Showing posts with label congress. Show all posts
Showing posts with label congress. Show all posts

Sunday, June 5, 2011

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி !

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ்  சதி திட்டம் தீட்டியிருக்கு. அதுக்கான முன்னோட்டம் தான் பாபா உசுருக்கு ஆபத்து. அதனாலதான் உண்ணாவிரத பந்தலை தூக்கினோம்னு பீலா விட்டது. பாபா பின்னாடி பா.ஜ.க இருக்குங்கறது உலகறிந்த ரகசியம் . இப்பம் பூனைக்குட்டியும் வெளியவந்துருச்சு. அதுவேற மேட்டர்.

இது பரபரப்புக்காக போடும் வெத்து குண்டு இல்லிங்ணா. சோசிய கணிப்பு இல்லவே இல்லிங்ணா. ஆனால் பட்சி சொல்லுது. (சாதக பட்சி இல்லிங்ணா சகோர பட்சி ). எதை வச்சு சொல்றிங்கனு கேப்பிக சொல்றேன்.

இன்னம் 6 மாசத்துல பாராளுமன்ற தேர்தல் வராப்ல இருக்கு. எப்படின்னு கேப்பிக ? சொல்றேன்.


ஆந்திராவுல தெலுங்கானா  காங்கிரஸ் எம்பிங்க வாயிதா போயி கிடக்காய்ங்க. தெலுங்கானா ஏரியாவுக்கு போனா மந்திரிகளுக்கே முட்டையடிதேன்.

அவிகளுக்கும் இது உறைச்சுருச்சு. ஜூன்30 க்குள்ள தெலுங்கானா கொடுக்கலின்னா கூண்டோட ராஜினாமான்னு அனவுன்ஸ் பண்ணியாச்சு. இந்த மேட்டர்ல பேக் அடிச்சா நெம்பர் 10, ஜன்பத்லயே சின்னதா வேலை தேடிக்கிட வேண்டியதுதேன்.

மானில அரசாங்கத்துக்கும் டெட் லைன் நெருங்கிக்கிட்டிருக்கு. தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துருச்சு. பத்து நாள்ள அதை பத்தி விவாதம், ஓட்டெடுப்பு நடந்தே ஆகனும். ஜகன் இப்பமே 29 எம்.எல்.ஏங்களை பீராஞ்சு வச்சிருக்காரு. டோட்டலா 55 பேரு டச்சுல இருக்கிறதா பீதிய கிளப்பறாய்ங்க. முந்தா நாள் டெலி கான்ஃபிரன்ஸு கூட நடத்தியிருக்காரு.

மானிலத்துல ஆட்சி போன பிற்பாடு எம்.பி பதவியை வச்சுக்கிட்டு நாக்கை வழிக்கறதா? இது ஒரு பாய்ண்ட். ஒரு வேளை ஜூன் 30 குள்ளே தெலுங்கானா  வரலின்னா தெலுங்கானா எம்பிங்க ராஜினாமா. அட தெலுங்கானா கொடுத்து தொலைச்சு   தெலுங்கானா எம்பிகளை சமாதானப்படுத்திட்டாலும் ஆந்திரா எம்.பிங்க ரேங்கிக்குவாய்ங்க.அவிக இன்னம் ரோசக்காரவுக. டெட்லைன் எல்லாம் கடியாது. டைரக்ட் ராஜினாமாதேன். ( இவிக சொத்து சுகம்லாம் ஹைதராபாத்ல மஸ்தா கீறதா ஸ்கூப்பு)


ஜகன் எம்.எல்.ஏவா நிக்காம எம்.பியா நின்னதுக்கு ஒரு பெரிய பின்னணி இருக்கு. ஜகனுக்கு சரத்பவார் காட் ஃபாதர் மாதிரி. சோனியா தனக்கு ஆப்பு வச்சப்ப தாளி  சென்டர்ல பவர் இருக்கிறதாலதானே இந்த திமிரு. அதையே ஆஃப் பண்ணிர்ரன்னுதான் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கிறாப்ல. பா.ஜ.க பெல்ட்டுலயும் ஜகனுக்கு நல்ல கம்யூனிகேஷன் இருக்கு.(அதுக்குன்னு கூட்டெல்லாம் வராது -ஊசிப்போயிரும்ல - இந்த கம்யூனிகேஷன் சென்டர்ல காங்கிரஸை கருவறுக்கத்தேன் ) பவார் ஜஸ்ட் சமயம் பார்த்துக்கிட்டிருக்காரு. பாவம் அவரை ஸ்டவ் மேல உட்கார வச்சு கொத்து பரோட்டாவே போட்டுட்டாய்ங்க சோனியாஜி.

எது எப்படி போனாலும் தேர்தல் கியாரண்டி. ஒரு வேளை எவனும் கவுக்கலின்னாலும் சோனியா முன் கூட்டி தேர்தலுக்கு போக ரெடியாயிட்டது நல்லா தெரியுது. (  நாள் போக  போக - ஒவ்வொரு ஊழலா வெளி வந்துக்கிட்டே இருக்கும். நேத்து அன்னா - இன்னைக்கு ராம் தேவ் - நாளைக்கு ஆரோ/ மொத்தத்துல காங்கிரசுக்கு ஆப்புதேன்)

காங்கிரசோட கவுண்டர் பார்ட் பா.ஜ.க கழுதை தேஞ்சு கட்டெறும்பான கணக்கா ஆயிருச்சு. காங்கிரஸா ஊழல் சேற்றுல மூக்கு வரை  புதைஞ்சு போச்சு. அதனாலதான் காங்கிரஸ்  வாதம்லாம் ஸ்க்ரம்ப்ளர் போட்ட  போன் உரையாடல் மாதிரி கேட்குது.

இப்பம் தேர்தல்ல  ஊழலா? ஊழலுக்கு ஆப்பாங்கற கேள்வி வந்தா காங்கிரஸு நிச்சயம் காணாம போயிரும்.

ஒரு வேளை செக்யுலர் (மதச்சார்பற்ற சக்திகள்)  - நான் செக்யுலர்ங்கற ( மதவாத சக்திகள்) பேட்டர்ன்ல தேர்தல் நடந்தா விதியில்லாத குறைக்கு சனம் காங்கிரஸுக்கு போட்டு தொலைச்சுருவாய்ங்க.

அப்படி ஒரு சிச்சுவேஷன் வந்தா கம்யூனிஸ்டுகளும் - இன்னபிற காங்கிரஸ் எதிர்ப்பு அணிகளும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கு.

வரப்போற தேர்தல்ல ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள காங்கிரஸ் என்ன வேணா செய்யும். இப்பம் ராம்தேவா மேட்டரையே பாருங்க. பின்னணியில பா.ஜ.க இருக்குன்னு தெரியும். பாபாவுக்கு  வேட்டி உருவினா பா.ஜ.க தங்களுக்கு கோவணத்தையே உருவிரும்னு தெரியும். இருந்தாலும் பாபாவை தூக்கினாய்ங்கன்னா என்ன அர்த்தம்?

பா.ஜ.க வை இர்ரிடேட் பண்ணனும். இந்த காவிப்பட்டாளம் துப்பாக்கியில இருக்கிற புல்லெட் மாதிரி. ட்ரிக்கரை ஒரு தாட்டி அழுத்திட்டா அது எங்க போய் முடியும்னு தெரியாது. ட்ரிக்கரை அழுத்தப்போறது பா.ஜ.கவா? காங்கிரஸா?

பா.ஜ.க அழுத்தினாலே இது கதி .  ஒரு வேளை வரும் தேர்தல்ல இருந்து ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள காங்கிரஸ் அழுத்தினா என்னாகும்னு நினைச்சாலே குலை நடுங்குது.

நாட்டுக்கு நடக்கிறது சூரிய தசை ராகு புக்தி . நமக்கு சுதந்திரம் கிடைச்சப்போ ராகு கேது எந்த நிலையில இருந்தாய்ங்களோ அதே நிலையில இப்பம் இருக்காய்ங்க. ராகுவுக்கு சம சப்தகத்துல கேது.

கேதுன்னா  சன்னியாசி. கேது மிதுனத்தில். மிதுனத்துக்கு அதிபதி புதன். புதன்னா வைணவம். பாபா பேரை பாருங்க ராம் தேவ் பாபா.

இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற நம்ம ப்ரிடிக்சன் இப்படி மெட்டீரியலைஸ் ஆனா நாடு தாங்குமா?

ங்கொய்யால .. பாபா டுபுக்கு - பாபா யாவாரி - பாபா பலாந்து பலாந்துனு புலம்பறாய்ங்க. சரி பாபா ஈயா கூட இருக்கட்டும்.

இங்கன கழிஞ்சு வச்சது நீங்கதானேடா? லல்லுவுக்கு பீதியில  பேதியே ஆயிருச்சு. ஆர்.எஸ்.எஸ் காரவுக சாந்தி காலத்துல வில்லங்கம் பண்ற பார்ட்டிங்கதேன் இல்லேங்கலை . ஆனால் எமர்ஜென்ஸி பீரியட்ல கள்ளுக்கடையில எல்லாம் கேம்ப் அடிச்சு பிரச்சாரம் பண்ணவுக.

எசன்ஷியாலிட்டி இஸ் தி மதர் ஆஃப் இன்வென்ஷன். காங்கிரஸ் ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள இந்த மதவாத அம்சத்தை ஹைலைட் பண்ண இந்த மூவ் பண்ணியிருக்கு.

ஆனால் கடவுள் சதிகாரன். பஸ்மாசுரன் கதை தெரியும்ல.  பாபாவுக்கு எதுனா நடந்தா காங்கிரஸ் தாபாவுக்கு டாப் என்ன ? பாட்டமும் இருக்காது.

ஆருப்பா அங்கே இத்தாலிக்கு ஃப்ளைட் டைம் விஜாரி.

Wednesday, December 29, 2010

காங்கிரசின் மரண வாக்கு மூலம்

என்னங்க முருகேசன்.. காங்கிரஸ் ஐ.சி.யுலதான் இருக்கு அதுக்குள்ள ஏன் மரணவாக்குமூலம்னு கேப்பிக. நான் இன்னா பண்ணட்டும் பாஸ் காங்கிரஸ் கட்சி தன்னோட சுயசரிதைய வெளியிட்டிருக்கு அதுதான் மரண வாக்கு மூலம் மாதிரியே இருக்குதாம்.  (The congress and making of  Indian Nation ) ( நாம எங்கே படிச்சோம் - சாட்சி டிவில கிழிகிழினு கிழிச்சுட்டு இருக்காய்ங்க)

எமர்ஜென்சி கால கொடுமைகளை சஞ்சய் காந்தி பேர்ல தள்ளி விட்டுட்டாய்ங்களாம்.( சோனியா இன்னமும் தன்னை மருமகளாவே நினைக்கிறாய்ங்க. ஓரகத்தி  மேனகா மேல அவிகளுக்கு  கோவம் இன்னம் தணியல போல இருக்கு)

பாவம் ராஜீவ் காந்திக்கு தூர திருஷ்டி இல்லாததால சில விரும்பத்தகாத சம்பவம்லாம் நடந்துருச்சாம்.

அவரென்னவோ  பவர் ப்ரோக்கர்ஸை ஒழிக்க முயற்சிபண்ணாராம். ஆனால் கிழவாடிங்க விடலியாம்.

ஆமா ராஜீவ் என்ன 32 ஆவது வட்டசெயலாளராவா இருந்தாரு. அந்த கிழவாடிகளையெல்லாம் தூக்கி இந்துமகாக்கடல்ல எறியவேண்டியதுதானே

பாவம் எங்க ஊரு  நரசிம்மராவு. அவரு செத்து ஒழிஞ்ச பிற்பாடு கூட அவரோட பாடிய கூட தில்லில புதைக்கவிடாம ஹைதராபாதுக்கு அனுப்பிவச்சவுக இன்னைக்கு இந்த புஸ்தவத்துல அவரை வானளவு புகழ்ந்திருக்காய்ங்களாம்.


ஐயப்ப சாமி பூஜைல அறிந்தும் அறியாமலும்,தெரிந்தும் தெரியாமலும்னு மன்னிப்பு கேட்பாய்ங்களே அது மாதிரி ஏறக்குறைய எல்லா தப்பு தவறுகளையும் பட்டியலிட்டு மன்னாப்பு கேட்டிருக்காய்ங்களாம்.

125 வருஷம் பாஸ் ! எல்லா இழவையும் ஞா படுத்தி இப்பயாச்சும் எங்களை புரிஞ்சிக்கிருங்கடா .. ஒழிச்சுக்கட்டுங்கடான்னு இந்த புஸ்தவம் போட்டாப்ல இருக்கு.

இருந்தாலும் என்ன? தமிழினத்தையே அழிச்சா என்ன? நம்ம மீனவனை  சுட்டு தள்ள புல்லெட் கொடுத்தா என்ன? அதைதட்டிக் கேட்ட பார்ட்டிய ஜெயில்ல போட்டா தான் என்ன நம்ம சனம் திருந்துவாய்ங்களா? ஊஹூம் எனக்கு நம்பிக்கையில்லப்பா..

இதுல சொல்லாதது:
ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்த பிற்பாடு மானில அரசுகளை ஒரே கையெழுத்துல வீட்டுக்கு அனுப்பினது

ஆந்திராவுல கவர்னர் ராம்லாலை வச்சுக்கிட்டு  டூ தேர்ட் மெஜாரிட்டி இருக்கிற நிலைல என்.டி.ஆரோட ஆட்சியை கவிழ்த்த கதை

Thursday, December 10, 2009

காங் கட்சியின் கச்மலங்கள் 1947 to 2009



1.காந்தி தாத்தாவுக்கு முன்னாடியே காங் இருந்தது அதோட டூட்டி ப்ரிட்டீஷ் ரூலர்ஸுக்கு மனு கொடுக்கிறதுதான்
2.அதுக்கு முன்னாடியே சரித்திரத்துல மஸ்தா பேர் போராட்டத்தை நடத்தியிருக்காக உம். வீரபாண்டிய கட்ட பொம்மன், மருத நாயகம், வேலூர் கலகம், சிப்பாய் கலகம் ஆனால் தாத்தாவுக்கு லக்கி ப்ரைஸு மாட்டிக்குச்சு.
தாத்தா செகண்ட் களாஸ்ல தான் போவார். அதுக்காக ரயில்ல ஒரு போகிய ஒதுக்கிருவாங்க எல்லா பெஞ்சையும் கழட்டிட்டு தாத்தா அண்ட் கோவுக்கு ஒதுக்கிருவாக. ப்ரிட்டீஷ் இந்தியாலயே இது கதை. தப்பி தவறி தாத்தா ஜார்ஜ் வாஷிங்டன் மாதிரி ஜனாதிபதி ஆகியிருந்தா என்ன ஆயிருக்கும்.காங்கிரஸ் கட்சி தலைவரா சுபாஷ் போஸ் கன்டெஸ் பண்ணப்போ ஒரு கிழவாடிய ப்ரப்போஸ் பண்ணி இவர் தோல்வி என் தோல்வின்ன காந்தி தாத்தா தான் இவிகளுக்கு தெய்வம். சுபாஷ் போஸ் கா.க. தலைவராகியிருந்தா இந்திய சரித்திரமே வேற ரூட்ல போயிருக்கும்

3. நேருமாமா பத்தி சொல்ல நிறைய இருக்கு. இந்திராவுக்கும் நேருவுக்கும் இருந்த உறவு தந்தை மகள் பார்டரை தாண்டியதுனு எங்கயோ படிச்சேன். மேலும் நேருவுக்கு லேடி மவுண்ட்பேட்டனுக்கும் அஜால் குஜால், அதுல வேற நேரு ஹோமோனு கூட தகவல் இருக்கு.ரோஜா பூவை குத்திக்கிட்டு, டான்ஸ் ஆடற பாப்பாத்திங்களுக்கும், சங்கீத வித்வானுங்களுக்கும் இருந்த இம்பார்டென்ஸ் படேலுக்கு கிடையாது. தாத்தா சாகாம இருந்திருந்தா நேருவுக்கு கல்தாதான். இன்னைக்கு ஆந்திரால ஓபுளாபுரம் மைன்ஸ் காலி ஜனார்தன் ரெட்டிக்கும் , ஒய்.எஸ்.ஆருக்கும் இருக்கிற ஃபேமிலி ஃப்ரண்ட்ஷிப்பை கூட கொச்சைப்படுத்தறவங்க கண்ல மாமாவுக்கும், டாட்டாவுக்கும் இருந்த தொடர்பு விழாதா பெர்ச்சு பெர்ச்சா அணை கட்டிவிட்டுட்டா பாலும் தேனும் ஓடிருமா ? விளை நிலம் யார்கிட்டே இருக்கு. நிலத்துக்கு சொந்தக்காரன் எத்தினி பேரு விவசாய கூலி எத்தினி பேரு ? முதல்ல கூட்டுறவு பண்ணை விவசாயத்துக்கு வழி பண்ணி அப்புறமா செலவழிக்கிறத விட்டுட்டு நிலச்சுவாந்தார்கள் செழிக்க அணை. அதை கட்ட வலசை வந்த தொழிலாளர்கள். அணை முடிந்த பிறகும் அங்கேயே தங்கிவிட ஸ்லம், மாஃபியா, விபச்சாரம்

4. இந்திரா அம்மையார் பத்தி சொல்ல எமர்ஜென்ஸி ஒன்னு போதும். பஞ்சாப்ல அகாலிகளை ஒடுக்க பிந்தரன் வாலேவை கொஞ்சி ( அமெரிக்கா லேடனை கொஞ்சினா மாதிரி) ஆயுதம் தாங்கி ஊர்வலம் வரவிட்டு.. வாலே மிஞ்சி போக பொற்கோவில்ல பூந்து அதுக்கு பின்னாடி நடந்தது தெரியும். பாவத்தின் சம்பளம் மரணம் சஞ்சய் காந்தி பத்தி சொல்லனும்னா ஜெயப்ரதா பத்தி சொல்லனும் பாவம் பாட்டிக்கு ஏன் பி.பி ஏத்தி விடறது. மகன் தாயை ப்ளாக் மெயில் பண்ண கதை, சஞ்சய் சாவில் மர்மம்.ராஜேஷ் குமார் மர்ம நாவலே எழுதலாம்

5.ராஜீவ் விச‌யத்துல நானே ஏமாந்துட்டன் சுஜாதா நாவல்ல சம்பத்துனு ஒரு கேரக்டர் அதுமாதிரி உருவம். பஞ்சாயத்து பண்ணிட்டு வா நைனானு அனுப்பினா கட்சிகாரன் மாதிரி கை எழுத்தை போட்டு, பார்ட்டியாகி, கட்சி கட்டி அரசியல்ல கொலையெல்லாம் கிடையாதுங்க தற்கொலை தான்
இவரு கேரளா பாயாசம் சாப்பிடனும்னா யுத்த விமானத்துல கொண்டுவரனுமாம். சதீஷ் சர்மா பண்ணைல நீச்சல் . மரணத்தின்போது ரத்தக்குளத்தில் ( மஸ்தா கீதுபா யாராச்சும் வக்காலத்து வாங்கிகிட்டு வரட்டும் கீமா தான். மொத்தம் ஞா வந்துரும்.

6.சோனியாம்மா பத்தி சொல்லனும்னா முதல் பாயிண்ட் ஜெ சொன்ன மாதிரி, சங்மா சொன்ன மாதிரி அது வெளி ஊர் பார்ட்டி. ஏதோ தாஜ்மகால் பார்த்தமா, குதுப்மினார் பார்த்தமானு இருந்தா பரவாயில்லை. இந்த மாராஜி போட்ட மருமக்கமார் சண்டை ஜகத் பிரசித்தம். இன்னைக்கும் மேனகா ரோட்ல. ராஜீவ் செத்ததுமே சல்வாரை காணோம் கமீசை காணோம்னு காணாம போன பொம்பளைய இந்த கிழவாடிக போய் கிளப்பி கொண்டுவந்தானுக. இன்னைக்கும் ஒய்.எஸ்.ஆர் ஒரு தெய்வமாதான் இருக்காரு. அவரோட மகனை ஜகனை சி.எம் ஆக்கி விட்டிருந்தா இந்த தெலுங்கானா சமாச்சாரம் எல்லாம் ஜுஜுபி. அதை விட்டு கிழவாடிய சி.எம். ஆக்கி தாளி ஸ்டேட்டே நாலு துண்டா ஆயிர்ராப்ல இருக்கு. எம்.ஆர்.ராதா சொன்ன மாதிரி க்ரேட்டர் ராயலசீமா, கோஸ்தா ஆந்திரா, தெலங்கானா, க்ரேட்டர் ஐதராபாத்னு ஃபாம் ஆனா 100 கிமி க்கு ஒருதரம் மானிலம் மாறும்