என்னன்னு தெரியலே சமீப காலமா நம்ம கவிதை07 ரொம்ப சூடாகிட்டே வருது. சில நேரம் கடுப்புல சில நேரம் பலான பதிவுகளால. அதான் இன்னைக்கு கொஞ்சம் தமாசா ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன் ஒரு பக்கம் அடிச்சேன் (காலை பத்து மணிக்கு) நெட் கட். ஏதோ சில்லறை புரள்ற மாதிரி டப்பிங் வேலை ஒன்னு மாட்டிருச்சு. ஆஃப்டர் எ ப்ரேக் இப்போ 7.13 க்கு அதை மராமத்து பண்ணி போடறேன் படிங்க ச்சும்மா ஜாலியா . டென்ஷ்ன் பண்ணிக்காதிங்க
என்னத்தான் அடக்கி வாசிக்கலாம்னு பார்த்தாலும் வயித்தெரிச்சலை அடக்க முடியறதில்லே. காட்டமா வந்துருது வார்த்தை. ரெண்டு நாளைக்கு முன்னாடி காஞ்சி மடம் திருப்பதில ஆரம்பிக்க போற மருத்துவ கலாசாலை பத்தி பதிவு போட்டிருந்தேன். இன்னைக்கு சுவாமிகள் (?) திருப்பதி வந்திருப்பார். அடிக்கல்லும் போட்டிருப்பார். சூத்திரனுங்களோட ஓட்டு வாங்கி ஜெயிச்ச மானம் கெட்ட அரசியல் வாதிங்க பத்து பேரு கலந்துக்கிட்டிருப்பாங்க (சி.எம். உட்பட) என்ன செய்றது. இந்த வலைப்பூவுல எழுதி தினசரி நூறு இருனூறு பேர் படிக்கிறதால ஒரு இழவும் மாறப்போறதில்ல.
வெட்டி ..லு நித்திரைக்கு கேடுங்கற மாதிரிதானா இதெல்லாம்னா இல்லிங்க. முதற்கண் இது ஒரு அவுட் லெட்.
எங்கயோ படிச்ச ஞா. வார்த்தை அம்பு மாதிரியாம். அத விடறதோட நம்ம வேலை ஆய்போச்சு .(அந்த ஆய் இல்லிங்க) அது எங்கயோ போயி துளைக்கும். ரத்தமோ, கருணையோ கசியலாம். "என் கடன் பணி செய்து கிடப்பதே" போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறுவாரி இறைக்கட்டும்.
உங்கள்ள பலர் கவனிச்சிருக்கமாட்டிங்க ஜெயேந்திரர் பற்றிய பதிவை டாக்டர் ருத்ரன் பாராட்டி மறு மொழி போட்டிருந்தார். அதுக்கு முன்னாடி கார்டூனிஸ்ட் பாலா பாராட்டி மெயில் அனுப்பியிருந்தார். அதுக்கு முன்னாடி மௌனி ( ஓ பக்கங்கள் ) என் பதிவிலான ஒரு தவறை சுட்டிக்காட்டி மறுமொழி செய்திருந்தார். இதெல்லாம் ஒரு நம்பிக்கையை ஊட்டும் சமிக்ஞைகள் . படிக்கிறாங்க . யாரு என்னனு தெரியாட்டாலும் படிக்கிறாங்க.
அமாங்க தெரியாம கேட்கிறேன் இலங்கை தமிழர்களை பற்றி நிறைய எழுதறிங்க . நானும் சில பதிவுகள்ள தொட்டிருக்கேன். இதனால அங்கே கம்பி வேலிக்குள்ள தவிக்கிறவஙளுக்கு என்ன லாபம்?
இதைவிட நான் ஒரு ஐடியா சொல்றேன் ராஜபக்ஷே போட்டோ ஒன்னு ஏ 4 சைஸ்ல ப்ரிண்ட் எடுத்து வைங்க தாளி ! டப்பா டான்ஸ் ஆடி வேலி உள்ள இருக்கிற தமிழர்ங்க கால்ல விழுந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறமாதிரி செய்துரலாம். பைல்ஸ் இல்லன்னாலும் ஆசனத்துல அப்படியே கொட்டனும் ரத்தம்.
ஒரு சினிமாவ பத்தி அரை டஜன் பேராவது எழுதறிங்க. அதுல இருக்கிற ஓட்டைகளை வாசனை பார்க்கிறதை விட, அளவெடுக்கிறதை விட புதுசா கதை பண்ணலாமே..
தமிழ் வளர்ச்சிக்கு அரிய (?) யோசனைகள் சில சொல்லியிருந்தேன். இந்த மாதிரி யோசனைகளை என் டிஃபனையோ, லஞ்சையோ தள்ளிப்போட்டு பதிவு தபாலில் உரியவர்களுக்கு அனுப்புவது வழக்கம். அதனாலெல்லாம் சிங்கிள் நயா பைசா பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்து அவற்றை நிறுத்திவிட்டேன். இது மனிதனாக என் தோல்வி என்றாலும் ஒரு போராளியாக என் வ்யூகத்தை மாத்தியிருக்கேன் தட்ஸ் ஆல்
ஸ்ரீ ஸ்ரீ (பிரபல தெலுங்கு கவிஞர்) எழுதுவார் " தகா தகா குடி எடமல தகா தகா " தகான்னா மோசடின்னு அர்த்தம். குடி என்றால் வலது எடம என்றால் இடது. அதே நிலைதான் இன்றும். நீங்க நல்லா விசாரிச்சு பாருங்க மோசடிக்கு இறங்கறவன் எங்கயோ மோசடிக்கு ஆளாகியிருப்பான்.இப்ப மோசடிங்கறது எதிர் தாக்குதல் மட்டுமில்லே சுயபாதுகாப்பாவும் ஆயிருச்சு. மோசடி பண்ணலன்னா நீ பிழைக்க முடியாதுங்கற நிலைமை.
கீழ்காணும் சுட்டியை க்ளிக்கி பாருங்கள் பதிவுலக நோய்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான பதிவை காணலாம்
http://ilayapallavan.blogspot.com/2009/11/2.html.
இந்த பட்டியலில் மேலும் சில வியாதிகளை சேர்க்க விரும்புகிறேன்
பார்ப்பனர்கள் வர்ணாசிரம தருமத்தை ஏதோ ஒரு முகமூடியுடன் இறக்குமதி செய்ய பார்ப்பனர்கள் அ அவர்களால் கொட்டி கொட்டி குளவிகளாக்கப்பட்ட சூத்திரர்களை பதிவு போடச்செய்யும் வியாதி காட்ராக்டியா
பார்ப்பனர்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு புராண இதிகாச , வேதங்களை மேற்கோள் காட்டுவது போல் எழுதும் பதிவுகளுக்கு காரணமான வியாதி
மாதிரி பெரியாரியா
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு அடப்பம் தூக்கிய மத்திய மானில அரசுகளுக்கு ஆதரவாக வாக்குகள் விழுவதை தடுப்பதை கோட்டைவிட்டு அவர்களின் அவதிகள் குறித்து தொடர்பதிவுகள் போடச்செய்யும் வியாதி பார்ஷல் அம்னீஷியா
நான் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்ச புதுசுல ஜாதம் இருந்தா தான் பலன் சொல்லுவேன். இல்லாட்டி ஓடிப் போயிரு அதுக்குனு பாப்பாரதெருவுல அய்யர் இருப்பாருனு கழட்டி விட்டுடுவேன். பின்னாடியே நாலு பார்ட்டி வரும். இப்பல்லாம் மக்களுக்கு எதிர்காலத்து மேல நம்பிக்கை நசிஞ்சி போயி இருக்கிறதை தின்னு தீர்த்துருவங்கற முடிவுக்கு வந்துட்டாப்ல இருக்கு. எவனை பார்த்தாலும் திங்கிறான் இல்லை குடிக்கிறான். இப்ப செக்ஸ் மேல கூட ஆர்வம் குறைஞ்சுட்டாப்ல இருக்கு.
பாவம் விபச்சாரிகள் கூட வேலையில்லாமல் திண்ணைகளில் உட்கார்திருக்கிறார்கள். என்னத்தான் செய்ய ? சாதாரணமா பெண் தான் ஒரு சின்ன வட்டத்துல யோசிப்பா (ஃபிசிக்கல் வீக்னெஸ்) இப்போ ஆண்கள் கூட அந்த ஸ்டேஜுக்கு வந்திருக்காங. நீங்க பார்த்திங்கனா பெண்களின் சகல கல்யாண குணங்களும் ஆண்களுக்கு வந்திருப்பதை காணலாம். சீரியல் பார்ப்பதிலிருந்து ஆடை, அணிகலன், சமையல் பற்றி அதிகம் பேசுவது வரை . இதெல்லாம் எங்கே போய் முடியுமோ ?
பத்து வருசத்துக்கு முன்னே ஷாபிங்குன்னா அது அப்பாவா பார்த்து வாங்கி வரதுதான். இப்போ குடும்பமே போகுது ஒரு ஸ்கூட்டர்ல 3 பிள்ளைகள் ப்ளஸ் நாய்குட்டி சகிதம். அப்படியே சாக்கடை மேல இருக்கிற பானிப்பூரி , ஃப்ளாட்பாரத்துல ஒரு மீனு.
இன்னொரு விசயத்தையும் பார்க்கிறேன். அப்போல்லாம் டிஃபால்ட்டருன்னா வமிசத்துக்கு ஒருத்தன் இருந்தா அதிகம். குடிகாரனும் அப்படியே. இப்போ அதுவும் மாறிப்போச்சு.
குருவே சரணம்