நான் மீண்டு வந்திருக்கிறேன்... என் நேரத்தையும், என மூளையையும் அவ்வப்பொழுது தின்று கொண்டிருந்த என் வீட்டில் இருந்த வலையுலக தொடர்பை நிறுத்தம் செய்துவிட்டேன். (பில் கட்டாதனால டிஸ்கனெக்ட் பண்ணிட்டாங்க _ மன சாட்சி)
கடந்த முறையும் இப்படி ஆன பிறகு கிட்டதட்ட 2500 பணம் செலுத்தி, அப்பொழுது இருந்த வேலைப்பளு காரணமாக மீண்டும் வரப்பெற்றேன். அந்த தொடர்பில்லா நாட்களுக்கும் ஒரு மாத கட்டணத்தை போட்டு தீட்டி விட்டார்கள்... அலுவலகம் சென்று முறையிட்டால்...
“உன்னை யாரு ஒரு மாதத்திற்கு பிறகு 2500 கட்டசொன்னது”
“ஏங்க. உபயோக படுத்தினவங்க கட்ட வேனாமா?”
“நீ ஏன்யா 9ம் தேதி கட்டின? 11ம் தேதி அக்கவுண்டே குளோஸ் ஆகிருக்குமே?”
“அப்போ... பணம் கட்டவேணாமா?”
“கட்டணும்... ரெண்டு மாதம் மட்டும் கட்டவேண்டி இருந்திருக்கும்... டிஸ்கனெக்ட்ல பணம் கட்டினதுனால கண்டியூடிக்காக ஒரு மாசம் சேர்த்து அழு”
அடப்பாவிகளா? போங்கடா... நீங்களும் உங்க பிராட்பேண்டும்... அப்படின்னு,
“சரி அழுவுறேன்... ஆனா... அடுத்தாப்படியும் பணம் கட்டமாட்டேன். டிஸ்கனெக்ட் பண்ணிக்கங்க... எல்லாம் சேர்த்து கடைசில அழுவுறேன்”
“என்னமோ பண்ணுங்க... அப்புறம் புதுசாத்தான் கனெக்சன் வாங்கனும்”
“போய்யா... அந்த சாத்தானே வேணாம்”
ஒரு மாதம் பில் கட்டவில்லை என்றால் டிஸ்கனெக்ட் ஆகும். ரெண்டு மாதம் பில் கட்டவில்லை என்றால் டிஸ்கனெக்ட் ஆகும் என்று பார்த்தால் மூன்றாவது மாத இறுதியில் டிஸ்கனெக்ட் ஆகிடுச்சு. அப்பாடா. என்னைவிட ச்ந்தோஷம் அடைந்தவர் என் மனைவி...
ஆனால் என் பிழைப்பே பிராட்பேண்ட்லதாங்க ஓடுது... அதுனால அலுவலகத்தில் மட்டும் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். எல்லாமே வெளி நாடுகளில் உள்ள நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பணிகள். அப்ப உள்ளூரில்... அதாவது திருச்சியில்... சில பணிகள் மட்டுமே... இந்த மாட்டின் விலையை நிர்ண்யித்து பேசக்கூடிய நிபுணர்கள் இல்லை... நான் நல்லா உழைப்பேன்ங்க... அதனால் கேவலமான விலைக்கு விலைபோகாத மாடு நான்.
திருச்சில என்ன பண்றேன்னு (நண்பர்களை தவிர) ஒரு பயலுக்கும் தெரியாது... (பயல் அப்படின்னா பையன்னு அர்த்தம்... ஒரு வேளை புயல் தான் பயலா மாறிடிச்சோ? இப்பல்லாம் பையன்கள் எல்லாம் சக்தி இழந்த (இழந்தா எப்படிங்க புயல்லா இருக்கும்?) புயல் போலத்தானே இருக்காங்க...)
ரொம்ப ரோசிச்சா இப்படித்தாங்க... :)
சரி... பிராட்பேண்டுக்கு வருவோம்... டிஸ்கனெகட் ஆன பிறகு கட்டினாத்தானே வம்பு... சரியா... நம்ம கணக்கு காலியாகுற காலம் பார்த்து, அதாவது 3 மாத்திற்கு பிறகு பணம் செலுத்தினா ஓவர்... என்ன இறுதி எச்சரிக்கைனு பில் வரும்... கட்டிடனும்... அனுபவிச்சிருக்கோம் கட்டித்தான ஆகணும்?
இதாவது பரவாயில்லீங்க... நம்ம அனுபவிச்சோம், பணம் கட்டுறோம். வாழ்க்கைல நாம ஏங்க கஷ்டத்தை அனுபவிக்கனும்... கேட்டா போன பிறவில பண்ணின பாவம் தொடருதுங்குறாங்க... நான் எங்கய்யா பாவம் பண்ணினேன். போன பிறவியே ஞாபகம் இல்லீயேயா? அதெப்படியா கன்டினியூ ஆகும்? அப்படி இல்லாத கொடுமைக்கு (மப்புக்கு) நான் என்ன ஊறுகாயா? ரொம்ப நாளா மண்டைய கொடைஞ்ச கேள்விங்க... பதில்தான் கிடைக்கல...
ஓஷோ என்ன சொல்றாருன்னா... போன பிறவிய பொதி சுமக்க நீ என்ன கழுதையா? நீ புதுசுடா... புத்தம் புதுசு... இப்பொ தான் நீ பொறந்திருக்க... அதுனாலதான் அவர் சமாதியில் இவன் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, சிறிது காலம் பூமியில் வாசம் செய்தான்... அப்படின்னு எழுதியிருக்காங்க... அவருக்கு எழுதுவாங்க... நமக்கெல்லாம்?
அப்படியான யோசனை ஓடிகொண்டிருந்த ஒரு நேரத்தில, நம்ம முருகேசனோட ஒரு சாட் பண்ணினேங்க... (எத்தன பண்ணி பாருங்க... நம்ம கவிக்கோ அப்துல் ரகுமான்... இப்ப உள்ள இளைஞர்கள் பண்ணித்தமிழ் பேசுறாங்கன்னு சொல்லிருக்காருங்க... அவருக்கு ஒரு வணக்கம் பண்ணிடலாம்... )
அந்த சாட்ல,
“என்னங்க எல்லாபேருடைய வாழ்க்கையும் கடினமாத்தான் ஓடுது”
“இல்ல சுகுமார்ஜி... இந்த வாழ்க்கையே நீங்க தேர்ந்தெடுத்தது தான்” அப்படின்னு (ஆப்படி) சொன்னாருங்க... பட்டாருன்னு மூஞ்சில குத்தின மாதிரி தோணுச்சு எனக்கு... அதை மனசில வச்சிட்டு, சாட் முடிச்ச பிறகு நானே யோசித்து பார்த்தேன்.
எவனொ என்ன பிறக்கவச்சானு நினைச்சிட்டு இருந்தது ஒரு காலம்... பாவத்தால் பிறப்பு நிகழ்ந்ததுன்னு இருந்தது ஒரு காலம். பாவம் தீர்க்க பிறந்தேன்றது ஒரு காலம்... இதென்னடா புதுசா இருக்கு? நானே தேர்ந்தெடுத்தேனா? அடடா... தெரிஞ்சிருந்தா எதாவது ஏலியனுக்கு பிறந்திருக்கலாமே? இல்லேனா பில்கேட்சுக்கு மகனாவாவது, மகளாவாவது பிறந்திருப்பேனே? :(
என் நண்பர் சொல்லுவாரு அவரு டென்சனான நேரத்தில... “எல்லாம் எங்கப்பன் வே... அவுத்த நேரம்னு...” அவருக்கு நான் பதில் சொல்லுவேன்... “நீதானய்யா... முட்டைக்குள்ள புகுந்தே... அதனால தான் நீ பிறந்தே... தப்பு உன் மேலதான்... அதோட அத்தனை லட்சங்களையும் மீறி நீ பிறந்தது சாதனைதான்... நீ வெற்றியாளனையா” என்று விளக்கமளிப்பேன்... அப்படி பதில் தரும் எனக்கே “இந்த வாழ்க்கையே நீங்க தேர்ந்தெடுத்தது தான்” என்கிற பதில் மண்டை குடைச்சலாக இருந்தது...
யோசிக்கிறேன், யோசிக்கிறேன், யோசித்துக்கொண்டே இருக்கிறேன்... தலைவேற பாரமா இருக்கு... ஆனா... பதில் இன்னும் கிடைத்தபாடில்லை... நல்ல பதில் கிடைச்சா அப்புறம் பகிர்ந்துகிறேன்ங்க...
நீங்களும் டைம் கிடைச்சா யோசிச்சிப்பாருங்க... பிளிங் ஆச்சுன்னா நம்ம கவிதை07 ல ஷேர் பண்ணுங்க... இல்லேனா பகிர்ந்துக்கங்க... :)
Showing posts with label life. Show all posts

Sunday, January 2, 2011
Thursday, December 23, 2010
மிருகங்களோடு பழகுங்கள்
நான் முன்பு திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்கா இடையிலான் பகுதியில் குடியிருந்தேன். ஆமாம்... ஒருபக்கம் மாமன், ஒரு பக்கம் அப்பன், இறைவனை சொன்னேன். :)
அந்த பகுதிகளில் எல்லா வீடுகளிலும் தோட்டங்கள் அதிகம். எனவே குரங்குகள் (என்னாது அரசியல்வாதியா? இல்லங்க குரங்குதான்) எப்போதும் வரும். மிக நேர்த்தியாக தோட்ட குழாயை திறந்து தண்ணீர் குடித்து விட்டு மூடத்தெரியாது... போய்விடும். சில நேரம் பூனைகள்... அவ்வளவுதான். வீட்டு கதவு திறந்திருந்தால் அழையாவிருந்தாளியாக உள்ளே வர வாய்ப்பிருக்கும். ஆனாலும் பயமில்லை...
இரண்டாண்டுகளுக்கு முன், இப்பொழுது இருக்கும் பகுதியில் வாசம். இது அதைவிட சுவாரசியமான விசயங்கள் கொண்ட வீடு. ஒரேஒரு பிரச்சனை என்னவென்றால் என் வீட்டிற்கு விருந்தாளிகள் வர பயப்படுகின்றனர். பின்னே என்னங்க... நீங்க என் வீட்டு வாசல்ல உட்கார்ந்து இருக்கையில் பாம்பு வந்தா எப்படி இருக்கும்? அட நெஜம் தாங்க... அது மட்டுமில்ல... மழை பெஞ்சு ஓஞ்சதின்னா தண்ணீர் வரும், அப்புறம் தவளை, தேரை கூட்டமா வரும்... ஆமை வரும், நண்டு வரும், மதில் சுவர்ல ஓணான் வரும். சாதம் வைத்தால் காகம், மைனா, குருவி வரும். அப்பப்போ பெயர் தெரியா பூச்சிகள் வரும். போதும் போதததுக்கு கொசு, குளவி, தேனீ வரும். ஆனா எதுவுமே இதுவரை வீட்டுக்குள் வந்ததில்லை. :)
ஒருவேளை நான் அழைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படி ஒரு வீட்டில் குடியிருந்துதான் ஆகனும்மா? அப்படின்னு கேட்கிறீங்களா? குடி இருக்கதானுங்களே வீடு...
ஆனா... வீட்டை பொறுத்தவரை சில தெய்வாம்சம் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்கு 4ம் இடத்தில் ராகு... அட இங்க கூட ஜோதிடமா? அதுனால வசிப்பிடம் இப்படித்தான் இருக்கும் என்பது ஒரு சாம்சயம் (வார்த்தை உபயம். திரு. முருகேசன்)
எனக்கு மட்டுமில்லேங்க... என் மனையாளுக்கும் இந்த வீடு பிடித்துவிட்டது. ஆரம்ப காலங்களில் ப்யமிருந்தது உண்மை, ஆனா இப்ப இல்லை.
வீட்டுல தெய்வாம்சம்னு சொன்னேனே...அது... என் வீட்டின் ஒவ்வோரு அறையிலும் கடிகார மணியோசை ஒலிக்குதோ இல்லையோ, கெவுளி சத்தம் விடாம ஒலிக்கும். அது என்னானு அப்புறம் பார்க்கலாம் :) (ஆரம்பிச்சுட்டாங்கப்பா) அதுபோக சின்ன குழந்தை நடந்து போவதைப்போல இரு கால் கொலுசின் மணியோசை ஒலிப்பதாகவும் கூற கேட்டிருக்கிறேன்... என் காதால கேட்டதே இல்லீங்க...
ஆக என் வீடு மிக திருப்தியாக இருக்கிறது... இந்த வாஸ்து எல்லாம் பார்த்தா... கணக்குப்படி எல்லாமே கோல்மால்தான்... ஆனால் மனம் வாஸ்து சிறப்பாக இருக்கிறபடியால், மனை வாஸ்து செயல்பட முடியாது போயிற்று போலும்.
இந்த மாதிரியான வீட்டில் இருந்து பழகிக்கொண்டீர்களென்றால் இந்த உயிரின உலகை நேசிக்கவும கற்றுக்கொள்ளலாம் நண்பர்களே! நான் புலால் உண்பதில்லை... தாவர, கனி வகைகள் மட்டுமே என் உணவு...
என்னங்க... வீட்டிற்கு வர பயமா இருக்கா? பயப்படவே பயப்படாதீங்க... உங்களை சுற்றி இருக்கிற மனித மிருகங்களோடு நீங்கள் பழகி வரும்போது இதெல்லாம் ஜுஜிபி... ஒன்னுமே இல்லீங்க...
வாங்க...
:)
Thursday, November 4, 2010
அடங்கமறு... அத்துமீறு...
அடங்கமறு... அத்துமீறு...
இதை யாரு சொன்னாங்கன்னு அப்புறம் பார்க்கலாம். இப்ப இந்த வார்த்தைகளில் இருக்கிற ஆற்றலை ஆராய்வோம். இந்த பதிவு எழுதும் நேரம் மாலை 6 மணி. இப்பொழுது கொஞ்சம் பசி இருக்கிறது. வழக்கமான இரவு உணவு நேரம் 9 மணி... சாப்பிட்ட பிறகு தூக்கம்... மறுநாள் இறைவன் எனக்கு ஒரு நாளை அளித்திருந்தால் மீண்டும் காலை 6 மணிக்கு பசிக்கும்... அப்புறம்... மதியம் 1.30 மணி.... இது ஒரு தொடர்கதை... நமக்குளிருக்கிற காமத்தைப்போலவே...
நிமிர்ந்து உட்கார்ந்தாயிற்றா?
ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டால்... “அப்பாடா, என்ன சுகம், அருமையான சாப்பாடு... மறக்கமுடியாத சாப்பாடு” என்றாலும் அடுத்த 5 மணி நேரத்தில் பசியெடுக்கும்...
99.9 சதவீத ஆண்களும், பெண்களும் இதிலிருந்து தப்ப நினைத்தால்... மீண்டும், மீண்டும், ஆரம்பித்த இடத்திலேயே நிற்ப்பார்க்ள். இப்பொழுது நெஞ்சில் கை வைத்து... இல்ல சும்மாவே சொல்லுங்க... திருப்தியான காமத்திற்கு பிறகும் மனம் ஏங்குகிறது தானே? உடல் தளர்ந்து போனாலும்... அப்ப இது வரையில் இயங்கியதற்கு அர்த்தம்?
காரணம்... கொலை... அல்லது கொல்லப்படுதல்... ஞாபகம் வந்தாகணுமே... திரு. முருகேசன் சொல்லியிருக்கிறாரே... அதேதான்... அது நடந்தாலன்றி நீங்கள் அடுத்த நிலை போகவே முடியாது.
காலிப்பாத்திரத்தை கீழே போட்டால்தான் சப்தம் வரும்...
உனக்குள் இருக்கிற காமத்தை கவனி... காமத்தோடு ஒன்றாகிப்போ... தடுக்கும் மனதை எதிர்கொள்... கோஷம் போடு... அடங்கமறு... அத்துமீறு...
நீ காமத்திலிருந்து விலகிச்செல்ல அது உன் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளும். ஏற்றுகொண்டால் உன் தலையிலிருந்து படிப்படியாக கீழிறங்கிச்சென்றுவிடும்... காமத்தை கையாள சில பக்குவங்கள் உள்ளன... அவை... கூகுளாண்டவரிடம் கூட கிடைக்காது... அது உனக்குள்தான் இருக்கிறது... நீ எதிராளியை காமத்தினால், காமத்திற்க்காக நெருங்கும் போது... உன்னை கவனி... (யோவ்... ஜி.. அதுக்கெல்லாம் எங்கேய்யா நேரமிருக்க போகுது...)
முன்னறக் கரவாது தன்பிழை இழக்கியான்
பின்னூறு இரங்கி விடும்
அப்பவே சொல்லிட்டான்யா... நம்ம வள்ளுவன்...
காமத்தை பொறுத்தவரை... அவசரப்படுதல் கூடாது, தெரியுமா? இதைமட்டும் பழகிக்கொண்டால் வயகராவா... ந... தாரா கூட தேவையில்லை...
ஒருநாளில்லை ஒருநாள்... நீ காமத்தை கொல்லுவாய்... அல்லது காமத்தால் கொல்லப்படுவாய்...
இன்னமும், மீறலாமா? கோடு போடுங்கப்பு...

Tuesday, November 2, 2010
அப்ப... காதலிக்க ஆரம்பிக்கலாமா?
காதலை தொலைத்தால் என்ன கிடைக்கும்?
கண்களை தொலைத்தால்
காதல் கிடைக்கும்
காதலை தொலைத்தால்
மோட்சம் கிடைக்கும்
இப்படி எழுதினா
உங்ககிட்ட
அடியும் கிடைக்கும்
பயப்படாதீங்க... கவிதை07ல் நான் கவிதை எழுதமாட்டேன்... இப்பொழுதெல்லாம் கவிதை வாசித்தால் நான் ஏதோ புதன் கிரகத்தில் வசிப்பதான மயக்கம் ஏற்படுகிறது... எனக்கு இந்த புவியிலேயே நிறைய வேலைகள் இருக்கின்றது.
காதலுக்கு வரலாம்...
காதல் , காதல், காதல்...
எப்போதாவது என் நண்பரோடு விவாதம் நடத்துவதுண்டு. ஒரு சமயத்தில்
"எல்லா காதலுக்கும் அடிப்படை; சுயநலமும், ஆக்கிரமிப்பும் தான்" என்பது குறித்து நீண்ட விவாதம். அதில் கிடைக்கப்பெற்ற சில கருத்துக்கள்...
காதல் என்பது ...
1, அன்பு ஆவேசம் கொண்ட நிலைகள் வெளிப்பாடு காதல்.
2, மனம் சார்ந்த தேவையும், உடல் சார்ந்த தேவையும்.
3, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பொண்ணு.
4, எனக்கான ஆளுமைக்கு நீதான் சரியான பையன்.
5, மிக முழுவதுமான முற்றிவிட்ட ஆர்வக்கோளாறு. (இருபாலருக்கும்)
6, எல்லாரும் செய்யும் போது, நமக்கென்ன? (இருபாலருக்கும்)
7, திட்டமில்லாத எதிர்கால, நிசப்தமான நம்பிக்கையின் வெளிப்பாடு. (!?)
8, வெறுமனே பொழுதைக்களிக்கும் மனோநிலை.
9, ஆர்ப்பாட்டமான மறைமுக பால் எழுச்சி.
10, சமுதாய அங்கீகாரத்தேவை
இப்படி கருத்துக்களை எடுத்துக்கொண்டிருக்கையில் இருவருக்குமே ஒன்று தோன்றியது. காய்சலும், தலைவலியும், காதலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.
ஆனால் மிக முக்கியமான ஒன்று...
"வாழ்ந்தவன், வாழ்ந்து கொண்டிருப்பவனை பொறாமையோடுதான் எதிர்கொள்வான், அதிலும் காதலிக்காதவன்" என்பதுதான்.
ஆக, நாங்களும் தயார் காதலிக்க. காத்திருக்கிறோம்.
நீங்களும் கை தூக்குவது எனக்கும் தெரிகிறது.
இந்த தலைப்பில் எழுதும் போதும் ஒருவர் சொன்னார், "ஹோட்டலில் எப்படி தோசை சுடுறாங்கன்னு தெரிஞ்சா என்னைக்குமே, எங்கயுமே தோசை சாப்பிடமாட்டீங்க, தம்பி" என்றார்.
ருசி இருக்கும் போது...

Sunday, October 31, 2010
காதல் பிறக்க சரியான இடம்
மனம் என்றொரு வெங்காயம் - இரண்டு
காதல் பிறக்க சரியான இடம்... இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன என்றும் பார்த்தோம். கடற்கரை, கல்யாண மண்டபம், பக்கத்துக்கு வீடு, மொட்டை மாடி, நிறுவனத்தில் இருக்கிற லிப்ட், சாலையில் வேகமாக இரு சக்கர வாகனம் நாம் மேலாக இடித்தபிறகு... பேருந்து, இப்படி நிறைய இருக்கிறது. இடம் முக்கியமானால் , அப்படி ஒரு இடம் இருந்தால் எல்லோருமே அங்கே போய் நின்று விடுவோம். (இப்பொழுது கூட)
மனத்தில் இருக்கிற காதல் முக்கியம். கடற்கரைக்கு உங்கள் மனைவியை அழைத்துசெல்லுங்கள்... புதிதாக காதலிக்க தோன்றும். வானில் முழு நிலவை பார்த்துக்கொண்டே இருங்கள்... காதலின் புது விஷயங்கள் தோன்றும். நீங்கள் பார்க்கும் அதே வேளையில் எத்தனை ஆயிரம் காதலர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணங்களை வான் நிலவு உங்களிடம் பாய்ச்சலாம் அல்லவா?
அடுத்த முறை காதலை சொல்லும் பொது சரியான நபரை மட்டுமல்ல, இடத்தையும் தேர்ந்து எடுங்கள் .
நாம் சுவாசிக்கிற காற்று போல, எங்கெங்கும் மனதின் எண்ண அலைகள் மிதக்கின்றன. நமக்குள் ஏற்படுகிற வெற்று இடத்தில் தானாகவே வந்து அமர்கின்றது. தனக்குள்ளே பிறந்த ஓன்று வெளிச்சென்று மீண்டும் நமக்குள்ளே வலிமையோடு வந்து அமரும்.
கீழே கிடந்த காசை ஏன்டா எடுத்தேன் என்று எப்போதாவது நினைத்து இருகிறீர்களா?
கண்டிப்பா யாராவது வந்து காப்பாதுவங்கன்னு நினைச்சேன் அதே நடந்தது....
நல்லவருக்கு நல்லவன் உதவுவதும், கெட்டவனுக்கு கேட்டவன் உதவுவதும் இதன் அடிப்படைதான். அந்த அடிப்படை நீங்கள்தான். வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்... யாரேனும் ஒருவரோடு பேசிகொண்டிருக்கையில் முதல் 10 நிமிடம் பொது விசயமாகவே பேசப்படும், அப்படியே காலம் கடக்க ஒரே விஷயத்தை இருவருமே பேசிக்கொண்டிருப்பதை காண முடியும்.
அதோடு நீண்ட பேச்சின் உடே சில போது விஷயங்கள், பேசிக்கொண்டிருக்கிற அந்த இடத்தின் பொதுவான தன்மை கலந்த விஷயங்கள் வரும். சில வெட்டு குத்துக்கள் அதே இடங்களில் நடப்பதை உணர முடியும். சில நட்பு அதே இடங்களில் உருவாக கூடும். சில காதல் திடீரென அந்த இடத்தில் மட்டும் பிறக்க கூடும். சில கல்யாண நடவடிக்கைகள் அங்கே முடிவு செய்யப்படும்.
சில சேவல் பண்ணைகளில் ஒரே நேரத்தில் உற்சாக விழாவும், பெண்கள் ஹாஸ்டல்களில் ஒரு சேர விலக்கம் ஆவதும் இப்படித்தான். சில எதிர்பாரத விஷயங்கள் நடக்கும் போது " எப்படி இது தோணிச்சுன்னு தெரியல்ல, எல்லாம் சுமுகமா நடந்தது" என்பதெல்லாம் நம்மை சுற்றி இருக்கிற எண்ணங்கள் தன் இயக்கத்தை உணர வைக்கின்றன.
மனிதனின் இயக்கம் மனம், மனதின் இயக்கம் எண்ணம், எண்ணத்தின் இயக்கம் மனிதனின் செயல்பாடு. இப்பொழுது ஒரு வட்டம் வந்து விட்டது.
ஒவ்வொரு மனிதனுடைய எண்ணம், சொல், செயல் எல்லாமே மனதிலே அடக்கம். மனமே மனிதனின் அகமும் புறமும். அவனின் தோற்றம் மட்டுமே அவனை சொல்லுவதில்லை. ஒருவனை பற்றி, அவனை உரித்து பார்க்கவேண்டுமானால் அவனின் சில சொல், செயல் கவனித்தால் போதும்.
ஆக, நாம் சரியான அலை வரிசையில் இயங்க வேண்டுமானால் நாம், நம்மை செம்மை படுத்தியாக வேண்டும்.
ரொம்ப சீரிஸ் பேசிட்டோம்... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்...
மருத்துவமனையில்
செவிலி: ஒரு அரை மணி நேரம் தாமதமா வந்திருந்தா நோயாளியை பொழைக்க வச்சிருக்கலாம்...
ஒருவர்: எப்படி சொல்றிங்க?
செவிலி : டாக்டர் வீட்டுக்கு போயிருப்பார்
கடற்கரையில்
காதலன்: டியர்... எனக்கு ஆச்சரியமா இருக்கு, எனக்கு வேலை இல்லன்னு தெரிஞ்சும் எப்படி உங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க?
காதலி: பையன் என்ன பன்றாணு கேட்டாங்க... வயித்தில எட்டி ஒதைக்கிரான்னு சொன்னேன்

மனம் என்றொரு வெங்காயம்
மனம் என்றொரு வெங்காயம்
நமது உடலுறுப்பு அனைத்தையும் பெயரிட்டு, அதைக்கண்டும், சரி செய்தும் வருகிறோம். ஆனால் மனம் என்ற ஒன்றை எப்படி குறிப்பிட முடியும்? மனதை பறிக்கிறாள் என்று சொல்லுகிறோமே... அல்லது சொன்னோமே ;)அப்படியாக பறிக்க கூடியதா, கசக்கி பிழியக்கூடியதா? அல்லது இல்லாத ஒன்றா? இருக்கிற ஒன்றா?
எனக்குத் தெரிந்ததெல்லாம் மனம் ஒரு வெங்காயம்... அவ்வளவுதான்...
என்னடா...வெங்காயம்? என கேள்வி பிறக்கிறதா?
ஆமாங்க... வெங்காயம் தான்... வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்...
நமக்குள் ஏற்பட்ட, ஏற்றப்பட்ட அடுக்கடுக்கான நினைவுத் தொகுப்புகள்... அது தன்னாலும், பிறராலும் செய்யப்படலாம். காலம் கடந்தோ, இந்த கணத்திலோ, தற்காலிகமாகவோ நிகழ்த்தப்படலாம்... இந்த நிகழ்வின் காரணகர்த்தாவே மனம் என்று அழைக்கப்படுகிறது.
நீதான் செய்கிறாய் என்று சொன்னால் நான் (நான்தாங்க... நீங்க இல்லை) தன்முனைப்பாக செயல்பட்டு விடுவேன் என்பதனாலேயே மனம் என்ற ஒரு குழுஉரிச்ச சொல்... மூலமாக நமக்கு உணர்த்தப்பட்டு வருகிறது...
நாம் செம்மையானால், மனமும் செம்மையாகும்.
திரு. முருகேசன் தனது பதிவில் சொல்லியிருக்கிறபடியே இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன. நாம் புதிதாக யோசிக்க ஏதுமில்லை... இருப்பதை வானொலி போல ஒத்த அலை பெற்று செயல்படுகிறோம்...
ஒரு பரிசோதனை..... அப்படியே ஒரு நிமிடம் யோசியுங்கள்... இதை படித்த பிறகு...
இப்பொழுது கவிதை07 படித்துக்கொண்டிருப்பதை சற்று விலக்கி...
1) இப்பொழுது நான் என்ன விரும்புகிறேன்?
2) எனக்குள் என்ன யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது?
3) எதன் பொருட்டு இந்த யோசனை?
4) காரணம் என்ன?
5) இது, இந்த யோசனை என்னால் இயக்கப்பட்டதா?
சரியான பதிலை பின்னூட்டத்தில் தரவும்...

Monday, October 25, 2010
மனிதன் என்பவன் வாழும் மிருகம்
நாய் எலும்புக்காக தோண்டி
தானே புதைந்து போனால்
அப்படித்தான் இருக்கிறது
இப்போதைய பொருளாதாரமும்
மக்களின் வாழ்வும். ....
என்ன சிக்கல் என்றால், நாணயத்தோடு, நாணயமும் சேர்ந்து கொள்வதால் 'பேரு' தள்ளாட்டம் ஆடுகிறது. இக்கரைக்கு அக்கரை ப(ச்)சை போல, ஒவ்வொரு வாசலும் ப(ச்)சையாகவே தெரிகிறது.
தகவல் தொடர்பியலில் ஒரு வார்த்தை உண்டு, மனிதன் என்பவன் வாழும் மிருகம், (உபயம் சாக்ரெடீஸ்)
வேட்டை அறிந்த, தன் இனத்திற்குள்ளேயே வேட்டையாடும் குணமறிந்தவன். அடேங்கப்பா! எத்தனையாயிரம் வேட்டைகள், இன்னமும் முடிந்தபாடில்லை. இப்போதைய மனிதன் தானே காணச் சகியாத முகமூடி அணிந்திருக்கிறான், வெளியே அல்ல, தனக்குள்ளே.
அது ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்கதையாகிப்போவதுதான் வேதனை.
வேட்டை பைரவர்களுக்கு மத்தியில் வெள்ளாடுக்கு மதிப்பேது? அப்படி இருந்தால்தான் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்கிற நிலைதான் எல்லோரிடமும்.
இது எந்த வயதில் ஆரம்பிக்கிறது?
அது ஒரு பேருந்து நிறுத்தம். நான் கல்லூரி செல்லும் பேருந்துக்காக நிற்கிறேன். என் அருகில் இரு சிறார்கள்.(ஆ இல்லையா என்பதை பிறகு முடிவு செய்தால் சிறப்பு). ஒருவனை விட ஒருவனுக்கு இரண்டு, மூன்று வருட வயது வித்தியாசம், வயது பத்தும், ஏழும் இருக்கலாம். பத்து வயதுடையவனுடைய(!) முகம் சிறுத்(தை)து, அதீத கண்காணிப்பு கொண்ட கண்களோடு கல்லெறிந்த குளத்துநீர் கலக்கத்தோடும் அதிர்வுளோடும் முகத்தில் தகப்பனை(?) உருவகித்திருந்தான். இன்னொருவனுக்கோ கல்லெறியாத குளத்துநீர் போல அமைதியான முகம் (அம்மாவோட முகமோ?.) இவன் எது சொன்னாலும் அவன்...
'அப்படி இல்லடா, ஃபூல்', 'இப்படித்தான்டா ஃபூல்' என்று மறுதலளித்தவாறே வந்தான்.
நான் இருபது நிமிடம் முன்னதாகவே பேருந்து நிறுத்தம் வந்து விடுவதால் இது போல சில நிகழ்வுகள் காணக்கிடைக்கும். (நான் ஏறிச் செல்லுகிற பேருந்துக்கு சரியான நேரமே கிடையாது. முன்னதாகவும், சரியாகவும், தாமதமாகவும் வரலாம், வராமலுமிருக்கலாம்.)
'டேய், தள்ளி நில்லுங்கடா' குரல் கவனம் கலைத்தது.
பேருந்து நிறுத்தம் அருகிலிருந்த பெட்டிகடைக்காரர், நான் நடைபாதையின் மேலே நின்றிருந்தபடியால் அது என்னை குறித்ததல்ல. தினமும் என்னை பார்ப்பதனாலும் இப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. திறந்த கடையின் வாசல்(?) குப்பையை விலக்கியபடி (ஆமா, விளக்குமாறா, விலக்குமாறா? விளக்கம் வேண்டுமே) சொன்னார்.
அந்த பெரிய சிறுவன்(ர்) முறைத்த பார்வையை பெட்டிகடைக்காரர் கவனித்து விட்டார்.
'டேய், என்னடா பார்க்கிற' பெட்டிகடைக்காரர் கொஞ்சம் இறங்கிவிட்டார் போல.
'வாசல் கூட்றேன்ல, மேல நின்னா என்னடா?'
'ஏன், இது உங்க ரோடா? இது கார்பரேசன் ரோடு'
'டேய், ரொம்ப பேசாத'
'பப்லு, வேணான்டா'
'நீ சும்மாயிருடா, ஃபூல்'
பெட்டிகடைக்காரர் வியந்த முகத்தோடு என்னை பார்த்தார், நான் மெலிதாக புன்னகைத்தேன்.
'பாருங்க சார், எப்படி பேசுறான் பாருங்க'
அந்த பெரிய சிறுவன்(ர்) இப்போது என்னை பார்த்தான்(ர்).
நான் மீண்டும் மெலிதாக புன்னகைத்தேன்.
'ம், ஊரு ரொம்ப கெட்டு போச்சு சார்' வாசலில் நீர் தெளித்தபடி பெட்டிகடைக்காரர்.
அந்த பெரிய சிறுவன்(ர்) உர்ர் என்றிருந்தான்.
தெளிக்கும் நீர் அவன் மேல் பட்டுவிட கூடாது அவரிருக்க, பட்டா தெரியும் சேதி என்று அவனிருந்தான். நல்ல வேளையாக பேருந்து வர, ஏறிக்கொண்டோம். மூன்று நிறுத்தங்கள் வரை 'ஃபூல்' ஒலித்துக்கொண்டிருந்தது ...
Saturday, October 23, 2010
சிங்கம்ல்ல... On Survival of the fittest
சுகுமார்ஜி பக்கங்கள் :)
நம்மை கூண்டில் இருத்தி நமக்கு நம்மை தெளிவு செய்யும் சுகுமார்ஜியின் அற்புத பதிவு .டோன்ட் மிஸ் இட். ப்ளீஸ் ஷேர் இட் டு யுவர் ஃப்ரெண்ட்ஸ்
- சித்தூர் .எஸ்.முருகேசன்
கூண்டுக்குள் இருந்த சிங்கம் சொல்லிக்கொண்டது...
'காட்டுக்குள்ள வந்து கேட்டுப்பாருங்கடா! நான் தான்டா காட்டுல ராஜா...'
சிங்கம் கேனத்தனமாக சொல்லுவதாக இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களில் பலரும் 'அப்படியா?' என்றனர்
அந்த 'அப்படியா?' வில் இருந்த கிண்டல் அந்த அப்பாவி சிங்கத்திற்கு புரியவில்லை... ஒரு வேளை அதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் வரவில்லை போலும்...
ஒருவேளை அது இன்னமும் மனிதனாக மாறாது, மிருகமாகவே இருப்பதுதான் காரணமோ!...
சிலர் நெருங்கி வந்து 'அப்போ ஏன் கூண்டுல இருக்க?' என்று கேட்டனர்.
'உண்மைதான் சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட் ல தான் இங்கே வந்து மாட்டிகிட்டேன்' சிங்கம் பதிலளித்தது.
பரிதாபத்துடன் ஒருவர் கேட்டார்
'உன்னை யாராவது கொடுமை படுத்துறாங்களா?'
சிங்கம் முகம் திருப்பிக்கொண்டது... "கொய்யால... கூண்டுக்குள்ள இருக்கேன்... அதே உனக்கு தெரியலையே... சொன்னா புரியுமா?" கொட்டாவி விட்டபடி சிங்கம் தன் நாவால் மூக்கை ஈரப்படுத்திக்கொண்டது.
கேள்வி கேட்ட நபர் ' இந்த சிங்கத்துக்கு கொழுப்பை பாரேன்...மெனக்கெட்டு கேட்டா மூஞ்ச திருப்பிகிச்சு' என்னவாறே கூண்டை கடந்து சென்றான்.
'ஹாய்!'
குதூகல குரல் கேட்டு சிங்கம் தலைதிருப்பியது.
ஒரு சிறுவன் ஓடிவந்து கைக்கெட்டா தூரத்தில் நின்றவாறு...
'ஹாய் சிங்கம், எப்படியிருக்க?' என்றான் சிநேகத்துடன்...
சிங்கம் சட்டென எழுந்து நின்று பதிலுரைக்க விழைந்தது...
சிறுவன் திடுக்கிட்டு பின் தள்ளி நின்றவாறு பின்னால் திரும்பி பார்த்தான். அவனை நோக்கி வந்த ஒருவர், அருகில் வந்த பிறகு...
'பயப்படாதே சன்... நானிருக்கேன்...'
'நோ டாட், இந்த சிங்கம் லெசன்ல இருக்கிற விடவும் பயங்கரமா இருக்கு... ஐ லவ் திஸ் லைன் டாட்'
'ஆமா, அதுனால தான் கூண்டுல இருக்கு'
சிங்கம் அந்த தகப்பனை கண்கள் சுருக்கிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தது.
'டாட், அது ஏதோ உங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு. அதோட லாங்வேஜ் உங்களுக்கு தெரியுமா?'
'எனக்குத்தெரியாமலிருக்குமா? நானும் இது போல சிங்கமா இருந்தவன் தானே!'
சிறுவன் வியப்போடு பார்த்ததை போலவே சிங்கமும் தன் புருவம் உயர்த்தி வியந்தது.
'சன், இந்த சிங்கத்தை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுது?'
'சிங்கத்தோட வலிமை, கர்ஜனை, வேகம், ஆளுமை, வேட்டைத்திறன், ஆக்ரோசம் இதெல்லாமே டாட்'
சிங்கம் கண்கள் சுருக்கி புன்னகைத்தது.
'யா சன்... ஆனா இது எதுவுமே சிங்கத்திற்கு உதவாது தெரியுமா?'
சிங்கம் அதிர்ச்சிக்குள்ளாகியது...
'ஆமா, சன்... சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட், சிங்கத்திற்கு தெரியல்ல...'
'எனக்கு புரியல டாட்...'
சிங்கமும் தலை தொடங்கி வால் வரை சிலுப்பிக்கொண்டது.
'நீ குட்டிடா, நீ சிங்கமாகும் பொழுது நான் புரிய வைக்கிறேன்...'
'ஒகே டாட்... ஒரு சந்தேகம்... நீங்க சிங்கமா இருந்ததா சொன்னீங்க... அப்ப நீங்களும் கூண்டுல இருந்தீங்களா?'
'ஆமா, கொஞ்ச நாள்... பிறகு வெளிய வந்துட்டேன்'
சிங்கம் ஒருகண் சுருக்கி எப்படி என்பதாக பார்த்தது.
'இப்போ என்னவா இருக்கீங்க டாட்?'
'நான் இப்போ பாஃக்ஸ்... குள்ளநரி மை சன்...'
சிங்கம் கர்ஜித்தது...
'அப்போ உங்களுக்கு கூண்டு இல்லையா டாட்?'
'குள்ளநரிகள் கூண்டில் இருக்கமுடியாது... அப்படியே கூண்டில் போட்டாலும் தந்திரத்தால் தப்பிவிடும்... பொதுவா குள்ளநரிகள் நாட்டில், சுதந்திரமாத்தான் இருக்கும்.'
சிங்கம் தன் காலை தேய்த்துக்கொண்டு ஆக்ரோசமானது...
'அப்போ இந்த சிங்கமும், குள்ளநரியா மாறிட்டா வெளிய வந்திடுமா டாட்'
'நல்லா புரிஞ்சுகிட்டயே... ஆமா, மை சன்... ஆனா இந்த சிங்கம் கொஞ்சம் அடங்க மறுக்கிற சிங்கமா இருக்கு... இது வாழ்நாளெல்லாம் கூண்டிலேயே கழிக்க வேண்டியதுதான்...'
சிங்கம் இப்பொழுது நிலை கொள்ளாமல் அலைந்தது...
சிறுவன் சொன்னான்...
'என்ன சிங்கம், இது கூட தெரியாதா உனக்கு? உன்னப்போய் காட்டுக்கு ராஜான்னு யாரு சொன்னாங்க?'...
சிங்கம் ஆவேசத்தோடு கூண்டு கம்பியில் அறைந்தது. கூண்டுக்குள்ளிருந்து தப்பும் வகையில் அலைக்கழித்தது...
'வா... சன்... அதுக்கு கோபம் வந்திடுச்சு... நாம் போய்டலாம்...'
சத்தம் கேட்டு மேனேஜிங் டைரக்டர் காரில் வந்து இறங்கியவாறே....
'எவ்வளோ சொன்னாலும் நீ திருந்த மாட்டியா?' சொல்லியபடி தன் கைகளில் வைத்திருந்த பைஃல்களால் சிங்கத்தை அடிக்க முனைந்தார்...
தந்தையோடு போய்க்கொண்டிருந்த சிறுவன் திரும்பி பார்த்தபடி கேட்டான்...
'யாருப்பா அவர்?'
'அவர்தான் டிரைனர்... குள்ளநரியா மாத்தறாரு...'
'நீயும் அடிவாங்கிருக்கியா டாட்'
'இல்லவே இல்லை' குள்ளநரி சொன்னது
'சிங்கம்... பாவம் டாட்... '
பின் குறிப்பு; சிங்கத்திற்கு பதிலாக அவ்விடத்தில் உங்களை பொருத்திக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...

Friday, October 22, 2010
இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்...
சுகுமார்ஜி பக்கங்கள் ( ரொம்ப முக்கியம்...!? )
இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்... இல்லாதவர்கள் தள்ளி போகலாம்... (சொந்த மூளையை உபயோகிச்சா உங்களுக்குத்தான் பிடிக்காதே)
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி விடிவதில்லை, ஒரே ஆற்றில் இரண்டு முறை நீராட முடியாது (ஓஷோ ) ஆனால் மனிதன் படுத்தால் இப்படி, என்ன மனநிலையில் படுத்தானோ அதே நிலையிலேயே எழுகிறான்.
எனக்கொரு எண்ணம் முன்னாட்களில் எழும்...
மனிதன் எப்போது திருந்துவான்? கண்டிப்பாக இறக்கும் தருவாயில் அவன் தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வருந்துவான். ஆனால் மறுநிமிடமோ, மறுநாளோ அவன் இறந்து விட யாருக்கு லாபம்? ஒரு தாத்தா செய்த அதே தவறுகளை மகன் செய்கிறான் (சிலர் விதி விலக்காக) அதே தவறுகளை பேரனும் செய்கிறான்.
ஆனால் மனிதர்கள், அவர்களின் மனநிலையும் வேடிக்கையானது...
தான் பெற்ற கஷ்டம் குழந்தை படக்கூடாது என்று எண்ணி வளர்த்தால் பிள்ளை வேறு மாதிரி வளர்கிறான் ...
கஷ்டங்களை பெற்றே வளரட்டும் என்று தந்தை நினைத்தால், அப்பனையே வெட்டி செய்கிறான் பிள்ளை...
அப்போ தவறு எங்கே?
நாமெல்லாம் வளர்ந்த கில்லாடிகள், குழந்தைகள் வளரும் கில்லாடிகள்! கில்லாடிக்கு பிறந்தது கில்லாடியகத்தானே இருக்கும்.
ஆனால் நான் இங்கே சொல்ல தயாரானது வேறு... மனிதன் 6to60 ன்னு வச்சிக்கோங்க ... எல்லாம் ஸ்பார்க் மாதிரி இருக்காங்க... எதுல ஸ்பார்க்னு கேக்கலியே? அப்படி ஒரு கேள்வி கேக்கவே கூடாது... கொய்யால... எவன்கிட்ட போனாலும், மண்ணெண்ணையை வாயில ஊத்தி பக்னு நெருப்ப ஊதின மாதிரி நம்ம முஞ்சில ஊதுறன்கப்பா...
ஏன்டா இப்படி இருக்கிங்க?
நான் மட்டுமா? நக்கலா எதிர் கேள்வி கேக்குறாங்க...
அலுவலகத்தில் திட்டு வாங்கிட்டு, பொண்டாட்டியை புரட்டுன மாதிரி தொடர் கதையா போய்கிட்டே இருக்கு...
இருக்கிறதிலே எவன் நல்லவன் அப்படின்னு கேட்க கூடாது? எவன் கொஞ்சமா தப்பு பன்றவன்னுதான் கேட்கணும். ஆனால் ஒருவர் கேட்டார் " என் பிள்ளையை நீ சொல்லுற மாதிரி வளர்த்தா, இந்த உலகத்தில என் பிள்ளை இளிச்சவாயனா போயிடுமே?"
கவனிங்க... ஒரு குழந்தைய நல்லவனா வளர்க்கிறது கெட்ட விஷயமா போய்டுச்சு...
துணிகளுக்கு ஒரு வாசிங் மிசின் இருக்கிறப்புல மனுஷன் மூளைக்கு யாராவது ஒரு வாசிங் மிசின கண்டு பிடிங்களேப்பா...
இப்போதான் எல்லா வகையான தொழில் நுட்ப வல்லுனர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள், மாணவர்கள், அதித மூளை குழந்தைகள் இருக்கிறார்களே... கொஞ்சம் மூளையை கசக்கினால் கண்டு பிடித்து விடலாம் ....
அட.... யாருப்பா அது " அப்ப மனுசங்களே இல்லையானு கேக்கிறது" கம்முனு கிடங்க ...

Labels:
Brain,
generation,
Human,
life,
next,
washing machine
Subscribe to:
Posts (Atom)