Saturday, August 1, 2009

ஆண்,பெண் சரீர சம்பந்தமின்றி

சினிமா சினிமா
வாழ்க்கை ஒரு சினிமா சினிமா என்பது பாபா பட(பப்பட) பாட்டு. நான் பார்த்ததில் முதலில் என்னை பாதித்த சினிமா அடுக்கு மல்லி.அதில் அண்ணன் ,தம்பிகளின் ஒற்றுமையை இயக்குனர் கோபால கிருஷ்ணன் மாய்ந்து மாய்ந்து சித்தரித்திருந்தார். அண்ணன் உயிருடன் இருக்கையில் அண்ணிக்கு தெரியாது சிகரட்டு கை மாறும் காட்சி. பின் அண்ணன் இறந்து போகிறார். குடும்பத்தில் பயங்கர பணக்கஷ்டம். அண்ணி மைத்துனரின் சட்டையை தோய்க்க எடுக்கிறாள் அதில் பீடிக்கட்டு. சிறு புன்னகையுடன் அதை எடுத்து வைத்துவிட்டு சட்டையை எடுத்துச்செல்லுகிறார்கள்.
. "விஷுவலைசேஷன்" "காட்சிப்படுத்துதல் " இத்யாதி வார்த்தைகளை விரயம் செய்யும் உத்தேசமில்லை. அன்புமணி சொல்வதை கேட்டு இயக்குனர்கள் சிகரட் பற்றிய கற்பனைகளுக்கே தடா விதித்துக் கொண்டுவிட்டால் "க்ரியேட்டிவிட்டி" நைந்துவிடாதோ?

சரி ஒழியட்டும் அரசாங்கம் இன்னும் எத்தனைதான் கவைக்குதவாத விஷயங்களில் மூக்கை நுழைக்குமோ புரியவில்லை. என்னை பொறுத்தவரை தவிர்க்க முடியாதவற்றை,தடுக்க முடியாதவற்றை அனுமதித்து விடுவதே மேல்.உதாரணம் விபச்சாரம்

எங்கே ஆரம்பித்தேன் அடுக்கு மல்லி.இடையில் இந்த கனகாம்பரத்தனமான இடைச்செருகல்கள். சரி கதம்பமாகவே கிடக்கட்டுமே என்ன போச்சு !குடும்பம் மட்டுமா மனித வாழ்வே கதம்பம் தானே

சரி ..அடுக்கு மல்லிக்கு வருவோம். அடுக்கு மல்லி என்னை ஏன் பாதித்தது? அதிலான குடும்ப அமைப்பா? அல்லது அழகியலா? அல்லது ஃபிக்ஷன் தனமான கற்பனையா?இல்லை
இதிலேதுமில்லை. அந்த அண்ணி கேரக்டர் தான் என்னை அந்த சினிமாவின் பால் இழுத்திருக்க வேண்டும். ஏறக்குறைய சம வயதுள்ள ஆண்,பெண் சரீர சம்பந்தமின்றி அன்பு காட்ட முடியும்,அன்னியோன்னியமாக வாழ முடியும் (சரீர சம்பந்தமென்ற க்ளமேக்ஸுக்கு பின்னான வீழ்ச்சி இருக்காதே தவிர ஒரு மெல்லிய கவர்ச்சி ..அதில் சரீர இச்சையும் ஒளிந்திருக்கலாம்) என்ற கருத்து,காட்சிப்படுத்துதல் தான் என்னை கவர்ந்திருக்க வேண்டும்.

1967ல் பிறந்த நான் 19 வயதிலேயே சரீர சம்பந்தங்க்களின் வலுவற்ற தன்மையை,அடித்தளமற்ற தன்மையை,மாறும் தன்மையை நிறையவே அனுபவித்துவிட்டிருந்த காரணத்தால் பால்யத்தில் அடுக்கு மல்லி போலவே 19 வயதில் மற்றொரு படம் என்னை பெரிதும் கவர்ந்தது. ஒரு வகையில் பெரியதிருப்பத்தையும் தந்தது என்று உறுதியாக கூறலாம்.

இத்தனை நாளாய் எழுதும் தவிப்பு என்பது நப்பாசையாகவே நின்று விட்ட நிலயில் இந்த நேரம் இப்படி விஸ்தாரமாய் சினிமா பற்றி எழுதும் சக்தியை ,மூடத்தனத்தை கொடுத்தது மீண்டும் ஒரே ஒரு சினிமாதான் என்று சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. (கமலின் பம்மல்.கே. சம்பந்தம்)

திருமணத்துக்கு முன் எனக்கு கிடைத்த உடலுறவு சந்தர்ப்பங்கள் மிக அதிகம். அவற்றை உபயோகிக்காது விட்டதில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி என்னால் கூற முடியும். அதனால் தானோ என்னமோ ஆண் பெண் உறவுகளை செக்ஸை தாண்டி என்னால் அவதானிக்க முடிந்திருக்கிறது.

எங்கே விட்டோம்? அடுக்கு மல்லி. அம்மாத்தனமான பெண்ணின் பிம்பம் பிரதி ஆண் மகனிலும் உண்டு என்பது சிக்மன் ஃப்ராயிடு தத்துவம்.(பெண்களில் இது தந்தை தனமான ஆண் வடிவமாக இருக்கும்) . ஆண் தன் தாயை தேடுவதும் , பெண் தன் தந்தையை தேடுவதும் ஏன் என்று ஃப்ராயிடு சொல்ல மறந்துவிட்டார். நான் கண்டு கொண்டேன். வேறெதுக்கு பழி வாங்கத்தான். தன் சிறகுகளை வெட்டி எறிந்து, சுயேச்சையான உருவாக்கத்தை தடை செய்து தம்மை கேவலம் அவர்களின் நகல்களாக சிதைத்து விட்ட தம் பெற்றோரை எந்த மகன்/ மகள் மன்னிக்க முடியும்.

ஒவ்வொரு ரசிகனும் கதாநாயகனின் இடத்தில் தன்னை கற்பனை செய்து கொண்டு கண்டு களிக்கிறான். (தன் நிறைவேறாத எண்ணங்களால் தன்னில் ஏற்பட்டுவிட்ட முடிச்சுகளை அவிழ்க்கிறான் என்றும் கூறலாம்.)