ஜோதிடம் என்றால் உங்கள் பிறந்த நேரத்தை அடிப்படியாக வைத்து கூறுவதே ஜோதிடம். கைரேகை சில விசயங்களில் சூப்பர். ( செவ்வாய் தோசம் இருக்கா இல்லியானு நொடில சொல்லிரலாம். ஜாதகத்தை பார்த்து சொல்ல மண்டைய உடைச்சுக்கனும்) சில விஷயங்களில் டுபாக்கூர் . முக்கியமா இன்னது நடக்கும்னு சொல்லலாமே தவிர பலான நேரத்துல நடக்கும்னு சொல்ல முடியாது. ந்யூமராலஜி விசயத்துல பார்த்தா உங்க பிறப்பு எண், கூட்டு எண், பெயர் எண் தொடர்பான கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் வலுவுடன் அமைந்திருந்தால் மட்டுமே 50:50 அளவில் பலிக்கும். இல்லன்னா வேஸ்டு. நேமாலஜில சில விசயங்கள் சரி. அதை வச்சு எதிரிகாலத்தை கண்ணாடியாட்டம் காட்டறேனு யாராச்சும் சொன்னா அது ஃப்ராடுதான்.
என் வ்யூ ஒண்ணுதான் இந்த தேதி,பேரு, திருமண தேதியெல்லாம் ஜாதகத்துலயே அடங்கியிருக்கு. அதை வச்சுக்கிட்டு கதை பண்ணலாமே தவிர இதெல்லாம் சந்தேகாஸ்பதம்தான் ( நன்றி சுஜாதா)
ஜோதிடம் பொய்க்க பல காரணம் உண்டு. ஜோதிடர் டுபாக்கூரா இருக்கலாம். உங்க பிறப்பு விவரங்கள் தவறா இருக்கலாம். மேன்யுவலா கணிக்கும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம்.
ஜோதிடர் கிரகங்களின் பலத்தை கணிப்பதில் கோட்டை விட்டிருக்கலாம்.
மேற்சொன்ன காரணங்கள் இல்லாமலும் ஜோதிடம் பொய்க்கிறது. காரணம் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.
எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன்.
ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.
1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.
2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரகங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.
14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.