Saturday, August 8, 2009

"அடச்சீ .. ஆசைக்கு ஒரு அளவு வேணா"

நள்ளிரவு ! தெருக்கதவை கதவை ஏதோ பிராணி பிறாண்டினாற்போல் இருந்தது. நாமதான் ராத்திரி பிசாசேச்சே மறு நாள் போட வேண்டிய பதிவை டொக் டொக்கி கொண்டிருந்த நான் என்னதான்னு பார்த்துரலாம்னு கதவை திறந்தேன். திறந்ததுதான் தாமதம்.

கோடி சூரிய பிரகாசத்தோடு தோன்றினார்னுவாங்களே அதேமாதிரி பிரகாசத்தோட சாட்சாத் கலைவாணி அன்னப்பறவையில் ஆரோகணித்திருந்தாள். செல்ஃபோன் சிக்னல்கள் அன்னப்பறவையின் பொறுமையை சோதித்திருக்க அதுதான் தன் அலகால் கதவை சுரண்டியது போலு.

"வாங்கம்மா வாங்க வாங்க ! ஏன் வெளியவே நிக்கிறிங்க உள்ள வாங்க என்று வரவேற்றேன். மனைவி,மகள் வெளியூர் போயிருந்ததால் ஏகனாக இருந்த எனக்கு நள்ளிரவில் நாமகள் காட்சி தந்ததும் அன்னத்தை விட்டு இறங்கி என் வீட்டுக்குள் நுழைந்ததும் சிங்கை பதிவர்கள் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்த அத்தனை ஆனந்தத்தை கொடுத்தது.

"வாங்கம்மா உட்காருங்க ..பஞ்ச சம்ஸ்காரம் இத்யாதியெல்லாம் நமக்கு தெரியாது. இந்த எளியவனை தேடி வந்ததுக்கு ரொம்ப நன்றி !" அது இது என்று உளறிக்கொட்டினேன்.

வந்தவளோ "த பாரு ..உன் புகழ் மொழியெல்லாம் கேட்டு வட்டச்செயலாளர் பதவி கொடுக்க நான் ஒன்னும் ஜெயலலிதா கிடையாது . நேரிடையா விசயத்துக்கு வரேன். நீ ஜோசியன் தானே"
"ஆமாம் தாயே ! ஏதோ விட்ட குறை தொட்ட குறையா ஒரு குன்ஸ் கிடைச்சது..அதை வச்சு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன்"
" உன் அதிவினயம்லாம் இருக்கட்டும் . கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லனும் ஓகே"
"சரி தாயே"
"ராப்பிச்சை மாதிரி அம்மா தாயேல்லாம் வேண்டாம்"
"சரிங்க"
"கலியுகம் துவங்கி எத்தனை வருசம் ஆச்சு.. அது வந்து 5110 ன்னு நினைக்கிறேன்மா..எதுக்கும் பஞ்சாங்கம் எடுத்து பார்த்துரட்டுமா ?"
"கிழிச்சே ..தபாரு ஒவ்வொரு யுகத்துலயும் 5,1111ஆவது வருஷம் உலகத்துல ஏழில ஆறு பாகத்தை அழிச்சு ஒரு பாகத்தை மட்டும் விட்டு வைக்கிறது வழக்கம்"
"அடடே ..டிஸ்க் க்ளீன் அப் மாதிரி "
"உன் அதிமேதாவித்தனத்தையெல்லாம் காட்டாதே சொல்றத கேட்டுக்க"
"சரிங்க"
" இப்போ அந்த நேரம் நெருங்குது. உலகத்தை அழிக்கப்போறோம்"
" அந்த சிரமம் உங்களுக்கு இருக்காதுனே நினைக்கிறேன். அதையெல்லாம் அமெரிக்காவும் ,எங்க அரசியல்வாதிகளுமே பார்த்துக்குவாங்க !"
"முட்டாள் ! குறுக்கே பேசாதே..நீ என்னவோ 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு சிறப்பு ராணுவம் அமைச்சு , நதிகளையெல்லாம் இணைச்சு ,கூட்டுறவு பண்ணை விவசாய முறையை அமலாக்கி இந்தியாவை சொர்க பூமியாக்கறேன் அது இதுனு பீலா விட்டுக்கிடிருக்கியாமே"
"பீலா இல்லைம்மா ..ஜனங்க பை மிஸ்டேக் என் பேச்சை கேட்டா உண்மையிலயே மாத்திர்ரதா சின்ன உத்தேசம்"
"அடச்சீ .. ஆசைக்கு ஒரு அளவு வேணா"
" இதுக்கு பேரு ஆசையில்ல தாயே லட்சியம்"
" தபாரு இதெல்லாம் நடக்காத காரியம் ..பேசாம இதை மாதிரி உளர்ரதை எல்லாம் மூட்டைக்கட்டி வச்சுட்டு ஆகிற வேலை எதுனா இருந்தா அதைப்பாரு !
"நீ சொல்ற ஆகிற வேலைய பார்க்க கோடிக்கணக்குல ஜனம் இருக்குது தாயி.. ஏதோ உருப்படாதவன் தொலையட்டும்னு விடுவியா "
"உன்னையா.. விடறதா நெவர். உன்னை விட்டு வச்சா அழிவே சாத்தியமில்லாம போயிரும்"
"தா .. பார்த்தியா நீ இப்ப விடறதுதான் பீலா.. நான் எல்லாம் ஒரு கணக்கா ஜுஜுபி"
"ஜுஜுபியோ..லோலாக்கு டோல் டப்பியோ ..உன் எண்ண அலைகள் வலுவா இருக்கிறதால தேவலோகத்து டெம்பரேச்சரே ஏறிப்போயி ஏசியெல்லாம் ஓவர் டைம் வாங்குது. எங்க அஜெண்டாவை டிஸ்டர்ப் பண்னுது. நாங்க அழிச்சாகனும். அதுக்கு நீ உன் லட்சியம் லால் மஞ்சன் (பல் பொடி தலைவா !)எல்லாம் விட்டு தொலைக்கனும்"
"யப்பாடி! ட்ரம்ப் கார்டு இப்ப எங்க்கிட்ட இருக்கா .. நான் ஏன் என் லட்சியத்தை விட்டுத்தொலைக்கனும். நான் இந்த பூமில வசிக்கிறவன் . இதை நீங்க அழிக்கறதுக்கு நான் கோ ஆப்பரேட் பண்ணுவேனு எப்படி நினைச்சிங்க"
"நாங்க தெய்வங்க.."
"நான் மனிதன்(ரஜினி பட டைட்டில் இல்லிங்க) . எனக்கு மனிதாபிமானம் தான் முக்கியம்"
"இந்த மனிதர்கள் உனக்கு என்னாத்த செய்து கிழிச்சுட்டாங்கனு இப்படி ஜொள்ளு விடறே"
"நான் ஒன்னும் அத்வானி மாதிரி ரத யாத்திரை போய் ஆதரவு கேட்கலியே..அந்த நாள் முதல் இந்த நாள் வரை என் திட்டத்தை ஆட்சியாளர்கள்,அரசியல்வாதிங்க,மீடியா பார்வைக்கு கொண்டு செல்லதான் முயற்சி பண்ணியிருக்கேன்"
"போறதானே ..மக்கள் கிட்டே போய் நான் 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு சிறப்பு ராணுவம் அமைச்சு , நதிகளையெல்லாம் இணைச்சு ,கூட்டுறவு பண்ணை விவசாய முறையை அமலாக்கி இந்தியாவை சொர்க பூமியாக்கறேன்னு சொல்ல வேண்டியதுதானே"
"நேரம் வரும்போது போறேன்"
"அதுவரைக்கும் இந்த மாதிரி கவைக்குதவாத அங்கத உரையாடல்களை பதிவா போட்டுக்கிட்டு காலத்தை கழிக்கிறேங்கறயா?"
"Some thing is nothing இல்லியா?"
"த பாரு உஅனக்கு இதான் கடைசி வார்னிங். இந்த இழவை எல்லாம் விடப்போறியா இல்லையா?"
"இல்லை தாயி !"
"உன்னோட ரெண்டு கண்களும் பறிக்கப்படும்"
"த பார்ரா இது சாபமில்லே ..வரம்"
"எப்படி சொல்றே?"
"மனோ சக்தில பாதி கண்கள் வழியாதான் செலவாயிருதாம். அதனாலதான் கண்ணில்லாதவங்களோட இதர புலன் எல்லாம் தீட்டப்பட்டு ஷார்ப் ஆயிருதாம்"
"என்ன இது வில்லங்கமா போச்சு. இப்பவே உன் இம்சை தாங்க முடியலை. கண்ணை பிடுங்கி உன் மனோசக்தி அதிகரிச்சுட்டா சொர்கத்தை காலி பண்ணிட்டு கொட நாடு எஸ்டேட் போக வேண்டியதுதான். தபாரு ! உன் ரெண்டு கையையும் பறிச்சுருவோம்"
" நல்லதா போச்சு ப்ளாகர் காரன் போட் காஸ்டிங்னு ஒன்னு வச்சிருக்கான். மொபைல்லயிருந்து அப்படியே போஸ்ட் பண்ணலாம்"
"உன் பேச்சை பறிச்சுட்டா?"
"இன்னம் நல்லதா போகும். என் ஜாதகத்துல சுக்ர,சந்திரர்கள் தவிர எல்லா கிரகங்களும் கேந்திர கோணங்கள்ள இருக்கிறதால பரிவ்ராஜக யோகம்னு பேரு. அதாவது நான் வந்து விடுதலை பெற்றவனாம். இந்த சுக்ர,சந்திரர்கள் வாக்குஸ்தானத்துல மாட்டிக்கிட்டதால அதை சொல்லனும்,இதை சொல்லனும்னு என் சக்திய வீணடிச்சிட்டிருக்கேன்."
"அய்யய்யோ ! இது என்ன புது பிரச்சினை? அடேய் காலணா கவிஞனே! ஏழில் ஆறு பாகந்தாண்டா அழுப்போம் அதுவும் பாவிங்களதான் அழிப்போம்"
"யார் பாவி தாயே ! இன்னைக்கு உலக நாடுகள் பிச்சையெடுக்க காரணமே அமெரிக்காதான். ஆனால் கெடுவான் கேடு நினைப்பான் என்ற ஆரம்ப சூத்திரம் கூட தெரியாத நாடு அது. -ஆடிய ஆட்டமென்ன ? -ங்கற மாதிரி இப்போ காருக்குள்ள குடித்தனம் பண்ற ஸ்டேஜுக்கு அமெரிக்க மக்கள் வந்துட்டாங்க"
"அப்போ அவங்க பண்ண அக்கிரமத்தையெல்லாம் மன்னிச்சுரனுங்கறயா?"
"அப்படி சொல்லமாட்டேன்.. அவங்களால உலக நாடுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சொல்லனும்"