Sunday, November 29, 2009

உதிரிப்பூக்கள்: 1

உதிரிப்பூக்கள் : ஒரு விளக்கம்
உதிரிப்பூக்கள் என்ற ஒரு வார்த்தையை ஸ்கான் பண்ணி பார்த்தா எத்தனை எத்தனை அர்த்தம். எதிராளி எதையா பெரிதாக எதிர்பார்க்கும்போது நாம கிள்ளி தெறிச்சா "ப்பூ..இவ்ளதானா " என்பார் அவர். கீழ்காணும் வாக்கியங்களை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கள். பூ என்பது மனித வாழ்வை என்னமாய் ஆக்கிரமித்திருக்கிறதோ
" அந்த பொண்ணு பாவம் பூ மாதிரி இருப்பா "
" பம்பரம் பூவாய் சுற்றியது"
(அதெப்படி பம்பரம் பூவாயிருதுன்னா .. தன் மையத்துல கான்சன்ட்ரேட் பண்ணி சுத்தறதால. நாமகூட நம்ம மையத்தை மறக்காம இருந்தா வாழ்க்கை பூவா மணக்கும். )
"பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். "
"அவன் மனசு பூ மாதிரிப்பா"
" பூவுக்கு பூவு தாவுற வண்டு மாதிரி"

இப்படி ஆயிரம் சொல்லலாம். (மறுமொழில நீங்க கூட சொல்லலாம்)

"ஓராயிரம் பார்வையிலும் "
என்று துவங்கும் தமிழ் திரைப்பாடலின் இசைக்கு தெலுங்குல நான் எழுதின பாட்டிது . (அர்த்தம் கூட தந்திருக்கேன் . டோன்ட் ஒர்ரி)


தெலுங்கு பாட்டு:
"சத புவ்வுலு பூச்செனுலே
கத தபஸ்ஸுனு மரிச்செனுலே
இஹ சுகமுன முனிகெனுலே
பரமார்த்தமு மரிச்செனுலே

ஈ நந்தனவனியந்தே அவி எருவுக மாரெனுலே
குசுமாலனு கசருகுனி ஹரி குச குசலாடெனுலே
பாத்ரனு மருவகனே தெர படுனனி பலிக்கெனுலே"

அர்த்தம்:
(பல) நூறு பூக்கள் மலர்ந்தன‌
கடந்தகால தவத்தை மறந்தன‌
இக சுகங்களில் மூழ்கின‌
பரமார்த்திகத்தை (ஆன்மீக வாழ்வை) மறந்தன‌

இதே தோட்டத்தில் அவை எருவாக மாறின
அரும்புகளை மென்மையாக அதட்டி ஹரி(இறைவன்) சொன்னான் /
ஏற்ற பாத்திரத்தை மறந்தால் திரை விழுந்துவிடும் என்று கிசுகிசுத்தான்

நம்மில் பலரும் அந்த மலர் போன்றவர்களே
.உயிர்வாழ்தலிடம் பலவற்றையும் வேண்டி தவிக்கிறோம் அது அதை தரும்போது அதை கண்டபடி மிஸ்யூஸ் செய்கிறோம். இது ரஜினிக்கே அல்ல நம்மில் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தினசரி நம் உடலின் பல லட்சம் செல்கள் செத்துப்போகின்றன. நாள் தோறும் தேய்ந்துதான் வருகிறோம். பேலன்ஸ் ஷீட்டில் சொத்துக்களுக்கு ஆண்டுக்கொருமுறைதான் டெப்ரிசியேஷன். நமக்கு ? தினசரி.

எனவேதான் .. நானும் இந்த வலைத்தோட்டத்தில் எருவாக மாறிவிடக்கூடாதென்றுதான் புயலாக சீறிய நான் பூவாக மாறிவிட்டேன். இது வெறுமனே பூவாசம் அல்ல. தமிழ் வலைப்பூ வாசம். தமிழ் வாசம். இதன் பின்னிருப்பது உலகத்தின் பால் , இயற்கையின் பால் எனக்குள்ள நேசம், விசுவாசம் .

என்னடா இது படிவு போற போக்கே சரியில்லனு பயந்துராதிங்க. இப்போ இதை படிங்க ..


இந்த தொடர்ல வெளிவர போறது கதைதானில்லே,க‌விதைதானில்லே.
இன்ன ஜாதினு இல்லாம சகல ஜாதிகளும் இங்கு சங்கமம். ரொம்பவே யோசனை பண்ணிதான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.

ஆமாங்க "புதிய பார்வை"லக்ரெடிட் கார்டு, செல்ஃபோன் என்று அரத பழசான சமாச்சாரங்களை வைத்து கவர் ஸ்டோரி எழுதுற மாதிரி ஆயிருச்சு நம்ம நிலைமை. தலை போற சமாச்சாரம் எத்தனையோ இருக்கு. எல்லாத்தயும் எழுதிகிழிக்கனும்னா நம்மால முடியாத். அதனால அட்லீஸ்ட் தொட்டாவது காட்டலாம்னுதான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

தாளி மனுசன் சாகிறான். எப்படியெல்லாமோ சாகிறான். இலங்கைல மட்டுமில்ல தமிழகத்துல மட்டுமில்லே இங்கயும்தான். இன்னைக்கு தெலிங்கானா வேணம்னு கே.சி.ஆர் சாகும்வரை உ.விரதம் அறிவிச்சார். போலீஸ் குண்டு கட்டா தூக்கிருச்சு. அதுக்கு மாணவர்கள் போராடறாங்க. ஒரு பையனை போட்டு 6 போலீஸ் பன்னிங்க பின்னு பின்னுனு பின்னுது.

இத்தனைக்கும் தெலிங்கானா வேணம்னு ஏன் கேட்கிறான். முன்னேற்றம் பரவலாக்கப்படலை. தங்கள் பகுதி பின் தங்கிட்டதா ஒரு ஃபீலிங். ஒய்.எஸ்.ஆர் போத்தி பாடுனு ஒரு ப்ராஜக்ட் ஆரம்பிச்சாரு. அத மட்டும் முடிக்க விட்டிருந்தா இன்னைக்கு இந்த உ.விரதமில்லே. பசங்க உதைவாங்கி சாக வேண்டியதில்லை.

ஒய்.எஸ் பத்தி நான் ஏதாவது சொன்னா உடனே வரிஞ்சுகட்டிக்கிட்டு விமர்சிக்க ஆளிருக்கு இங்கே. நானும் என்னால முடிஞ்ச வரை சொல்லியாச்சு. அவர் செய்த ஒரே தப்பு கவர்ன்மென்ட் மெஷினரிய ஓவராயிலிங் பண்ணலை. பாபு காலத்துல ஒரு மயிரு ப்ராஜக்டும் கிடையாது. ஆனால் ஐ.ஏ.எஸ் ஆஃபீசருங்களை வெள்ளையடிக்க வச்சாரு பாபு

ஒய்.எஸ்.ஆர் ஏறி வெண்ணையெடுத்திருந்தா கூட கேட்டிருக்கமாட்டாங்க. ஏனோ அவரு அரசு இயந்திரம்ங்கற வெள்ளையானைய பட்டினி போடவும் முன் வரலை , போட்ட தீனிக்கேத்த மாதிரி வேலையும் வாங்கலை. இதெல்லாம் சேர்த்துதான் போத்தி பாடு மாதிரி பிராஜக்டு முக்குது.


ஒரு சீக்ரட் தெரியுமா தமிழகத்துல இப்ப என்னவோ ஏழை பாழைகளுக்கு ஓசி வைத்தியம் தரப்போறதா கேள்விப்பட்டிருப்பிங்க. அதுவும் எங்க ஒய்.எஸ்.ஆர் திட்டம்தான் (பேசிக்கலி அவர் ஒரு டாக்டர். கடப்பால சொந்த ஆஸ்பத்திரில ஒரு ரூபா டாக்டரா ப்ராக்டீஸ் பண்ண ஆசாமி) . இங்கே பைசா கூட செலவழிக்க தேவையில்லை . அங்கே ஏதோ ரூபா கட்டனும்னு கேள்வி பட்டேன் நிசம்தானா ?

சுஜாதா புதுக்கவிஞர்களை கேட்டுக்கிட்ட மாதிரி பதிவர்களை கேட்டுக்கறேன். இந்த சினிமாக்களுக்கு விமர்சனம் போடற இம்சைய விட்ருங்க. ஒருவாரத்துக்காவது இலங்கை தமிழர்களை பற்றி பதிவு போடாதிங்க. நானும் சரித்திரத்தை புரட்டிட்டு தான் சொல்றேன். ஆதி முதல் அந்தம் வரை தமிழர்களின் இந்த கதிக்கு , சாரி நிர்கதிக்கு ஒரு தமிழன் தான் காரணமா இருந்துக்கிட்டிருக்கான்.

நான் சமீபத்துல செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் தொடர் எழுதினது நினைவிருக்கலாம். தெலுங்கு பதிவுலகத்துல மட்டும் இதை போட்டிருந்தா சுத்தமா தடை பண்ணியிருபானுக. முரட்டு பயலுங்கப்பா ( செல்லமாதான் சொல்றேன்) ஆரம்பத்துல விஷயம் தெரியாம ப்ளாகு டாட்காம் என்ற வலை தளத்துல என் வலைப்புவை ஏற்படுத்திட்டேன். அவனுகளது பெரிய நாட்டாமை.
அந்த கதையெல்லாம் இன்னொரு தரம் பார்ப்போம்.

மது அடிமைகளை பத்தி எழுதனும் எழுதனும்னு நினைக்கிறேன் முடியலை. தற்கொலை பத்தி, கொலை செய்யும் எண்ணம் எழுவது பற்றி, அது செயலாவது
,ஆகாதது பற்றி, சாலை விபத்துக்கள் பற்றி தவிர்க்கும் முறைகள் பற்றி இப்படி நிறைய எழுதனும்னு நினைக்கிறேன்.

இனி உதிரிதான் குரூ.. செண்டெல்லாம் கிடையாது. ஓகேவா வுடு ஜூட்