Monday, August 3, 2009

பாறையில் விதைத்து அறுத்தவள் நீ

கணபதி கால் தொழுது கோள் நிலை
எதுவாயினும் என் கவிதை விதையாகி
ஆன்மீக பயிர் செழிக்க மாதமெலாம் தையாகி
எந்நாளும் வழி பிறக்க வேண்டி துவக்குகிறேன்
என் தாய் தாள் பணியும் பண்ணிதனை
அவள் அருள் என்றும் உண்டு
எவர்க்கும் உண்டு
அதை உணர்ந்திடத்தான் வேண்டும் பக்தி
அருள் இல்லை என்பதுவும்
இருள் மருட்டப்பார்க்குதென்றும்
இயம்புவது மடமையே
அவள் தந்ததல்லாது வேறென்ன உண்டு புவியில்
அவள் தாராதது என்னவரும் மானுடர் தம் வாழ்வில்
* * *

நாயேன் நிலை கண்டும்
நாயகி நீ மனம் இரங்காயோ
அனலில் புழுவென,கரை மேல் மீன் என
உவமைகள் ஆயிரம் கூறிடலாம்
ஆனால் என் நிலை நீ உணர
அவையேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே
நீயல்லால் வேறு புகலேது புவிமிசை இங்கினியே
பாவியர் காற்றும் என் மேல் வீசா
நிலை தனை நீயே தாராயோ
ஆவி சோர அம்மா ! நின் நாமம் தனையே ஜெபித்தேனே
உண்ணா பகலில்,உறங்கா இரவில்
உறவாய் எண்ணி நெகிழ்ந்தேனே
புவனேசி உனையே பலவாறாய் போற்றி போற்றி புகழ்ந்தேனே
நீ உதவா நாளது உண்டெனினும்
உனை நான் உள்ளா நாளது ஏதென்று நாயகி நீயே நவிலாயோ?
என் நலம் நினைந்தே மறைந்தாலும்
கனவே போல் நீ கரைந்தாலும்

(கண்)ணீரால் என் விழி நனைந்தாலும்
அதனிடை உன்னுரு
காட்டிடவே கண்ணீரை தந்தாய் என்றெண்ணி
உனையே புகழ்ந்தேன் மனம் நெகிழ்ந்தேன்
பசியால் கண்கள் இருண்டாலும்
நிசியிலும் தேவி உனை நினைந்தே என்னுள் காண எனை அகழ்ந்தேன்
புதுமை பலவே காட்டுகின்ற பதுமை நீயே
நானறிவேன்
பாறையில் விதைத்து அறுத்தவள் நீ
வஞ்சம் நிறைந்த என் நெஞ்சை பஞ்சாய் மாற்றி
பறக்க வைத்தே
உன் கொலுசொலி கேட்கும்வரம் தந்தாய்

என் வறுமையை எரிக்க கோரி நின்றேன்
வறுமையை விட்டு
எனை எரித்தாய் எனினும்
சீவன் எனை நீ
சிவனாக்க பார்க்கின்றாய் என இறுமாந்தேன்
அம்மா உனை நான் நாடியபின்
பேடியை போலே கிடந்தாலும்
சிவசக்தியாக்கி மகிழ்ந்தாய் என்று
நெஞ்சம் நெகிழ்ந்தேன் உனை புகழ்ந்தேன்

தாயே! நாயேன் நிலை கண்டும்
நாயகி நீ மனம் இரங்காயோ
அனலில் புழுவென,கரை மேல் மீன் என
உவமைகள் ஆயிரம் கூறிடலாம்
ஆனால் என் நிலை நீ உணர
அவையேதும் உதவா அறியாயோ?
பட்டேன் பட்டேன் துளிர்க்கவில்லை
எனினும் உன் விழி பனிக்கவில்லை
யாதே செய்வேன் யாகினியே
நீயல்லால் வேறு புகலேது இங்கினியே
பாவியர் காற்றும் என் மேல் வீசாத
நிலை தன்னை நீயே தாராயோ
ஆவி சோர அம்மா ! நின் நாமம் தனையே ஜெபித்தேனே
உண்ணா பகலிலில்,உறங்கா இரவில்
உறவாய் எண்ணி நினைத்தேனே
நீ உதவா நாளது உண்டெனினும்
உனை நான் உள்ளா நாளது ஏதென்று நாயகி நீயே நவிலாயோ?
என் நலம் நினைந்தே மறைந்தாலும்
கனவே போல் நீ கரைந்தாலும்

கண்ணீரால் என் விழி நனைந்தாலும்
அதனிடை உன்னுரு
காட்டிடவே கண்ணீரை தந்தாய் என்றெண்ணி
உனையே புகழ்ந்தேன் மனம் நெகிழ்ந்தேன்
பசியால் கண்கள் இருண்டாலும்
இதையே நினைத்து மகிழ்ந்திட்டேன்
புதுமை பலவே காட்டுகின்ற பதுமை நீயே
நானறிவேன்
பாறையில் விதைத்து அறுத்தவள் நீ
வஞ்சம் நிறைந்த என் நெஞ்சை பஞ்சாய் மாற்றி
பறக்க வைத்தே
உன் கொலுசொலி கேட்கும்வரம் தந்தாய்


தாயே நீயென் வாழ்வினிலே
நிகழ்த்திய அற்புதம் பல நூறு (அவற்றை)
வைப்பேன் பாட்டில் ஒருவாறு
மொழியென் கையில் பொம்மையென இருந்தது அது ஒரு பொற்காலம்
இன்று தமிழின் கையில் பொம்மையென நான் கிடப்பது நிசமிது கற்காலம்
என்றே என் அகம் (ஈகோ) துடித்தாலும்
இதுவே முறையென ஒரு குரலே
குறளை போலே ஒலிக்குதடி

இதுவும் அம்மை அவளருளே
*ஏழ்மை இருளை அகற்றிடவே
என் தமிழை தாயவள் பறித்திட்டாள்.
மொழியுடன் இருந்த என் உறவை
ஆயிரம் விழியால் (ள்) அகற்றிட்டாள்.
(விளக்கம்: ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு இரண்டாமிடம் தான் தன,வாக்கு ஸ்தானமாகும். இந்த பாவம் பலகீனப்பட்டிருந்தால் ஒன்று கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் அடிவாங்கும் அல்லது பத்து பைசாவுக்கெல்லாம் லாட்டரி அடிக்க வேண்டி வரும்)

படைப்பின் மருமம் அனைத்தையுமே
மகவென் கையில் கொடுத்திட்டாள்
மகனே இனியுன் சமர்த்தென்று மாதா அவளே எனை விட்டாள்
வார்த்தைகள்( ஊர்வல)மாய் வந்து வேண்டும் வாய்ப்பென கேட்டது அக்காலம்
வார்த்தை தேடி என் பேனா தயங்கி தளர்தல் இக்காலம்
கற்பகம் அவளின் அற்புதங்கள்
கனவிலும் மறவேன் பொற்பதங்கள்

யாவும் தமிழில் வைத்திடவே தனயன் என் மனம் துடிக்கையிலே
என் தமிழில் வந்தது தடுமாற்றம்
இதுவும் அன்னை அனுமதியால் விதி தேவதை செய்த மடை மாற்றம்

அவள் காட்டுவித்த அதிசயத்தை
நானறிந்த ரகசியத்தை
நற்றமிழில் சொல்ல வந்தேன்
நாயகி இன்னருளை வெல்ல வந்தேன்
தமிழன் என்பானுக்கே தாய்த்தமிழே தகராறு
என்னாச்சு வரலாறு
சுருங்கக்கூறிடத்தான் சுருக்கென்று தைத்திட்டேன்
சுவை கவிதை இங்கிதனை
சுவைத்தே சூரியராய் சுட்டிருப்பீர்
சுருண்டே தூங்குவோரை
உடைத்தே கூறுகிறேன்
நாமாரும் பிறரல்லோம் மகா வெடிப்பொன்றால்
ஒன்றிலிருந்தே வந்திட்டோம்
மீண்டும் இணைந்திடவே பருவுடல் தடையென்று
கொலை செய்தோம்
தற்கொலை செய்தோம்
பிணமுண்டோம், மிருக நிணம் உண்டோம்.
அகந்தை ஒன்றேதான் நாம் கூட தடையென்று உள்ளூற உணர்ந்திட்டு
ஒருவர் அகந்தையை மற்றொருவர் பழிக்கின்றோம்
உடன் அழிக்கின்றோம்.
மனிதர் நாமென நினைக்கின்றோம். நம் ஆடைக்குள் ஒரு மிருகம் தான் இருப்பதை தொடர்ந்து மறுக்கின்றோம். பசி கண்டால், பாழ் நிசி கண்டால் மிருகம் நம்மில் உயிர்க்குதடா
நாகரீக சுவரெல்லாம் நாலு நொடியில் தாக்கி பெயர்க்குதடா
கலவியில் நாளும் நடப்பதென்ன
மனக்கண்ணால் ஒரு தரம் பாருமய்யா..
வீரியம் அதுவே நழுவும்வரை ஆண்மகன் பெண்ணை கொல்லுகின்றான்.
வீரியம் அதுவே நழுவிவிட்டால் அவனை கொன்ற உணர்வாலே பெண்மகள் மகிழ்வே எய்துகிறாள்
கலவியில் இப்பணி சரிவரவே
நடவா நிலையில் ஈங்கிவரே பகலில் பிறரை கொல்லுகின்றார்.