Saturday, August 8, 2009

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள்

முன்னுரை:
பெண்களைப்பற்றிய எனது பதிவுக்கு மறுமொழி எழுதிய Mr.கோகுல் அவர்களுக்கு பதில் எழுதத்தான் ஆரம்பித்தேன் ,அது ஒரு பதிவாகவே ஆகிவிட்டது . மழை யாருக்காக பொழிகிறேன் என்று சொல்லியா பொழிகிறது. அகங்கார குடையை மூடி வைத்து நனையுங்கள் இந்த மழையில்

//அடங்கி போவதுக்கு இப்படி ஒரு பில்டப்பா //
தம்பி !
உங்க மறுமொழி உங்களுக்கு வயது 18க்குள் என்று காட்டுகிறது. அதனால் தான் இந்த அழைப்பு. அடங்கி போவது,அடக்குவது இதெல்லாம் தேவையில்லாத உறவு கணவன் மனைவி உறவு. இதில் அடங்கி போகிறவர்கள் தான் உண்மையில் அடக்கி ஆள்கிறார்கள். அடக்க நினைப்பவர்கள் ஆடிப்போகிறார்கள்.

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள். ஒன்று அவளது உடல் ரீதியான பலவீனம் தந்த குறுக்கு புத்தி, வியூகங்கள், பாதுகாப்பற்ற தன்மை இதெல்லாம் சேர்ந்து தயாரித்த தற்போதைய பெண்.

மற்றொரு பெண் ஒவ்வொரு பெண்ணிலும் அவளது மன ஆழத்தில் இருக்கிறாள். அவள் சில மில்லி கிராம் அன்புக்கு ஏங்கியபடி, அது கிடைத்தால் ஆதிசக்தியாகி அந்த அன்பை செலுத்தியவனுடைய குடும்பம்,வம்சம்,ஏன் அவன் ஊர்,உலகத்தையே காத்து ரட்சிக்கக்கூடிய இயற்கையின் பிரதி நிதியான பெண்ணும் இருக்கிறாள்.
//அய்யா உடலுறுவு என்பது சாப்பிடுவது போல ஒரு செய்கை அவ்வளவுதான் , அது சில சமயம் உணர்வு பூர்வமாக அமைவதும் உண்டு, தயவு செய்து புனித சாயம் பூசாதிர்கள்//

உடலுறவு என்பது வெறுமனே விந்தை வெளியேற்றும் செயலாக இருந்தால் அவனவன் தன் கையே தனக்குதவி என்று இருந்துவிட்டிருப்பான். இங்கே ஒவ்வொரு மனிதனும் /ஆண்,பெண் அனைவரும் அரைகுறைதான் மறுபாலுடன் இரண்டற கலக்காதவரை.

ஒவ்வொரு ஆணிலும் ஆண் தன்மை 60 சதம், பெண் தன்மை 40 சதம் இருக்கும்.
ஒவ்வொரு பெண்ணிலும் பெண் தன்மை 60 சதம் ஆண் தன்மை 40 சதம் இருக்கும்.

ஒரு ஆணும் பெண்ணும் இரண்டற கலக்கும் போது அங்கு முழுமையான ஒரு ஆண் ,ஒரு பெண் ஏற்படுகிறார்கள்.

அனைத்து மாந்தரும் தோன்றியது முதலில் தோன்றிய அமீபாவிலிருந்துதான். அன்று ஓருயிராய் இருந்த போது தாம் அனுபவித்த பாதுகாப்பு,இலக்கற்ற தன்மை தான் மனித மனங்களின் ஆழத்தில் பதிந்திருக்கிறது. மீண்டும் ஓருயிர் ஓருடலாக மாற ஒவ்வொரு உயிரும் துடிக்கிறது. அதற்கு தடை தம் உடல் என்று பாவிக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு உயிரும் தன்னைத்தானே கொன்று கொள்வதும்,பிற உயிர்களை கொல்வதுமாய் இருக்கிறது. மனித உயிர்கள் பல்வேறு முகமூடிகளுடன் செய்வது இரண்டு செயல்களைத்தான் .ஒன்று தற்கொலை அ கொலை.

ஈருயிர் ஓருயிரில் தங்கும் நிகழ்வு ஒரு பெண்ணில்தான் நடக்கிறது. அதனால் தான் கர்பிணியான பெண்ணின் முகத்தில் ஒரு க்ளோபல் மதர் தெரிகிறாள். எப்படிப்பட்ட காமுகனாக இருந்தாலும் ஒரு கர்பிணி எதிர்படும்போது அவன் மனதில் அந்த உணர்வு எழுவதில்லை.

ஆக படைப்பின் ஆரம்பத்தில் ஓருயிராய் இருந்த அனுபவத்தை தருவது உடலுறவு. மேலும் மனிதனி கொல்லும்,கொல்லப்படும் இச்சைகளையும் தீர்த்து வீர்ய ஸ்கலிதத்தின் போது ஒரு ப்ளாக் அவுட்டை தந்து சமாதி நிலைக்கான ஒரு முன்னோட்டத்தையும் தருவது உடலுறவு.

எனவே "ஆதலினால் காதல் செய்வீர்..

//சில சமயம் அது உணர்வு பூர்வமாக அமைவதுண்டு //என்று கூறியமைக்கு நன்றி. இந்த வரிக்காகத்தான் ஒரு பதிவு சைஸில் மறுமொழி போட இருந்து பதிவாகவே போடுகிறேன்.