Friday, August 28, 2009

கோவில் நகை அடகு வைப்பு

பிட்டா படிங்க !
1. நான் ராவணனின் ரசிகன் /கமல் பேச்சு
இதென்னடா வம்பா போச்சு ஒரு காலத்துல ரஜினி கூட இதே டயலாகை சொல்லி தன் மகளுக்கு மண்டோதரினு பேருவச்சதா ஞா

2.விஜய் காங். கட்சியில் சேர்ந்தார்
ஆகா இனி தமிழக காங்கிரசில் புதிய ரத்தம். விஜய் கண்ணா பார்த்து நைனா ! கலைஞர் அழகிரிக்கு சிக்னல் கொடுத்தாருன்னா ரசிகர் மன்றமே காலி

3.ஆந்திரத்தில் ரேஷனில் கடலைப்பருப்பு(கிலோ 30க்கு) பட்டாணி(கிலோ 20க்கு) வழங்க முடிவு. (ஏற்கெனவே தரப்படும் துவரம்பருப்புக்கு கூடுதலாக.
கலைஞரய்யா உங்களுக்கெதுக்கு இந்த தலைவலி எல்லாம்.. ஜானகியம்மா யாரோட மனைவி அவர் எப்படி வாத்தியாருக்கு மனைவியானாருன்னு ஒரு எக்ஸ்க்ளூசிவ் முரசொலில கொடுத்தா தீர்ந்தது கதை
4.மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் 55 வயது நிறைந்த பெண்களுக்கு ஓய்வு தொகை திட்டம்( அபய ஹஸ்தம்) நவம்பர் முதல் துவக்கம். தலா ரூ. 500 முதல் 2,500 வரை கிடைக்கும்
5. கிராம சபைகளில் கலந்து கொள்ளவிருக்கும் ஒய்.எஸ். கலைஞருக்கென்ன ஹாலில் வந்து உட்கார்ந்தால் குடும்ப உறுப்பினர்களில் பாதி பேர் சுற்றி உட்கார்ந்தால் கிராம (ட்ராமா ?) சபை தான்

6.திருப்பதி கோதண்ட ராமர் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர். அர்ச்சகர்கள் சம்பளங்களை உயர்த்த சிரஞ்சீவி கோரிக்கை
7.ஆப்பரேஷன் ஆகர்ஷா பெயரில் எதிர்கட்சி தலைவர்களை காங். கட்சிக்கு இழுத்து வரும் ஓய்.எஸ். பார்த்துங்கண்ணா சந்திரபாபுவை மட்டும் இழுத்துராதிங்க அவர் சொந்த மாமனாரை இழுத்து தள்ளினவர்
8. ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா என்ற பெயரில் கட்சியிலிருந்து வெளியேறிய தலைவர்களை இழுக்க சந்திரபாபு திட்டம்.(ஹூம்..தப்பித்தவறி ஜெயிச்சாலும் ஜெயிச்சுரவங்கற சந்தர்ப்பத்துலயே ஓடிப்போனவங்க இப்பயா வரப்போறாங்க‌
9.கூகுல் டென் டு 100 ப்ரோஜக்டு என்ன ஆனது ? உலக அளவில் உலகத்தில் பெரும் மாற்றத்தை விளைவிக்க வல்ல ஐடியாக்களை வரவேற்று ஒரு போட்டியை அறிவித்தார்கள் . என்னப்போல் பல கேணையர்கள் ஐடியா அய்யாசாமிகள் ஐடியாக்களை அனுப்பினார்கள் . முடிவுதான் இன்னும் அறிவிக்கப்படலை http://www.project10tothe100.com/

10.இலங்கை விவகாரம் பற்றி நான் எழுதிய பதிவுக்கு 4 மறுமொழிகள். அதில் இரண்டு ஆங்கிலத்தில்

11.ஜெயலலிதா திமுகவின் பணபலம் இத்யாதியை காரணம் காட்டி தேர்தலை புறக்கணித்துள்ளார். ஆந்திர மானிலம், சித்தூரில் பிரஜாராஜ்ஜியம் கட்சி வேட்பாளர் ரூ.40 கோடி வரைசெலவழித்தார். காங்கிரஸ் வேட்பாளரோ அதைப்பற்றி கவலையே படவில்லை சம்பிரதாய பிரச்சாரத்தையே மேற்கொண்டார். முடிவு என்னாச்சு தெரியுமோ ? காங் வேட்பாளர் 1,600 வாக்கு வித்யாசத்தில் வெற்றி

12.ஆந்திரத்தில் உயர்ரக அரி்சிவிலை ஏகத்துக்கு உயர்ந்ததை அடுத்து அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு பதுக்கல் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்வர் உயர் ரக அரிசியைவிட மட்ட அரிசியில் தான் சத்து அதிகம் என்று அதையே தம் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிட ஆரம்பித்துவிட்டார். அவர் மகனும் எம்.பி.யுமான ஜகன் மோகன் ரெட்டியும் அதே.

Thursday, August 27, 2009

இலங்கை விவகாரம் குரங்கு புண்

ஆம். குரங்குக்கு புண் வந்தால் அது சும்மா இருக்காதாம். அதை நோண்டி நோண்டி பெரிதாக்கிக்கொண்டே இருக்கும். அது போல் இலங்கை விவகாரம் என்பது தமிழர்களாலேயே பெரிதாக்கப்பட்டுவிட்டது என்பது என் கருத்து. ஒரு மெஜாரிட்டி பிரிவினருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது என்பது உலக வரலாற்றிலேயே ஒரு சிங்களர்கள் விஷயத்தில் தான் நடந்துள்ளது. அது என்ன இழவோ தெரியவில்லை. தமிழர் என்றொரு இன‌முண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்பது போல் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தண்ணீரில் எண்ணெய் பொட்டு போன்று வாழ்கிறார்களே தவிர இரண்டற கலப்பதே இல்லை. உடல் அங்கே உயிர் எங்கோ என்பது போல் அவர்களின் நினைவு மொத்தம் தாய் நாட்டின் மீதே உள்ளது பிற மொழியினருக்கும், இனத்தாருக்கும் (ஏன் எனக்கும் ) புரிய மறுக்கிறது.

சிங்கள் அரசுகள் இன வாத அரசுகள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.உலக நாடுகளிலான இன்றைய அரசியல் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் வந்து நிற்கிறது. எதை வேண்டுமானாலும் செய் அதிகாரத்தை கைப்பற்று என்பதே அரசியலின் முக்கிய நோக்கமாகிவிட்ட பின்பு இனவாதம், இனப்போர் எல்லாம் தவிர்க்க முடியாததே. அதை எதிர்கொண்ட மித வாத சக்திகளை இனவாத அரசுகள் கிள்ளு கீரையாய் நடத்த , தீவிர வாதம் கிளர்ந்தது.

அதிலும் பிரபாகரன் என்பவர் உலக கொடுங்கோலர்களில் எவருக்கும் இளைத்தவரல்ல. தமிழினமும் வேறு விதியில்லாத பட்சத்தில் தான் பிரபாகரனை ஆதரிக்க வேண்டி வந்தது. (அவர் தான் ஏனைய தீவிரவாத சக்திகள் அனைத்தையும் அழித்து ஒழித்துவிட்டாரே)

தமது இயக்கம் ப‌லவீனப்படும்போது அமைதி பேச்சுக்களை ஊக்குவிப்பதும், அந்த நேரத்தில் தம் இயக்கத்தை பலப்படுத்தி கொள்வதும் அவருக்கு வழக்கமாகிவிட்டது. மேலும் அவர் ஒரு ஈகோயிஸ்ட் . தான் மையப்புள்ளியாக இல்லை என்று அறிந்தால் போதும் உடனே அந்த அந்த ஏற்பாட்டையே நிராகரிப்பது அவர் ஸ்டைல். அவரது கிம்மிக்ஸ் நம் தங்க தமிழகத்து எந்த அரசியல் தலைவருடையதை காட்டிலும் இளைத்ததல்ல. தானம் கொடுத்த பசுமாட்டுக்கு பல் பிடித்து பார்த்தாலும் பரவாயில்லை , தானம் கொடுத்தவரையே கசாப்பு போட்ட காந்தீயவாதி பிரபாகரன்.
இலங்கை அரசு எப்படி புலிகளை உலக அரங்கில் வில்லன் களாக நிறுத்தியதோ அதே பணியை புலிகள் செய்திருக்கலாம். க்ளோபல் வில்லேஜ் என்ற வாதம் வலுப்பட்டு வரும் காலத்தில் உலக அரசுகள் மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகளின் கைப்பாவைகளாகி ரொம்ப காலமாகிறது.

அவர்களது வியாபாரத்தை பாதிக்கும் எந்த விஷயத்தையும் மேற்படி மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகள் விரும்புவதில்லை. அதனால் உலக அரசுகளும் தீவிரவாதிகளை தீண்ட தகாதவர்களாக பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் எந்த நாட்டுக்கும் , எந்த நடுவருக்கும் அடங்காத/வளைந்து கொடுக்காத/ எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் ஒத்துவராத பிரபாகரனை உலக நாடுகள் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எனவே தான் இலங்கை அரசு உலக நாடுகளின் ராணுவ/வியூக/ஆயுத /உளவு உதவியை பெற முடிந்தது. பிரபாகரன் கதையை முடிக்க முடிந்தது.

தனி நபர் புகழ்ச்சி என்பது அரசியலில் மட்டுமல்ல போராளிக்குழுக்களையும் நாசமாக்கும் என்பதற்கு புலிகள் ஒரு உதாரணமாகிவிட்டனர். மேலும் லட்சியம் எத்தனை உயர்ந்ததாக இருந்தாலும் அதை அடையும் வழியும் நேர்மையானதாக இருக்க வேண்டும். கோழைத்தனமான மனித வெடிகுண்டுகள்/ குழந்தை போராளிகள் /கண்ணி வெடிகள் என்று புலிகள் செயல்பட்டதால் உலகின் அனுதாபத்தை முழுக்க பெறமுடியாது போய்விட்டது.

ஒருபுறம் தற்காலிக "காலத்தின் கட்டாயங்களால்" ஆயுதம் தூக்க வேண்டி வந்தாலும் , நிரந்தர தீர்வுக்கு முயற்சி செய்திருக்கலாம். அதில் புலிகள் தவறிவிட்டனர். ராஜீவ் கொலை புலிகள் விஷயத்தில் இந்தியாவை ஒரு ரெஃபரி யாக கூட இயங்காமல் செய்துவிட்டது. சரி நடந்தது நடந்தது தான். இதை மாற்ற முடியாது. இனியேனும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிப்பதையும் உலகத்தமிழர்கள் விட வேண்டும்.

நீங்கள் என்னதான் இனமானம், தன்மானம் , வாழ்வுரிமை,சமத்துவம் என்று வாய் கிழிய பேசினாலும் மேற்படி ஐட்டங்களுக்காக போராடவேனும் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். முள் வேலிக்கிடையில் சகதியில், பசி பட்டினியில் நோயில் சாகும் அந்த சகோதர, சகோதிரிகளின் துன்பங்களுக்கு முற்றும் போட முற்றும் துறக்கலாம்.

புலிகள் மொழியிலேயே கூறுகிறேன். புலி பதுங்கித்தான் ஆக வேண்டும். உயிர் பிழைத்தால்தானே மீண்டும் பாய. இலங்கை தமிழர்கள் ஸ்தூலமாக பட்டு வரும் வேதனைகள் ஒருபுறம் என்றால் அவர்கள் மனரீதியில் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள். அங்குள்ள குழந்தைகள் வளர்ந்தால் அவற்றின் மனோதத்துவம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்தாலே அச்சம் பிறக்கிறது.

நான் சொல்ல விரும்புவது ஒரே வரிதான் "Be a Roman when you are at Rom"
சாவுக்கே அழைத்துச்செல்லும் லட்சியவாதத்தை விட உயிர் வாழ செய்யும் மெட்டீரியலிசமே பெட்டர்.

பி.கு: உங்கள் மறு மொழியை சிங்களனுக்கு பிறந்தவனே என்று ஆவேசமாக துவக்கிவிடாதீர்கள். பத்து நிமிடம் யோசித்து பின் எழுத ஆரம்பிக்கவும். தமிழகத்தில் வாய் கிழிய பேசும் அரசியல் வாதிகளை இலங்கை அகதி முகாமில் ஒரு நாள் வாழச்சொல்லுங்கள் பார்ப்போம். அட இங்குள்ள அகதி முகாமில் அரை நாள் வாழச்சொல்லுங்கள் பார்ப்போம். மாயாவாதத்தை விட்டு மண்ணுக்கு வாருங்கள். உயிரோட இருந்தா உப்பு வித்து பொழச்சுக்கலாம் தலை. உயிரே போன பிறகு என்ன செய்ய.. வரிப்பணத்தை வீணாக்கி சிலை வைப்பான், அதை உடைக்க ஒரு கூட்டம் கிளம்பும் கம்பி கூண்டுல சிறைவைப்பான் அவ்ளதானே ஷிட் !

Monday, August 24, 2009

செக்ஸ் Vs பொருளாதாரம்

1.பதிமூன்று வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் மாணவன் அ மாணவி செக்ஸ் மீதான நாட்டத்தால் தன் அறிவில் பாதியை தான் கல்வி பயில செலவழிக்க வேண்டியுள்ளது. பாதி அறிவு செக்ஸை அடையவோ அ அந்த உணர்வுகளை அடக்கவோ செலவழிந்து விடுகிறது

2. அதிர்ஷ்ட வசமாக சுய இன்பம் இத்யாதி மாற்று வழிகளின் உதவியால் காதல் கத்திரிக்காய் என்று டைவர்ட் ஆகாதிருந்தால் அ புத்தி சாலித்தனமாக கணக்கு போட்டு காதலித்தால் பிரச்சினை இல்லை. தெய்வீக காதல் இத்யாதியில் இறங்கிவிட்டால் ஷெட் (திவால்)

3.அட எப்படியோ வேலை கிடைத்துவிட்டது உடனடியாக ஒரு திருமணம் நடந்துவிடுமா ? ஊஹூம் சந்தையில் மாடு பிடித்த கணக்காய் பெண்ணையோ ,பிள்ளையையோ பிடித்து கட்டி வைப்பதற்குள் அவளுக்கு முலைக்காம்பே சுருங்க ஆரம்பித்துவிடும். இவன் இழந்த சக்தி வைத்தியர்களை சுற்றி அலைந்து கொண்டிருப்பான்.





சரி ஒழியட்டும் கதம் கதம் !
அவர்களிடையே உடலுறவு என்பது இயல்பானதாக இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. அவ்வாறன்றி அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால்..

1.அவருக்கு உடலுறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை
2.பார்த்ததுமே எல்லாம் முடிஞ்சி போகுது
3.அவர் மீசை மட்டும் தான் வச்சிருக்கார்

என்றெல்லாம் அந்த பெண் குறை சொல்லி தாய் வீட்டுக்கு வந்துவிட முடியாது. காரணம் தெரிந்ததே..நம் சம்பிரதாயம்,கலாச்சாரம்,பெண்ணின் அடக்கம் கழுதை முட்டை என்று ஆயிரம்.


தன் மனக்குறை இது என்று வெளியில் சொல்ல முடியாத நிலையில் அந்த பெண் அந்த குடும்பத்தில் பிரச்சினைகளை க்ரியேட் செய்ய ஆரம்பித்து விடுகிறாள். சரி அதுலதான் ஒன்னும் கழட்ட முடியலை இதையாவது செய் என்று அவனுக்கு டார்கெட் வைக்கிறாள். (54 இஞ்ச் கலர் டிவி முதல் டபுள் பெட் ரூம் ப்ளாட் வரை.

ஆணின் கதை வேறு. அவனுக்கு அந்த விஷயத்தில் மனைவி சரிப்பட்டு வரவில்லை என்றால் நிறைந்த சபையில் உடைத்து சொல்லி விடுகிறான்.

ஒருவேளை இவனால் அவளை திருப்திப் படுத்த முடியாத நிலை இருந்தால் அதை மட்டும் வாயால் சொல்ல் முடியாது வேறு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட முயல்கிறான்.

இவன் தான் பெரிய ஆண்பிள்ளை சிங்கம் ,மதன காமராஜன் என்ற நினைப்புடன் முதலிரவு அறைக்குள் நுழைகிறான். ஏதோ காரணத்தால் தோற்று போய்விட்டால் அவள் முகத்தை மறுநாள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதை எப்படி சபையில் வைத்து சொல்வது..


இந்த நிலையில் தான் என் அம்மாவை ம‌திக்கிற‌தில்லே..
க‌ல்யாண‌த்துக்கு போட்ட‌ ந‌கை எடை குறைவா இருக்கு
மெத்தை த‌ர‌லை,க‌ட்டில் த‌ர‌லை எல்லாம் ச‌பையில் வைக்க‌ப்ப‌ட்டு க‌தை காவ‌ல் நிலைய‌த்துக்கோ, குடும்ப‌ கோர்ட்டுக்கோ செல்கிற‌து.
மேற்படி ஆணோ பெண்ணோ வெத்து ஆட்கள் அல்லவே அவர்களில் ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் ஒருவர் டாக்டராக இருக்கலாம் லாயர்,ஆடிட்டர் இத்யாதி வேலைகளில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்.

பாதிபேர் அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது என்று தம்மை தாமே வடிவமைத்து கொண்டு விடுகின்றனர். இந்த நிதானம்/ ஹிப்பாக்ரஸி/கோழைத்தனம் இல்லாதவர்களால் தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இது போன்ற கணவன் மனைவி பொருளாதார விஷயங்களில் பைத்தியம் பிடித்தாற்போல் நடந்து கொள்வார்கள். ஒன்று வடிகட்டின கஞ்சத்தனம் வந்துவிடும். (எதிராளியை பழி வாங்குகிறார்களாம்) அல்லது ஊதாரித்தனமாக செலவழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இங்கே ஒரு தத்துவம்:
மனிதனில் இருப்பது ஒரே சக்தி. அது காம சக்திஅது மேல் நோக்கி போனால் யோக சக்தி. கீழ் நோக்கி வந்தால் காம சக்தி. அது படைப்பின் சக்தி. ஒரு உயிரை படைக்கத்தான் காம சக்தி. தன்னை இழக்கத்தான் (தன் ஈகோ) காமசக்தி , அதில் இழக்க முடியாதவன், படைக்க முடியாதவன் உடைக்க ஆரம்பித்துவிடுகிறான். சட்டத்தை, பொருளாதார அமைப்பை உடைக்கிறான். தூள் பண்ணுகிறான்.

நான் சவாலிட்டு கூறுகிறேன் . எவனொருவனுக்கு செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறதோ அவன் பாதுகாப்பற்று இருப்பதாய் உணர்கிறான். பெரும் பணம் சேர்க்கிறான்.

தன் "பவிசு" தெரியாத அ புரிந்து கொள்ள முடியாத சிறுமிகளை சீரழிக்கிறான். அ ஹோமோவாகிறான் , மனிதன் தான் ஒரு வேலையை திருப்திகரமாக முடித்து விட்டால் மீண்டும் அதில் ஈடுபாடு பிறக்க நாள் பிடிக்கும். அரை குறைகள் தம் அரை குறைத்தனத்தை மறைக்க மீண்டும் மீண்டு ஈடுபட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச சக்தியையும் இழந்துவிடுகின்றன.

எனவே அரசாங்கம் முதற்கண் தம் மக்களின் செக்ஸ் லைஃபை சீர்திருத்த வேண்டும் .

இல்லாவிட்டால் மேற்படி அரை குறைகள் படைக்கும் சக்தியை படைப்பில்

செலவழிக்காது உடைப்பில் செலவழிக்க ஆரம்பித்துவிட்டால் கதை கந்தல் தான். ஒரு கள்ளக்காதல், மனைவி வெட்டிக்கொலைக்கு மட்டுமல்ல சத்யம் ஊழல் முதல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை இதுவும் ஒரு காரணம். இதுவே காரணம்.

Saturday, August 22, 2009

கலைஞருக்கு வுமன் தான் எமன் !

கலைஞரின் சிறு பிள்ளைத்தனம்


தமது அரசை மைனாரிட்டி அரசு என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடும்
ஜெயலலிதாவை திருமதி என்றே அழைப்பேன் என்ற கலைஞர் அதற்கு ஆதாரமாக குமுதத்தில் வெளிவந்த ஜெயலலிதாவின் பேட்டி மற்றும் சோபன் பாபுவுடனான படங்களை முரசொலியில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.
காலச்சக்கரம் 60 வருடங்களில் ஒரு சுற்றை முடித்து மீண்டும் மறு சுற்றை ஆரம்பிக்குமாம். அதை போல் மனிதன் 60 வயதை முடித்தான பிறகு மீண்டும் குழந்தையாகிவிடுகிறான். குழந்தையை யாரேனும் கொஞ்சுவர். குழந்தை தனமான முதியவரை ? கலைஞரும் இந்த ஸ்டேஜுக்கு வந்து விட்டார் போலும். ஐந்தி வளையாதது என்பது போல் கலைஞர் தமது அரசியல் வாழ்வில் பெண்களை துச்சமாகவே மதித்து வந்தவர். இந்திரா காந்தி தமிழ‌கத்துக்கு வந்து குடியேறினால் விதவை பென்ஷன் தருவோம் என்று ஆர்ப‌ரித்த கூட்டத்துக்கு தலைவன் அல்லவா ?

அந்த காலத்தில் பி.டி.சரஸ்வதியை நாடாவை அவிழ்த்து பார்த்தால் தெரியும் என்று சொன்னதும் உண்டாம். பிறகு நான் சொன்னது பாவாடை நாடாவை அல்ல கோப்பு நாடாவை என்று ஜகா வாங்கியதும் உண்டாம். எல்லாம் செவி வழி செய்திகள் தான். "இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர் " என்று கவிதையில் எழுதினால் அது விரசமாகவே இருந்தாலும் ரசனை என்று வாதிடவேணும் வாய்ப்புண்டு. எம்.ஜி.ஆரை மனதில் வைத்து அவரை போன்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவனுக்கு கவிதை எழுத தெரியாத நிலையில் யாரோ ஒருவரின் கவிதையை தன் கவிதையாக காட்டி பெயர் வாங்குவதாகவும், தனக்கு பிள்ளை பிறக்காது என்று வேலைக்காரனை பாத்ரூமில் ஒளித்து வைத்து தன் மனைவியை கூடச்செய்து பிள்ளை பெறுவதாகவும் கதை எழுதி தமது நிறைவேறாத நீசமான ஆசைகளை நிறைவேற்றி கொண்ட குதர்க மனம் கொண்டவர்தானே கலைஞர். ( குறு நாவலின் பெயர் : வான் கோழி)

ஒரு தலைவன் அ தலைவியின் தனிப்பட்டவாழ்க்கையை விமர்சிக்க எந்த நாய்க்கும் அருகதை கிடையாது . அந்த தனிப்பட்ட வாழ்க்கை அந்த தலைவன் அ தலைவியின் பொதுவாழ்வை பாதிக்காத வரை. சசிகலா பற்றி பேசுகிறார்கள். அதை நான் விமர்சிக்க மாட்டேன். ஏன் என்றால் மேற்படி மன்னார்குடி கூட்டம் ஜெயலலிதாவின் பொதுவாழ்வை எப்படியெல்லாம் பாதித்தது, பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாடறியும்.

சோபன் பாபுவுக்கு ஜெயலலிதா காண்ட்ராக்ட் கொடுத்தாரா ? விதிகளை மீறி ஃபேவர் செய்தாரா அதை பற்றி பேச. சேர்ந்து வாழ்வது என்பது சட்டத்தாலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது. சேர்ந்து வாழ்பவர்களை கணவன் மனைவியாக கருதுவதா இல்லையா என்ற பிரச்சினை அவர்களின் வாரிசு கச்சேரிக்கு வந்து பிராது கொடுக்கும்போதோ /பாதிக்கப்பட்ட ஆண் அ பெண் பிராது கொடுக்கும்போதோதான் நீதிமன்றத்தில் எழும்.
சோபன் பாபு அமரராகி விட்டார், ஜெயலலிதா எந்த நிலையிலும் தமது உரிமையை நிலை நாட்ட முன் வரவில்லை. வாரிசு என்று இருப்பதாக பரவலாக பேசப்பட்டாலும் அப்படி யாரும் மீடியா முன்பு வரவில்லை. இந்த நிலையில் திருமதி என்பேன் என்பதும், பழைய குப்பையை கிளறுவதும் வேண்டாத வேலை.

கலைஞர் இர்ரிட்டேட் ஆகிவிட்டார் என்பது தான் இதன் மூலம் உலகத்துக்கு புரிகிறது. கலைஞர் இது போன்ற பேச்சுக்களை பேசுவதும் வாங்கிகட்டிக்கொள்வதும் புதிதொன்றுமல்ல.

மனோரமா, விஜயகுமாரி, இப்படியாக ஒரு நீண்ட பட்டியலே இருக்கும்போது கலைஞர் இந்த விவாதத்தை கிளப்பியிருப்பது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது போல் இருக்கிறது.

கலைஞரின் ராசி கடக ராசி. கடகராசிக்கு பாதகாதிபதி சுக்கிரன். எனவே தான் பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து கலைஞர் இது போல் ஒன்றை கொடுத்து பத்தை வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.

ஓரின சேர்க்கையையே சட்டம் குற்றமல்ல என்று சொல்லும் இந்த காலத்தில் கலைஞர் மீண்டும் பத்தினி தேர்வை நடத்த விரும்புவது அவரது ஆணாதிக்க போக்கையே காட்டுகிறது.

கலைஞரய்யா காலம் மாறிப்போச்சுய்யா ! இன்னமும் அந்த காலத்துலயே இருக்கிங்களே. முரசொலில பேட்டி,படங்களை போட்டு என்னத்தை சாதிச்சுட்டிங்க ?

13 வருச வனவாசத்தை மறந்துட்டிங்களேய்யா ! சேவல்/புறா சீசன் திமுகவுக்கு வராதுன்னு என்ன கியாரண்டி ? மறுபடி ஜெயலலிதா கோலை எடுத்தால் குரங்காடனும் ஆடாதுனு என்ன கியாரண்டி?

ஜெயலலிதாவின் குணங்களில் ஏதேனும் குற்றம் குறையிருந்தால் அதற்கு உம் போன்ற ஆணாதிக்க பேய்களே பொறுப்பு என்று நான் கூறுகிறேன். பெண்ணை தாயா வணங்கினா அவள் தெய்வமா இருந்து குலத்தை காப்பாள். பேயாக்கிராதிங்கய்யா !

உங்க ஜாதகத்துக்கு பெண்ணால தான் தோல்வி/அழிவு எல்லாமே.. மஞ்சத்துண்டு காரரே.. மஞ்சள் முகம்தான் உங்களுக்கு எமன் ..சுருக்கமா சொன்னா வுமன் தான் எமன் . பீ கேர்ஃபுல் !

டீ, சிகரட், ந்யூஸ் பேப்பர்

இப்போது கல்லூரியில் படிக்கும் தலைமுறை தலை எடுத்து குடும்ப பட்ஜெட் போடுங்காலத்தில் அதில் பத்திரிக்கைகளுக்கு இடமே இருக்கப்போவதில்லை. என்பதை கவனத்தில் கொண்டு இந்த பதிவை படியுங்கள்.

டீ, சிகரட், ந்யூஸ் பேப்பர் இந்த மூன்றுக்கும் உள்ள பிணைப்பு தளர்ந்து வருகிறது. இதற்கு காரணம் நாளிதழ் நிர்வாகத்தில் உள்ள அசமஞ்சத்தனம் தான். ரீடர்ஸ் டைஜஸ்டே திவாலாகிவிட்ட நிலையில் இந்த பொடிசுகள் மட்டும் நிலைத்து நிற்கவா போகின்றன ?

அவர்களுக்கு அந்த பயம் இல்லாவிட்டாலும் டீ, சிகரட், ந்யூஸ் பேப்பர் என்ற பிணைப்பு ஃபணால் ஆகிவிடக்கூடாதே என்ற சுய நலத்தில் இந்த பதிவை போட்டிருக்கிறேன்.

உங்களுக்கும் தோன்றும் யோசனைகளையும் மறுமொழியாக இடுங்கள் . ஊதுற சங்கை ஊதி வைப்போம்

1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் நான். விவேகானந்தா கல்வி நிலையம், மணிமேகலை பிரசுரம், அபிசாரிகா (தெலுங்கு இதழ்) ஆகியவற்றிற்கு யோசனைகள் , விளம்பர வாசகங்கள் தந்துள்ளேன். லோக்கலில் இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற விளம்பர இதழும் நடத்தி வருகிறேன். இந்த வகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட சென்னைக்கு செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.

2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் த‌வ‌றுப‌வ‌ர்க‌ளுக்கு 3 மாத‌ம் வ‌ரை டைம் கொடுத்து ம‌று தேர்வு நிக‌ழ்த்திப்பார்க்க‌லாம். அதிலும் த‌வ‌றினால் க‌ல்தா கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். சிக்கனம் கருதி பி.எஸ்.என்.எல் மூலம் நெட் கனெக்ஷன் வைத்திருப்பார்கள் .இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாக‌த்தில் வேலைக‌ளை பிரித்திருப்ப‌து நிர்வாக‌ வ‌ச‌திக்குத்தானே த‌விர‌ இன்னார் இன்ன‌ வேலைக‌ளைத்தான் செய்ய‌ வேண்டும், வேறு வேலைக‌ளை செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அல்ல‌. செய்தித்துறை என்ப‌து அத்யாவ‌சிய‌ பிரிவில் வ‌ருவ‌தாகும். இதில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் யாராயிருந்தாலும் எந்த‌ வேலையானாலும் செய்தாக‌வேண்டும். என‌வே அனைவ‌ருக்கும் அனைத்து வேலைக‌ளிலும் கு.ப‌. அறிமுக‌மாவ‌து இருக்க‌ வேண்டும்.

4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.

5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்ததை இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட‌ செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. என‌வே போலீசார் பார்வைக்கு செல்லாத‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ நிருப‌ர்க‌ள் வாச‌க‌ர்க‌ளுக்கு துப்ப‌றிந்து தெரிவிக்க‌ வேண்டும். அப்போதுதான் போட்டியை ச‌மாளிக்க‌ முடியும்.


6.புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.

7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.

8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவ‌ட்ட செய்திகளை கூட‌ ம‌ண்ட‌ல‌ம் வாரியாக‌ பிரித்து வெளியிடுகிறார்க‌ள். இத‌னால் குட்டித்த‌லைவ‌ர்க‌ளின் செய்திக‌ளுக்கும் இட‌ம் கிடைப்ப‌தோடு ,விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயும் பெருகும‌ல்லவா !


புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். ஊக சித்திரங்கள் (கொலை ,வெடி வைப்பு இத்யாதியின் போது) உபயோகிக்கலாம் இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.


லே அவுட்:

லெட்டர் பிரஸ் கால‌த்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.


தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்க‌மான‌ எழுத்துப்பிழைக‌ள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.

ஊழியர் தோற்றம்:

அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்

அப்ரென்டிஸ், ஃப்ரீ லான்சர், வாசகர் இப்படி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் தூள் கிளப்பலாம்.


குறிப்பு:
என் யோச‌னைக‌ளை பின்ப‌ற்றும் நாளித‌ழ் அதிப‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் என‌க்கு 50 பைசா கார்டில் ஒரு ந‌ன்றி தெரிவித்தால் ம‌கிழ்வேன். என‌து விலாச‌ம்


எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்,
12‍/315 ,பிள்ளையார் கோவில் தெரு,
சித்தூர் ஆந்திர‌மாநில‌ம்
517001

Friday, August 21, 2009

பத்திரிக்காசிரியர்களுக்கு 10 கேள்விகள்

ஏன் என்ற கேள்வி அது இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று வாத்தியார் பாடி வைத்தார். எனவே கே.பி.சுந்தராம்பாள் மாதிரி என்ன என்ன என்று கச்சா முச்சானு கேள்வி கேட்காம சுருக்கமா (சுருக்குனு) 10 கேள்வி கேட்கிறேன்.

மது,மாது,சூதால் வாழ்வை இழந்தவர்கள் உண்டு. இந்த பாடாவதி பத்திரிக்கைகளால் வாழ்வை இழந்தவன் நான். எனவே இந்த கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது. பத்திரிக்காசிரியன் கள் பதில் தருவார்கள் என்று நம்ப நான் ஒன்றும் கேணையன் இல்லை.

என்னைபோல் வேறு எவரும் இவர்களது சதிக்கு பலியாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை இடுகிறேன். எவரேனும் ஆசிரியர் உ.வ.பட்டு லாயர் நோட்டீஸ் அனுப்புனால் ஸ்ரேஷ்டம்.

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் அவர்கள் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா? விளம்பரங்களின் நம்பக தன்மைக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று டிக்ளேர் செய்யும் நீங்கள் இந்த இந்த செய்திகளுக்கும் இதே அறிவிப்பை அப்ளை செய்தால் என்ன ?

2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா? உ.ம். ஆட்டுக்காரன், காய்கறிகாரன், தங்க நாணயம்பரிசு தந்த ஃபைனான்ஸ் நிறுவன‌ங்கள், மலையாள் மாந்திரீகம்


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன? ப்ளாக்ல வித்து காசாக்கிர்ரிங்களாண்ணா ?


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்ஸுக்கும் செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?



6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளை கேட்டால் திருப்பி அனுப்பிருவிங்களாண்ணா ?



7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்? அண்டர்ஸ்டாண்டிங்கோடு ஆரம்பிச்ச தொடரா ? இல்லே தொடர் நடுவில அண்டர் ஸ்டாண்டிங் வந்துருச்சா ?


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா? உ.ம் எஸ்.வி சேகர், சுப்பிரமணியம் சாமி


10.உங்கள் வலை தளத்தில் தொடர்புக்கு என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?

பத்திரிக்கைகள் மீது சிரஞ்சீவி கடும் தாக்கு


சிரஞ்சீவி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று கூட தெரியாத நிலையில் ஈ நாடு ,ஆந்திர ஜோதி பத்திரிக்கைகள் அவரை தலை மேல் வைத்து கொண்டாடின. இதோ புலி அதோ புலி என்று (அச்சு அசலாய் ரஜினி விசயத்தில் தமிழ் நாட்டு பத்திரிக்கைகள் போலவே) பாவம் சிரஞ்சீவி இவர்கள் விட்ட டகுலு நிஜம் தான் என்று நம்பி அரசியலில் குதித்தார். கொல்ட்டிகள் என்று தமிழர்கள் கூறும் தெலுங்கு மக்கள் " நீ சினிமால வா பாத்து தொலைக்கிறோம் ,அரசியல் எல்லாம் வேணாம் கண்ணு" என்று கழட்டி விட்டார்கள். 10 கோடி மக்கள் கொண்ட ஆந்திரமானிலத்தில் சிரஞ்சீவியால் 7 லட்சம் வாக்குகளையே பெற முடிந்தது.

பஸ் ஸ்டாண்டில் புதிதாய் ஒரு பஸ் வந்ததும் எல்லோரும் நம்ம ஊரு பஸ்ஸுதான் என்று பரபரப்பார்களே அது போல் பெருந்தலைவர்களில் இருந்து, குட்டித்தலைவர்கள் வரை சிரஞ்சீவி கட்சிக்கு தாவினார்கள். ஆனால் சிரஞ்சீவியை சுற்றி ஒரு இரும்புத்திரை இருந்தது. அவரது மைத்துனர் அல்லு அரவிந்த்த்

டிக்கெட் கேட்டவர்களிடம் பண மூட்டையை பெற்றுக்கொண்டுதான் பி ஃபார்மையே வழங்கினார். இதில் தேர்தலுக்கு முன்பே சிரஞ்சீவியின் கட்சி கூடாரம் காலியாக துவங்கியது. பிட் படம் பார்க்க போனவர்கள் பிட்டை போடட்டும் பார்க்கலாம் என்று காத்திருப்பது போல் காத்திருந்தனர். பாவம் பிட்டு படம் கூட அறுவைதான் என்று மக்கள் தீர்ப்பு தந்துவிட்டதும். அவரவர்கள் இடத்தை காலி செய்ய ஆரம்பித்தார்கள்.

இன்னிலையில் ஈனாடு பத்திரிக்கை " சிரஞ்சீவி கட்சி கொடி பிடுங்கப்படுமா?" என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டது . ஆந்திர ஜோதியும் ஏறக்குறைய இதே போன்ற செய்தியை வெளியிட்டது.

சிரஞ்சீவி தேர்தலுக்கு முன் முதல்வர் கனவில் இருந்தவர். திடீர் என்று எதிர்கட்சி அரசியலில் தாளிக்க தெரியாது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் கதையாய் முதல்வருக்கு அவ்வப்போது ஜால்ரா போடுவதும், அவ்வப்போது நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழுவு என்பதாய் சீன் போட்டார்.

தமிழக‌த்தில் பத்திரிக்கைகளின் கதை எப்படியோ பதிவன்பர்கள் தான் கூற வேண்டும். எனக்கு தெரிந்தவரை தமிழ் பத்திரிக்கைகள் வைசிய குணம் (வேசி அல்ல) கொண்டவை. வியாபாரம் தான் முக்கியம். ஆனால் தெலுங்கு பத்திரிக்கை உலகம் அப்படியல்ல.

ஈனாடு வந்த புதிதில் ஆன ஆட்டமெல்லாம் போட்டும் கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்ந்துவிட்டது. பழைய பத்திரிக்கைகள் ஃபணால். என்.டி.ஆர் வந்தார். ஜாதி அபிமானத்திலும் , தமது காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் காரணமாகவும் ஈனாடு அதிபர் ராமோஜிராவ் என்.டி.ஆரை தூக்கிப்பிடித்தார். என்.டி.ஆர் கவர்ச்சியும் ஈனாடுவுக்கு உதவியது. 1989 தேர்தல்களின் போது உதயம் என்ற பத்திரிக்கை வந்தது. தாசரி நாராயணராவ் ஆசிரியர். பப்ளிஷர் சுப்புராமிரெட்டி . ரெட்டி எரி சாராய தொழில் அதிபர். உதயத்தை ஒழித்துகட்ட ஈனாடு மது எதிர்ப்பு ஸ்டாண்ட் எடுத்தது. உதயம் ஒழிந்து போனது . 1994 தேர்தல்களில் என்.டி.ஆர் மதுவிலக்கை அமல் செய்வேன் என்று அறிவித்தார். லிக்கர் லாபி ராமோஜியை அணுகியது . என்.டி.ஆருக்கு அழுத்தம் தரப்பட்டது. என்.டி.ஆர் அரசியலுக்கு வந்து விட்டாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்த காலத்து மனிதர். அவர் தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். எனவே லிக்கர் லாபி ராமோஜிராவை சந்திரபாபு நோக்கி உந்தி தள்ளியது. லட்சுமி பார்வதியை காரணமாய் காட்டி சந்திரபாபு என்.டி.ஆரை முதுகில் குத்தினார் . ஆட்சி,கட்சி,சின்னம் யாவும் முது கிழவரான என்.டி.ஆர் கையில் இருந்து பறிக்கப்பட்டது.

இதற்கு முன் ஒரு சிறு தகவல் (ராமோஜிராவின் பெரிய மனிதத்தனம் எப்படிப்பட்டது என்று காட்ட)
1989 தேர்தலின் போது பிரச்சாரத்துக்கு தேவையான போஸ்டர் இத்யாதியை ராமோஜிராவ் அச்சடித்து கட்சி அலுவலக‌த்துக்கு அனுப்பினாராம். ஒரே வாரம் தான். எட்டாவது நாள் பில் வந்ததாம். பணம் கொடுத்தால் அச்சடித்து தர ஆந்திரத்தில் அச்சகமா இல்லை. இதுதான் ராமோஜிராவ் மென்டாலிட்டி. இவரது மார்க தர்சி சிட் ஃபண்டில் ஏராளமான வரி ஏய்ப்பு, சட்ட மீறல்கள் இவற்றை காங்கிரஸ் எம்.பி.உண்டவல்லி அருண்குமார் பொது நல பெட்டிஷன் மூலம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றார். இதையடுத்து ஈனாடுவுக்கு காங்கிரஸ் என்றாலே நவத்வாரங்களும் எரிய ஆரம்பித்துவிட்டது.

ஆந்திர ஜோதி கதை ஆந்திர ஜோதியின் பழைய முதலாளிகள் அதை இழுத்து மூடிவிட சாதாரண ரிப்போர்ட்டராக இருந்த ராதாகிருஷ்ணா அதை தாம் நடத்த விரும்புவதாக முன் வந்தார். அவருக்கு சந்திரபாபு பண உதவி செய்ததாகவும், ராதாகிருஷ்ணா சந்திரபாபுவின் பினாமி என்றும் கூட கிசு கிசுக்கள் உண்டு.

இந்த 2009 தேர்தல் சமயத்தில் சந்திரபாபுவின் தெ.தேசம் கட்சி ரொம்பவே சோனியாக இருந்தது. மறுபுறம் பார்த்தால் ஆளுங்கட்சியுடனான இந்த பத்திரிக்கைகளின் மோதல் குழாயடி சண்டையாகவே மாறிவிட்டது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த இந்த பத்திரிக்கைகளுக்கு சிரஞ்சீவியின் அரசியல் பிரவேஸம் புதிய ஆசைகளை ஏற்படுத்தியது. தற்சமயத்துக்கு சந்திரபாபுவை ஓரங்கட்டி சிரஞ்சீவியை தூக்கி பிடித்தனர். தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை மாறியது. பாபு மகா கூட்டணி அமைத்தார். சிரஞ்சீவி கட்சியின் பலம் (?) என்ன என்பது ஓரளவு தெரிய ஆரம்பித்துவிட்டது.

சிரஞ்சீவி,பாபுவை இணைக்க ராமோஜிராவே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தார்.வேலைக்காகவில்லை. கடைசியில் பார்த்தால் சிரஞ்சீவி வரவு ஆளுங்கட்சிக்கே வெற்றியாக முடிந்தது. இந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஈனாடு, ஆந்திர ஜோதியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தான் சிரஞ்சீவி கட்சியில் அவர் தாவுகிறார், இவர் தாவுகிறார் என்று ஊக அடிப்படையில் செய்தி வெளியிட துவங்கி விட்டன. தனக்கு வந்தால் தான் த்லைவலி தெரியும் என்பது போல் சிரஞ்சீவி பத்திரிக்கைகளை சீறித்தள்ளிவிட்டார்.

பாவம் சிரஞ்சீவி.. முதல்வர் கனவுகளை கைவிட்டு இன்னொரு விஜயகாந்தாக காலம் தள்ள வேண்டியதாகிவிட்டது

Wednesday, August 19, 2009

"மணி சீக்ரெட்ஸ்" செமினார் பேச்சு


எனது வலைப்பூவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது புது செய்தியாக இல்லாமல் இருக்கலாம். புதியவர்களுக்காக சில வரிகள் எழுதி பின் செமினாரிலான எனது பேச்சின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.

சித்தூர் வேலூர் சாலையில் உள்ள ஜில்லா பரிசத் மீட்டிங் ஹாலில் பாசிட்டிவ் திங்கர்ஸ் க்ளப் மற்றும் சித்தூர் கிருஷ்ணா ஜ்வெல்லர்ஸ் சார்பில் மணி சீக்ரெட்ஸ் (பணம் பற்றிய மர்மங்கள் ) என்ற தலைப்பில் கடந்த ஞா. கிழமை செமினார் நடந்தது. இதில் பிரபல மனோதத்துவ நிபுணர் சுதாகர் ரெட்டி அவர்களும் கலந்து கொண்டு பேசினார்

அவரையடுத்து மணீ சீக்ரெட்ஸ் பற்றி அடியேன் உரையாற்றினேன். அதன் சுருக்கம் வருமாறு:
இன்று பல கோடி உடல்களில் தனித்திருக்கும் உயிர்களுக்கெல்லாம் மூலம் முதலில் தோன்றிய அமீபாவின் உயிர் தான் மூலம். ஒரே உயிர் ஒரே உடல் என்று வாழ்ந்த போது
இன் செக்யூரிட்டி,போட்டி, லட்சியம்,ஒப்பீடு ஏதும் கிடையாது. ஒரு செல் அங்க ஜீவியான அமீபா கொழுத்து இரண்டாக பிரிந்தது. ஒரு செல் தன்னை தானே காப்பி செய்து கொண்டு மற்றொரு செல்லாக வடிவெடுத்தது. இந்த காப்பியிங்கில் நடந்த எரர் காரணமாக புதிய ஜீவ ராசிகள் வந்தன. குரங்கு வந்தது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்.

ஆனால் அன்று ஒரே உயிராக ,ஒரே உடலில் வாழ்ந்த நினைவுகள் இன் செக்யூரிட்டி,போட்டி, லட்சியம்,ஒப்பீடு ஏதுமற்ற ஞாபகங்கள் உயிர்களை தூண்டுகின்றன. ஒரே உயிராக மீண்டும் மாறிட தவிக்கச்செய்கின்றன. இந்த தவிப்பின் காரணமாகத்தான் மனிதனின் எந்த செயலுக்கு பின்னாடியும் கொல்லு அ கொல்லப்படும் இச்சை ஒன்றே இருக்கிறது. இதை மனோதத்துவ இயலும் அங்கீகரிக்கிறது

மனிதன் குகை,காட்டு வாழ்வில் கொல்வதையும்,கொல்லப்படுவதையும் எவ்வித முகமூடியும் இன்றி நேரிடையாக செய்ய முடிந்தது. சஞ்சார வாசம் முடிந்து ஸ்திரவாசம் துவங்கியபோது குழு,குழு தலைவன் விதிகள் ஏற்பட்ட காரணத்தால் அவனால் சுதந்திரமாக கொல்லவோ கொல்லப்படவோ முடியவில்லை. இதற்கு மாற்றாக செக்ஸை ஏற்றான். செக்ஸில் வீரியம் ஸ்கலிதமாகும்போது குட்டி மரணம் சம்பவிக்கிறது. இது சாகும் இச்சையை நிறைவேற்றியது. ஆனால் ஸ்திர வாழ்வின் காரணமாக சொத்து (பதப்படுத்தப்பட்ட விளை நிலம்)ஏற்பட்டது. அது தன் வாரிசுக்கே கிடைக்க வேண்டும் என்று ஆண் நினைத்தான். மேலும் செக்ஸில் பெண்ணின் பலம் அவனுக்கு தெரிந்து போனது.( ஒரே இரவில் பலமுறை உச்சம் அடையும் சக்தி, யோனியில் ஆணுறுப்பு நுழைக்கப்பட்ட பின் 7 முறை அசைக்கப்பட்டாலே இவன் நாக் அவுட் . அவளுக்கோ 23 முறை தேவைப்பட்டது. மேலும் இவன் குழந்தைக்கு யார் தந்தை என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்)

அவள் யோனியை பூட்ட முடியாத குறைக்கு பெண்ணையே பூட்டி வைக்க ஆரம்பித்து விட்டான். அவளை அடிமையாக்கினான். அடிமையோடு அவனுக்கு எப்படி உண்மையான இணைப்பு ஏற்படும் அவளை ஆஷ் ட்ரேவாகவும், யூரினல்ஸாகவும், வெறும் துளையாகவும் பாவித்தான்..எனவே இவன் சாக /உடலை உதிர்க்க/ ஓருயிராய் மாற மாற்று ஏற்பாடு தேவைப்பட்டது.

அதற்குள்ளாக கூடுதல் விளைபொருட்களால் பண்டமாற்று, அதிலான சிக்கலை தவிர்க்க தங்க நாணயம் குறைந்த தொகைகளிலான லாவா தேவிக்கு வெள்ளி நாணயம் ,செம்பு நாணயம் இன்று ஊதினால் பறந்து விடும் வண்ண காகிதங்கள் எல்லாம் வந்தன. மனிதன் செக்ஸுக்கு மாற்றாக பணத்தை ஏற்றுக்கொண்டான். ஏன் என்றால் செக்ஸில் என்னென்ன சாத்தியமோ பணத்தாலும் அவையனைத்தும் சாத்தியமே . மேலும் செக்ஸும் கிடைக்கும்.

ஆக எவனும் பணத்தை பணமாக பார்க்காமல் .. தன் உயிரையும், பிறர் உயிரையும் பறித்து உடல்களை உதிர்த்து மீண்டும் மனித குலத்தை ஓருயிர் ஓருடலாக மாற்றும் என்று பாவிக்கிறான்.

ஆனால் உயிர்கள் பிரிந்தாலும், உடல்கள் வேறானாலும் கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு எல்லோரையும் இணைக்கிறது. இதை அகந்தை உணர மறுக்கிறது.

மேலும் மனிதன் பணத்தை கொண்டு மரணத்தின் நிழல்களோடு நிழல் யுத்தம் செய்கிறான். தனிமை,ஏழ்மை, இருட்டு, அறியாமை, நிராகரிப்பு ,முதுமை அனைத்தையும் மரணத்தோடு முடிச்சு போட்டு யோசிக்கிறான். பணத்தை கொண்டு அவற்றை வெல்ல நினைக்கிறான். இதனால் தான் ஒவ்வொரு வாழ்வும் தோல்வியில் முடிகிறது.

பணம் லட்சியம் நோக்கிய பயணத்துக்கு ஒரு எரிபொருள் மாத்திரமே. வாழ்வின் வெற்றிக்கு தேவையான ஒரு கருவி மாத்திரமே. ஆனால் மனிதனோ மேற்சொன்ன கற்பனைகளால், கற்பனை பயங்களால் அகந்தையால் வாழ் நாள் மொத்தத்தையும் வீணாக்கிக்கொள்கிறான்.
உலக உயிர்களிடையே உள்ள இணைப்பை தன் அகந்தை காரணமாய் உணர மறுக்கும் மனிதன் தன் உடல்களை உதிர்த்தேனும் மீண்டும் இணைய துடிப்பது வேடிக்கை. தான் போரிட வேண்டிய மரணத்துடன் மோதாது மரணத்தின் நிழல்களோடு யுத்தம் செய்து மரணப்படுகுழி நோக்கி விரைவது பை. தனம்.

எனவே பணத்தை பணமாக பாருங்கள் . உங்கள் உடல்,மனம்,புத்தி, மனைவி,குடும்பம், நண்பர்களை உங்கள் பொருளீட்டலுக்கு ஆதரவாக துணையாக மாற்றிக்கொள்ள முடிந்தால் சுராங்கனி கா ஸேக்கு தான். (பெரும் பணம் ஈட்டலாம்)

Monday, August 17, 2009

செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு ?

சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். தமிழ் சினிமாக்களில் கெட்ட காரியம் செய்து கொண்டிருந்த போது ஆண் பாம்பையோ, பெண் பாம்பையோ கொன்றுவிட்டதால் மேற்படி ஜோடியில் மிச்சமான பாம்பு ஸ்ரீபிர்யாவாகவோ இன்னொரு பேரிளம்பெண்ணாகவோ வந்து பழிவாங்கும். ஆனால் ஜோதிடவியலின்படி எந்த ஒரு குடும்பம் சர்ப்பங்கள் சஞ்சரிக்கும் பகுதியில் அவற்றை விரட்டி ,அங்குள்ள பாம்பு புற்றுகளை இடித்து குடிபோகிறார்களோ அவர்களின் வாரிசுகளுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும்.

இதில் ஒரு பெரிய தர்க்கம் இருக்கிறது. ஊரோடு ஒத்து வாழாது விலகிப்போக வேண்டிய அவசியம் அந்த குடும்பத்துக்கு ஏன் வந்தது ? ஒன்று அவர்கள் ஊருடன் மோதி தோற்று விலகியிருக்க வேண்டும். அல்லது அளவுக்கு மீறி ஊர்வாயை அடித்து விலகிச்சென்று பண்ணை வீடு டைப்பில் கட்டிக்கொண்டு போயிருக்க வேண்டும் அல்லவா ?இன்றைய மனோதத்துவ சாஸ்திரம் என்ன கூறுகிறது ? ப்ரோக்கன் ஃபேமிலியில் பிறக்கும் குழந்தைகள் மனச்சிக்கல்களுக்கு ஆளாகின்றன. மனச்சிக்கல் உடலையும் பாதிப்பது சகஜமே !

அக்காலத்தில் அ இன்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சர்ப்ப தோசம் இருப்பவர்கள் பாம்புக்கடிக்கு ஆளாகலாம். ஆனால் இதரர்கள் விசயத்தில் இந்த தோசம் பல வகைகளில் வேலை செய்கிறது.

தர்கரீதியில்,விஞ்ஞான கண்ணோட்டத்துடன் யோசிக்கும் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்ற வகையில் இன்று சர்ப்பதோஷம் குறித்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்.


ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாய பரிகாரங்களையும், எனது நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்திருக்கிறேன்.
அந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மைகளை கூறுகிறேன்.

முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது:

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. கிரக நிலை கூட அவ்வளவுதான்.பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

பின்னே சர்ப்பதோஷம் என்ற பெயர் எதற்கு:

சர்ப்பம் யோகத்துக்கும் அறிகுறி:

ஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு கேது்க்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். ராகு கேதுக்கள் ஒருவருக்கொருவர் 7 ஆவது ராசியில் இருப்பார்கள். டிகிரியில் சொன்னால் 180 டிகிரி. எனவே இருவரும் நல்ல இடத்தில் அமைவது அரிதே ! அதனால் தான் உலக சுகங்களை(இதற்கு காரகன் ராகு) பெறுபவர்கள் யோகத்தில்(இதற்கு காரகன் கேது) நாட்டம் காட்டுவதில்லை. உலக சுகத்தில் ஈடுபாடு காட்டும்போது யோகம் ஈர்ப்பதில்லை. யோகத்தில் ஈடுபாடு ஏற்படும்போது உலக சுகம் ஈர்ப்பதில்லை. எனவேதான் உலக வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் கூட போலி சன்னியாசிகளிடம் ஏமாந்து விடுகிறார்கள். உண்மையான சன்யாசிகள் கூட திடீர் என்று உலக சுகங்களை அனுபவிக்க துடிக்கின்றனர்.

வாழ் நாளில் ஆரம்பத்தில் ராகு திசை நடந்து (படிக்கும் காலத்தில் அல்ல) உலக சுகங்களையெல்லாம் அடைந்துவிட்டால், பிறகு வரும் கேது தசையில் ஞானம் பெறலாம்.

இது தலைகீழாக அமையும் போது ஆரம்பத்தில் சன்னியாசம் , பின் உலக சுகங்களில் ஈடுபாடு என்ற நிலை ஏற்பட்டு விடும். உ.ம் பித்துக்குளி முருகதாஸ்.

கேது நல்ல இடத்தில் இல்லாவிட்டால் இதர கிரகங்களின் உதவியால் விழிப்பு நிலைக்கேகிய‌ குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.

சர்ப்பம் செக்ஸுக்கு அறிகுறி:

சர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள். ஆனால் இவர்கள் நிலை இருபுறம் எரியூட்டப்பட்ட மெழுகு வர்த்தி போன்றது. சீக்கிரமே அதில் ஆர்வமிழந்து இழந்த சக்தி வைத்தியர்கள் பின்னால் திரிய வேண்டி வரும்.

பாம்புக்குரிய குணநலன்கள் :
பாம்புக்கு ம‌னித‌ர்க‌ள் மீது ப‌ய‌ம். ம‌னித‌ர்க‌ளுக்கு பாம்பு மீது ப‌ய‌ம். என‌வே பாம்பு ம‌றைந்து வாழ்கிற‌து. ம‌னித‌ன் க‌ண்ணில் ப‌ட்டால் அடிப்ப‌ட்டு சாகிற‌து. அல்ல‌து ம‌னித‌னை கொத்தி கொன்று விடுகிற‌து. வ‌ளைந்து வ‌ளைந்து செல்கிற‌து. இரையெடுத்த‌ பின் அசையாம‌ல் கிட‌க்கிற‌து. பாம்புக்கு சிறுநீர்,ம‌ல‌ம் க‌ழிக்க விந்துவை வெளியேற்ற தனித் த‌னி துவார‌ங்க‌ள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக‌ க்ளோய‌கா என்ற‌ துவார‌ம் தான் உண்டு.

ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலை:
ஜாத‌க‌த்தில் ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலையும் ஏற‌க்குறைய‌ இப்ப‌டித்தான். இவர்களும் குடும்பத்தினரிடம் கூட மனம் திறந்து பேசமாட்டார்கள். அவ்வப்போது அன் வாரண்டெட் மோஷன்ஸ் இருக்கும், வாமிட்டிங் சென்ஸேஷன் இருக்கும். சிறு நீரில் விந்து வெளியேறலாம். உண்ட பின் உட்கார கூட முடியாது. தமக்கு தீங்கு செய்தவர்கள் சதிகள் செய்து ஒழித்துக்கட்ட முயல்வார்கள். இந்த சதி எதிராளிக்கு தெரிந்து விட்டால் அடித்தே கொன்று விடுவான்.

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.

சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரட் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

உட‌ல‌மைப்பிலும் வித்யாச‌ம் இருக்கிற‌து. ஒன்று ஊளைச்ச‌தை,அல்ல‌து வ‌ய‌துக்கேற்ற‌ வ‌ள‌ர்ச்சி இன்மை காண‌ப்ப‌டுகிற‌து. சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.
(To be cont.)

சக்தி, சாகத்தான் அல்லது சாகடிக்கத்தான்

சக்தி அற்றவர் அனேகம் உண்டு. ஆனால் சக்தியை பெற விரும்பாதவர்கள் யாருமில்லை.சக்தியில் எத்தனயோ விதம். சரீர சக்தி,மனோ சக்தி,ஆன்ம சக்தி,பொருளாதார சக்தி,அரசியல் சக்தி. இப்படி சக்தி பலவிதம்.

ஆனால் சக்தியை பெற விரும்புபவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? வாழவா? தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளவா? இல்லை சாக அல்லது சாகடிக்கத்தான் சக்தியை விரும்புகிறார்கள். சாகனும் அல்லது சாகடிக்கனும் இதை தவிர வேறு அஜென்டாவே இல்லை.

மனித வாழ்வில்,மனித குலத்தின் எந்த செயல்பாட்டை,வரலாற்று சம்பவத்தை பார்த்தாலும் அதற்கு பின்புலமாக இருப்பது சக்தி.சக்தியின் சாகும் அல்லது சாகடிக்கும் இச்சை ஒன்றுதான் (உ.ம்) சீன ந்டுஞ்சுவர், தாஜ்மகாலிதையெல்லாம் ஏன் கட்டினார்கள்? கட்டும்போது அந்த மக்கள் சாகணும். எதிரகாலத்தில் அதை பார்ப்பவர்கள் சாகனும்.(எப்படி கட்டியிருப்பாண்டா என்று)

சாகவோ அல்லது சாகடிக்கவோதான் சக்தி தேவை. வாழ்வதற்கு சக்தி தேவையில்லை. அவரவர் வாழ்க்கை முறையை மனதில் வைத்து யோசித்தால் சக்தியின்றி வாழ்வில்லை என்றுதான் தோன்றும்.

அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் நாம் யாருமே வாழவில்லை. வாழ்கிறோம் என்ற மயக்கத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். "என்னத்த போராட்டம் ..கும்பல்ல கோவி்ந்தா தான் போட்டுகிட்டு இருக்கோம் என்று நீங்கள் கூறலாம்.

ஒவ்வொரு மனித உயிரும் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. தனித்தன்மை என்பது மனித இயல்பு. தன் இயல்புக்கு மாறாக கும்பலில் கோவிந்தா போடுவதும் ஒரு போராட்டம் தான்.

போராட்டத்திற்குத் தான் சக்தி தேவைப் படுகிறது. நம் வாழ்க்கை முறையை பார்ப்போம் ! நம் வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு மில்லில் மீட்டரிலும் போராட்டம் இருக்கிறது.

கருவிலிருந்தே ஆரம்பிப்போம். பனிக்குட நீரில் ஜலகிரீடை ,தொப்புள் கொடி வழியாக உணவு சப்ளை, அற்ப சங்கியைகளுக்கு யூரினல்ஸையோ,கழிவறைகளையோ தேடி ஓடவேன்டிய அவசியமில்லை. மிதமான வெப்பம்,மிதமான ஒலி,மிதமான ஒளி, திடீர் என்று மேற்படி பாதுகாப்புக்களை,இதத்தை விட்டு நாற்றம் பிடித்த அரசு மருத்துவமனையின் துருப்பிடித்த டேபிளில் விழுகிறோம்.. அந்தக் கணம் முதல் துவங்குகிறது போராட்டம்.சாகும் வரை ஓயாத போராட்டம்.

பசியிருந்தாலும்,இல்லையென்றாலும் "பாச்சி" குடித்து தான் ஆகவேண்டும். கக்கா வந்தாலும் வராவிட்டாலும் போய் தான் ஆகவேண்டும். இதற்காக குழன்ந்தையின் ஆசனத்தில் வெ.காம்பு,சோப்பு,புகையிலை சகலமும் செருகுவார்கள்.

இதுவேயல்லாது எந்த அளவுக்கு பாதுகாப்பு, எந்தஅளவுக்கு தேவை, எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்ற கேள்விகளுக்கு இடமேதராது கண்ட கண்ட தடுப்பூசிகள்.விட்டமின் கள், 60 சதவீத‌த்திற்கு மேல் ஆல்கஹால் அடங்கிய டானிக்குகள் .ஒரு உயிரின் இயல்பு நிலை சகட்டுமேனிக்கு பாதிக்கப் படும்போது அதன் வாழ்க்கை போராட்டமாகவே மாறிவிடுகிறது.

தாய் மடியிலிருந்து அதை பிடுங்கி பணம் பிடுங்கி ப்ளே க்ளாஸ்/ ப்ரிகேஜி பள்ளிகளில் "தொள்ளுவதாகட்டும்" .அக்குழந்தைக்கு தேவையா இல்லையா என்ற கேள்விகளுக்கிடமே இல்லாமல் விளையாட்டு சாமான் கள் , மூச்சு திணற வைக்கும் உடைகள், அப்பப்பா ..

இப்படி இளமை முதல் தன் இயற்கைக்கு எதிராக வளர்க்க படுவதால் அக்குழந்தையில் சக்திக்கான வேட்கை ஏற்படுகிறது. அந்த சக்தி பாலியல் சக்தியாக மாறுகிறது. பிறகு அது காதல்,கத்திரிக்காய்,ஈவ் டீஸிங், கள்ளக்காதல் என்று செலவாகிறது.

இயற்கைக்கு திரும்பிப்போங்கப்பா !

Thursday, August 13, 2009

பணம் பற்றிய ரகசியங்கள் ‍‍: செமினார் அனுமதி இலவசம்


தமிழ் பதிவுலக அன்பர்களே !
எனது வலைப்பூவில் ஏற்கெனவே பணம் பற்றிய எனது பதிவுகளை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதே தலைப்பில் வேலூரை அடுத்துள்ள சித்தூரில் ஜில்லா பரிசத் மீட்டிங் ஹாலில் செமினார் நடைபெற உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த செமினாரில் கலந்துகொள்ள நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது.

பணமில்லாதவர் உண்டே தவிர பணத்தேவை இல்லாதவர்கள் கிடையவே கிடையாது. எனவே தான் பணம் இல்லாதவரும் பணம் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு பணக்காரர் ஆகவேண்டும். ஒவ்வொருவரும் பணக்காரரானால் இந்தியா ஆட்டோமேட்டிக்காக பணக்கார நாடாகி விடும் எனவேதான் இந்த செமினாருக்கு அனுமதி இலவசம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சித்தூர் பஜார் தெரு , ஸ்ரீ கிருஷ்ணா ஜுவெல்லர்ஸ் இந்த செமினாரை தங்கள் செலவில் நடத்துகிறார்கள். பணம் பற்றிய புத்தகங்கள், செமினார்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று வரலட்சுமி நோன்பு, நெய் விளக்கு வகையறா .. அல்லது சாப்பிடாதிங்க ..சாப்டா பணம் செலவாயிரும். எல்.ஐ.சி.பண்ணுங்க, பேங்குல போடுங்க அவங்க ஷேர் மார்க்கெட்ல போட்டு ஒழிச்சு கட்டிருவாங்க வகையறா.

நமது செமினார் அப்படி அல்ல ஆதியோடந்தமாக பணத்தை பற்றிய ஏ டு ஜெட் விவரிக்கும்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் என் செல்லுக்கு அழைக்கவும்:

9397036815

Sunday, August 9, 2009

ஊத்திக்கொடுத்தயானு கேட்ட ஆசாமிக்கே இன்னைக்கு வால் பிடிக்கிற மாதிரி ஆயிருச்சி

டீக்கடை
ஆந்திர மானிலத்தில் ஒரு மாவட்டத்தின் தலை நகராக இருக்கும் எங்கள் சித்தூரில் தமிழர்கள் பேர்பாதி பேர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் என் போன்று முழுவதுமாய் தெலுங்கை கற்றுக்கொண்டு எழுதி,படிப்பவர்களை,ஆந்திர அரசியலில் ஈடுபாடு காட்டி ,பங்கேற்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதிலும் தெலுங்கில் கவிதை எழுதுபவர்களை ஊஹூம். சுய தம்பட்டம் போதும் விஷயத்துக்கு வருகிறேன்.

இங்குள்ள தமிழர்களில் 99.99 சதவீதம் ஆந்திர அரசியலை விட தமிழக அரசியல் மீது தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இங்கு தமிழகத்தின் இன்ன பிற கட்சிகளைவிட அதிமுக, திமுகவுக்கு தான் பலம் அதிகம். அதிலும் அதிமுகவுக்கு தான் 90 சதவீதம். மிச்சமுள்ள 10 சதம் பேர் 90 சதம் பேருக்கு சவால் விட்டு பேசுவதை இன்றெல்லாம் கேட்டபடியே இருக்கலாம். (வேலை வெட்டி இல்லாத போது)

நான் இவர்களை கடுமையாக விமர்சிப்பதுண்டு. காரணம் எங்கள் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆந்திர அரசியல் தான். இதில் தமிழக அரசியல் பற்றி தொண்டை வறள பேசுவது ஏன் என்பது என் வாதம். சரி தமிழின தலைவர்கள் என்ற கோணத்தில் ஆராதிக்கலாம் என்று நினைத்தால் எல்லாமே கூட்டு கொள்ளை ஆசாமிகள்தான். கலைஞரின் தமிழ், திரைத்தமிழ், ஆரம்பகால உழைப்பு,தியாகம் ,எமர்ஜென்சி எதிர்ப்பு இவற்றை மதிக்கிறேன். ஜெயலலிதாவின் துணிச்சல்,போராட்ட குணம் ஆகியவற்றை மதிக்கிறேன்.

ஆனால் இவர்கள் உலகத்தமிழர்களை விட்டுத்தள்ளுங்கள். கு.பட்சம் இந்தியத்தமிழர்களுக்காக கிழித்தது என்ன? எங்கள் மானிலத்தில் (லும்) அரசுப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.(தமிழ் தெலுங்கு வேறுபாடின்றி.) இது நாடு தழுவிய பிரச்சினை. தனியார்மயம்,தாராளமயம்,உலக மயம், கார்ப்போரெட் மயம் இத்யாதிக்கு நாம் கொடுத்த விலை.

குறைந்த பட்சம் தட்சிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா போல ஒரு நிறுவனத்தை கட்டியெழுப்பி இதர மானிலங்களில் வசிக்கும் தமிழர்கள்(இதர மொழியினரும்) தமிழை ஆர்வத்தின் பேரால் கற்க வழி செய்யலாம் அல்லவா ?

இலங்கை தமிழர்கள் விஷயத்தில் அவர்களை இஷ்டத்துக்கு கொம்பு சீவி விட்டு, போராட்டம் திசை மாறுவதை கண்டு கொள்ளாது விட்டு பிரபாகரன் மாதிரி லிட்டிகன்ட் பர்சனாலிட்டியை அந்த போராட்டத்தின் முகமாக்கி விட்டு விட்டு ஷிட்.

சரி உலக,இந்திய தமிழர்களுக்கு ஏதும் செய்து கிழிக்காவிட்டாலும் கு.பட்சம் பக்கத்து மானிலங்களான கர்னாடகா, ஆந்திரத்தை பார்த்தேனும் மாத்தி யோசிக்கலாம் இல்லையா ? தமிழகம் வாழ் தமிழர்களுக்காவது ஒரு மினிமம் கியாரண்டி ஆட்சியை வழங்கலாம் அல்லவா?

கலைஞரின் ஆட்சியை குடும்ப ஆட்சி என்பார்கள். ஜெயலலிதா தம் தோழி குடும்பத்தை வைத்து ஆட்சி செய்வார். விஜயகாந்துக்கு மச்சான், ராமதாசுக்கு மகன். என்னங்கடா இது தங்கத்தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை.

கலைஞர் கலர் டிவி என்றதை ஹைஜாக் செய்து இங்கே சந்திரபாபுவும் தம் தேர்தல் அறிக்கையில் வைத்தார். அங்கே(இங்கேயும்) ரெண்டு ரூபாய்க்கு அரிசி என்றிருந்ததை கலைஞர் ஒரு ரூபாய் ஆக்க சந்திரபாபு "இலவசமாகவே"தருவதாய் கொக்கரித்தார்.அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் குடும்பங்களுக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கிகணக்கு திறந்து ஏடிஎம் கார்டு வழங்கி மாதா மாதம் குடும்ப செலவுக்கு சில்லறை கூட தருவதாய் சொன்னார். ஆனால் தமிழ் கூறு நல்லுலகு கொல்ட்டிகள் என்று நக்கலடிக்கும் ஆந்திரர்கள் சந்திரபாபுவுக்கு அல்வா கொடுத்துவிட்டனர்.

இதையெல்லாம் நான் விரிவாக சொல்ல காரணம் தமிழ் அரசியலை பேசுவது தமிழ் நாட்டு தமிழர்களுக்கே வேண்டாத வேலை எனும்போது ஆந்திராவில் தமிழக அரசியலை பேசுவது எந்த அளவுக்கு ஒதகாத வேலை என்று ஸ்தாபிக்கத்தான். சரி டீக்கடைக்கு போவமா ?

அந்த குழுவில் டீக்கடை முதலாளி, மருத்துவத்துறை ஊழியர் ஒருவர் இன்னும் பலர் திமுக ஆதரவாளர்கள், பழைய இரும்புக்கடை முதலாளி , சமையல் கான்ட்ராக்டரான முஸ்லீம் ஒருவர் இவர்கள் அதிமுக ஆதரவாளர்கள். இவர்கள் 365 நாளும் சவுக்கில் உள்ள டிவி ரிப்பேர் கடையில் கூடுவார்கள். பக்கத்திலேயே டீக்கடை. தமிழகத்தில் வெளியாகும் முக்கிய தமிழ் பத்திரிக்கைகளின் செய்திகள் அனைத்தும் அங்கு விவாதிக்கப்படும். ஆனால் பாவம் அவர்களுக்கு ஆந்திர அரசின் மந்திரிகள் பெயர் கூட தெரியாது, அட அது ஒழியட்டும் அரசு அமல் படுத்தும் சமூக நல திட்டங்களின் பெயர் கூட தெரியாது.

ஆமாம் உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ இங்கே சந்திரபாபுவை பார்த்து தான் அங்கே உழவர் சந்தை வந்தத். இப்போ இங்கே ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ தான் கலைஞர் காப்பீடு திட்டமா அமலாகுது. எங்க என்.டி.ஆர் வச்ச ரெண்டு ரூபாக்கு கிலோ அரிசி திட்டத்தை தான் இன மான காவலர் (?) தமிழின தலைவர்(?) ஒரு ரூபாயாக்கி அமல் படுத்திக்கிட்டிர்க்காரு தெரியுமோ?

மேற்படி டீக்கடை அருகே உள்ள டி.வி.ரிப்பேர் கடைலயிருந்து ஓவர் டு கவிதை 07
"இன்னா பாய் ! இடைதேர்தல்ல அதிமுக போட்டியிடாதாமே !"
"துஷ்டனை கண்டால் தூர விலகுனு பெரியவங்க சொல்லியிருக்காங்க இல்லே"
"அட சூப்பர் ஸ்டாரே தைரிய லட்சுமினு டைட்டில் கொடுத்துட்டாரு ..இப்ப என்னய்யா துஷ்டன் கிஷ்டன்னு பேசறிங்க"
"ஆமா சார் ! அவங்க வீட்டுக்கு வீடு மாடு கன்னு,பச்ச நோட்டு அள்ளிவிடுவாங்க ..நாங்க வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்கனும்"
"யோவ் எங்க தலைவர் 13 வருசம் வனவாசம் அனுபவிச்சாருய்யா ! ஒரு தடவையாவது தேர்தலை புறக்கணிச்சிருப்பாரா? ஒவ்வொரு தேர்தலையும் வீரத்தோட சந்திச்சவர்யா அவரு"
"ஆமா சொற்ப வோட்ல அவர் மட்டும் ஜெயிப்பாரு .சட்ட மன்றத்து ஹால் வரைக்கும் வந்து பதிவேட்ல கை.எ போட்டுட்டு பத்தா வாங்கிருவாரு ..அதுக்கு பேரு வீரமா.."
" யோவ் அனாவசியமா வரலாறை துருவாதே ! அது கலைஞருக்கு உங்க வாத்தியார் காட்டின வழிதானய்யா.."
"என்னப்பா இது அண்ணா வழி அண்ணா வழினு கீசிக்கற ஆசாமி வாத்தியார் காட்ன வழில போயிட்டாரா"
" த பார் சும்மா அலம்பல் பண்ணாதே உங்கம்மா பயந்துட்டா அதை ஒத்துக்க!"
" யோவ் ..நியாயமா தேர்தல் நடத்த சொல்லுய்யா ..நிக்கிறோம்.."
"த பார்ரா எவனோ மலைய தூக்கி என் தோள்ள வை தூக்கிட்டு வர்ரேன்னானாம் அந்த கதையா இருக்கே !"
"நீங்க எல்லா சீட்லயும் ஜெயிச்சாலும் 79 வந்து 84 ஆகுமே தவிர 117 ஆகாது மாமூ!"
"உங்கம்மா கொட நாடு எஸ்டேட்ல தூங்கிகிட்டே இருக்கட்டும் . இங்க எங்க அழகிரி அதிமுகவையே காலி பண்ணிர்ரார்"
"அட .. ஆமா எங்க கட்சி உடுப்பி ஹோட்டல் போண்டா செட்டு அழகிரி காலி பண்ணிருவாரு. பெரிய தலை சாயட்டும் . மவனே ..சேவல்,புறா கேசுதான்"
"மாமா! தலைவர் கரெக்டா ரூட் க்ளியர் பண்ணி வச்சாச்சு. ஸ்டேட்டுக்கு ஸ்டாலின்,சென்ட்ரலுக்கு அழகிரி /பிரச்சாரத்துக்கு ஸ்டாலின் ,ஃபீல்ட் ஒர்க்குக்கு அழகிரி ஒன்னத்தயும் ஆட்ட முடியாது"
"ஆமாடா கட்சி அவிங்க குடும்ப சொத்து பாகப்பிரிவினை பண்ணிட்டாரு. மகனே அனில் அம்பானி-முகேஷ் அம்பானி கதைதான் பாரு"
"ஊத்திக்கொடுத்தயானு கேட்ட ஆசாமிக்கே இன்னைக்கு வால் பிடிக்கிற மாதிரி ஆயிருச்சி பார்த்தயா ?"
"தூ..எங்கம்மா என்னைக்குமே வால் பிடிச்சதில்லய்யா ..எவனாயிருந்தாலும் கால் பிடிக்க வேண்டியதுதான்"
"ஆமா ஜெயாம்மா ஆதி பராசக்தி கால் பிடிச்சா ஜன்மம் சாபல்யமாயிரும்"


முடிவுரை: இது ஆயிரம் பதிவுகள் போட்டாலும் தீராத விவாதம் எனவே இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

பெண்கள் இரண்டுவிதம் : கோகுல் அவர்களுக்கு மறு(ப்பு ) மொழி

கோகுல் அவர்களே !
//முதலில் என்னை 18 வயதாக நினைத்ததற்கு ஒரு நன்றி , ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் அந்த வயதை கடந்து விட்டேன் !//

தங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி. தங்களில் ஒரு வித தேடுதல் தெரிகிறது (அதான் 18 ஐ கடந்தாச்சுனு சொல்லிட்டிங்களே !


// நீங்கள் சொல்வது எல்லாம் படிப்பதற்கு மிகவும் இன்பகரமானதாக இருக்கிறது, குடும்பத்தில் அடங்கி போகிறவர்கள்தான் உண்மையில்
அடக்குகிறார்கள் , ஆஹா , ஆனால் பாருங்கள், நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்களில் வரும் வழக்குகள் இந்த மாயாவாதத்தை விட்டு மிக மிக விலகி இருக்கின்றன.//

வாதமில்லே பக்கவாதமில்லேண்ணா ! நான் சொல்றது சத்தியம். பெண்ணை உங்க ஆண்மையாலயோ, உடல்பலத்தாலயோ வெல்லவே முடியாது. அவள் போய் ஒழியட்டும்னு சகிச்சுக்கறா அவ்ளதான். அந்த கருணைக்கும் ஒரு எல்லை உண்டு இல்லியா. மேலும் நீங்க சொல்ற கோர்ட்டு ,கேஸு பார்ட்டிங்க எல்லாம் அவங்களுக்குள்ள இருக்கிற அன்புக்கு ஏங்குற ஆத்மாவை தொலைச்சுட்டவங்க அல்லது தொலைக்க வைக்கப்பட்டவங்க. அவங்க எண்ணிக்கைய இன்றைய ஜனத்தொகையோட ஒப்பிட்டா ரொம்ப குறைச்சல். இதெல்லாம் மாறிவரும் வாழ்க்கை முறைக்கு நாம கொடுக்கிற விலை. ஆண் ஆணா இல்லாதப்ப (பான்பராக்,சுய இன்பம்,இறுக்கமான உள்ளாடைகள் இப்படி நூற்றுக்கணக்கான காரணங்களால் ஆண் ஆண்மையை இழந்து பெண்ணாவே மாறி அவளோட ஏட்டிக்கு போட்டியா மாறிப்போறான். ஆண்மையின் சிகரமா இருக்கிறவனுக்கு அவளோட இன் செக்யூரிட்டி,பொசசிவ் நெஸ் இதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் புன்முறுவல் பூக்க வைக்கிறதா இருக்கும்"

இங்கே நடக்கறது என்னன்னா .. ரெண்டு பேரும் பெண்களே.. அதான் இத்தனை லொள்ளு. ஆண் ஆண் மாதிரி வாழ்ந்தா பெண் அவனை அட்மைர் பண்ணுவா . ஒரு பெண் பெண்ணையோ, ஒரு ஆண் ஒரு ஆணையோ அட்மைர் பண்றதுக்கெல்லாம் உயிரியல் சம்பந்தமான காரணங்கள் இருக்கலாம்.

//மேலும் இதை எழுதும்போது தோன்றுவது என்னவென்றால் உங்களுடைய இரண்டு பதிவுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி
இருக்கின்றது. முதல் பதிவில் மிகவும் காத்திரமாக 'ஆர்காசம்' பற்றியெல்லாம் மிகவும் யதார்த்தமாக ஆரம்பித்து உங்கள் அடுத்த பதிவில்
அதற்கு நேர்திசையில் சென்று விட்டீர்கள் ஏன் என்று தெரியவில்லை.//

இடைவெளி என்று ஏன் நினைக்கிறீர்கள். இரண்டு கோணங்களையும் வெளிச்சமிட்டு காட்டினேன். உண்மை எப்பயும் ஒரே கட்சிலயோ, காட்சிலயோ கிடைக்காது. ரெண்டு பதிவுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான்.

"நீங்கள் சொல்வது போல ஆணோ பெண்ணோ முழுமை அடைவது உடலுறவின் மூலமாக என்று வைத்துக்கொண்டால், ஆர்காசம் வந்த உடலுறவின் மூலமாகவா அல்லது அது வராத உறவு மூலமாக கூட முழுமை அடைவார்களா? ஏனெனில் நீங்கள் சொன்னது போல பல பேர் 23 (அல்லது 22.5) அசைவு வரை தாங்குவதில்லை.//

முழுமை அடைவது உடலுறவு மூலமாதான்னு நான் சொன்னதா பட்டிருந்தா அது என் எழுத்தின் குற்றம். நம்ம பெரியவங்க கடவுளை நினை, கடவுளை ஜபினு சொன்னது சாகும்போது பழக்க தோஷத்துல அந்த கடைசி கணத்துல அது நடந்துராதாங்கற அற்ப ஆசைலதான். அதே மாதிரி உடலுறவுங்கறது தொடர்ந்த ப்ராசஸ். இந்த ப்ராசஸால ஏதோ ஒரு கட்டத்துல கணவன் மனைவி ஒன்றுபட ஆரம்பிக்கிறாங்க.(தம் அகந்தையை விட்டு, அல்லது இழந்து ). இது வேறு எந்த வழியிலயும் அசாத்தியம்.

//நீங்கள் சொல்வதை கூட்டி கழித்து பார்த்தால், ஆண்கள் காதல் செய்ய வேண்டும் ஆனால் அதன் பிறகு (அல்லது முன்பே) வரும்
உடலுறவில் அந்த பெண்ணை திருப்தி செய்ய முடியாது , ஆனால் நாம் முழுமையடைய வேண்டும் (அய்யய்யோ ... ) //

இந்த பகுதிக்கான என் விளக்கம் ஏற்கெனவே என் விளக்கத்தில் இருப்பதால் இதை தவிர்க்கிறேன். பெண்ணை திருப்தி செய்ய ஒரு வைப்ரேட்டர் போதும். அவளுக்கு தேவை அன்பு, நான் இருக்கேன்டா என்ற அரவணைப்பு. அது கிடைச்சுட்டா மூச்சா போன ரேஞ்சுல இருக்கிற உடலுறவை கூட கருணையோட மன்னிச்சுர்ரா.( நெப்போலியனோட உடலுறவு பாணி இப்படித்தான் இருக்குமாம். வலம்புரி ஜான் தாய் பத்திரிக்கைல எழுதியிருக்காரு)



//அதன் பிறகு லஞ்சம் வாங்கி அவளை திருப்தி படுத்த வேண்டும். , அல்லது அவள் மன ஆழத்தில் இருக்கும் அன்பை தொட வேண்டும்//
அன்பையோ, உடலுறவில் முழுமையையோ தராவிட்டால் இது தான் ஆண்குலத்தின் தலையெழுத்து

// (நமது பரம்பரையை ரட்சிக்க ..) அது 54 இன்ச் கலர் டி.வீ மூலம் சாத்தியம் ...கிம்பளம் அதிகம் வாங்க வேண்டும் ... //


பரம்பரை என்ற வார்த்தையே என் பதிவில் கிடையாது. பரம்பரை ,வாரிசு இத்யாதியில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது. சி.எம்.சில போய் பாருங்க .ஒரு நாளைக்கு நூறு குழந்தை பிறக்குது. இவற்றை அடையாளம் காண்பது மணீக்கட்டில் கட்டியுள்ள சீட்டால்தான். எவனாவது/எவளாவது அதை மாற்றிக்கட்டிட்டான்னா கோவிந்தா . மேலும் நமக்கே பிறந்தது கூட அது நம்மோட நிழல் தானே தவிர வேறு ஒரு இழவும் கிடையாது. நாம் குழந்தை பெறுவது நம் மரணத்துக்கு பெப்பே காட்டத்தான் . ஆனால் நம்ம நோக்கம் நிறைவேறுவதில்லே. மரணத்துக்கு பூச்சாண்டி காட்ட பெத்த, சரியா வளர்க்காத பிள்ளையே மரணமாகிடறதும் உண்டு


//போங்கையா போய் குழந்தை குட்டிகளை படிக்க வையுங்க (தப்பா நினைச்சுக்காதிங்க தேவர் மகன் கிளைமாக்ஸ்-இல் வசனம்) டென்சன் டென்சன் டென்சன் (கவுண்டமணி குரலில் படிக்கவும்)//

படிக்க வைங்க என்பதோடு செக்ஸ் கல்வியையும் சேர்த்திக்கிடறதா இருந்தா ஜே !

இயற்கைக்கு புறம்பா போகும் போதுதான் டென்ஷன் டென்ஷன்.. இயற்கையோட இயைந்து நடந்தால் ..

ரிலாக்ஸ் ! ரிலாக்ஸ் ! ரிலாக்ஸ் !

Saturday, August 8, 2009

இவள் விடமாட்டாள் என்று தெரிந்து விட்டது

என்னிடம் ஜோதிடம் கேட்க வந்த தாயாரம்மா தன் வேலை முடிந்ததும் , சரி சாமி உன் வேலைய நீ பாரு நா போய் வரேன் என்று புறப்பட்டு போயிருக்க கூடாதா ? செத்த வெத்திலை போட்டுக்கிட்டு புறப்படறேன் என்றாளே வெற்றிலை போட்டுக்கொண்ட கையோடு ஒழிந்திருக்க கூடாதா ? அவள் ஏன் அந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் ஏன் என் கையறு நிலையை கூற வேண்டும். இந்த 42 ஆவது வயதில் இன்னொரு பெண் ஏன் என் வாழ்வில் நுழைந்து என் வாழ்வை வாணலிக்கு பயந்து அடுப்பிற்கு பாய்ந்த கதையாய் மாறவேண்டும். எல்லாம் விதி.

காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் என்ற பாரதி வரிகளை மெய்ப்பித்தல் என் நோக்கம் இல்லை என்றாலும் நான் பிறந்த நடுத்தர வகுப்பு குடும்பத்து ஹிப்பாக்ரசிகளை சகிக்க முடியாது பார்க்க சுமாரான ஒரு ஏழை பெண்ணை காதலித்ததோடு மணந்தும் கொண்டும் 24 மணி நேரத்தில் பிரிக்கப்பட்ட அதிர்ச்சி என்னில் ஏன் ஏன் என்ற கேள்விகளை எழுப்பி ஜோதிடத்தின் பால் செலுத்தியது. தெலுங்கு சினிமா மாதிரி 20 வ. முன்பான அந்த திருப்பமே என் வழ்வின் அனேக திருப்பங்களுக்கு காரணமானது.

ஊர் சேர்ந்து பிரித்த காதலியை மீட்க பண்ணாத தகிடு தத்தங்கள் இல்லை. என்னதான் சொல்லி அவள் மனதை கலைத்தார்களோ ? என்னதான் சொல்லி அவள் பெற்றோரை பயமுறுத்தினார்களோ தெரியாது. வீம்பு காரணமாய் இரண்டு வருடங்களிலேயே மற்றொரு பெண்ணை இவளும் வேறு ஜாதி. ஏழையும் கூட என் உத்தேசம் என்னவென்றால் வீட்டினர் சொல்லும் பெண்ணை மணந்து நான் என் சொந்த திறமையில் வெளிச்சத்துக்கு வந்தாலும் என்ன சொல்வார்கள் ? " ஹ்ம்..அவ எவ ..... பின்னாலயோ ஓடினயே..அப்படியே விட்டிருந்தா இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா " என்று தானே அலட்டுவார்கள். அந்த வாய்ப்பை அவர்களுக்கு தரக்கூடாது. மேலும் நான் காதலித்து பிரிக்கப்பட்ட பெண்ணே என்னை பார்த்து அடப்பாவி ! என்னை விட்டுட்டு ஊட்ல சொன்னவ பின்னாடி போறியே நீ நல்லாருப்பியா என்று தானே வயிறெரிவாள். அந்த வாய்ப்பை அவளுக்கு தரக்கூடாது

இப்படியெல்லாம் கணக்கு போட்டுதான் காதல் கடிமணம் புரிந்தேன். இதோ 18 வருடங்கள் ஓடிவிட்டன. தலை முடி கொட்டி, தாடி மீசை வெளுத்து ,லேசாக தொப்பை போட்டு ஒரு உதவாக்கரை தமிழ் தினசரிக்கு குத்து கொலை செய்திகள் கொடுத்த படி, சூரியன் மற்றெந்த கிரகத்தையும் சுற்றுவதில்லை, எங்கிருந்து எங்கும் பெயர்வதில்லை என்ற அற்வியல் அறிவு இருந்தும் கிரிக்கெட் காமெண்ட்ரி மாதிரி கிரகங்கள் குறித்த காமெண்ட்ரியை கொடுத்தபடி வயிறு வளர்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் இந்த தாயாரம்மா கேட்ட கேள்வியால் என் வாழ்வில் அதிரடி திருப்பம்.


அவள் தன் சுருக்குப்பையை திறந்ததும் நான் வேலை பார்க்கும் தினசரிக்கு செய்திகளை எழுத ஆரம்பித்தேன். அந்த பத்திரிக்கையின் தினசரி நியூஸ் டெட் லைன் மாலை 5 மணி என்பதால் மாலை 5க்கு பிறகு கிடைக்கும் செய்திகளை காலை நேரத்தில் எழுதி உச்சி வெயிலில் பஸ் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம்.

ஒரு பாட்டம் வெற்றிலை போட்டு குதப்பி வெளியே போய் துப்பி விட்டு வந்தவள் "சாமி நான் கேக்கறனேனு தப்பா நினைக்க கூடாது சாமி ! உங்கப்பா பெரிய ஆஃபீசரு பாவம் வாயை கட்டி வயித்த கட்டி உங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கினாரு. பாவம் பத்து பைசா லஞ்சம் வாங்காம மானஸ்தனா வாழ்ந்தாரு. அவர் பெத்த புள்ளைங்க 4 பேர் இருக்கும்போதே அவர் கட்டின வீட்டை வித்துட்டிங்க ... உங்க ரெண்டு அண்ணன் மாரும் 50 வயசுக்குள்ளயே செத்து போயிட்டாங்க ..உங்க தம்பி பாவம் ரத்தம் ரத்தமா கக்கிகிட்டிருக்காராம். உன் வீட்ல பார்த்தா உன் பெண்டாட்டி கண்ணுல மட்டும் உயிரை வச்சுக்கிட்டிருக்கு.. உன் பொண்ணு பாவம் படிப்பை கூட நிப்பாட்டிட்டு எங்கயோ போட்டோ ஸ்டுடியோல வேலை செய்யுதாம். அந்த ஸ்டுடியோ காரனையே கல்யாணம் கூட கட்டிக்க போவுதாம். உன்னை பார்த்தா நீ ஒன்னும் குடிச்சி கூத்தடிக்கற மாதிரியும் இல்லே. ஜோஸ்யம் பார்க்க வந்தவங்க இருபது வச்சாலே "அட என்னத்த சொல்லிட்டேன் பத்து போதும் .. இந்த பத்துக்கு குழந்தைங்களுக்கு எதுனா வாங்கிட்டு போங்கனு சொல்லிர்ர. அது ஏன் சாமி நல்லவங்களுக்கே கடவுள் இந்த மாதிரி சோதனைய கொடுக்கறாரு. " என்று பத்தி பத்தியாக பேசினாள்.

"எனக்கு ரேங்கி விட்டது . இத பாரு..இந்த மாதிரி தர்ம சந்தேகத்துக்கெல்லாம் பதில் சொல்ல நான் ஒன்னும் சங்கராச்சாரி கிடையாது. ஆள விடு " என்றேன். சற்றே முகம் சுருங்கி போனாலும் என்னை விடுவதாயில்லை அவள். " இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டா எப்படி சாமி.. நீங்க பெரிய பெரிய புஸ்தவம்லாம் படிக்கிறிங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுவிங்கன்னு தான் கேட்டேன்" என்றால் கெஞ்சலாய்.

பாவம் உருவம்,வயதுதான் வளர்ந்திருக்கிறதே தவிர அப்பாவி. செய்வது பழைய பாட்டில் வியாபாரம் தான் என்றாலும் லோட் லோடாய்தான் தள்ளிவிடுவாள். பணவிஷயத்தில் கெட்டி. என்ன ஒரு சிக்கல் என்றால் கணவன் கு(ட்)டிகாரன். இவள் என்னமோ அம்மன் சினிமாவில் அம்மன் வேடம் கொடுக்கலாம் போலத்தான் இருக்கிறாள். அந்த மனிதனுக்கு என்ன அலுப்போ ! மாப்பிள்ளை சோப்ளாங்கி வருடா வருடம் கடன் கேட்டு வந்து தலை சொறிவான். பிள்ளை சூதாடி. சம்பாதனை என்னவோ தலைக்கு மேல் தான் இருக்கிறது. லகர கணக்கில் ஒரு வட்டி இரண்டு வட்டிக்கும் திருப்பி வருவதாய் கேள்வி.

சரி .. இவள் விடமாட்டாள் என்று தெரிந்து விட்டது. நான் டென்ஷனாய் என் பின்னே திரும்பி பார்த்தேன் பீடிக்கட்டு, தீப்பெட்டி இருக்கிறதா என்று அவளுக்கு தெரியும் நான் எரிச்சலடைந்தால் உடனே வெளியே போய் ஒரு பீடி குடித்து விட்டுதான் வருவேன் என்று. இன்று .."சாமி த பாரு ! எனக்காக நீ ஒன்னும் வெளிய போகவேனா அடிச்சு விடு" என்றாள் .

நான் பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டு புகை ஆழ உறிஞ்சி வெளியேற்றினேன், அவள் ஆவலுடன் என் முகத்தையே பார்ப்பது ஒரு வித திருப்தியை தந்தது. பேச ஆரம்பித்தென் " தபாரு ! லைஃப் வந்து மெகா சீரியல் மாதிரி இதுல காரண காரியம்லாம் நம்ம திருப்திக்கு நாம சொல்லிக்கலாம் அவ்ளதான். இருந்தாலும் நீ இவ்ள தூரம் கேட்டதால சொல்றேன்.

"அடச்சீ .. ஆசைக்கு ஒரு அளவு வேணா"

நள்ளிரவு ! தெருக்கதவை கதவை ஏதோ பிராணி பிறாண்டினாற்போல் இருந்தது. நாமதான் ராத்திரி பிசாசேச்சே மறு நாள் போட வேண்டிய பதிவை டொக் டொக்கி கொண்டிருந்த நான் என்னதான்னு பார்த்துரலாம்னு கதவை திறந்தேன். திறந்ததுதான் தாமதம்.

கோடி சூரிய பிரகாசத்தோடு தோன்றினார்னுவாங்களே அதேமாதிரி பிரகாசத்தோட சாட்சாத் கலைவாணி அன்னப்பறவையில் ஆரோகணித்திருந்தாள். செல்ஃபோன் சிக்னல்கள் அன்னப்பறவையின் பொறுமையை சோதித்திருக்க அதுதான் தன் அலகால் கதவை சுரண்டியது போலு.

"வாங்கம்மா வாங்க வாங்க ! ஏன் வெளியவே நிக்கிறிங்க உள்ள வாங்க என்று வரவேற்றேன். மனைவி,மகள் வெளியூர் போயிருந்ததால் ஏகனாக இருந்த எனக்கு நள்ளிரவில் நாமகள் காட்சி தந்ததும் அன்னத்தை விட்டு இறங்கி என் வீட்டுக்குள் நுழைந்ததும் சிங்கை பதிவர்கள் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்த அத்தனை ஆனந்தத்தை கொடுத்தது.

"வாங்கம்மா உட்காருங்க ..பஞ்ச சம்ஸ்காரம் இத்யாதியெல்லாம் நமக்கு தெரியாது. இந்த எளியவனை தேடி வந்ததுக்கு ரொம்ப நன்றி !" அது இது என்று உளறிக்கொட்டினேன்.

வந்தவளோ "த பாரு ..உன் புகழ் மொழியெல்லாம் கேட்டு வட்டச்செயலாளர் பதவி கொடுக்க நான் ஒன்னும் ஜெயலலிதா கிடையாது . நேரிடையா விசயத்துக்கு வரேன். நீ ஜோசியன் தானே"
"ஆமாம் தாயே ! ஏதோ விட்ட குறை தொட்ட குறையா ஒரு குன்ஸ் கிடைச்சது..அதை வச்சு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன்"
" உன் அதிவினயம்லாம் இருக்கட்டும் . கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லனும் ஓகே"
"சரி தாயே"
"ராப்பிச்சை மாதிரி அம்மா தாயேல்லாம் வேண்டாம்"
"சரிங்க"
"கலியுகம் துவங்கி எத்தனை வருசம் ஆச்சு.. அது வந்து 5110 ன்னு நினைக்கிறேன்மா..எதுக்கும் பஞ்சாங்கம் எடுத்து பார்த்துரட்டுமா ?"
"கிழிச்சே ..தபாரு ஒவ்வொரு யுகத்துலயும் 5,1111ஆவது வருஷம் உலகத்துல ஏழில ஆறு பாகத்தை அழிச்சு ஒரு பாகத்தை மட்டும் விட்டு வைக்கிறது வழக்கம்"
"அடடே ..டிஸ்க் க்ளீன் அப் மாதிரி "
"உன் அதிமேதாவித்தனத்தையெல்லாம் காட்டாதே சொல்றத கேட்டுக்க"
"சரிங்க"
" இப்போ அந்த நேரம் நெருங்குது. உலகத்தை அழிக்கப்போறோம்"
" அந்த சிரமம் உங்களுக்கு இருக்காதுனே நினைக்கிறேன். அதையெல்லாம் அமெரிக்காவும் ,எங்க அரசியல்வாதிகளுமே பார்த்துக்குவாங்க !"
"முட்டாள் ! குறுக்கே பேசாதே..நீ என்னவோ 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு சிறப்பு ராணுவம் அமைச்சு , நதிகளையெல்லாம் இணைச்சு ,கூட்டுறவு பண்ணை விவசாய முறையை அமலாக்கி இந்தியாவை சொர்க பூமியாக்கறேன் அது இதுனு பீலா விட்டுக்கிடிருக்கியாமே"
"பீலா இல்லைம்மா ..ஜனங்க பை மிஸ்டேக் என் பேச்சை கேட்டா உண்மையிலயே மாத்திர்ரதா சின்ன உத்தேசம்"
"அடச்சீ .. ஆசைக்கு ஒரு அளவு வேணா"
" இதுக்கு பேரு ஆசையில்ல தாயே லட்சியம்"
" தபாரு இதெல்லாம் நடக்காத காரியம் ..பேசாம இதை மாதிரி உளர்ரதை எல்லாம் மூட்டைக்கட்டி வச்சுட்டு ஆகிற வேலை எதுனா இருந்தா அதைப்பாரு !
"நீ சொல்ற ஆகிற வேலைய பார்க்க கோடிக்கணக்குல ஜனம் இருக்குது தாயி.. ஏதோ உருப்படாதவன் தொலையட்டும்னு விடுவியா "
"உன்னையா.. விடறதா நெவர். உன்னை விட்டு வச்சா அழிவே சாத்தியமில்லாம போயிரும்"
"தா .. பார்த்தியா நீ இப்ப விடறதுதான் பீலா.. நான் எல்லாம் ஒரு கணக்கா ஜுஜுபி"
"ஜுஜுபியோ..லோலாக்கு டோல் டப்பியோ ..உன் எண்ண அலைகள் வலுவா இருக்கிறதால தேவலோகத்து டெம்பரேச்சரே ஏறிப்போயி ஏசியெல்லாம் ஓவர் டைம் வாங்குது. எங்க அஜெண்டாவை டிஸ்டர்ப் பண்னுது. நாங்க அழிச்சாகனும். அதுக்கு நீ உன் லட்சியம் லால் மஞ்சன் (பல் பொடி தலைவா !)எல்லாம் விட்டு தொலைக்கனும்"
"யப்பாடி! ட்ரம்ப் கார்டு இப்ப எங்க்கிட்ட இருக்கா .. நான் ஏன் என் லட்சியத்தை விட்டுத்தொலைக்கனும். நான் இந்த பூமில வசிக்கிறவன் . இதை நீங்க அழிக்கறதுக்கு நான் கோ ஆப்பரேட் பண்ணுவேனு எப்படி நினைச்சிங்க"
"நாங்க தெய்வங்க.."
"நான் மனிதன்(ரஜினி பட டைட்டில் இல்லிங்க) . எனக்கு மனிதாபிமானம் தான் முக்கியம்"
"இந்த மனிதர்கள் உனக்கு என்னாத்த செய்து கிழிச்சுட்டாங்கனு இப்படி ஜொள்ளு விடறே"
"நான் ஒன்னும் அத்வானி மாதிரி ரத யாத்திரை போய் ஆதரவு கேட்கலியே..அந்த நாள் முதல் இந்த நாள் வரை என் திட்டத்தை ஆட்சியாளர்கள்,அரசியல்வாதிங்க,மீடியா பார்வைக்கு கொண்டு செல்லதான் முயற்சி பண்ணியிருக்கேன்"
"போறதானே ..மக்கள் கிட்டே போய் நான் 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு சிறப்பு ராணுவம் அமைச்சு , நதிகளையெல்லாம் இணைச்சு ,கூட்டுறவு பண்ணை விவசாய முறையை அமலாக்கி இந்தியாவை சொர்க பூமியாக்கறேன்னு சொல்ல வேண்டியதுதானே"
"நேரம் வரும்போது போறேன்"
"அதுவரைக்கும் இந்த மாதிரி கவைக்குதவாத அங்கத உரையாடல்களை பதிவா போட்டுக்கிட்டு காலத்தை கழிக்கிறேங்கறயா?"
"Some thing is nothing இல்லியா?"
"த பாரு உஅனக்கு இதான் கடைசி வார்னிங். இந்த இழவை எல்லாம் விடப்போறியா இல்லையா?"
"இல்லை தாயி !"
"உன்னோட ரெண்டு கண்களும் பறிக்கப்படும்"
"த பார்ரா இது சாபமில்லே ..வரம்"
"எப்படி சொல்றே?"
"மனோ சக்தில பாதி கண்கள் வழியாதான் செலவாயிருதாம். அதனாலதான் கண்ணில்லாதவங்களோட இதர புலன் எல்லாம் தீட்டப்பட்டு ஷார்ப் ஆயிருதாம்"
"என்ன இது வில்லங்கமா போச்சு. இப்பவே உன் இம்சை தாங்க முடியலை. கண்ணை பிடுங்கி உன் மனோசக்தி அதிகரிச்சுட்டா சொர்கத்தை காலி பண்ணிட்டு கொட நாடு எஸ்டேட் போக வேண்டியதுதான். தபாரு ! உன் ரெண்டு கையையும் பறிச்சுருவோம்"
" நல்லதா போச்சு ப்ளாகர் காரன் போட் காஸ்டிங்னு ஒன்னு வச்சிருக்கான். மொபைல்லயிருந்து அப்படியே போஸ்ட் பண்ணலாம்"
"உன் பேச்சை பறிச்சுட்டா?"
"இன்னம் நல்லதா போகும். என் ஜாதகத்துல சுக்ர,சந்திரர்கள் தவிர எல்லா கிரகங்களும் கேந்திர கோணங்கள்ள இருக்கிறதால பரிவ்ராஜக யோகம்னு பேரு. அதாவது நான் வந்து விடுதலை பெற்றவனாம். இந்த சுக்ர,சந்திரர்கள் வாக்குஸ்தானத்துல மாட்டிக்கிட்டதால அதை சொல்லனும்,இதை சொல்லனும்னு என் சக்திய வீணடிச்சிட்டிருக்கேன்."
"அய்யய்யோ ! இது என்ன புது பிரச்சினை? அடேய் காலணா கவிஞனே! ஏழில் ஆறு பாகந்தாண்டா அழுப்போம் அதுவும் பாவிங்களதான் அழிப்போம்"
"யார் பாவி தாயே ! இன்னைக்கு உலக நாடுகள் பிச்சையெடுக்க காரணமே அமெரிக்காதான். ஆனால் கெடுவான் கேடு நினைப்பான் என்ற ஆரம்ப சூத்திரம் கூட தெரியாத நாடு அது. -ஆடிய ஆட்டமென்ன ? -ங்கற மாதிரி இப்போ காருக்குள்ள குடித்தனம் பண்ற ஸ்டேஜுக்கு அமெரிக்க மக்கள் வந்துட்டாங்க"
"அப்போ அவங்க பண்ண அக்கிரமத்தையெல்லாம் மன்னிச்சுரனுங்கறயா?"
"அப்படி சொல்லமாட்டேன்.. அவங்களால உலக நாடுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சொல்லனும்"

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள்

முன்னுரை:
பெண்களைப்பற்றிய எனது பதிவுக்கு மறுமொழி எழுதிய Mr.கோகுல் அவர்களுக்கு பதில் எழுதத்தான் ஆரம்பித்தேன் ,அது ஒரு பதிவாகவே ஆகிவிட்டது . மழை யாருக்காக பொழிகிறேன் என்று சொல்லியா பொழிகிறது. அகங்கார குடையை மூடி வைத்து நனையுங்கள் இந்த மழையில்

//அடங்கி போவதுக்கு இப்படி ஒரு பில்டப்பா //
தம்பி !
உங்க மறுமொழி உங்களுக்கு வயது 18க்குள் என்று காட்டுகிறது. அதனால் தான் இந்த அழைப்பு. அடங்கி போவது,அடக்குவது இதெல்லாம் தேவையில்லாத உறவு கணவன் மனைவி உறவு. இதில் அடங்கி போகிறவர்கள் தான் உண்மையில் அடக்கி ஆள்கிறார்கள். அடக்க நினைப்பவர்கள் ஆடிப்போகிறார்கள்.

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள். ஒன்று அவளது உடல் ரீதியான பலவீனம் தந்த குறுக்கு புத்தி, வியூகங்கள், பாதுகாப்பற்ற தன்மை இதெல்லாம் சேர்ந்து தயாரித்த தற்போதைய பெண்.

மற்றொரு பெண் ஒவ்வொரு பெண்ணிலும் அவளது மன ஆழத்தில் இருக்கிறாள். அவள் சில மில்லி கிராம் அன்புக்கு ஏங்கியபடி, அது கிடைத்தால் ஆதிசக்தியாகி அந்த அன்பை செலுத்தியவனுடைய குடும்பம்,வம்சம்,ஏன் அவன் ஊர்,உலகத்தையே காத்து ரட்சிக்கக்கூடிய இயற்கையின் பிரதி நிதியான பெண்ணும் இருக்கிறாள்.
//அய்யா உடலுறுவு என்பது சாப்பிடுவது போல ஒரு செய்கை அவ்வளவுதான் , அது சில சமயம் உணர்வு பூர்வமாக அமைவதும் உண்டு, தயவு செய்து புனித சாயம் பூசாதிர்கள்//

உடலுறவு என்பது வெறுமனே விந்தை வெளியேற்றும் செயலாக இருந்தால் அவனவன் தன் கையே தனக்குதவி என்று இருந்துவிட்டிருப்பான். இங்கே ஒவ்வொரு மனிதனும் /ஆண்,பெண் அனைவரும் அரைகுறைதான் மறுபாலுடன் இரண்டற கலக்காதவரை.

ஒவ்வொரு ஆணிலும் ஆண் தன்மை 60 சதம், பெண் தன்மை 40 சதம் இருக்கும்.
ஒவ்வொரு பெண்ணிலும் பெண் தன்மை 60 சதம் ஆண் தன்மை 40 சதம் இருக்கும்.

ஒரு ஆணும் பெண்ணும் இரண்டற கலக்கும் போது அங்கு முழுமையான ஒரு ஆண் ,ஒரு பெண் ஏற்படுகிறார்கள்.

அனைத்து மாந்தரும் தோன்றியது முதலில் தோன்றிய அமீபாவிலிருந்துதான். அன்று ஓருயிராய் இருந்த போது தாம் அனுபவித்த பாதுகாப்பு,இலக்கற்ற தன்மை தான் மனித மனங்களின் ஆழத்தில் பதிந்திருக்கிறது. மீண்டும் ஓருயிர் ஓருடலாக மாற ஒவ்வொரு உயிரும் துடிக்கிறது. அதற்கு தடை தம் உடல் என்று பாவிக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு உயிரும் தன்னைத்தானே கொன்று கொள்வதும்,பிற உயிர்களை கொல்வதுமாய் இருக்கிறது. மனித உயிர்கள் பல்வேறு முகமூடிகளுடன் செய்வது இரண்டு செயல்களைத்தான் .ஒன்று தற்கொலை அ கொலை.

ஈருயிர் ஓருயிரில் தங்கும் நிகழ்வு ஒரு பெண்ணில்தான் நடக்கிறது. அதனால் தான் கர்பிணியான பெண்ணின் முகத்தில் ஒரு க்ளோபல் மதர் தெரிகிறாள். எப்படிப்பட்ட காமுகனாக இருந்தாலும் ஒரு கர்பிணி எதிர்படும்போது அவன் மனதில் அந்த உணர்வு எழுவதில்லை.

ஆக படைப்பின் ஆரம்பத்தில் ஓருயிராய் இருந்த அனுபவத்தை தருவது உடலுறவு. மேலும் மனிதனி கொல்லும்,கொல்லப்படும் இச்சைகளையும் தீர்த்து வீர்ய ஸ்கலிதத்தின் போது ஒரு ப்ளாக் அவுட்டை தந்து சமாதி நிலைக்கான ஒரு முன்னோட்டத்தையும் தருவது உடலுறவு.

எனவே "ஆதலினால் காதல் செய்வீர்..

//சில சமயம் அது உணர்வு பூர்வமாக அமைவதுண்டு //என்று கூறியமைக்கு நன்றி. இந்த வரிக்காகத்தான் ஒரு பதிவு சைஸில் மறுமொழி போட இருந்து பதிவாகவே போடுகிறேன்.

Friday, August 7, 2009

.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி

மனைவி என்றதும் உங்கள் மூளையில் பல்வேறு பிம்பங்கள் மின்னலாம். அவற்றையெல்லாம் முதற் கண் துடைத்து விடுங்கள்.(மெட்றாஸ் ஐ என்றால் வேண்டாம்)

உலக அழகி ஐஸ்வர்யாராயே என்றாலும் சரி மனைவி என்ற ஸ்தானத்திற்கு வந்து விட்டால் அவர்களின் சகலமும் மாறிவிடுகிறது. சாலையோர ரோமியோக்கள் கண்ணுக்கு வேண்டுமானால் ப்யூட்டிஃபுல் ஆண்டி யாக தோன்றலாம்.

ஆனால் தன்னை ஆண்டியாக்கி விட்டபடியால் கணவன் கண்ணுக்கு மட்டும் அவள் ட்ராகுலாவாகவோ,அட்டையாகவோத் தான் தோன்றுவாள். பெண் என்பவள் வேறு எந்த பாத்திரத்தில் வேண்டுமானாலும் சோபிக்கிறாளே தவிர மனைவி பாத்திரத்தில் மட்டும்,சோகிக்கத் தான் வைக்கிறாள். இது நற்குடியில் பிறந்த‌ (காஸ்ட்லி மது இல்லிங்க) ஆதர்ஸ குணங்கள் நிறைந்த பெண்களுக்கும் பொருந்தும்.

ஏதோ என் கடுப்பை பதித்து வயிற்றெரிச்சலை ஆற்றிக் கொள்ளலாம் (அது என்ன நாயர் கடை டீயா) என்று ஆரம்பித்து விட்டேன்.

விஷயத்துக்கு வரேன். பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.

1.நிறைய பெண்களிடம்,மனைவிகளிடம்( என் மனைவிகள் அல்ல) நான் கண்டது:
செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது. ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட். இந்த நிலையில் அவள் செக்ஸுக்கு வருவது தியாகம் தானே . வெட்டி ... நித்திரைக்கு கேடுங்கற மாதிரி

2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.

3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.

4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள்,ஃபோர்வீலர்கள்,
கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம்
தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது. ஒன்றொ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது.

5.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.

6.விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.

7.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது.

என்னைக் கேட்டால் நாட்டில் நில‌வும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளுக்கு கார‌ண‌மே க‌ண‌வ‌ன் மாரின் செக்ஸ் குறைபாடுக‌ள் தான் என்று சொல்வேன்.

மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.

இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி ஹும் நீ அதுக்குத்தான் லாய‌க்கில்லே இதை‌யாவ‌து வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாய‌க்கில்லே இதையாவ‌து வாங்கித் த‌ருவோம் என்று க‌ண‌வ‌ன் வாங்கித் த‌ருவான் போலும்

ப‌திவு எங்க‌யோ ஆர‌ம்பிச்சு எங்க‌யோ போயிருச்சு. எப்ப‌டியோ ம‌னைவிக‌ள் திருந்தினால் ச‌ரி. திருந்தாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள் இருந்தென்ன‌ லாப‌ம்

Wednesday, August 5, 2009

நாட்டு ஆண் பெண்களின் விந்து,முட்டைக்கருக்கள் நாசமாகிப்போனதால்

1.பக்கத்து வீட்டு பரிமளம்

"டேய் சோமு ! பக்கத்து வீட்டு பரிமளாகிட்டே போய் 2 தக்காளி வாங்கிட்டு வாடா" என்றாள் அம்மா. "சே பத்தாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு சொல்றவேலைய பாரு" என்று திட்டிக்கொண்டே புறப்பட்டேன்.

பரிமளாவுக்கு 35க்கு மேல் வயது. அந்த தோஷம் இந்த தோஷம் என்று திருமணம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. பார்க்க அம்சமாகவே இருப்பாள். கதவு திறந்திருக்கவே உள்ளே நுழைந்தேன். அவள் குளித்துவிட்டு பாவாடையை மார்பு வரை தூக்கிக்கட்டிக்கொண்டு டர்க்கி டவலால் தலையை துவட்டிக்கொண்டிருந்தாள். " நான் தரையை பார்த்தபடி "அம்மா 2 தக்காளி வாங்கிட்டு வரச்சொன்னாங்க" என்றேன். பரிமளா ஃப்ரிட்ஜை திறந்து ட்ரேக்களில் தக்காளியை தேடிகொண்டிருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.காதோரம் சூடு பரவியது, நாக்கு உலர்ந்தது. எப்போதோ பார்த்த பாடாவதி படம் ஒன்றின் காட்சி நினைவிலாடியது.

அந்த நேரம் பார்த்து பரிமளாவின் அம்மா பையுடன் உள்ளே நுழைந்தாள். " ஏய் என்னடா வேலை உனக்கு" என்று சீறியபடி பரிமளாவை பார்த்து " சீ சீ.. என்னடி இது கோலம் போய் புடவைய கட்டிட்டு வா முதல்ல " என்றாள்.

பரிமளம் "அட போம்மா ! எனக்கு காலாகாலத்துல கல்யாணமாகியிருந்தா இவன் வயசுல பிள்ளையோ பொண்ணோ இருந்திருக்கும். இன்னம் நீ என்னை காபந்து பண்றதா நினைச்சு அவமானப்படுத்தாத " என்றாள் .

யாரோ என்னை பளார் என்று கன்னத்துல அறைந்தது போல் இருந்தது.


2.அரை கீரை,சிறு கீரை,முளை கீரேய் !

ரொம்ப நாளைக்கு பிறகு சந்தியாவை பார்த்தேன். விடாப்பிடியாய் தன் காரில் ஏற்றிகொண்டு விட்டாள். பங்களா ஒன்றின் முன் நின்றது கார். பெரிய்ய .. தோட்டம். கணக்கற்ற க்ரோட்டன்ஸ் செடிகள். ஒவ்வொன்றையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். "இது கலெக்டர் வீட்லருந்து கொண்டு வந்து நட்டது" "இது எஸ்.பி வீட்ல இருந்து கொண்டு வந்தது....."

அந்த நேரம் தெருவில் காய் கறி வண்டிக்காரன் குரல் கேட்டது. "அரை கீரை,சிறு கீரை,முளை கீரேய் !"

சந்தியா பதட்டத்துடன் "ஒரு நிமிஷம் கீரை வாங்கிட்டு வந்துர்ரேன்" என்றாள். என் இதழ்கடையில் சற்றே கோணலாய் ஒரு புன்னகை மலர்ந்தது. அதன் பொருளை கண்டு கொண்டதாலோ என்னமோ சந்தியா என் பார்வையை சந்திப்பதை தவிர்க்க "இதோ வந்த்ட்டன்பா " என்ற படி கேட்டை நோக்கி விரைந்தாள்.


3.மனித வளம்
2050,புது தில்லி
பிரதமர் அலுவலகம். பிரதமர் தன் எதிரில் அமர்ந்திருந்த சீன உயிரியல் மேதை ஸ்டான்லி பேச தயங்குவது கண்டு "நிலைமை கை மீறி போயாச்சு. இந்திய நாட்டுக்கு தேவை மனித வள புனரமைப்புக்கு ஒரு தீர்வு. எதுவா இருந்தாலும் சொல்லுங்க " என்றார்.

ஸ்டான்லி பேச ஆரம்பித்தார்." எங்க நாட்ல 40 வருடத்துக்கு முன்பு ஜனத்தொகை பெருக்கம் பெரிய பிரச்சினையா வடிவெடுத்தப்போ திருமணமான ,ஆகாதா ஆண்,பெண்கள் அனைவருக்கும் கட்டாய கு.க.பண்ணீட்டோம். அதுக்கு முன்னாடி அவங்கள்ள உடல் ,மன ரீதியா ஆரோக்கியமா இருந்தவங்களோட உயிரணுக்களையும்,முட்டை கருக்களையும் சேகரிச்சு ஃப்ரீஸ் பண்ணி பாதுகாப்பான கண்டெயினர்கள்ள புதைச்சு வச்சுட்டம். கடந்த 2020 க்கெல்லாம் ஜனத்தொகை கட்டுப்பாட்டுக்கு வந்து பொருளாதாரம் நல்ல நிலைக்கு வந்து நிலைப்பட்டு போச்சு. ஆனால் மனித வளம் குறைஞ்சு போச்சு. எதிர்காலத்துல இது பெரிய பிரச்சினையாயிரும் போலிருக்கவே ..ஏற்கெனவே புதைச்சு வச்ச மனித உயிரணுக்கள்,முட்டைக்கருக்களை தோண்டி எடுத்தோம். எடுத்தப்பறம்தான் தெரிஞ்சது முட்டைக்கருக்கள் நம்ம உயிரியல் மேதைமைக்கு டேக்கா கொடுத்துட்டு நாசமாகிப்போயிருந்தது. அதனால ஒரு சாகசம் செய்தோம். கொரில்லா குரங்கோட உயிரணுவை சேகரிச்சு ரெண்டையும் சேர்த்து புதிய மனிதனை படைச்சோம். இதுல ஒரே ஒரு பிரச்சினை..புதிய மனிதன் உடம்புல எந்த ஹேர் ரிமூவருக்கும் அசைந்து கொடுக்காத முடி, உடம்பெல்லாம் முடி . மூர்க்கம், அசுரபலம்"

ஸ்டான்லி பேசியதை கேட்ட பிரதமர் முகத்தில் ஏளன சிரிப்பு .".கடைசில உங்க நாட்டை கொரில்லா தேசமாக்கிட்டிங்க" என்றார்.

ஸ்டான்லியின் முகத்தில் ஆக்ரோஷம். ஐந்து நிமிடத்தில் அனைத்து டி.வி.சேனல்களும் அதிக டெசிபல்சில் அலறிக்கொண்டிருந்தன. "பிரதமர் அலுவலகத்தில் கொரில்லா அட்டகாசம்.."

வெற்றியின் ரகசியம் (ஆடியோ)

வெற்றியின் ரகசியம் என்ற தலைப்பிலான இந்த எனது பேச்சை எத்தனை பேர் கேட்பார்கள் என்று தெரியாது. ஆனால் நாளடைவில் பல்லாயிரக்கணக்கானோர் கேட்டு காலம் காலமாய் தாம் செய்து வந்த நிழல் யுத்தத்தை விட்டுத்தொலைத்து தமது உண்மை எதிரியான மரணத்துடன் யுத்தம் செய்தாலே என் முயற்சி வெற்றி பெற்றதாக கருதுவேன். ஆமாம் மரணத்தின் நிழல்களான வறுமை, இருட்டு,முதுமை,காலம்,தனிமை ஆகியவற்றுடன் நாம் நிழல் யுத்தம் செய்வதால் தான் ஒவ்வொரு வாழ்வும் தோல்வியேலேயே முடிகிறது. நிழலுடன் மோதி வெல்ல முடியுமோ ? அந்த நிழல்களை ஸ்தூலமாக பார்த்தால் அவை நம் உயிரை வாங்கிவிடப்போவது ஒன்றும் கிடையாது ஆனால் நம் அடிமனதில் உள்ள மரணம் குறித்த நினைவுகளோடு இவை இணைந்து வேலை செய்வதால் தான் வறுமை, இருட்டு,முதுமை,காலம்,தனிமை ஆகியன நம் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தி நிழல் யுத்தத்துக்கு கொம்பு சீவி விடுகின்றன.

நாம் மோத வேண்டியது மரணத்துடன் இந்த வறுமை, இருட்டு,முதுமை,காலம்,தனிமை எல்லாமே மரணத்தின் நிழல்களாக நம் அடிமனது கருதுபவையே என்ற நித்திய சத்தியத்தை உணர்ந்து கொண்டால் போதும் இந்த நிழல் யுத்தம் முடிவுக்கு வரும். மனிதனி மைண்ட் செட்டே மாறிவிடும். உலகம் அமைதிப்பூங்காவாகிவிடும். மரணத்தை வெல்வதற்கு சிலவழிகள் உள்ளன.
1.நாம் உயிருடன் இருக்கும்போதே இறக்க பழக வேண்டும் (தியானம்)
2.பிறப்பை தவிர்த்தாலன்றி இறப்பை தவிர்க்கவே முடியாது (பழைய கருமங்களை தொலைத்து, புதிய கருமங்களை சேகரித்தலை தவிர்த்தல்)
3.நாம் என்றுமே இல்லாதிருந்ததில்லை, இல்லாதிருக்க போவதுமில்லை இந்த படைப்பில் ஏதோ ஒரு வடிவத்தில் இருந்தே வந்திருக்கிறோம். இருக்கப்போகிறோம் என்ற சத்தியத்தை உணர்வு பூர்வமாக,அனுபவ பூர்வமாக அறிய வேண்டும்
4.நம்மை இந்த படைப்பிலிருந்து வேறுபடுத்தி பார்ப்பதால் தான் மரணம் என்பது நம்மை அச்சுறுத்துகிறது. இதற்கு காரணம் நம் அகந்தை.
5.நம்மில் யாரும் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல . இந்த பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் முதன் முதலாய் ஏற்பட்ட ஒரு செல் அங்க ஜீவியிலிருந்தே வந்துள்ளன. உடல்கள் தாம் வேறு. உயிர் ஒன்றே என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும்

மரணத்தை வெல்ல மற்றோர் வழியும் இருக்கிறது. குழந்தைகளாக மாறுவது. குழந்தை தனம் கொண்டவர்களாக அல்ல (ஓஷோ)

ஓகே. என் பேச்சை கேட்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு என் பேச்சின் ரத்தின சுருக்கத்தை இந்த பதிவின் மூலம் வழங்கி விட்டேன். நன்றி.

என்.டி.ஆர் எம்.ஜி.ஆருக்கு டூப்பில்லே

என்.டி.ஆர் :அதென்ன தம்பி எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் அப்படி என்னதான் வித்யாசம் .. நீயே சொல்லி தொலை
எஸ்.முருகேசன்: எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். கேரளாவில் செட்டில் ஆனவர். இதையெல்லாம் மறைக்கவோ என்னவோ தமிழ், தமிழகம்னு குரல் கொடுத்துக்கிட்டிருந்தார். உங்களுக்கு இந்த தலையெழுத்து கிடையாது. இயல்பாவே உங்க மனசுல தாய் மொழி மேல் ஒரு பாசம் இருந்தது. எந்த வித அரசியல் நோக்கம் இல்லாத காலத்துலயே இயல்பாவே தாய் நாடு, தாய்மொழி பற்றிய பாடல்கள்,வசனங்கள் தொடர்ந்து வந்துக்கிட்டிருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு திட்ட வட்டமான அரசியல் திட்டத்தோட இருந்தார். அவர் படம்,பாட்டு,பாத்திரம்வசனம் எல்லாமே செயற்கை. அரசியலிலும் அவரோட பங்கேற்பு,செயல்பாடு எல்லாமே சுய பாதுகாப்பு,சுய வளர்ச்சியை நோக்கமாக கொண்டவையே. பொதுவாழ்வில் அவர் காட்டிய பிம்பத்துக்கும் , உண்மைக்கும் ரொம்பவே வித்யாசம் இருந்தது. ஸ்ப்லி பெர்சனாலிட்டினு கூட சொல்லலாம்.
என்.டி.ஆர் :இதை தான் சின்ன பய புள்ள பேச்சுனு கிராமப்புறங்கள்ள சொல்வாங்க. நோக்கம் எதுவா இருந்தா என்ன ..அவர் செய்ததெல்லாம் நல்லதாதானே முடிஞ்சது
எஸ்.முருகேசன்: இல்லே தலைவா ! ஜெயலலிதால முடிஞ்சது.
என்.டி.ஆர் : நோ நோ .. உன் பேச்செல்லாம் அன் பார்லெமென்டரியா இருக்கு நான் போறேன்
எஸ்.முருகேசன்: தலைவா ! நான் தமிழனா தெலுங்கனான்னு எனக்கே சந்தேகம் வர்ர அளவுக்கு தெலுங்குல தேர்ச்சியும், என்னை நான் நம்பறதுக்கு பயிற்சியும் கொடுத்த குருநாதர் நீங்க. எம்.ஜி.ஆரை கலைஞர் கட்சிலருந்து கட்டம் கட்டினப்ப சத்யா ஸ்டுடியோவுல பதுங்கிட்டாராம் .ஏதோ அந்த காலத்துல மக்களுக்கு சொந்த பிரச்சினைங்க குறைவுங்கறதால கூட்டம் கூட்டமா வந்து வாத்தியாருக்கு ஆறுதல் சொன்னாங்களாம் ..அதுக்கப்புறம்தான் சார் ஓப்பன் டாப் ஜீப் ஏறி ஸ்பீச் கொடுத்தாராம். ஆனால் நீங்க அப்படியா தலைவா ! சந்திரபாபு ஏதோ மந்திரியா இருந்தாரேனு பெண்ணை கொடுத்திங்க. காங்கிரஸ் கட்சி கலாச்சாரம் தெரிஞ்சது தானே . தூக்கிப்போட்டுட்டாங்க. நீங்க இந்திரா லெலவல்ல போய் பேசிப்பார்த்திங்க மந்திரியில்லே கந்திரியில்லே எந்திரின்னுட்டாங்க . உடனே நீங்க கலகக்குரல் எழுப்பினிங்க. தனிப்பட்ட இழப்பை தூக்கி ஓரமா வச்சுட்டு காங்கிரசுக்கு எதிரா போர் கொடி தூக்கி மானிலமெல்லாம் பிரச்சாரம் செய்திங்க ஆட்சிய பிடிச்சிங்க . இந்த வெற்றிக்கும் உங்க சினி வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது அது ஒருவேளை உங்களுக்கு மானிலம் தழுவிய அறிமுகம், மீடியா கவனத்தை கொடுத்திருக்கலாம். தட்ஸ் ஆல். ஏனா நீங்க தரிச்ச பாத்திரங்கள் அப்படி. நீங்க ராமன் வேடம் மட்டும் போடலை ராவணன் வேடத்தையும் போட்டிங்க, கிருஷ்ணன் வேடம் மட்டும் போடலை துரியோதனன் வேடம் கூட போட்டிருக்கிங்க ,வுமனைசரா, பீடி,சிகரட் என்ன கஞ்சா அடிக்கிற பார்ட்டியா,குடிகாரனா,அப்பா வச்சிருக்கிற பெண்ணோடயோ டூயட் பாடற கேரக்டர்ல கூட நடிச்சிருக்கிங்க..
என்.டி.ஆர் :அது சரி இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே
எஸ்.முருகேசன்: நம்ம மானிலத்துல தெரியும் தலைவா ..தமிழ் நாட்டுல தெரியாது . உங்க கதைய சொல்லிட்டேன். எம்.ஜி.ஆர் கதை தெரியாத தலைமுறை ஒன்னிருக்கே அவங்களுக்காக 4 வார்த்தை . வாத்தியார் படத்துல ஒரே ஹீரோயின்,ரெண்டாவதா ஒன்னிருந்தாலும் அவளை க்ளைமாக்ஸ்ல தங்கச்சின்னிருவாரு. பீடி நோ..சிகரட் இல்லே தண்ணி இல்லவே இல்லே அவர் ஒரு ப்ளான் படிதானே படம் பிடிச்சு படம் காட்டி தமிழக அரசியலை பப்படமாக்கிட்டாரு
என்.டி.ஆர் :அப்படி அமைஞ்சதுனு கூட சொல்லாமில்லையா
எஸ்.முருகேசன்:உன் லொள்ளு தாங்க முடியலை தலை! என்னதான் அவர் உங்க உடன்பிறவா சகோதரரா இருந்தாலும் இப்படியா தாங்கு தாங்குனு தாங்கறது. அடமுக்கியமான விஷயத்தை விட்டுட்டேன். நீங்க எத்தினியோ ஹோரோயினோட நடிச்சிருந்தாலும் அந்த மாதிரி கிசு கிசு மட்டும் வந்ததே இல்லை . பெரியார் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப அண்ணா மாதிரி தலைவர்கள் கூட ஜீரணிச்சுக்க முடியாம போயிருச்சு . ஆனால் நீங்க இன்னொருத்தர் மனைவியா இருந்த லட்சுமி பார்வதியை "இவதாண்டா என் மனைவி"னு கைகாட்டினா மானிலமே ஒத்துக்குச்சு. இந்த வகைல கூட நீதான் தலை சூப்பர்
என்.டி.ஆர் :மொத்தத்துல நீ என்ன தான் சொல்ல வரே
எஸ்.முருகேசன்: நீங்க எம்.ஜி.ஆருக்கு டூப்பில்லே ரெண்டு பேருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசமிருக்குனுதான்
என்.டி.ஆர் :அதை இவ்ள காலம் கழிச்சு இப்பத்தான் சொல்லனுமா என்ன !எஸ்.முருகேசன்: Better late than never தலைவா !

Monday, August 3, 2009

பாறையில் விதைத்து அறுத்தவள் நீ

கணபதி கால் தொழுது கோள் நிலை
எதுவாயினும் என் கவிதை விதையாகி
ஆன்மீக பயிர் செழிக்க மாதமெலாம் தையாகி
எந்நாளும் வழி பிறக்க வேண்டி துவக்குகிறேன்
என் தாய் தாள் பணியும் பண்ணிதனை
அவள் அருள் என்றும் உண்டு
எவர்க்கும் உண்டு
அதை உணர்ந்திடத்தான் வேண்டும் பக்தி
அருள் இல்லை என்பதுவும்
இருள் மருட்டப்பார்க்குதென்றும்
இயம்புவது மடமையே
அவள் தந்ததல்லாது வேறென்ன உண்டு புவியில்
அவள் தாராதது என்னவரும் மானுடர் தம் வாழ்வில்
* * *

நாயேன் நிலை கண்டும்
நாயகி நீ மனம் இரங்காயோ
அனலில் புழுவென,கரை மேல் மீன் என
உவமைகள் ஆயிரம் கூறிடலாம்
ஆனால் என் நிலை நீ உணர
அவையேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே
நீயல்லால் வேறு புகலேது புவிமிசை இங்கினியே
பாவியர் காற்றும் என் மேல் வீசா
நிலை தனை நீயே தாராயோ
ஆவி சோர அம்மா ! நின் நாமம் தனையே ஜெபித்தேனே
உண்ணா பகலில்,உறங்கா இரவில்
உறவாய் எண்ணி நெகிழ்ந்தேனே
புவனேசி உனையே பலவாறாய் போற்றி போற்றி புகழ்ந்தேனே
நீ உதவா நாளது உண்டெனினும்
உனை நான் உள்ளா நாளது ஏதென்று நாயகி நீயே நவிலாயோ?
என் நலம் நினைந்தே மறைந்தாலும்
கனவே போல் நீ கரைந்தாலும்

(கண்)ணீரால் என் விழி நனைந்தாலும்
அதனிடை உன்னுரு
காட்டிடவே கண்ணீரை தந்தாய் என்றெண்ணி
உனையே புகழ்ந்தேன் மனம் நெகிழ்ந்தேன்
பசியால் கண்கள் இருண்டாலும்
நிசியிலும் தேவி உனை நினைந்தே என்னுள் காண எனை அகழ்ந்தேன்
புதுமை பலவே காட்டுகின்ற பதுமை நீயே
நானறிவேன்
பாறையில் விதைத்து அறுத்தவள் நீ
வஞ்சம் நிறைந்த என் நெஞ்சை பஞ்சாய் மாற்றி
பறக்க வைத்தே
உன் கொலுசொலி கேட்கும்வரம் தந்தாய்

என் வறுமையை எரிக்க கோரி நின்றேன்
வறுமையை விட்டு
எனை எரித்தாய் எனினும்
சீவன் எனை நீ
சிவனாக்க பார்க்கின்றாய் என இறுமாந்தேன்
அம்மா உனை நான் நாடியபின்
பேடியை போலே கிடந்தாலும்
சிவசக்தியாக்கி மகிழ்ந்தாய் என்று
நெஞ்சம் நெகிழ்ந்தேன் உனை புகழ்ந்தேன்

தாயே! நாயேன் நிலை கண்டும்
நாயகி நீ மனம் இரங்காயோ
அனலில் புழுவென,கரை மேல் மீன் என
உவமைகள் ஆயிரம் கூறிடலாம்
ஆனால் என் நிலை நீ உணர
அவையேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே
நீயல்லால் வேறு புகலேது இங்கினியே
பாவியர் காற்றும் என் மேல் வீசாத
நிலை தன்னை நீயே தாராயோ
ஆவி சோர அம்மா ! நின் நாமம் தனையே ஜெபித்தேனே
உண்ணா பகலிலில்,உறங்கா இரவில்
உறவாய் எண்ணி நினைத்தேனே
நீ உதவா நாளது உண்டெனினும்
உனை நான் உள்ளா நாளது ஏதென்று நாயகி நீயே நவிலாயோ?
என் நலம் நினைந்தே மறைந்தாலும்
கனவே போல் நீ கரைந்தாலும்

கண்ணீரால் என் விழி நனைந்தாலும்
அதனிடை உன்னுரு
காட்டிடவே கண்ணீரை தந்தாய் என்றெண்ணி
உனையே புகழ்ந்தேன் மனம் நெகிழ்ந்தேன்
பசியால் கண்கள் இருண்டாலும்
இதையே நினைத்து மகிழ்ந்திட்டேன்
புதுமை பலவே காட்டுகின்ற பதுமை நீயே
நானறிவேன்
பாறையில் விதைத்து அறுத்தவள் நீ
வஞ்சம் நிறைந்த என் நெஞ்சை பஞ்சாய் மாற்றி
பறக்க வைத்தே
உன் கொலுசொலி கேட்கும்வரம் தந்தாய்


தாயே நீயென் வாழ்வினிலே
நிகழ்த்திய அற்புதம் பல நூறு (அவற்றை)
வைப்பேன் பாட்டில் ஒருவாறு
மொழியென் கையில் பொம்மையென இருந்தது அது ஒரு பொற்காலம்
இன்று தமிழின் கையில் பொம்மையென நான் கிடப்பது நிசமிது கற்காலம்
என்றே என் அகம் (ஈகோ) துடித்தாலும்
இதுவே முறையென ஒரு குரலே
குறளை போலே ஒலிக்குதடி

இதுவும் அம்மை அவளருளே
*ஏழ்மை இருளை அகற்றிடவே
என் தமிழை தாயவள் பறித்திட்டாள்.
மொழியுடன் இருந்த என் உறவை
ஆயிரம் விழியால் (ள்) அகற்றிட்டாள்.
(விளக்கம்: ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு இரண்டாமிடம் தான் தன,வாக்கு ஸ்தானமாகும். இந்த பாவம் பலகீனப்பட்டிருந்தால் ஒன்று கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் அடிவாங்கும் அல்லது பத்து பைசாவுக்கெல்லாம் லாட்டரி அடிக்க வேண்டி வரும்)

படைப்பின் மருமம் அனைத்தையுமே
மகவென் கையில் கொடுத்திட்டாள்
மகனே இனியுன் சமர்த்தென்று மாதா அவளே எனை விட்டாள்
வார்த்தைகள்( ஊர்வல)மாய் வந்து வேண்டும் வாய்ப்பென கேட்டது அக்காலம்
வார்த்தை தேடி என் பேனா தயங்கி தளர்தல் இக்காலம்
கற்பகம் அவளின் அற்புதங்கள்
கனவிலும் மறவேன் பொற்பதங்கள்

யாவும் தமிழில் வைத்திடவே தனயன் என் மனம் துடிக்கையிலே
என் தமிழில் வந்தது தடுமாற்றம்
இதுவும் அன்னை அனுமதியால் விதி தேவதை செய்த மடை மாற்றம்

அவள் காட்டுவித்த அதிசயத்தை
நானறிந்த ரகசியத்தை
நற்றமிழில் சொல்ல வந்தேன்
நாயகி இன்னருளை வெல்ல வந்தேன்
தமிழன் என்பானுக்கே தாய்த்தமிழே தகராறு
என்னாச்சு வரலாறு
சுருங்கக்கூறிடத்தான் சுருக்கென்று தைத்திட்டேன்
சுவை கவிதை இங்கிதனை
சுவைத்தே சூரியராய் சுட்டிருப்பீர்
சுருண்டே தூங்குவோரை
உடைத்தே கூறுகிறேன்
நாமாரும் பிறரல்லோம் மகா வெடிப்பொன்றால்
ஒன்றிலிருந்தே வந்திட்டோம்
மீண்டும் இணைந்திடவே பருவுடல் தடையென்று
கொலை செய்தோம்
தற்கொலை செய்தோம்
பிணமுண்டோம், மிருக நிணம் உண்டோம்.
அகந்தை ஒன்றேதான் நாம் கூட தடையென்று உள்ளூற உணர்ந்திட்டு
ஒருவர் அகந்தையை மற்றொருவர் பழிக்கின்றோம்
உடன் அழிக்கின்றோம்.
மனிதர் நாமென நினைக்கின்றோம். நம் ஆடைக்குள் ஒரு மிருகம் தான் இருப்பதை தொடர்ந்து மறுக்கின்றோம். பசி கண்டால், பாழ் நிசி கண்டால் மிருகம் நம்மில் உயிர்க்குதடா
நாகரீக சுவரெல்லாம் நாலு நொடியில் தாக்கி பெயர்க்குதடா
கலவியில் நாளும் நடப்பதென்ன
மனக்கண்ணால் ஒரு தரம் பாருமய்யா..
வீரியம் அதுவே நழுவும்வரை ஆண்மகன் பெண்ணை கொல்லுகின்றான்.
வீரியம் அதுவே நழுவிவிட்டால் அவனை கொன்ற உணர்வாலே பெண்மகள் மகிழ்வே எய்துகிறாள்
கலவியில் இப்பணி சரிவரவே
நடவா நிலையில் ஈங்கிவரே பகலில் பிறரை கொல்லுகின்றார்.

ஜட்ஜுங்களுக்கு சினிமா நடிகைங்கள எல்லாம் சப்ளை பண்ணி

எஸ்.முருகேசன்: சார் வணக்கம் !
என்.டி.ஆர் : நமஸ்தே தம்முடு எலா உன்னாவ் ? எலாகோ நா ஆதர்ஸ் பதக்காலனு அமலு சேஸ்துன்னந்துக்கு ராஜசேகர் ரெட்டினி மள்ளி சி.எம்.சேசே பணிலோ பாகானே கஷ்ட படினட்டுந்தி ..தேங்க்யூ தேங்க்யூ
எஸ்.முருகேசன்: சார் சார் .. சின்ன ரிக்வெஸ்ட் இந்த உரையாடலை என் வலைபூவில் வைக்கிறதா சின்ன ப்ளான் ..நீங்க தமிழ்லயே பேசினா நல்லாயிருக்கும்.
என்.டி.ஆர் : அட அதுக்கென்ன பேசிட்டா போவுது. எனக்கென்ன தமிழ் தெரியாதா ? இல்லே மெட்ராஸ் என்ன புதுசா ? தெலுங்கு கங்கை மூலமா தண்ணி கூட கொடுத்திருக்கமே
எஸ்.முருகேசன்: முதல்ல நீங்க தெலுங்குல பேசினதை நானே தமிழ்ல டப்பிங் பண்ணிடறேன் சார்
என்.டி.ஆர் :டப்பிங்க் எல்லாம் எதுக்கு தம்பி நானே பேசிடறேன். "எப்படியோ என்னோட நல்ல திட்டங்களை தொடர்ந்து அமல் படுத்தின ராஜசேகர் ரெட்டிய மறுபடி சி.எம். ஆக்குறதுக்கு உன்னால முடிஞ்சதை செய்தாப்ல இருக்கு ..ரொம்ப நன்றிப்பா" ... எப்படி நம்ம டப்பிங் ?
எஸ்.முருகேசன்: தூள் தலைவா !
என்.டி.ஆர் :சரி தம்பி..நான் செத்து இத்தனை காலத்துக்கப்புறம் ஏன் இப்படி சந்தியில நிறுத்தற ..
எஸ்.முருகேசன்:இல்லே தலைவா ! இந்த தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் உங்களை ஒரு நடிகனா அதுவும் எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலுக்கு வந்த நகலாவே பார்க்கிறாங்களா .. அதான் உங்க வாயையே கிளறி உண்மைய வெளிய கொண்டாறலாம்னு சின்ன ஆசை
என்.டி.ஆர் :ஆமா உங்க சூப்பர்ஸ்டார் எப்படி இருக்கிறாரு. நான் ஒரு மடையன். இந்த ஆசாமிய நான் ப்ளான் பண்ணின தேசிய கட்சியான பாரத தேசத்துக்கு தமிழ் நாட்டு பொறுப்பாளராக்கலாம்னு இருந்தேன்
எஸ்.முருகேசன்:என்ன தலைவா உங்களுக்கு ஆப்பு வச்சவன் எவனாவது மானமா வாழ்ந்திருக்கானா என்ன நாயடிதான். சூப்பர் ஸ்டார் இப்போ சூப்பற ஸ்டாராயி ரொம்பகாலமாகுது. தனியா ஒரு பதிவே போட்டு கிழிச்சு தொங்க விட்டுட்டன். அதுல ஒரு முக்கியமான பாயிண்ட் மறந்துட்டன் தலைவா ! சந்திரபாபு 1994 ஆகஸ்ட்ல உங்களுக்கு ஆப்பு வச்ச சமயத்துல இந்த சூப்பர் ஸ்டார் சூரியவம்சம் சரத்குமார் மாதிரி சொம்பை தூக்கிக்கிட்டு பஞ்சாயத்து பண்ண வந்து என்னா சொன்னாரு.. லட்சுமிபார்வதி துஷ்ட சக்தியாம் .. நீங்க நல்லவராம். அதனால கட்சில தலைவர் நாற்காலிய காலியா வைக்கனுமாம் நீங்க லட்சுமிபார்வதிய விட்டுட்டு வந்தா அந்த நாற்காலில உக்கார்த்தி வச்சுக்கணுமாம்..எங்க தலைவா காலியா விட்டானுங்க உங்களையே காலி பண்ணிட்டானுங்களே ..இந்த சூப்பர் ஸ்டார் அப்ப விரலை சூப்பிக்கிட்டு இருந்தாராக்கும் ..அதனாலதான் அவருக்கு இந்த டைட்டிலயே கொடுத்தேன். டைகர் சினிமா ஞா. இருக்கா தலைவா.. இந்த ஆசாமிக்கு அந்த அளவுக்கு நீங்க ஹோப் கொடுத்து ஸ்கோப் கொடுத்திங்க என்னமா நன்றிய காட்டினாரு பார்த்திங்களா ?
என்.டி.ஆர் :அடடே அதயெல்லாம் விடுப்பா.. நான் நீங்கற வித்யாசம் , பகை விரோதமெல்லாம் உடம்போட இருக்கறச்ச தான்.. இப்ப நான் ஆன்ம வடிவத்துல இருக்கேன். நீ சொல்றதெல்லாம் யாருக்கோ நடந்த மாதிரிதான் இருக்கு
எஸ்.முருகேசன்: நான் உடம்போட இருக்கேனே ! ஆமாம் தலைவா உங்களை பர்சனலா ஒன்னு கேக்கணும் நீங்க நடிகரா இருந்தப்பவும் சரி அரசியலுக்கு வந்தப்புறமாவும் சரி எந்த சாமியாருக்கும் கும்பிடு கூட போடாம எப்படி தலைவா சமாளிச்சிங்க ..முக்கியமா இந்த புட்டபர்த்திய எப்படி அவாய்ட் பண்ணிங்க
என்.டி.ஆர் : உன் பாக்கெட்ல ஆயிரம் ரூபா நோட்டிருக்குனு வை ..ரோட்ல விழுந்து கிடக்கிற சில்லறைய பொறுக்குவியா
எஸ்.முருகேசன்: நான் சென்ஸ்.. நான் ஏன் பொறுக்க போறேன்
என்.டி.ஆர் :அதை மாதிரிதான் நானும். என் மனசுல கடவுள்ங்கற ஆயிரம் ரூபா நோட்டிருக்கிறப்ப சில்லறைங்க கிட்டே ஏன் ஒதுங்க போறேன்
எஸ்.முருகேசன்:உங்க மாப்பிள்ளை சந்திரபாபு மட்டும் பாபாவை விழுந்து விழுந்து கும்பிடறாரே..
என்.டி.ஆர் :அப்பனுக்கு பிள்ளை தப்பாமனு சொல்லுவாங்க அதுவே அப்பப்ப வொர்க் அவுட் ஆகமாட்டேங்குது . இவரு மா...பிள்ளை தானே ..அதெல்லாம் வியாபாரம் தம்பி ! சந்திரபாபுவை ரொம்ப கம்மியா எஸ்டிமேட் பண்ணாதே அவர் பயங்கர அறிவாளி.
எஸ்.முருகேசன்:இதையெல்லாம் மறக்க முடியுமா தலைவா ..ஜட்ஜுங்களுக்கு சினிமா நடிகைங்கள எல்லாம் சப்ளை பண்ணி உங்க கட்சி பேரை,சின்னத்தை ,கொடிய எல்லாமே ஹைஜாக் பண்ணிட்டதா லட்சுமி பார்வதியம்மா தான் ஒரு டி.வி.பேட்டில சொன்னாங்களே..நானும் பார்த்தேனே
என்.டி.ஆர் :சூ...சூ அதையெல்லாம் ஏன் இங்கே பேசிக்கிட்டு நீதிமன்ற அவமதிப்பாயிரபோகுது
எஸ்.முருகேசன்:அட அப்படி ஒன்னு இருக்கா என்ன ! நீங்க "சமுதாயமே என் கோவில் ..ஏழை மக்களே என் தெய்வங்கள்"னு சொல்லிட்டிருந்திங்க ..உங்க வாக்கு தான் வேதவாக்காச்சே ! அந்த இன்ஸ்பிரேஷனோட ஆப்பரேஷன் இந்தியா 2000 ம்னு ஒரு திட்டம் தயாரிச்சேன் அதை இந்த நாதாரிக்குதான் முதல்ல அனுப்பினேன். அங்கே பிடிச்சது சனி அங்கே இங்கேனு அங்காடி நாயா அலைஞ்சேன். ஜீசஸ் பாட்டுக்கு சொல்லி வுட்டுட்டாரு. தட்டுங்கள் திறக்கப்படும்னிட்டு . ஊர்ல இருக்கிற கதவை எல்லாம் தட்டி அலுத்துட்டு ஹை கோர்ட்டு சுப்ரீம் கோர்ட்டு கதவுகளையெல்லாம் பதிவு தபால் மூலமாவே தட்டிட்டன். எந்த கதவும் திறக்கலை. So இந்த பதிவை நீதிமன்ற அவமதிப்புனு நோட்டீஸ் விட்டா பராசக்தில சிவாஜி மாதிரி வள்ளாண்டுட மாட்டேன்
என்.டி.ஆர் :அதென்னப்பா ஆப்பரேஷன் இந்தியா 2000 ?
எஸ்.முருகேசன்:கீழ் காணும் சுட்டிய க்ளிக் பண்ணி பாருங்க தலைவா !
என்.டி.ஆர் :அடடே நல்ல விஷயமாத்தான் இருக்கே ! இதை ஏன் யாரும் கண்டுக்கலை
எஸ்.முருகேசன்:இப்போ ஆந்திராவுல ஜலயக்னம்ங்கற பேர்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடில அணைகள் கட்ட ஆரம்பிச்சிருக்காரு. விவசாயிகள் ஒத்துக்கிட்டு முன் வந்தா கூட்டுறவு பண்ணை விவசாயத்தையும் கொண்டு வரப்போறாராம்
என்.டி.ஆர் :அது சரி. இத்தனை அணைகளை எப்போ கட்டி முடிக்கிறது . நேரு கட்டி முடிச்ச அணைகளால அதை கட்ட வந்த கூலிகள் அவங்க ஊர்களுக்கு ரிட்டர்ன் போகாததாலேயே பெரிய பெரிய சேரிங்க உருவாகிப்போச்சு.
எஸ்.முருகேசன்:அதுக்குதான் தலைவா ! தலைவர் எவ்வழி தம்பி அவ்வழினு நம்ம திட்டத்துல நதிகளை கால்வாய்கள் மூலமா இணைக்கனும் . அதுவும் நாட்டின் 10 கோடி வேலையில்லா வாலிபர்களை கொண்டு அமைத்த சிறப்பு ராணுவத்தை இதுக்கு உபயோகிச்சுக்கனும்னு சொல்லியிருக்கேன்
என்.டி.ஆர் :அதென்னவோ சொல்லி பேச்சை ஆரம்பிச்சே எங்கயோ போயிருச்சு பேச்சு
எஸ்.முருகேசன்:கில்லாடி தலைவா நீங்க ! பட்டுனு பாயிண்டை பிடிக்கறிங்க . அதாவது எம்.ஜி.ஆர் நடிகர்,அவர் அரசியல்ல குதிச்சு ஜெயிச்சாரு..அதை பார்த்து நீங்க குதிச்சிங்க மக்கள் மனசுல இருந்த சினிமா மோகத்தால சி.எம் ஆயிட்டிங்கனு தேஞ்சு போன ரிக்கார்டு மாதிரி ஒரே பல்லவி.

(To be continued

கையாலாகாத,பச்சோந்தி பயல்கள் யாரென்றால் அது இந்த எழுத்தாள பயல்கள்தான்.

இந்த தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் ஆ.வியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
புத்தகங்கள் மீது வெறுப்பை காட்டுபவர்களை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கட்டுரையில் ரா.கி.குறிப்பிட்டுள்ள தினசரியை கீழே போட்டு சாப்பிடும் ஆசாமி, மனைவி புத்தகம் வாங்கினால் கிழித்துபோடும் அதிகாரி. இவர்கள் ஒரு ரகம் என்றால் என் போன்று ஒரு காலத்தில் புத்தக புழுவாக இருந்து அவற்றை எழுதினவன்களுக்கும் ,அந்த எழுத்துக்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதையும், அந்த எழுத்துக்களுக்கும் யதார்த்த உலகிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதையும் உணர்ந்து கொண்ட என் போன்றவர்கள் மற்றொரு ரகம்.

இக்கட்டுரையை எழுதுவதில் ரா.கியின் நோக்கம் என்னவாயினும், இதற்கான பின்னணியில் ஆ.வியின் மார்க்கெட்டிங் தேவைகள் இருந்தாலும் இக்கட்டுரையில் ரா.கி குறிப்பிட்டிருக்கும் ஒரு சினிமா கதை ரொம்பவே நீட். ஆனால் அந்த அளவுக்கு உடன் கட்டனை ஏறுமத்தனை வெறியூட்டும் நூல்கள் தமிழில் உள்ளனவா என்பது கேள்வி.

எனக்கு படிக்கும் போது சாப்பிடும் பழக்கம் ஏன் வந்தது என்பதற்கான உளவியல் காரணங்கள் எனக்கு தெரியாது. ஆனாலும் ஒரு நல்ல புத்தகம் கிடைக்கும் போது நல்ல உணவின் மீதும், நல்ல உணவு கிடைக்கும்போது நல்ல நூலின் மீதும் என் எண்ணம் செல்வதை தடுக்க முடிவதில்லை.

நான் படித்துக்கொண்டே சாப்பிடுகையில் யாரேனும் வந்து உனக்கு சாப்பாடு -புத்தகம் இரண்டில் ஒன்று தான் அனுமதிக்கப்படும் என்று கட்டளையிட்டால் கேள்வியே கேட்காது புத்தகத்தை துறந்துவிடுவேன்.

புத்தகம் என்பது 99.9 சதவித எழுத்தாளர்களின் விஷயத்தில் பார்க்கும்போது வெறுமனே கையாலாகாத புலம்பல்தான். எங்கோ ஓன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம். உலகத்திலேயே கையாலாகாத,பச்சோந்தி பயல்கள் யாரென்றால் அது இந்த எழுத்தாள பயல்கள்தான். அரைகுறை அணங்குகளை கற்பனை செய்து சுய இன்பம் அனுபவிக்கும் விடலைத்தனத்தை விட்டு வெளிவராத சில்லறை பயல்கள் இவர்கள்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று பாட்டெழுதிய பாரதி யானை தூக்கிப்போட்ட அதிர்ச்சியை தாங்க முடியாது செத்துப்போனார். "பதவி எங்களுக்கு துண்டு மாதிரி. மானம் வேட்டி மாதிரி " என்ற அண்ணா வழி வந்ததாக எழுதி குவித்த கலைஞர் மத்திய மந்திரி பதவிகளுக்காகவும் ,மானிலத்தில் தமது அரசு தொடரவும் வேட்டியை துறந்து அம்மணமாகவே திரிகின்றார்.

அக்னி பிரவேசம் மாதிரி சிறுகதை எல்லாம் எழுதி இளைஞர்கள் மனதில் அக்னி வளர்த்து " ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர " என்று பஜனை கோஷ்டியில் சேர்ந்து கொண்டார். இந்தியாவின் அமைதிகாக்கும் படையை ஆதரித்து பிரசங்கம் செய்தார்.

இந்த எழுத்தாளர்கள், கவிஞர்களால் கெட்டு குட்டிச்சுவரான குடும்பங்கள்தான் எத்தனை எத்தனை ? பார்ட் டைமாக எழுதி ஃபுல் டைமாக இளைய சமுதாயத்தை குழப்பும் இந்த குசு பூசை (உபயம்: பாலகுமாரன்) கும்பல் தான் தொடை நடுங்கிகளாக இருந்துகொண்டு "மீசை முறுக்கு " "தொடை தட்டு" என்று கிளப்பி விட்டு விடுவான்கள். அப்பாவி இளைஞர்கள் லத்தியடி வாங்க வேண்டும். தீக்குளிக்க வேண்டும். என் கவுண்டரில் சாகவேண்டும்.

எங்கள் வீட்டில் ரமணர்,பெரியார்,கண்ணதாசன்,பாரதியார் உள்ளிட்ட புத்தகங்கள் வர்ஜியா வர்ஜியமின்றி இருந்ததால் நானும் வர்ஜியா வர்ஜியமின்றி படித்து தொலைத்துவிட்டேன். இவற்றின் பாதிப்பால் மட்டுமே என் வாழ்வை தொலைத்துவிட்டேன்.

இப்படி கிளப்பி விடுபவன்களையாவது ஒருவகையில் மன்னிக்கலாம். ஏன் என்றால் இவன்கள் கையாலாகாத பயல்களாய் இருந்தாலும் இவன்களின் எழுத்துக்களை படிக்கும் ஒருவன் (ஹி.. ஹி.. என்னை மாதிரி ) செயல் வீரனாக, மக்கள் தலைவனாக உருவெடுத்தால் இந்த எழுத்துக்கள் நாட்டின் புதிய கட்டமைப்புக்கான ப்ளூ ப்ரிண்டுகளாக கொண்டாடப்படும்.

ராஜேஷ்குமார் என்று ஒரு நபர். இவரை எழுத்தர் என்றே குறிப்பிடலாம். எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன் இவரெல்லாம் எங்கே ஆண்டார். இவர் உலகம் தனி உலகம். ஒற்றை பரிமாண பாத்திரங்கள், ஒரே களம் ஸ்டீரியோ டைப் சம்பவங்கள் . இவர் நாவல் ரத்னாவாம். இவர் கதைகளை சாமானியர்கள் ஆதரிக்கிறார்களாம். எந்த சாமன்யனின் வாழ்விலாவது இந்த ராஜேஷ்குமார் நாவலில் வரும் சம்பவங்கள் நடந்திருக்கிறதா தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு:ஈநாடு தெலுங்கு தினசரி , மொழி பெயர்ப்பு சிறுகதைகளை வெளியிடவே விபுலா என்று ஒரு மாத இதழை நடத்துகிறது . அதற்கு அன்னாரின் சிறுகதை ஒன்றையும் அனுப்ப எண்ணி (இப்போ இல்லிங்க அவர் ஃப்ரஷ்ஷா இருக்கும்போதே ) அவருக்கு கடிதம் எழுதி அனுமதி வாங்கி ஒரு கதையை மொழி பெயர்த்து அனுப்பினேன் . முடிவு என்னாச்சு தெரியுமா ? தாங்கள் அனுப்பிய படைப்பை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்.

எழுத்தாளர்கள் தான் இப்படி என்றால் பதிப்பாளர்கள் நிலை கோரம்டா சாமி. (இவர்களை மற்றொரு பதிவில் பார்ப்போம்.)