். என்ன கொடுமை கோவி இது??

உணவுச்சக்கரத்தில் புனிதம் என்பது உண்ணுவதற்கு பல சாய்ஸ் உள்ளவர்கள் தீர்மானிப்பது. எல்லா விலங்குகளும் அவற்றின் வாழும் சூழலுக்கு ஏற்ப சில தனிப்பட்ட‌ குணங்கள் கொண்டவை.

***//

மனிதனைக் கொள்ளும் உரிமையை மனிதனை (விரும்பி) உண்ணும்) விலங்களுக்கு நாம் கொடுக்கிறோமா ?

:) நமக்கு மட்டும் உரிமை கொடுத்தது யார் ? :)
//கோவையில் அல்வா சாப்பிட்டுக் கொண்டு , ஆர்டிக்கில் வாழ்பவன் (தாவரம் என்பதே இல்லாத இடத்தில்) கடல்சிங்கத்தைச் சாப்பிட்டால் ....அய்ய அது பாவம் என்று சொம்படிப்பது அறியாமை.

**//
ஆர்டிக்கில் வாழ்பவன் கடல் சிங்கத்தைச் சாப்பிடட்டும் ஆனால் கடல் உயிரனங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு (குறிப்பாக அரபு நாடுகள்) அடுத்த ஆப்ரிக்கா நாட்டு எல்லைப் பகுதிக்குச் சென்று அங்கும் அழிவை ஏற்படுத்துவதாகப் படித்தேன். ஜப்பானியர்களும் இப்படியே. இவர்கள் மாற்றுணவாக தாவர உணவை ஏன் உட்கொள்ளக் கூடாது, அனைத்தையும் அடித்து தின்றுவிட்டால் அடுத்த மாமிசப் பசிக்கு மனிதனைச் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்தால் அதையும் சரி என்பீர்களா ?

//1.ஆடு அதன் குட்டிக்கு பால்கொடுக்கிறது.
2.சிங்கம் அதன் குட்டிக்கு பால்கொடுக்கிறது
3.தாவர இலைகள் மரத்திற்கு தேவையான மற்றும் அதன் கருவான பூக்கள்/விதைகளுக்கு உணவு சேகரிப்பவை, முருங்கைக்கீரையை பிடுங்குவதும் பால் கொடுக்கும் தாயைக் கொல்வதும் ஒரே செயலே.
மேலே சொல்லியுள்ள மூன்றில் எதைக் கொல்லலாம்?
//

இயற்கையின் அமைப்புகளில் இலையை சாப்பிடக் கொடுக்க முடியாத தாவிர வகைகள் கனியை, காயை உணவாகக் கொடுத்து அதன் விதைப் பரவல்களுக்கு, குறிப்பாக அவற்றை பயிரிட ஊக்கப்படுத்தி இனம் அழிந்து போகாத அமைப்பு அனைத்து வகையான உண்ணும் தாவிர வகைகளில் உண்டு. அதே போல் விலங்குகளின் அமைப்பில் கன்று குடிப்பதை விட கூடுதலாக பால் சுரக்கும் அமைப்பு பசுவிற்கு/எருமைக்கும் உண்டு. எனவே ஒப்பீடு அளவில் பால் கொடுக்கும் விலங்குகள் அனைத்தும் ஒன்று என்பது தவறு.

ஒரு ஆடு குட்டிப் போடுவதற்கு மாடு ஈனுவதற்கும் ஆகும் காலம் ஒன்று அல்ல, ஒரே நேரத்தில் ஆடு 10 குட்டிகள் கூட போடும், அதன் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டில் ஆடுகளைக் கொல்வது போல் மாடுகளைக் கொன்றால் மாடு இனமே அழிந்து போகும். எனவே கொல்வதில் அனைத்தும் ஒன்றே என்கிற வரையறை ஞாயப்படுத்தும் சிந்தாந்தம் கூட தவறு
//ஓம்காரின் தொழில் ஜோசியம் பார்ப்பது மற்றும் பக்திக்கதைகள் சொல்வது தவறில்லை. ஆனால் அறிவியலை ஜல்லியாக மாற்றக்கூடாது.

எப்படியோ போங்கள்.

//
ஓம்கார் பற்றிய உங்கள் புரிதல்களுக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும், இதில் நான் தலையை நுழைக்க விரும்பவில்லை :)
//மாமிசம் உண்பது / பசு புனிதம் போன்ற விசயங்கள் பேசு அலுத்துப்போனவை.


l

நானும் புனிதம், பாவம், நரகம் நெருப்புன்னு சொல்ல வரவில்லை. உயிரனங்களைக் காப்பாற்றும் பொறுப்பும் மனிதனுக்குத்தான் இருக்கிறது. இல்லை என்றால் மனிதனைக் மனிதனே கொல்வது கூட தவறு என்று சொல்ல எந்த ஒரு முகாந்திரமும் இல்லை

கோவி,
//மரத்துக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்கிற ஆராய்சியைவிட மரங்கள் வெட்டப்படுவதினால் மனித குலத்திற்கு நேரிடும் துன்பங்களைத்தான் இன்று உலகளாவிய பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். எனவே பேசப்படுவது பாவ புண்ணியம் புணிதம் குறித்த கண்ணோட்டதில் நான் எதையும் சொல்லவரவில்லை.//

நிச்சயம் கோவி.
மரங்கள் மனிதனுக்குத் தேவை. அதுபோல பூச்சிகள், விலங்குகள் போன்றவை மரங்களுக்குத்தேவை. மகரந்தத்தூள், பழம் கொட்டை என்று ஒரு வாழ்வியல் சார்ந்த சமனச் சுற்று. மரம் அழிவதால் துன்பமே. மரம் வளர்க்க அறிவியல் உண்மையன்றி பக்திக்கதைகள் உதவினால் சந்தோசமே. ஆனால் அறிவியலைக் கதியாக்கி மரம் சிடி படிக்குது என்று நோபல் உண்மைகளை சொன்னால் நோக்கம் கேள்விக்குள்ளாகிறது.

*****************

// மனிதனைக் கொள்ளும் உரிமையை மனிதனை (விரும்பி) உண்ணும்) விலங்களுக்கு நாம் கொடுக்கிறோமா ?
:) நமக்கு மட்டும் உரிமை கொடுத்தது யார் ? :) //

இல்லை கோவி.
அதனதன் இடம், சூழல்,தேவைகளின் பேரில் அமைவது. எனவே சாதுவான விலங்கு என்று வகைப்படுத்த வேண்டாம் என்று சொன்னேன்.
யார் யாருக்கு சாது என்பது அவரவரின் வாழ்வியல் சூழல் தீர்மானிப்பது.

*************

// ஆர்டிக்கில் வாழ்பவன் கடல் சிங்கத்தைச் சாப்பிடட்டும் ஆனால் கடல் உயிரனங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு (குறிப்பாக அரபு நாடுகள்) அடுத்த ஆப்ரிக்கா நாட்டு எல்லைப் பகுதிக்குச் சென்று அங்கும் அழிவை ஏற்படுத்துவதாகப் படித்தேன். ஜப்பானியர்களும் இப்படியே. இவர்கள் மாற்றுணவாக தாவர உணவை ஏன் உட்கொள்ளக் கூடாது, அனைத்தையும் அடித்து தின்றுவிட்டால் அடுத்த மாமிசப் பசிக்கு மனிதனைச் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்தால் அதையும் சரி என்பீர்களா ? //

கோவி,
மனிதனை மனிதனே அடித்துச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். Cannibal

எது சரி தவறு என்பது எப்போதும் நமக்கு கற்றுவிக்கப்பட்ட டேட்டாமேசில் இருந்து ஒப்புமை செய்து பார்த்து முடிவு செய்கிறோம். டேட்டாபாஸ் பெரிசாக பெரிசாக நிறைய ஒப்புமை செய்ய வாய்ப்பு உள்ளது.

நாம் வாழும் , நாம் அறிந்தவரையில் மனிதனை மனிதனே அடித்துச் சாப்பிடுவது தவறே. ஆனால் இது அமேசான் காட்டில் இன்னும் வாழும் சில குழுக்களுக்கான சட்டமமோ அல்லது ஒழுங்கோ அல்ல.

உங்களின் (அல்லது எனது) வாழ்க்கை சார்ந்த அளவுகோலைக் கொண்டு மற்ற அனைவரையும் அளந்து எது சரி/தவறு எது உயர்வு/தாழ்வு என்று சொல்ல முடியாது. கசப்பாக இருந்தாலும் உண்மை இதுவே.

*****************************

// இயற்கையின் அமைப்புகளில் இலையை சாப்பிடக் கொடுக்க முடியாத தாவிர வகைகள் கனியை, காயை உணவாகக் கொடுத்து அதன் விதைப் பரவல்களுக்கு, குறிப்பாக அவற்றை பயிரிட ஊக்கப்படுத்தி இனம் அழிந்து போகாத அமைப்பு அனைத்து வகையான உண்ணும் தாவிர வகைகளில் உண்டு. அதே போல் விலங்குகளின் அமைப்பில் கன்று குடிப்பதை விட கூடுதலாக பால் சுரக்கும் அமைப்பு பசுவிற்கு/எருமைக்கும் உண்டு. எனவே ஒப்பீடு அளவில் பால் கொடுக்கும் விலங்குகள் அனைத்தும் ஒன்று என்பது தவறு.//

மாடுக்கு அதிகம் பால் சுரக்கிரதா அல்லது மனிதனின் தேவைக்காக அதிகம் சுரக்கும் பசுக்கள் உண்டாக்கப்பட்டதா? மாடும் கன்றும் சொல்ல வேண்டிய பதில்.

அதிகப்பால் சுரக்கும் காரணத்தால் மடிகட்டிக் கொள்வது உண்டு. பாலைக் கறந்தபின் ஆசுவாசமாக மாடுகள் உணருவதுபோலத் தெரியும். அது உண்மையும் கூட.

ஆனால் கன்று இறந்த பின்னரும் பொம்மையைக் காட்டி பால் சுரக்க்க வைப்பது மனிதனின் சுயநலம் மட்டுமே. எனவே விலங்குகளின் அமைப்பில் கன்று குடிப்பதை விட கூடுதலாக பால் சுரக்கும் அமைப்பு பசுவிற்கு/எருமைக்கும் இருந்தாலும் , உண்மையான காரணங்களால் (கன்று இறந்து போதல்) பால் சுரப்பு நிற்கும்போது அல்லது குறையும்போது அதையும் தாண்டி பொம்மையைக் காட்டி கரப்பது மனிதனின் சுயநலம்.

ஓம்கார் குடிக்கும் பாலில் எத்தனை பசுக்கள் கன்றினை இழந்த பின்னரும் கறக்கப்பட்டவை இல்லை என்று அவருக்கு வேண்டுமானல் தெரியலாம். எனக்குத் தெரியாது. :-))))

***********


// ஒரு ஆடு குட்டிப் போடுவதற்கு மாடு ஈனுவதற்கும் ஆகும் காலம் ஒன்று அல்ல, ஒரே நேரத்தில் ஆடு 10 குட்டிகள் கூட போடும், அதன் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டில் ஆடுகளைக் கொல்வது போல் மாடுகளைக் கொன்றால் மாடு இனமே அழிந்து போகும். எனவே கொல்வதில் அனைத்தும் ஒன்றே என்கிற வரையறை ஞாயப்படுத்தும் சிந்தாந்தம் கூட தவறு//

ஒரே சமயத்தில் இரண்டு பிள்ளை பெற்றால், ஒன்றைத் தத்துக் கொடுப்பீர்களா? அல்லது ஒரே பிரசவத்தில் மூன்று பிறக்கும் போது ஒன்றை டாக்டர் வேண்டும் என்றே கொன்றால் அதையும் இப்படி ஞாயப்படுத்துவீர்களா?

சொல்ல வருவது....

உங்களின் (அல்லது எனது) வாழ்க்கை சார்ந்த அளவுகோலைக் கொண்டு மற்ற அனைவரையும் அளந்து எது சரி/தவறு எது உயர்வு/தாழ்வு என்று சொல்ல முடியாது. கசப்பாக இருந்தாலும் உண்மை இதுவே.

**************

November 3, 2009 8:38 AM
Delete
Blogger கல்வெட்டு said...

// நானும் புனிதம், பாவம், நரகம் நெருப்புன்னு சொல்ல வரவில்லை. உயிரனங்களைக் காப்பாற்றும் பொறுப்பும் மனிதனுக்குத்தான் இருக்கிறது. இல்லை என்றால் மனிதனைக் மனிதனே கொல்வது கூட தவறு என்று சொல்ல எந்த ஒரு முகாந்திரமும் இல்லை //

கூடி வாழும் சமூதாயத்தில் அனைவருக்கும் எல்லாப் பொறுப்பும் உண்டு.

************

//உங்கள் சிந்தனைகளின் கடனாகத்தான் நான் எழுதி வருகிறேன். அந்த வகையில் உங்கள் விமர்சனங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.//

என்ன கொடுமை கோவி இது? :-((

அதற்கு நாலு திட்டி திட்டி இருக்கலாம்.

எந்த பிம்பமும் வேண்டாமே. நாளைக்கே நான் ஓம்கர் சங்கத்தில் சேர்ந்து வேதகால பிராமன்யா என்று உளற வாய்ப்ப்பு வந்தால் என்ன செய்வது?

இன்று , இப்பொழுதைய பொழுதில் ஏதோ தெரிந்ததை உங்களைப் போலவே மற்ற எல்லாரைப்போலவே பகிர்கிறேன். ஒன்று சொல்ல வரும் போது ஓராயிரம் கற்றுக் கொள்கிறோம் அனைவரும். இணையதில் நான் பெறுவதே அதிகம்.

***

அறிவியல் /சோதிட / பக்தி ஜல்லிகள் வரும்போது கோபம் வருகிறது என்பது உண்மை. ஆனால் நேரில் பார்த்தால் ஓம்காரை அணைத்துக் கொள்வதில் நானும் முதலில் இருப்பேன். வாழ்வு என்பது அரவணைத்துச் செல்வது

November 3, 2009 8:38 AM
Delete