Showing posts with label சோனியா. Show all posts
Showing posts with label சோனியா. Show all posts

Saturday, September 10, 2011

கால சர்ப்பதோஷமும் -சோனியா மேடமும்




அண்ணே வணக்கம்ணே!
இந்தியா எப்படி லஞ்சம்,ஊழல்ல சிக்கி தவிக்குதோ அப்படி எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறத காலசர்ப்பதோஷம்னு சொல்றாய்ங்க. இப்படி ஒரு தோஷம் இருந்தா 45 வயசு வரைக்கும் ஜாதகர் வாழ்க்கையில செட்டிலாக முடியாதுனு ஒரு விதி இருக்கு.

ஜாதகத்தை விடுங்க. கோசாரத்துல இப்படி ஒரு நிலை ஏற்பட்ட கால கட்டங்களை எடுத்து ஆராய்ந்தாலே இதனோட இம்பாக்ட் என்னனு புரியும். இன்னைக்கு ஜோதிட மாணவர்களுக்கு (அப்படி ஆருனா இருந்தா) இதான் ஹோம் ஒர்க்.

இந்த தோஷத்துக்கு நிறைய விதிவிலக்குகள் எல்லாம் இருக்கு. அதாவது ஒரே ஒரு கிரகம் வெளிய இருந்தாலும் தோஷம் இல்லை. ராகு ,கேதுக்களுடன் எந்த ஒரு கிரகம் சேர்ந்திருந்தாலும் தோஷமில்லை .

காலசர்ப்பதோஷம்னா என்னமோ ஏதோன்னு பயந்துக்கப்படாது. இதை ஏற்படுத்தறவுக ராகு கேதுக்கள்.
இவிகளை பத்தி கரீட்டா புரிஞ்சிக்கிட்டாலே கா.ச.தோஷம்னா என்னனு புரிஞ்சிரும்.

ஒவ்வொரு கிரகத்துக்கு ஒவ்வொரு காரகம் இருக்கு. உ.ம் சூரியன் = தலை, எலும்புகள் சந்திரன்= மனம், நுரையீரல், சிறு நீரகம்,செவ் = ரத்தம்,எலும்புக்குள்ளான மஜ்ஜை, வெள்ளை அணுக்கள், ராகு,கேது = உடலின் லோயர் மற்றும் அப்பர் பார்ட்ஸ், குரு =இதயம்,வயிறு , சனி =கால்கள், நரம்பு,ஆசனம் ,புதன் =தோல்,கீல்,அண்டம், சுக்கிரன் =இன உறுப்பு.

ராகு கேதுவுக்குரிய முக்கியமான காரகத்வம் விஷம். எல்லா கிரகங்களும் ராகு கேதுவால முற்றுக்கையிடப்பட்டு இருந்தா 7 கிரகங்கள் காரகத்வம் வகிக்கும் எல்லா பாடி பார்ட்ஸும் விஷத்தால் பாதிக்கப்படலாம். ( ஹ்யூமன் பாடில விஷம் எப்படி உற்பத்தி ஆகுதுன்னு ஆடியோ பதிவுல விவரமா சொல்லியிருக்கேன் )

ஒவ்வொரு கிரகமும் ஜாதகருக்கு தொடர்புடைய ஒவ்வொரு ஆசாமிய காட்டும். உ.ம் சூரிய= அப்பா,சந்திரன்=அம்மா,செவ் = சகோதரன்/எதிரி , ராகு = அப்பாவை பெற்ற பாட்டன்,பாட்டி ,குரு =வாரிசுகள்,சனி =வேலைக்காரன்,புதன் =தாய்மாமன் ,கேது = அம்மாவை பெற்ற அம்மம்மா, தாத்தா, சுக்கிரன் =மனைவி

ராகு கேதுவுக்குரிய இன்ன பிற காரகத்வங்கள் சட்டவிரோத செயல்கள்,கள்ளக்கடத்தல், மது,போதை வஸ்துக்கள், சூதாட்டம்,லாட்டரி, இருட்டு, சதி.

எல்லா கிரகங்களும் ராகு கேதுவால முற்றுக்கையிடப்பட்டு இருந்தா 7 கிரகங்கள் யாரையெல்லாம் காட்டுதோ (ஜாதகருக்கு தொடர்புள்ள மனிதர்கள்) அவிகல்லாம் சட்டவிரோத செயல்கள்,கள்ளக்கடத்தல், மது,போதை வஸ்துக்கள், சூதாட்டம்,லாட்டரி, இருட்டு, சதி.ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கலாம்.

என்விரான்மென்டுதான் மனிதனோட மன ஆரோக்கியத்துக்கும் /மன நோய்க்கும் காரணம்னு சைக்காலஜி சொல்லுது. அந்த என்விரான்மென்டையே கிரகம்தான் ஏற்படுத்துதுன்னு அஸ்ட்ராலஜி சொல்லுது.

ராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள். இந்த கிரகங்கள் தாங்கள் நின்ற பாவங்கள்/ தங்களுடன் இணைந்த கிரகங்களோட சக்தியை அப்படியே உறிஞ்சி எடுத்துரும்னு ஆடியோல சொல்லியிருக்கேன்.

இந்நிலையில் இவற்றின் இடையில் மற்ற எல்லா கிரகங்களும் சிக்கினா என்ன ஆகும்? அந்த கிரகங்கள் தங்கள் சக்தியை இழந்துரும்.

கண்ணதாசன் வாழ நினைத்தால் வாழலாம் .வழியா இல்லை பூமியில்னு பாடியிருக்காரு. இருக்கிறது எட்டு திசை .ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. தாளி எல்லா கிரகமும் ராகு கேதுவுக்கிடையில் சிக்கிக்கிட்டு / தமிழ் நாடு காங்கிரஸ் மாதிரி சோனி(யா) ஆயிட்டா எந்த திசையில போறது .. என்ன இழவெடுக்கிறது.

பொத்தாம் பொதுவா ஒரு கா.ச.தோ பற்றி சின்ன அறிமுகம்தேன் இந்த பதிவு. இதுல ராகு கேதுக்களோட இருப்பு 1-7 லயா? 2 -8 லயா மற்றும் ..........................................................................லயாங்கறதை வச்சு பலன் மாறும்.

அது சரி 45 வ்யசுக்கப்பாறம் மட்டும் என்விரான்மென்ட் மாறிடுமா / ஜாதகனை சுற்றியுள்ள மனிதர்கள் மாறிருவாய்ங்களா? மத்த கிரகங்களுக்கு பவர் வந்துருமா? ஜாதகனோட பாடியில உள்ள விசம் முறிஞ்சு போயிருமான்னு கேப்பிக. சொல்றேன் ..ஹி ஹி நாளைக்கு.

கொய்யால பதிவே முடிஞ்சுருச்சு சோனியாவை எங்கே காணோம்னு கடுப்பாயிராதிங்க. இங்கே அழுத்தினா சோனியாவை பார்க்கலாம் சரியா?

சோனியா : இந்தியா To இத்தாலி?



ஒரு கால கட்டத்துல ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயமா நாட்ல கீற அல்லா விஐபிங்களையும் த்ரூ கூரியர்,த்ரூ ரெஜிஸ்டர்ட் போஸ்ட், த்ரூ இ மெயில்,த்ரூ போன் காண்டாக்ட பண்ணிப்பார்த்த பார்ட்டி தான். சோனியாம்மாவுக்கு ஃபோன் போட்டா அம்மா என்ன அம்மா வீட்டு சென்ட்ரி கூட லைனுக்கு வரமாட்டாருனு தெரியும்.

ஆனால் என்ன செய்ய பதிவுக்கு ஒரு தலைப்பு வேணமே .. ஃபார்ம் வேணமே. அதனாலதேன் இந்த ஃபோன் உரையாடல் ஃபார்மெட்டை செலக்ட் பண்ணிக்கிட்டேன். ( ஜஸ்ட் கற்பனை தானே )

"ஹலோ சோனியா மேடம் வீடுங்களா?"

"ஆமாம் .. சோனியா தான் பேசறேன்.. சொல்லுங்க"

"மேடம் .. உங்களுக்கு எதோ கான்சர் அது இதுன்னு செய்தி எல்லாம் வந்தது .. இப்ப எப்படி இருக்கிங்க?"

" நாட் பேட். கம்ப்ளீட். ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லியிருக்காங்க"

"அடடா.. இந்த நேரம் பார்த்து தானா லைன் கிடைக்கனும்.. சரிங்கம்மா நான் அடுத்த வாரம் பண்றேன்"

" நோ நோ ..இன்னம் 3 மாசம் பெட் ரெஸ்ட்ல இருப்பேன்"

"அப்படியா.. சரிங்கம்மா முடியும்னா ஸ்பீக்கரை போட்டுட்டு படுத்தாப்லயே கேளுங்க..போதும்"

" நான் எல்லாம் யூத் காங்கிரஸ் கிடையாது.. காந்தி ஃபேமிலிக்கு ஃபேனும் கிடையாது.. இன்னம் சொல்லப்போனா ஆந்திராவுல ஒய்.எஸ்.ஆர் பாதயாத்திரை ஆரம்பிக்கிற வரை பக்கா ஆன்ட்டி காங்கிரஸ்"

"பரவால்லை சொல்லுங்க.. "

" நீங்க வேற இப்டி உடம்பு சரியில்லாம இருக்கிங்களா ஸ்ட்ராங்கா பேச முடியலை. என்னதான் உங்களை கிழி கிழின்னு கிழிச்சாலும் - ஈழத்தமிழர்கள் விஷயத்தில உங்க துரோகத்தை நினைச்சு கொதிச்சாலும் - ராஜீவ் கொலைக்குற்றத்துல தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இப்ப வருமோ எப்ப வருமோன்னு சதா மரணத்தையே நினைச்சுக்கிட்டு இருக்கிற அந்த 3 உயிர்கள் விஷயத்துல உங்க சாடிசத்தை சபிச்சாலும் - இந்த நாட்டை சனம் உங்க கையில ஒப் படைக்கலின்னாலும் - உங்க சர்வாதிகாரத்தை நான் அங்கீகரிக்கலின்னாலும் - உங்க வாரிசு அரசியலை கண்மூடித்தனமா எதிர்த்தாலும் - ஊழலையும் அதன் மீதான நடவடிக்கையையும் கூட சொந்த அரசியல் லாபத்துக்கு உபயோகிச்சுக்கற நீசமான சாணக்யத்தை எரிக்க துடிச்சாலும் ..

இன்னைக்கு நாடு இருக்கிற நிலைமைக்கு இன்னைக்கா நாளைக்கான்னு நடு நடுங்க வச்சிருக்கிட்டு இருக்கிற ஒட்டு மொத்த அழிவை கொஞ்சமாச்சும் தள்ளிப்போடனும்னா கு.ப சனம் செத்துப்போகாம காப்பாத்தனும்னா இந்த சனம் இந்தியாங்கற தங்களுக்கான சமாதியில்லை - அது கங்காருவோட வயிறு போன்றதுன்னு நம்பனம்னா எதையாவது செய்தாகனும் அது உங்களால தான் முடியும்.

ஏன்னா இந்த நாட்டை உண்மையா ஆண்டுக்கிட்டிருக்கிறது நீங்க தான். இன்னைக்கு நாடு இருக்கிற நிலைக்கு முழுக்க முழுக்க நீங்கதான் காரணம்னு வீண்பழி சுமத்தப்போறதில்லை.

ஏன்னா உங்களை மாதிரி உசந்த இடத்துல உள்ளவுக சொந்த கண்ணால எதையும் பார்க்க முடியாது எவனோ ஒரு டப்ஸ் கண்ணன் தான் கண்ட காட்சியை -அதுல தன் சுய நலம் கலந்து தேன் உங்களுக்கு ரிலே பண்ணுவான்.

நீங்கல்லாம் சொந்த காதால எதையும் உள்வாங்க முடியாது.எவனோ டமார செவிடன் தான் கிரகிச்சதை - தன் சுய நலம் கலந்து தர்ரதை தான் கேப்பிக

வாழ்க்கையில எது வேணம்னா பொய்யாயிரலாம்.ஆனால் மரணம் மட்டும் நெஜம் நெஜம் நெஜம். மரணத்தோட வாயிலுக்கே போய் வந்திருக்கிங்க.

ஆன்மீக குருவாச்சும் வெறுமனே ஆன்மீக முன்னேற்றத்துக்கு தான் குரு.ஆனால் மரணம்ங்கற ஆசான் இக -பர வாழ்வுக்கெல்லாம் சேர்த்து குருவாயிருக்கு. அந்த குரு உபதேசத்துக்கு உங்க காது வழி விட்டுதா இல்லையா தெரியலை.

எனக்கு இப்பம் 46 வயசு .இனி வரப்போற நாளெல்லாம் வந்த நாட்களை விட மோசமாத்தான் இருக்கும்னு நம்பற வயசு. இனி வரப்போற ஆளெல்லாம் இன்னைக்கு உள்ளவுகளை விடமோசமான ஆளாத்தான் இருப்பாய்ங்கன்னு நம்பற வயசு.

உங்க மாமியாரை அவிக உசுரோட இருந்தப்ப டீக்கடையில,சலூன்ல எல்லாம் கிழி கிழின்னு கிழிச்சிருக்கன். ஆனால் அந்த மாராஜி என்னைக்கும் தாய் நாட்டை - அதனோட கவுரவத்தை அடகு வச்சதில்லை. அடகு என்ன அடகு சீண்டி பார்க்க கூட அனுமதிச்சதில்லை.

ஆனால் இன்னைக்கு? (வாக்கு ஸ்தானத்துல சனி வேலை செய்துருச்சுய்யா.. கட் கட்..)

நடந்தவை நடந்தவையா இருக்கட்டும் . நடப்பவை நல்லவையா இருக்கட்டும்.ஒடனே மன்மோகனாரை கூப்டு கேபினட் மீட்டிங் கண்டக்ட் பண்ண சொல்லி யுபிஏ சர்க்காரை ரத்து செய்யும்படி ஜனாதிபதிக்கு சிபாரிசு பண்ண சொல்லிருங்க. காங்கிரசையும் கலைச்சுட்டு குடும்பத்தோட இத்தாலிக்கு போயிருங்க. பாவம் ராகுல் கூட இந்தியன்னு சொல்லிக்க வெட்க படறாராமே.

ஒரு வகையில இது தான் அல்ட்டிமேட் சொல்யூஷன்.ஆனால் இதை அப்ளை பண்றதுக்கு நீங்க காந்தி இல்லையே.. சோனியா காந்தி தானே..( காந்தி சொன்னதையே சனம் கேட்கலை. ).

அதனால ஒருஅல்ட்டர்னேட்டிவ் ஆப்ஷன் ஒன்னை எங்காளுங்க தரப்போறாய்ங்க. அதையெல்லாம் ஃபாலோ பண்ணா காங்கிரஸ் காணாம போயிரும். நாம சிங்கிள் சூட்கேஸோட இத்தாலிக்கு போகவேண்டியதாயிரும்னெல்லாம் பயந்துக்காதிங்க.

ஆமாம் தாயீ .. தமிழ் பதிவுலக பதிவர்கள் - வாசகர்கள் எல்லாம் உங்களுக்கு அயனான ஐடியாவெல்லாம் தரப்போறாய்ங்க.

( மாட்டிக்கிட்டிங்களா மாட்டிக்கிட்டிங்களா)

Friday, August 26, 2011

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

அண்ணே வணக்கம்ணே !

சர்வ நிச்சயமா இந்த பதிவுல மொக்கை தான் போட போறேன். இதுபிடிக்காதவுக ஸ்ட்ரெய்ட்டா அவன் அவள் அது தொடருக்கும் , ஜோதிட பால பாடம் பதிவுக்கும் போயிரலாம். மொக்கை தான் எங்கள் சாய்ஸுங்கறவுக இந்த பக்கத்துல நில்லுங்க.

கிட்ண பரமாத்மா ஜொல்வாரு " பரதர்மம் எவ்ள உயர்ந்ததா இருந்தாலும் சுதர்மம் எவ்ள தாழ்ந்ததா இருந்தாலும் சுதர்மமே பெஸ்டு" அது நெஜம் தான்.. வழக்கம் போல அவன் அவள் அது -ஜோதிட பால பாடத்தோட நின்னிருக்கலாம்.

ஆத்தாவுக்கு லீவு விட்டு - ரா முச்சூடும் மன்னாடி அல்லாருக்கும் ஆட் சென்ஸ் பதிவை ஒர்க் அவுட் பண்ணினது தண்டமா போச்சு.( வெட்டி ..லு நித்திரைக்கு கேடு மாதிரி)

இண்ட்யாராக்ஸ் மூலமா கூகுல் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் வாங்கற மேட்டர் ( நேற்றைய பதிவு) அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டரா? அல்லது சனம் அசால்ட்டா இருந்துட்டாய்ங்களா தெரியலை. மொத்தத்துல நேரம் வீணாபோச்சு. ஹிட்ஸில் எள்ளளவு கூட வித்யாசமில்லை.

என்ன ஒரு ஆறுதல்னா இரண்டு புதுவரவுகளின் மறுமொழிகள்.

ரா தூக்கம் போச்சு.காலையில தூங்க முடியலை.மதியம் தூங்கமுடியலை. சாயந்திரம் 5மணிக்கு தூங்கி ராத்திரி 9 மணிக்கு எந்திரிச்சன். நமக்கு சனங்களோட இன்டராக்ட் ஆகறது ரெம்ப முக்கியம் . வெளிய இறங்கினம் சரக்கடிக்கிற பார்ட்டி தான் கிடைச்சாரு. கூட போயி ஒரு ஃபேண்டாவும் ரெண்டு சிகரட்டும் அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன்.

பால பாடம்ங்கற பேர்ல இந்தாளு கட்டற துணுக்கு தோரணத்தை படிக்க இத்தீனி சொந்தகதையை கேட்கனுமான்னு கோச்சுக்காதிங்கண்ணா. பாரதி சொன்னாரு " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,கவிதை" நம்ம ஸ்டேட்மென்ட் " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,ஜோதிடம்.

ஆன்லைன் ஜோதிட ஆலோசனையில சில்லறை தாராளமாகவே புரண்டாலும் நமக்கு தொழில் ஆன் லைன் ஜோதிட ஆலோசனைங்கற ரேஞ்சு வந்தது ஒரு குடும்ப தலைவனா சந்தோசத்தை தந்தாலும் நாட்டுக்குழைத்தல் எல்லாம் பெண்டிங் ஆயிட்டே வருது. இது கில்ட்டிய தருது. ஆக இன்னைலருந்து இங்கே - இப்பம் - நாட்டுக்கு உழைக்க முடிவு பண்ணியிருக்கன்.

இந்தியாவுக்கு இது ஒரு சந்தியாகாலம். ( சூரியாஸ்தமனத்துக்கும் சந்திரோதயத்துக்கும் இடையிலான இடைவெளி) இந்த சமயம் நம்மை கருத்தை பதிவு செய்யலின்னா எதிர்காலத்துல ரெம்ப மொக்கையாயிருவம். இந்த காலத்துலயே இந்த நிருபர் பசங்க கேட்கிற வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம அரசியல்வாதிங்க பேந்த பேந்த முழிக்கிறாய்ங்க.

நாம நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதி ஆனா கொத்துபரோட்டா போட்டுருவாய்ங்க போல. " இன்னிக்கு கிழிச்சுக்கறியே 2009 - 2011 பீரியட்ல ஆன்லைன்ல சோசியம் சொல்லி கல்லா மட்டும் தானே கட்டினேன்னு கேட்டுட்டா என்ன பண்றது?

அதனாலதேன் கருத்து கந்தசாமி கணக்கா நம்ம கருத்துகளை அவ்வப்போது சொல்லிரலாம்னு உத்தேசம்.

1. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு செப் 9 அன்று மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு.

மனிதர்கள்னாலே குறைபட்ட சிந்தனை ( ஈகோ) - இயற்கையிலருந்து விலகி வந்துட்டதால குறைப்பட்ட உயிரியல் திறன் ( ஐ மீன் கில்மாலருந்து - மோப்பம் - கேட்புத்திறன் வரை) . இதுல தாளி மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எல்லா அமைப்புமே குறைபட்டதுதேன்.

குறைபட்ட திறன் கொண்ட - குறைப்பட்ட மனிதர்கள் ஏற்படுத்தின - குறைப்பட்ட அமைப்பு தரும் தீர்ப்புகள் மனித உயிரை பறிக்கும்னா அதை ஏத்துக்க முடியலை.

தூக்கு தண்டனைங்கறது சோனியாவுக்கு விதிக்கப்பட்டாலும் மொத ஆளா எதிர்ப்பு தெரிவிப்பேன் என்பதை இங்கன பதிவு செய்ய விரும்புகிறேன்.

மேலும் இத்தினி காலம் சிறையில் வாடிய அந்த பார்ட்டிங்களை தூக்குலயும் போட்டா ரெட்டை தண்டனை ஆயிருமில்லியா? குற்றத்திலான அவர்கள் பங்கை அரசு தரப்பு நிரூபிச்சதுலயே நிறைய ஓட்டை இருக்கிறதா சொல்லும் போது தூக்கு தண்டனைல்லாம் கொலைக்குற்றம்யா.


2.ஜன் லோக் பால்

இந்த மேட்டர்ல ரெஸ்பாண்ட் ஆற சனத்தை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். அன்னா அசாரே உலகத்தை உய்விக்க வந்த ரட்சகர் - அன்னா வாக்கெல்லாம் அருள் வாக்குங்கறது க்ரூப் நெம்பர் ஒன்.

இன்னொரு பகுதி சனம் ஹசாரே பின்னாடி பா.ஜ.க /மதவாத சக்திகள் இருக்கு. அமெரிக்கா இருக்கு. பார்லிமெண்ட் தான் சுப்ரீம். பார்லிமெண்டை ஹசாரே ப்ளாக் மெயில் பண்றாரு - அசாரே அத்வானிக்கு ஒன்னு விட்ட மச்சினன் - சாதி அமைப்பை ஆதரிக்கிறவர்னு கிழிச்சுட்டு இருக்காய்ங்க.

ரெண்டுமே பார்ஷியலா நெஜமா இருக்க வாய்ப்பு இருக்கு. பார்லிமென்டு தான் சுப்ரீமுன்னு பதர்ராய்ங்க. பார்லிமெண்டுன்னா என்ன? எம்.பிங்க. இவிகளை பார்லிமென்டுக்கு அனுப்பினது சோனியா ,ராகுலுக்கு ஜல் ஜக் போடவோ - துட்டுக்கு ஓட்டு போடவோ , கேஷுக்கு கேள்வி கேட்கவோ இல்லை.

இந்திய சனத்தொகை மொத்தமும் பார்லிமெண்டுக்குள்ள நுழைய முடியாது -அக்காமடேட் பண்ணமுடியாதுன்னு தான் இவிகளை அனுப்பினோம். இவிக சதா சர்வ காலம் நம்மோட இன்டராக்ட் ஆகி நம்மை கருத்து என்னனு தெரிஞ்சுகிட்டே இருக்கனும். இதையெல்லாம் பார்லிமென்டுல பேசனும் -சட்டமாக்க ட்ரை பண்ணனும்.

இவிக பொதுசனத்தோட சேவகர்கள் - வேலைக்காரவுக. வேலைக்காரன் சரியில்லை . தினம் தினம் சரக்கடிச்சுட்டு மட்டையாயிர்ரான்னா அவனை வேலைக்கு வச்ச எஜமான வாய்ல விரல் போட்டுக்கிட்டு உட்கார முடியுமா?

சரி கொய்யால இவனை நம்பினா வேலைக்காகாதுன்னு தன் வேலைய தானே செய்துக்க கோதாவுல இறங்கிர்ரான். ஜன நாயகத்துல ஜனம் தேன் சுப்ரீம். ( சுப்ரீம்கோர்ட்டு கூட சுப்ரிம் கடியாதுங்கோ)

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நம்மில் குற்றம் குறை இல்லாதவர்கள் ஆருமில்லை. அதனால ஒட்டு மொத்தமா ஜானகிராமன் உத்தமர். முருகேசன் அராத்துன்னு தீர்ப்பு சொல்ல முடியாது. சிவயசிவாவில் பதிவு போடும் போது ஜா.ரா நல்லவர். போலி முருகேசனா கழிசடை கமெண்டு போடும்போது கெட்டவர்.

ஆன்மீக பதிவுகள் போடும்போது முருகேசன் நெல்லவரு. கில்மா ஜோக்கு போட்டு ஹிட் பொறுக்கறச்ச கெட்டவரு. அந்த மேரி அசாரே ஊழலை எதிரிக்கிறப்ப ஆதரிப்போம். சாதியை சப்போர்ட் பண்ணா கிழிப்போம்.


3.மத்திய அரசின் ஆயுள் -இடை தேர்தல்கள்

நாட் நாட் பீரியட்லயே சோனியா ஆட்டம் க்ளோஸுன்னு சோதிட பதிவு போட்ட பார்ட்டி நாம இன்னைக்கு உள்ள அரசியல் சீதோஷ்ண நிலைய பார்த்தா மத்திய அரசு இந்த நவம்பர் 8 வரை கூட தாங்காது போல. சீக்கிரமே இடைத்தேர்தல் வரும்னு பட்சி சொல்லுது.

Thursday, August 4, 2011

சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று?


சோனியாவுக்கு கருப்பை வாயில் புற்று நோய் ஏற்பட்டதாகவும் ஆப்பரேஷன் ஏற்கெனவே நடந்துவிட்டதாகவும்/ இனிதான் நடக்கப்போவதாகவும் பல்வேறு சேதிகள்.

கருப்பை வாய் புற்று தோன்ற மெடிக்கலா என்னென்ன காரணங்கள் உண்டு என்று இப்ப பார்ப்போம்.

கர்ப்ப வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு இளம் வயதில் திருமணம் செய்துகொள்வது, அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள் வது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளாதது, புகைப்பழக்கம் உடைய வர்களின் அருகில் அதிக நேரத்தைச் செலவிடுவது, அதிகமான உதிரப்போக்கு ஏற்படுவது, முட்டைகள் வெளிவராமல் அடைப்பட்டுப் போவது மற்றும் மனித பாப்பிலோமா என்ற வைரஸ் தாக்குதல் ஆகியவை காரணமாகின்றன.

பதினெட்டு வயதிற்கு மேல திருமணம் செய்து கொண்டாலும், சுகா தாரமற்ற உடலுறவு, ஒரிரு முறை தானே என்று வேற்று ஆளுடன் உறவு வைத்துக் கொள்வது, தரமற்ற கருத்தடைச் சாத னங்களைப் பயன்படுத் துவது, அதிக மான சுய இன்பம் செய் வது போன்றவற் றால் கூட புற்று நோய் வந்து விடும். இவை தவிர ஹார் மோன் சுரப்பிகளின் மாறுபாடுகளாலும், கர்ப் பப்பை வாய்ப்புற திரவ உற்பத்தி போது மான அளவு இல்லாமல் போனாலும் கூட புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

கர்ப்பப்பையில் கருவணு விடு படாமை, ஹார்மோன் பிரச்சினை, சினைப்பை காயம், முன்னதாகவே மாத விலக்கு முற்றுப்பெறுவது, கருவணு தொடர்பான பிரச்சினைகள், உளவியல் காரணம், நோய் தொற்றுகளால் அழற்சி, வயிற்றுப்பகுதி நோய்கள், கருக் கலைப்பு, கருச்சிதைவுகளால் வரும் அழற்சி, எண்டோமெட்ரியோசிஸ் கருப்பை ஒட்டிக்கொள்ளுதல், கருப்பை யில் அந்நியப் பொருட்கள் ஆகிய 12 காரணங்களால் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் வருவதற்கு காரணமாகின்றன.

தகவல் உபயம்: மெடிக்கல் ஆன்லைன்

சரி .. இதுக்கு ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டானு இப்ப பார்ப்போம்.

சோனியா ஜாதகட்தில் கிரகங்கள் நின்ற விவரம்:

கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது ரிசபராசிங்க.

தற்போது 27/8/2011 வரை சனி தசையில் சுக்கிர புக்தி நடப்பு

கான்சருக்கு காரணம் : செவ்+கேது இணைப்பு (இந்த அமைப்பு நம்ம ஜாதகத்துலயும் 4 ல் ஏற்பட்டது -அம்மாவுக்கு யூட் ரஸ் கான்ஸர்)

கருப்பை வாய்ல ஏற்பட்டது ஏன்:
புதன்+செவ் புதன் ஜங்க்சன் பாய்ண்டுக்கெல்லாம் அதிபதி. உ.ம் பஸ் ஸ்டாண்ட்,ஆட்டோ ஸ்டாண்ட் கருப்பைக்கு போவதற்கான வழி கருப்பை வாய் அதனாலதான் கருப்பை வாய்ல புற்று ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை:
சுக்கிர செவ் சேர்க்கை .சுக்கிரன் இன உறுப்பை காட்டும் கிரகம் செவ்: ரத்தப்போக்கு அறுவை சிகிச்சைக்கெல்லாம் காரகர்

இந்த கான்சருக்கு ஆரம்ப புள்ளி என்ன? ஒழுங்கற்ற மாதவிலக்கு. செவ் விரயாதிபதியான புதனோட சேர்ந்தது , அந்த புதனோட கேது சேர்ந்தது எல்லாம் இந்த நிலைக்கு காரணம்.

இது கான்சராக முற்ற காரணம் கேதுவின் சேர்க்கை.

சந்திர ராகு சேர்க்கை: சந்திரன் ஜல காரகன். சிறு நீர்பை ,சிறு நீரகத்துக்கெல்லாம் காரகம் வகிக்கும் கிரகம். இந்த சந்திரனோட ராகு சேர்ந்ததும் இந்த நிலைக்கு ஒரு காரணம்.

மாதவிலக்கு என்பது சீரா -குறிப்பிட்ட இடைவெளியில நடந்தே ஆக வேண்டிய சமாசாரம். இல்லாட்டா வம்புதான்.

லக்னாதிபதியே சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறிவிடுவார். 24 மணி நேரத்துல நட்சத்திரம் மாறுவார். 6 மணி நேரத்துல பாதம் மாறுவார்.

இந்த நிலையற்ற நிலை எல்லா விஷயத்துலயும் இருக்க வாய்ப்பு அதிகம். இதுதான் இந்த நிலைக்கு கொண்டு வந்துருச்சு.

இப்பம் சனி தசை நடக்குது. ( களத்ர + அஷ்டமாதிபதி) களத்ரம் எப்பயோ காலி. அஷ்டமம்னா மரணம். சனி ஸ்டீலுக்கு காரகர். அதனால தான் சர்ஜரி. புக்தி சுக்கிர புக்தி.

சுக்கிரன்னாலே இன உறுப்பு . விரயாதிபதி சேர்ந்ததால கைனகாலஜிக்கல் ப்ராப்ளம் இந்த க்ரூப்ல கேது சேர்ந்ததால கான்சர், செவ் நின்னதால ஆப்பரேஷன்.

சர்ஜரிக்கு செவ் காரகர். லக்னத்துக்கு யோக காரகர்தேன். ஆனால் கேதுவோட சேர்ந்துட்டதால செவ் பலம் காலியாகி -கேதுவோட காரகமான கான்சர் ஜெயிச்சுரவும் வாய்ப்பு இருக்கு.

பார்ப்போம். ஆரு பெத்த புள்ளைன்னாலும் நல்லா இருக்கட்டும்னு தான் நினைக்கிறோம். நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன?

சோனியாவுக்கு அவசர அறுவை சிகிச்சை?


ஆமாங்ணா சோனியா அம்மாவுக்கு அமேரிக்கால ஆப்பரேஷன் பண்ண போறாய்ங்களாம்.ரெண்டு வாரம் அம்மா அவுட் ஆஃப் ஸ்டேஷன் (மட்டும்தான்).
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பை ராகுல்& இன்னபிற முது பெரும்(!) தலைவர்களுக்கு கொடுத்திருக்காய்ங்களாம்.

இந்த தகவலை இவ்ள அவசரமா தர காரணம் சோனியா அம்மாவோட எதிர்காலம் பத்தி நாம ஜோதிட ரீதியா ஒரு சில கட்டுரைகள் எழுதியிருந்தோம். அவற்றில் முக்கியமான பகுதிகளின் ஸ்க்ரீன் ஷாட்ஸை இப்ப பாருங்க.

இதெல்லாம் நம்ம பெருமை பேச இல்லிங்ணா ஜோதிடத்தோட பெருமையை பேசத்தேன்..










படம்: 2

Sunday, December 26, 2010

சோனியா,மன்மோகனை கட்டி வச்சு எரிக்கனும்


சோனியா,மன்மோகனை கட்டி வச்சு எரிக்கனும்
இந்த பேச்சை சொன்னது/சொல்றது  நான் இல்லிங்கண்ணா. சி.பி.ஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) மானில செயலாளர் நாராயணா.

இடம்: ஆந்திர மானிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ,சேவெள்ளா

சந்தர்ப்பம்: கட்சியின் 85 ஆவது ஆண்டு விழா

மேலும் கூறியதாவது:

விளக்கு கம்பத்துல தூக்குல போடனும். கம்பத்துல கட்டி வச்சு எரிக்கனும். சோனியா தேவதை, மன்மோகன் உத்தமர்ங்கறாய்ங்க. அப்போ ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா ஊழல் எப்படி நடந்தது?

Monday, December 20, 2010

சோனியாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

எம்மா ! நீ எங்கயோ பொறந்தே. ஒரு ஹோட்டல்ல வெய்ட்டரா இருந்தப்ப எங்க ராஜீவ் உங்களை கண்ணாலம் கட்டிக்கிட்டாரு. நீ பாவம் இந்திராம்மா கிட்டே ஒட்டவே இல்லையாம். ஏதோ பார்ட்டில உன் கவுன் தையல் பிரிஞ்சிருக்க அதை அவிகளே தச்சு விட்டாய்ங்களாம். அதுக்கப்பாறம் தான் க்ளோசா மூவ் பண்ண ஆரம்பிச்சிங்களாம். (இதை வச்சுத்தானே மேனகாவை கைப்புள்ளையோட வீட்டை விட்டு விரட்டினிங்க)

ராஜீவ் போய் சேர்ந்தாரு. அரசியலும் மானாம் மண்ணாங்கட்டியும் மானான்னு ஓரம் கட்டிக்கினிங்க.ஏதோ எங்க ஸ்டேட் காரரு பி.வி நரசிம்ம ராவ் ஒப்பேத்திக்கிட்டிருந்தாரு. அந்த சமயத்துல சமீபத்துல அஜால் குஜால் வேலை பண்ணி ஸ்டேட்டை விட்டே ஓடிப்போன என்.டி.திவாரிய வச்சு ஒரு பார்ட்டியே ஆரம்பிக்க வச்சிங்களாம். அதுக்காக பிரச்சாரம்லாம் கூட பண்ணிங்களாமே. அந்த கட்சிக்கு ஆறே சீட் வந்துதாமே .நம்ம ரோசா ஒரு டிவி பேட்டில சொன்னப்ப ஜில்லுனு ஆயிருச்சு.

எப்படியோ பார்ட்டில நுழைஞ்சு அதை அப்படியே  ஹைஜாக் பண்ணிட்டிங்க. கட்சில இருக்கிற கிழவாடிங்களோட மென்டாலிட்டய நல்லாவே புரிஞ்சிக்கிட்டிங்க. மேய்க்க ஆரம்பிச்சிட்டிங்க. காந்தி மேல கூட எனக்கு காட்டமான அதிருப்தியெல்லாம் இருக்கு. பாவம் அவிக பண்ண தப்புக்கு உங்களை வையமாட்டேன் . பயந்துக்காதிங்க.

புருசன் பொஞ்சாதியை பெட்டர் ஹாஃப்ங்கறாய்ங்க. ராஜீவ் உங்கள்ள பாதிதானே.அவரை கண்ணாலம் கட்டிக்கிட்டதாலதானே இந்த ராஜபோகம் அனுபவிக்கிறிங்க.

இலங்கை மேட்டர்ல அவரு ஒரு தப்பு பண்ணிட்டாரு. மெஜாரிட்டியான புலிகளை தவிர்த்துட்டு ஒரு சொல்யூஷனை ஏற்படுத்தனும்னு துடிச்சாரு.அப்போ தமிழ் நாட்ல தேர்தல் ஜுரம். பஞ்சாயத்து பண்றதுக்கு போன ஆளூ இவரே பாட்டியா மாறி கையெழுத்து போட்டாரு. அமைதி காக்கறோம்னு ஒரு படைய அனுப்பி வெந்த புண்ல வேலை பாய்ச்சினாரு. விதி விளையாடிருச்சு.அவர் மட்டும் அவாள் பேச்சை கேட்காம புலிக  இல்லாட்டி அது ஒரு தீர்வே கிடையாது. இந்த ஆட்டத்துக்கு நான் வரமாட்டேன்னுட்டு குர்தா மண்ணை தட்டி விட்டுட்டு போயிருக்கலாம். போகலை.

அவரோட பெட்டர் ஹாஃபுனு நிரூபிக்க உங்க ஒரு தாலி அறுந்ததுக்கு இத்தீனி லட்சம் தாலிகளை அறுத்துட்டிங்க.  பெட்டர் ஹாஃபுன்னா கணவன் ஏதாச்சும் தப்பு தண்டா பண்ணியிருந்தா அதை திருத்தப்பார்க்கனும் தாயே.. அதை விட்டுட்டு தமிழ் சினிமா மாதிரி ரிவெஞ்ச்ல மட்டும் பெட்டர் ஹாஃபுனு தப்பா புரிஞ்சிக்கிட்டிங்களே.


இலங்கைக்கு நம்ம அரசு பண்ண உதவிகள்ள நூத்துல அரை சதவீதம் புலிகளுக்கு பண்ணியிருந்தா நமக்கு எல்லை தெயவங்களா இருந்திருப்பாய்ங்க. இன்னைக்கு சீனத்து கைதிகள்ளாம் வந்து அங்கன வளர்ச்சி  பணிகள் செய்றாய்ங்களாம். இது தேவையா?

உங்க நாட்ல நீங்க வார்ட் மெம்பரா கூட எலக்ட் ஆகியிருக்கமாட்டிங்க. ஆனால் இந்த நாட்ல உங்களை சூப்பர் பவர் ஆக்கிவச்சிருக்கோம். இதுல தமிழ் நாடு மாதிரியே ஆந்திராவும் உரிய பங்கை ஆற்றியிருக்கு. ஆனால் இதுக்கு பிரதியா நீங்க என்ன செய்திங்க?

மத்த ஸ்டேட் பத்தியெல்லாம் எனக்கு பெருசா தெரியாது. தெரிஞ்சத மட்டுமே இதுல ரெய்ஸ் பண்றேன். தமிழினத்தையே அழிச்சாலும்.. மானம் கெட்டோ ,மதி கெட்டோ உங்க வேட்பாளர்களுக்கு ஓட்டு ப்போட்டாய்ங்க. யுபிஏவுக்கு மெஜாரிட்டி கிடைக்கிறவரை இருந்த சோனியா வேறே. (2009 வரை) தனி மெஜாரிட்டி கிடைச்ச பிறவு உள்ள சோனியா வேற.

சுப்பிரமணியம் ஸ்வாமி ஸ்பெக்ட்ரம் ஊழல்ல 60 சோனியா 30 கருணாநிதி 10 ராசான்னு பகிரங்கமா குற்றம் சாட்ட நீங்க மவுனம் எனது தாய்மொழினு இருக்கிங்க இதுக்கு என்ன காரணம்?  அந்த பார்ட்டி சொல்றது பொய்யா இருந்திருந்தா டங்குவாரு அறுத்திருக்கவேணாமா?

அது சரி  காங்கிரஸ் ப்ளீனரில நீங்க ஊழலை ஒழிக்க ஏதோ அஞ்சு பாய்ண்ட் சொன்னிங்களாமே. இதெல்லாம் டகுலு இல்லைன்னா திமுகவோட கூட்டு முறிஞ்சது. நாங்க உத்தமங்க.ஊழல் கட்சியோட கூட்டுவைக்கமாட்டோம். ஜெயா ஊழல் ராணி அவிகளோடவும் கூட்டில்லை.தனியாத்தான் நிப்போம்னு அறிவிக்கலாமே.

மக்களோட சைக்காலஜிய புரிஞ்சிக்கிறது ரெம்ப கஷ்டம். இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நடந்த தேர்தல்ல கூட  ஆந்திராவுல தெலுகு தேசம் ஸ்வீப் பண்ணிருச்சு.

ஆ.. இதெல்லாம் விதி விலக்கு. ராகுல் காந்தி ..புடிச்சி தந்தா தலைல தெளிச்சிப்பாய்ங்கனு நீங்க நினைக்கலாம். ஆனால் காலம் மாறிப்போச்சு தாயி. ஏதோ ஆந்திரால ஒரு ஒய்.எஸ்.ஆர் இருந்ததால கட்சி பொழச்சுது. இல்லைன்னா மெஜாரிட்டியுமில்லை. ஒரு மண்ணுமில்லை. பீகார்ல பார்த்திங்கல்ல கட்சியோட பாடைய சுமக்க சரியா 4 எம்.எல்.ஏ.

தெலுங்கானான்னு தேன் கூட்டை கலைச்சு விட்டுட்டிங்க டிசம்பர் 31 அன்னைக்கு தெலுங்கானா கொடுக்கறோம்னா ஆந்திராவுல  பத்திக்கும், கொடுக்கமாட்டோம்னா தெலுங்கானால பத்திக்கும்.

என்னமோ போங்க.ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குங்கற மாதிரி இருக்கு. உங்க போக்கு.இதுல உங்க தவப்புதல்வர் ஒரு அன்னிய நாட்டு தூதர்கிட்டே உள் நாட்டு விவகாரத்தை உளறியிருக்காரு.

இப்பவும் ஒன்னும் மிஞ்சிப்போகலை. காங்கிரஸ் மார்ச்சுவரிக்கு  போறது போறதுதான். சாகறப்ப சங்கரா சங்கரான்ன மாதிரி  எதுனா நாலு நல்ல காரியம் பண்ணிட்டு போங்க.

அடுத்த எலக்சன்ல டெப்பாசிட்டாச்சும் கிடைக்கும். ( எலக்சனுக்க் கூட சான்சில்லை தாயீ .. பை எலக்சனே கொணாந்துருவாய்ங்க போல) பெட்டர் ஹாஃபுன்னா கணவனோட பாவத்துக்கு பரிகாரம் தேடனும்மா.

என்ன பாவம் பண்ணமோ கேடு கெட்ட மனுச ஜம்மம் எடுத்துட்டம். எதை செய்தாலும் கர்மம் சுத்திக்கும். அட நீ நல்லதையே செய்தாலும் கர்மம்தான்.அதை அனுபவிக்க மறுபடி பிறக்கனுமாம்.

ஏழேழு சம்மத்து புண்ணியத்தையெல்லாம் இந்த சன்மத்துலயே தீர்த்துகட்டிட்டிங்க. இன்னொரு ஏழேழு ஜன்மத்துக்கு பாவத்தை மூட்டை கட்டிட்டிங்க. காலச்சக்கரம் ரிவர்ஸ்ல சுத்தினா ராகுலாரோட பேச்சு,நடவடிக்கைக்கு உங்களுக்கு கிடைச்ச வெய்ட்டர் வேலை கூட கிடைக்காது.

கொஞ்சமா மாத்தி யோசிங்க. இந்த சனம் அல்ப சந்தோஷிங்க. இவிகளை சந்தோசப்படுத்தறது ரெம்ப ஈஸி.  இந்த நாட்ல இல்லாத வளமே இல்லை இதை வளப்படுத்தறது ஈஸி. இங்கன இல்லாத வலிமையே இல்லை . இதை வல்லரசாக்கிறது ச்சோ ஈஸி.

அமெரிக்காகரனோட அணு ஒப்பந்தம் போட்டுத்தான் கிழிக்கனும்னுல்ல. ஒவ்வொரு நாட்டு தலைவனா வந்து ஒப்பந்தம் மேல ஒப்பந்தம் போடறதை பார்த்தா கடைய கட்ட போறிங்களோ என்னமோனு கூட ஒரு சம்சயம்.

போறது போறிங்க.நாலு நல்ல காரியம் பண்ணிட்டு போ தாயி.

(ஆந்திரா கதைய டீட்டெய்ல்டா  நான் தெலுங்கு ப்ளாக்ல  எழுதிக்கிறேன். தமிழ் நாட்டு கதையமட்டும் தான் இங்கே பேசியிருக்கேன்.)

சொல்லனும்னு தோனுச்சு. சொல்ட்டன் .எடுத்தா எடுங்க.உட்டா உடுங்க.

"அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும்"
"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்"

இதெல்லாம் தமிழ்ல மட்டுமில்லை இந்தில,இங்கிலீஷ்ல ஏன் இத்தாலிய பாஷைல கூட நிச்சயமா இருக்கும். ஏன்னா இதெல்லாம் ப்ரூவன் ட்ரூத்ஸ். வரலாற்று உண்மைகள்.

வரலாறு ஒரு  பைத்தியம். ஒன்னயே மாத்தி மாத்தி பினாத்திக்கிட்டிருக்கும்.கேட்டா பொழச்சோம் இல்லாட்டி "பாவத்தின் சம்பளம் மரணம்"னு நான் சொல்லலிங்கம்மா.பைபிள் சொல்லுது.

வருந்தறது,திருந்தறதுல்லாம் தான் நமக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்யாசம். திருந்திட்டா பிரச்சினை இல்லை.  திருந்தாட்டா  காலம் திருத்திரும்.அப்ப ரெம்ப வலிக்கும்

Wednesday, November 24, 2010

புருசன் + கள்ளப்புருசனுக்கிடையில

புருசன் கள்ளப்புருசனுக்கிடையில பாலன்ஸ் பண்ணிக்கிட்டு லைஃபை ஓட்டறது எம்மாம் கஷ்டம்னு அவிகளுக்கு தான் தெரியும். பகவத் பக்தி பத்தி சொல்றச்ச ரா.கி பரமஹம்சர் சொல்வாரு " ஒரு பொம்பளை தன் புருசனுக்கு தேவையானதை எல்லாம் பக்காவா செய்துக்கிட்டே இருப்பா. ஆனால் அவள் மனசு கள்ள புருசன் மேல, அவன் வரச்சொன்ன இடத்து மேல,அவன் தரப்போற சுகத்துமேலதான் கான்சன்ட் ரேட் ஆகி கிடக்கும். அதே போல ..

இந்த உலகம்ங்கற கணவனுக்கு செய்யவேண்டிய பணிவிடையையெல்லாம் பக்காவா செய்துட்டு இரு. ஆனால் உன் மனசு மட்டும் கள்ளப்புருசனான கடவுள் மேலயே கான்சன்ட்ரேட் ஆகியிருக்கனும்.

இந்த மேட்டர்ல  பேலன்ஸிங் கப்பாசிட்டி மட்டும் பொம்பளைகளுக்குதேன் அதிகம்னு ஒரு சம்சயம். எவனெல்லாம் உபரியா எவளை வச்சிருக்கானு பட்டுனு தெரிஞ்சுபோவுது. ஆனால் எவள் எவனை உபரியா வச்சிருக்காங்கறது கொலை,தற்கொலைனு எதுனா எக்குதப்பா நடந்தாதான் வெளி உலகத்துக்கு தெரியுது.

ரெண்டு பெண்டாட்டிக்காரவுக பொளப்பு நாறப்பொழப்பு. இவிகல்லாம் கள்ளக்காதல் மேட்டர்ல தாய்குலத்தை ஃபாலோ பண்ணிக்கிட்டா பெட்டர் போல.

கரகாட்டம் பார்த்துருப்பிங்க. ஆட்டம் பாட்டுக்கு நடந்துக்கிட்டிருக்கும்.வாண வேடிக்க ஒரு பக்கம், மேள தாளம் ஒரு பக்கம், சாமி ஊர்வலம் ஒரு பக்கம், வேடிக்கை பார்க்கிற கூட்டம் ஒரு பக்கம்  எவன் ஜாக்கெட்ல நோட்டு குத்துவான் , எவன்    நோட்டை மட்டும் குத்துவான், எவன் கப்பாசிட்டி என்னனு குன்சா கமனிச்சிட்டே இருக்கனும். இத்தீனி இழவுக்கும் இடையில தலையில வச்சிருக்கிற கரகம் விழுந்துராம பார்த்துக்கனும்.

நம்ம நிலையும் இதாண்ணேன்.அஷ்டாவதானம், சதாவதானம்லாம் தாய்க்குலத்துக்கு கை வந்த கலை. கைக்குழந்தைய வச்சிக்கிட்டி காஃபி,டிஃபன்,சோத்துக்கடைய பார்த்துக்கிட்டே ஆத்துக்காரருக்கு வென்னீர் போட்டு, ஷூவை  துடச்சி பாலிஷ் போட்டு  வச்சி, நாறிப்போன சாக்ஸை அவசரமா துவைச்சி ஃபேன் காத்துல உலர்த்தி
ய.......பாஆஆஆஆஆஆஆ

வெளியூர் போறச்ச நமக்கும் அந்த கப்பாசிட்டி வந்துருதுண்ணே. (ஊரை போய் சேரனுமேங்கற டெட்லைன் - தாளி இந்த உலகமும் வெளியூர்தானே.- ஒரு நாளில்லை ஒரு நா மேலூர் போக வேண்டியதுதானே -அதை மறந்துட்டதாலதான் இந்த குழப்படி -வெத்து அலட்டல்)..

என்னை பொருத்தவரை ரா.கியோட ஃபார்முலாவை விடாப்பிடியா ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன்.

நமக்கு கள்ள புருசன் ஆப்பரேசன் இந்தியா2000. "ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோணே"னு நாம எது செய்தாலும் அது ஆ.இ க்காகத்தேன்.

நியூமராலஜிப்படி நவம்பர் 7 முதல் டிசம்பர் 7 வரை ( நமக்கு மட்டும்ணே) அல்லல்,அலைச்சல், சாகசயத்தனம்லாம் தூள் கிளம்பனும். கரீட்டா கீதுண்ணே. எட்டாம் தேதி வீடு மாத்தினேனா , எது எங்கன இருக்குனு தெரியவே ஒரு வாரம் ஆச்சு.


படக்குனு ஆஃபீஸ் போட ஷகரான பஜார் தெருவுல இடம் கிடைச்சது. அந்த வெலை ஒரு வாரம் இழுத்துருச்சு.  இத்தனைக்கும் ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ் எதுவும் விடலை. தமிழ்பதிவு, தெலுங்கு பதிவு, ஆன் லைன் ஜோதிட ஆலோசனையெல்லாம் தனி தனி ட்ராக்ல ஓடிக்கிட்டே இருந்தது.


இதுல லோக்கல் பாலிட்டிக்ஸ் வேற சூடாயிருச்சு.ஒரு புதுப்பணம், மந்திரி ஒத்தாசையோட  பயங்கர படம்லாம் காட்ட ஆரம்பிச்சிருச்சு. தமிழ் நாட்ல கதை எப்படியோ ஆந்திராவுல பிற்படுத்தப்பட்டோர் அரசியல்னு தனியே ஒரு பிட்டு தனி  ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். த. நா மாதிரி படு தேசல் இல்லைன்னாலும் சின்னபாம்பையும் பெரிய தடி கொண்டுதானே அடிக்க வேண்டியிருக்கு.

லோக்கல் எம்.எல்.ஏ ஓ.சி. அந்த ஒரு ஆசாமிக்கு ஆப்பு வைக்க BCகர்ஜனானு ஒரு ப்ரோக்ராம் பண்ணாய்ங்க.  BCக்கு அரசியல் அதிகாரம்ங்கறது அஜெண்டா. தாளி .. BCக்கு அதிகாரமா?, BC லீடர்ஸுக்கு அதிகாரமா?, அவிக வாரிசுகளுக்கு அதிகாரமா? தமிழ் நாட்ல தாத்தாவே BC தேன்..

த.நா BCங்க வீட்ல ரெண்டு குழாய் போட்டு ஒன்னுல பாலும்,இன்னொன்னுல தேனுமா வருது..

அரசுவேலைல ரிசர்வேஷன் கேட்டிங்க.. வந்தாச்சு. வானத்தை வில்லா வளைச்சுட்டிங்களா இல்லை. அரசுவேலைய நம்பி வாழற சனம் எத்தீனி சதவீதம்? விவசாயத்தை நம்பி வாழற சனம் எத்தீனி சதவீதம்.. விவசாயத்துக்கு அடிப்படை நிலம். ஜனத்தொகை அடிப்படையில நிலம் கேளு.

டைரக்ட் டெமாக்ரசி கேளுங்கப்பா. அட்லீஸ்ட் பிரதமர்,முதல்வர் பதவிக்கு டைரக்ட் எலக்சன் கேளுங்கப்பா அதை விட்டுட்டு எவனோ பத்து பேரு எம்.எல்.ஏ ஆகனும்னு சனத்துக்கு கொம்பு சீவி விட்டுக்கிட்டு அலப்பறை பண்ணாதிங்கனு  தலையங்கம் எழுதி கொஞ்சம் போல காசு பணம், சனம் மொபிலைஸ் பண்ணி ஒரு ஸ்பெஷல் இஷ்யூ போட வேண்டியதாயிருச்சு.

ஆ.இ வுல மொதல் பாயிண்டே நேரிடை ஜன நாயகம் தேன்.

நேத்து (24/11/2010) பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாச்சு. காங்கிரசுக்கு கல்தானு கூட சொல்ல முடியாது கல்லறையே கட்டிட்டாய்ங்க. இது உலகறிஞ்ச உண்மை. ஆனால் 21 ஆம் தேதி பாதி ராத்திரி ( 22 விடியலுக்கு பூர்வம்)   நமக்கு கொஞ்சம் ஞம ஞமங்கவே சோனியா டேட் ஆஃப் பர்த்தை பீராஞ்சு பார்த்தேன். 9/12/1946.

இப்ப இன்னா வயசு? அதை நேம் நெம்பரால டிவைட் பண்ணா 8. அடடா அப்போ எட்டாவது ரவுண்டா? 2009லயே ஸ்டார்டாயிருச்சா? அதான் தெலுங்கானா மேட்டர்ல கைவச்சு நாறிட்டாய்ங்களா அது இதுனு  கிராஸ் செக் எல்லாம் முடிச்சு சோனியாவுக்கு கஷ்ட (கண்ட) காலம்ங்கற தலைப்புல தெலுங்குல ஒரு பதிவ போட்டேன். அதைப்பார்க்க இங்கே http://sambargaadu.wordpress.com/2010/11/22/futuresoniya/
அழுத்துங்க.

நான் இந்த பதிவை போட்ட பிற்பாடுதான் பீகார்ல ஆப்பு, ஆந்திராவுல முதல்வர் மாற்றம். கிரண் குமார் ரெட்டி சித்தூர் மாவட்டம். ராயலசீமா கல்ச்சர். ஒய்.எஸ். சிஷ்ய கோடி. ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி ரிப்போர்ட் கைக்கு வந்தா அப்ப இருக்கு கச்சேரி.

ஹய்யா .. யாரு அடுத்த சி.எம்ன்னுட்டு பெட்டிங்கே ஆரம்பிச்சுரலாம்.


9ன்னா செவ். செவ்வாய்க்குரிய காரகத்வங்கள் கீழே: (செவ்வாயே சொல்றாருங்கண்ணா)

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

எச்சரிக்கை: மேற்சொன்ன எல்லா மேட்டர்லயும் ஆப்புத்தேன். இதை எழுதற என் பேர் கூட முருகக்கடவுள் தொடர்பானதா இருக்கிறதை கவனிக்கவும்.

Friday, November 19, 2010

இந்திரா & ஃபேமிலி காந்தி பேரை துறக்கனும்

ஆமாங்கண்ணா. காந்திக்கும் நேரு குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்திரா ஃபெரோஸ் லவ்ஸ் மேட்டர்ல பிரச்சினை வந்தப்போ காந்தி ஃபெரோசை தத்து எடுத்துக்கிட்டாரு. அதனால ஃபெரோஸ் பேரோட காந்தி பேர் ஒட்டிக்கிச்சு. இந்திரா ஃபெரோஸ் காந்தியோட மனைவிங்கற ஹோதால காந்தி பேரை சேர்த்துக்கிட்டாய்ங்க. ஆனால் கொஞ்ச காலத்துலயே ஃபெரோஸுக்கு, இந்திராவுக்கு ஒத்துவரலை. கழண்டு கிட்டாய்ங்க. இந்திரா அப்பாவோடதான் வாழ்ந்தார்.

என்னதான்  சட்டப்படி விவாகரத்து வாங்கலைன்னாலும் இந்திரா தன் கணவரோட வாழலைங்கறது மறைக்க முடியாத அக்மார்க் சரித்திர உண்மை. தாளி புருசன் மட்டும் வேணா புருசனோட சர் நேம் மட்டும் வேணுமா?

வாணி  கமலை மணந்தா "வாணி கமல்" கமலை  பிரிஞ்ச்சுட்டா .. வெறும் வாணிதேன்.இந்த விதிப்படி பார்த்தா காந்தி பேரை சேர்த்துக்க  இந்திராவே  அன்ஃபிட். இதுல ராஜீவ்,சஞ்சய், சோனியா,மேனகாவுக்கெல்லாம் காந்தி பேரை சேர்த்துக்க என்ன தகுதி இருக்கு?

சரி இன்ஸ்பிரேஷன்ங்கற கோணத்துல பார்த்தாலும் கனக சுப்புரத்தினம் பாரதி தாசனா மாறினார் .. பாரதிக்கு தாசனாவே வாழ்ந்தார்.

இந்த கூட்டத்துக்கு காந்தி பேரை சேர்த்துக்க  என்ன தகுதியிருக்கு?

Tuesday, October 26, 2010

சோனியா & கோ மீது மைக்ரோ ஃபைனான்ஸ் சேறு

மகளிரை பலி கொண்ட மைக்ரோ      ஃபைனான்ஸ் அழிச்சாட்டியம்
மத்திய அரசு  தலையிடாது - மத்திய நிதி மந்திரி அறிவிப்பு
ஏற்கெனவே டிவிட்டர்ல அரை குறையா சொன்ன விஷயம் தான். மைக்ரோ ஃபைனான்ஸுங்கற பேர்ல தாய்குலத்தை ரீடெய்லாவும், ஹோல்சேலாவும் கடன் காரிகளாக்கி தூக்கு போட்டு சாக ,ஊரை விட்டு ஓட ,ஏன் ஊர் மேல போகக்கூட வச்சிட்டானுவ.இது கடந்த வாரம் பத்திக்கிச்சு.

எங்க ஊரு தாத்தா ரோசய்யா இந்த பேப்பர் காரவுக ரவுச பொறுக்க முடியாம தகிரியமா ஆர்டினென்ஸ் எல்லாம் கொண்டுவந்தாரு. (கட்டாய வசூல் கூடாது அது இதுன்னு) ஏதோ கொஞ்சம் போல லாந்தர் ஜோதி கணக்கா  டப்பு டப்புனு அடிச்சிட்டிருந்த நம்பிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உஃபுனு ஊதி அணைச்சுட்டாரு. இந்த மேட்டர்ல மத்திய அரசு தலையிடாது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களே விதிகளை உருவாக்கி சுயக்கட்டுப்பாடோட செயல்படனும்னு சொல்ட்டாரு. ( நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்னு சொல்வாய்ங்களே ஞா வருதா)

போறாததுக்கு தாத்தா கொண்டு வந்த உளுவுளா காட்டி ஆர்டினென்ஸுல கடுமையான நிபந்தனைகள் உள்ளதாவும் அதையெல்லாம் நீக்கனும்னு சொல்லியிருக்காரு.உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னா இதான் போலும்.

அது சரி பாஸ் இந்த பிஸ்கோத்து மேட்டர்ல் மத்திய நிதிமந்திரியே தலையிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களோட நாடு தழுவிய நெட் ஒர்க்கின் தலைவருக்கு சோனியா,ராகுலுக்கும் என்ன சம்பந்தம்னு ஃபோட்டோவோட பார்ப்போம்.


அதுக்கு மின்னாடி இந்த மைக்ரோ ஃபைனான்ஸுங்கற விஷ வலைய  பத்தி சின்னதா அறிமுகம். மகளிர் சுய உதவிக்குழுன்னு அமைச்சாய்ங்க. தெரியும்ல. பெண்கள் ஒரு க்ரூப்பா சேர வங்கி க்ரூப்புக்கு கடன் தரும் ( மந்திரி சபை மாதிரி கூட்டு பொறுப்புங்கண்ணா. க்ரூப்ல ஒரு மெம்பர் திவாலாயிட்டாலோ, செத்துப்போனாலோ, காணாம போயிட்டாலோ வங்கிக்கு அதோட லின்க் கிடையாது. மத்த மெம்பர்ஸ் எல்லாம் சேர்ந்து வாங்கின கடனை கட்டித்தான் ஆகனும்.

இந்த ஃபார்முலா வங்கிகளோட பாதுகாப்புக்கு செமர்த்தியா ஒர்க் அவுட் ஆகவே தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் கஜானாவை திறந்து விட்டுது. க்ரூப் மெம்பர் செத்தா எவளோ செத்தா எனக்கின்னா போச்சுனு பல் குத்திட்டு இருக்கலாம்ல.

இதை பார்த்த சில வட்டி வியாபாரிங்க மைக்ரோ ஃபைனான்ஸுனு ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவு பண்ண வேண்டியது. அதும் பேர்ல கடனை அள்ளிவிட வேண்டியது.   என்ட் ரன்ஸ் ஃபீஸு, சப்ஸ்க்ரிப்ஷன், சங்கம் பதிவு,  வங்கி கணக்கு துவங்க இப்படி பல செலவுகளை மெம்பர்ஸ் தலைமேல போட்டு கடனும் தருவாய்ங்க  (வட்டியெல்லாம் வெண்ணை தடவி விட்டாப்ல  தீட்டிப்புடுவாய்ங்க)

இன்னைக்கு கவர்மென்டு கன்செர்ன்னாலே மோசம்பா. பேசாம ப்ரைவைட்டைஸ் பண்ணிரனும்னு புலம்பறாய்ங்களே அவிகளுக்கு அசலான மேட்டர் தெரியாது. ப்ரைவேட் கன்செர்ன் வந்தா அவனோட நோக்கம் ஜஸ்ட் லாபம்தேன்.

நான் கூட சித்தூர் வேலூர் பஸ்ல செக்கிங்கா செய்திருக்கேன். தினசரி பத்தா பத்து ரூபா. சம்பளம் ரூ 200 (கிம்பளம் பெருசாவரும் அது வேற சங்கதி) ஆனால் அரசு போக்குவரத்து கழகத்துல நடத்துனர்,ஓட்டுனர்க்கு இன்னா சம்பளம்னு பார்க்க மாட்டாய்ங்க. கடேசி சிங்கிள்ளே  ஒரு பல் போன பாட்டி, காலொடிஞ்ச ஆடு, மூக்குல ஒழுகுற குழந்தை மட்டும் ஏறினாலும் அரசு பஸ் போயே ஆகனும்.ப்ரைவேட்டுன்னா சிங்கிள் கேன்சல் நடந்து போன்னிருவான். நிற்க..


மேற்சொன்ன மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகளொட கிளைகளை  தெருவுக்கு தெரு ஆரம்பிச்சுட்டாய்ங்க.  இதுக்கெல்லாம் ஒரு நெட் ஒர்க். அதனோட அதிபதி நம்ம இளவரசரோட நெருங்கிய சினேகிதர். மேல் விவரம் மஸ்தா கீது.அதையும் தந்திருக்கேன். தொடர்ந்து படிங்க.


நம்முது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. ஏழை குடும்பங்கள்ள வேணம்னா "இன்னா சொம்மா பேசினிக்கினே போற .. நீ டைஃபாய்ட் வந்து நட்டுக்கினி கடந்தியே அப்போ  நானு நாலு ஊட்ல பத்து பாத்திரம் தேச்சு கொண்டாந்த  துட்ல  வவுத்த கழுவனதெல்லாம் மறந்து போச்சானு" கேட்பா

மிடில் க்ளாஸுன்னாலே ரெண்டும் கெட்டான்.இதுல லோயர் மிடில் கிளாஸ் சனத்தோட நிலைம எப்படியிருக்கும்னு ரோசிங்க.லட்சம் சொன்னாலும் தாய்குலத்துக்கு மணி சீக்ரெட்ஸ் தெரியவே தெரியாது.

சித்தாளு 100 ரூக்கு  மூக்குத்தி வாங்கி  கஷ்டத்துக்கு 30 ரூ க்கு விப்பா. மிடில் க்ளாஸு நகைய மாத்தி செய்யனு போய் ஏமாறுவா. .  எப்படியோ தாளி ஒரு பொம்பளையோட கப்பாசிட்டி  10 ஆயிரம்னா அவளுக்கு பத்து கம்பேனிக தலா பத்தாயிரம் கொடுத்து தொலைச்சிட்டானுவ.

தொழில்,முதலீடு,கொள்முதல்னு கணக்கா இருந்தவுக எஸ்கேப். கண்ணாலம், காட்சி,சீமந்தம், புருசனுக்கு டயாலிசிஸுனு கடன் வாங்கினவுக வசம்மா மாட்டினாய்ங்க.

க்ரூப் லீடருனு உள்ளவுகல்லாம் படாடோபத்தோட லீட் பண்ணிக்கிட்டே க்ரூப் மெம்பர்ஸுக்கு தெரியாம கடன் வாங்கி லம்பா அழுத்தி -மேனேஜ் பண்ணிக்கிட்டே வந்து ஒரு கட்டத்துல ஓடிப்போன கதையெல்லாம் மஸ்தா நடந்து கீது.

ஒவ்வொரு பொம்பளையும் ஏழு க்ரூப்ல மெம்பர்.ஏழு க்ரூப்லயும் கடன் வாங்கிருவா. தினசரி தவணை கட்டணும் (ஒவ்வொரு லோனுக்கு) இதில்லாம ஓடிப்போனவ செத்துப்போனவ பங்கை மத்த உறுப்பினர்கள் சேர்ந்து கட்டனும்.

தவணை நின்னா வங்கி கணக்கா ரெஜிஸ்டர் தபால் எல்லாம் வராது (அவிக கூட பழைய தமிழ் சினிமா கணக்கா அடியாட்களை அனுப்பறதா தகவல்.) க்ரூப் மெம்பர்ஸ் மொத்த பேரும் வீட்டாண்டை வந்துருவாய்ங்க. சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்.

"எங்கனா போடி" " நான் அனுப்பறேன் வரியா" " நான் சொல்ற ஆள் கிட்டே படுத்துக்கோ" "பணத்தை நான் வாங்கிக்கறேன்" இதெல்லாம் ச்சொம்மா ஜுஜுபி. நேர்ல கேட்டா வா.வெ.

பாலியல் தொழிலுக்கு நான் எதிரி இல்லை.ஆனால் அது சட்டப்படி நடக்க சட்ட திருத்தம் வரனும்னு கேட்கிற  சட்டத்தை மதிக்ககூடிய பிரஜை. ஆனால் பாருங்க ஒரு பொம்பள அவளுக்கு,அவளோட திருப்பித்தரும் தகுதியை மீறி  திணிக்கப்பட்ட கடனுக்கான தவணைக்காக அட் லீஸ்ட் 200 ரூ 300 ரூ க்காக அவள் விருப்பத்துக்கு எதிரா பாலியல் தொழிலாளியா மாத்தப்படறத ஏத்துக்க நான் தயாரா இல்லை.

இந்த  நாடகங்களையெல்லாம் அரங்கேத்திக்கிட்டிருக்கிற நெட் ஒர்க்கோட சி.இ.ஓ விக்ரம் சமீபகாலத்துல ஏறக்குறைய திவால் பார்ட்டி. ஆனால் இன்னைக்கு பல லட்சம் கோடிகள் புழங்குது எப்படி ? எப்படி? ( மேலதிக விவரங்களுக்கு -ஆங்கிலத்தில் இங்கேஅழுத்துங்க உபயம் வால் ஸ்ட் ரீட் ஜர்னல்)

விக்ரம் சார் இளவரசரோட நண்பர். ராஜ மாதாவுக்கு வேண்டப்பட்டவர். தாளி இந்த மேட்டர்ல தலையிடறதா இல்லைன்னு பிரணப் அறிவிக்கலைன்னா டங்குவார் அறுந்துராதா?

கர்நாடகால ரெட்டி ப்ரதர்ஸ் மேல ஒரே  நேரத்துல 65 இடத்துல இன் கம் டேக்ஸ் ரெய்டு விட்டாய்ங்களே பார்க்கலை. பிரதர்ஸ் உத்தம சீலருங்கனு சொல்ல வரலை.
ஒய்.எஸ் சி.எம்மா இருந்தாரே 5  வருஷம் + 4 மாசம் அப்ப ஏன் ரெய்டு விடலை?

பா.ஜ.க மந்திரி சபைய கவிழ்க்க ஒர்க் அவுட் பண்ணாய்ங்களே அப்ப ஏன் ரெய்டு விடலை. நேத்திக்கு பா.ஜ.க அரசை காப்பாத்தினாய்ங்க.அந்த கடுப்புல கப்புனு
இப்ப ரெய்டு. கப்படிக்குதுப்பா..

தனக்கு வந்தாதான் தலைவலிங்கற ரேஞ்சுல சனம் வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. ஒரு ஆட்டுமந்தைக்கு ஒரு புலி குறிவச்சதாம். ஒரேயடியா மந்தைல புகுந்தா தேவர் படம் மாதிரி முட்டி தள்ளீரும்னு தனி தனியா பிக் பண்ணி ஒவ்வொரு ஆட்டுக்கும் சொல்லுச்சாம் " நீ ஆடே இல்லை. நீயும் என்னை மாதிரி புலிதான். மத்ததெல்லாம் ஆடுங்கதேன்"

மோட்டிவேஷன் முடிஞ்ச பிற்பாடு தினசரி ஒரு ஆட்டை ஆட்டைய போட்டு தின்னு தீர்த்துருச்சாம் அப்படித்தான் இன்னைக்கு ஒவ்வொரு அமைப்பும் நம்மை தின்னு தீர்த்துக்கிட்டிருக்கு.

ஜெவும் கலைஞரும் பேசி ஒரு அண்டர் ஸ்டாண்டிங்குக்கு வந்து ரெண்டு பார்ட்டியும் காங்கிரஸை கழட்டி விட்டுரனும்பா.. இம்சை தாங்க முடியலை