கலைஞரின் சிறு பிள்ளைத்தனம்
தமது அரசை மைனாரிட்டி அரசு என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடும்
ஜெயலலிதாவை திருமதி என்றே அழைப்பேன் என்ற கலைஞர் அதற்கு ஆதாரமாக குமுதத்தில் வெளிவந்த ஜெயலலிதாவின் பேட்டி மற்றும் சோபன் பாபுவுடனான படங்களை முரசொலியில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.
காலச்சக்கரம் 60 வருடங்களில் ஒரு சுற்றை முடித்து மீண்டும் மறு சுற்றை ஆரம்பிக்குமாம். அதை போல் மனிதன் 60 வயதை முடித்தான பிறகு மீண்டும் குழந்தையாகிவிடுகிறான். குழந்தையை யாரேனும் கொஞ்சுவர். குழந்தை தனமான முதியவரை ? கலைஞரும் இந்த ஸ்டேஜுக்கு வந்து விட்டார் போலும். ஐந்தி வளையாதது என்பது போல் கலைஞர் தமது அரசியல் வாழ்வில் பெண்களை துச்சமாகவே மதித்து வந்தவர். இந்திரா காந்தி தமிழகத்துக்கு வந்து குடியேறினால் விதவை பென்ஷன் தருவோம் என்று ஆர்பரித்த கூட்டத்துக்கு தலைவன் அல்லவா ?
அந்த காலத்தில் பி.டி.சரஸ்வதியை நாடாவை அவிழ்த்து பார்த்தால் தெரியும் என்று சொன்னதும் உண்டாம். பிறகு நான் சொன்னது பாவாடை நாடாவை அல்ல கோப்பு நாடாவை என்று ஜகா வாங்கியதும் உண்டாம். எல்லாம் செவி வழி செய்திகள் தான். "இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர் " என்று கவிதையில் எழுதினால் அது விரசமாகவே இருந்தாலும் ரசனை என்று வாதிடவேணும் வாய்ப்புண்டு. எம்.ஜி.ஆரை மனதில் வைத்து அவரை போன்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவனுக்கு கவிதை எழுத தெரியாத நிலையில் யாரோ ஒருவரின் கவிதையை தன் கவிதையாக காட்டி பெயர் வாங்குவதாகவும், தனக்கு பிள்ளை பிறக்காது என்று வேலைக்காரனை பாத்ரூமில் ஒளித்து வைத்து தன் மனைவியை கூடச்செய்து பிள்ளை பெறுவதாகவும் கதை எழுதி தமது நிறைவேறாத நீசமான ஆசைகளை நிறைவேற்றி கொண்ட குதர்க மனம் கொண்டவர்தானே கலைஞர். ( குறு நாவலின் பெயர் : வான் கோழி)
ஒரு தலைவன் அ தலைவியின் தனிப்பட்டவாழ்க்கையை விமர்சிக்க எந்த நாய்க்கும் அருகதை கிடையாது . அந்த தனிப்பட்ட வாழ்க்கை அந்த தலைவன் அ தலைவியின் பொதுவாழ்வை பாதிக்காத வரை. சசிகலா பற்றி பேசுகிறார்கள். அதை நான் விமர்சிக்க மாட்டேன். ஏன் என்றால் மேற்படி மன்னார்குடி கூட்டம் ஜெயலலிதாவின் பொதுவாழ்வை எப்படியெல்லாம் பாதித்தது, பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாடறியும்.
சோபன் பாபுவுக்கு ஜெயலலிதா காண்ட்ராக்ட் கொடுத்தாரா ? விதிகளை மீறி ஃபேவர் செய்தாரா அதை பற்றி பேச. சேர்ந்து வாழ்வது என்பது சட்டத்தாலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது. சேர்ந்து வாழ்பவர்களை கணவன் மனைவியாக கருதுவதா இல்லையா என்ற பிரச்சினை அவர்களின் வாரிசு கச்சேரிக்கு வந்து பிராது கொடுக்கும்போதோ /பாதிக்கப்பட்ட ஆண் அ பெண் பிராது கொடுக்கும்போதோதான் நீதிமன்றத்தில் எழும்.
சோபன் பாபு அமரராகி விட்டார், ஜெயலலிதா எந்த நிலையிலும் தமது உரிமையை நிலை நாட்ட முன் வரவில்லை. வாரிசு என்று இருப்பதாக பரவலாக பேசப்பட்டாலும் அப்படி யாரும் மீடியா முன்பு வரவில்லை. இந்த நிலையில் திருமதி என்பேன் என்பதும், பழைய குப்பையை கிளறுவதும் வேண்டாத வேலை.
கலைஞர் இர்ரிட்டேட் ஆகிவிட்டார் என்பது தான் இதன் மூலம் உலகத்துக்கு புரிகிறது. கலைஞர் இது போன்ற பேச்சுக்களை பேசுவதும் வாங்கிகட்டிக்கொள்வதும் புதிதொன்றுமல்ல.
மனோரமா, விஜயகுமாரி, இப்படியாக ஒரு நீண்ட பட்டியலே இருக்கும்போது கலைஞர் இந்த விவாதத்தை கிளப்பியிருப்பது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது போல் இருக்கிறது.
கலைஞரின் ராசி கடக ராசி. கடகராசிக்கு பாதகாதிபதி சுக்கிரன். எனவே தான் பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து கலைஞர் இது போல் ஒன்றை கொடுத்து பத்தை வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.
ஓரின சேர்க்கையையே சட்டம் குற்றமல்ல என்று சொல்லும் இந்த காலத்தில் கலைஞர் மீண்டும் பத்தினி தேர்வை நடத்த விரும்புவது அவரது ஆணாதிக்க போக்கையே காட்டுகிறது.
கலைஞரய்யா காலம் மாறிப்போச்சுய்யா ! இன்னமும் அந்த காலத்துலயே இருக்கிங்களே. முரசொலில பேட்டி,படங்களை போட்டு என்னத்தை சாதிச்சுட்டிங்க ?
13 வருச வனவாசத்தை மறந்துட்டிங்களேய்யா ! சேவல்/புறா சீசன் திமுகவுக்கு வராதுன்னு என்ன கியாரண்டி ? மறுபடி ஜெயலலிதா கோலை எடுத்தால் குரங்காடனும் ஆடாதுனு என்ன கியாரண்டி?
ஜெயலலிதாவின் குணங்களில் ஏதேனும் குற்றம் குறையிருந்தால் அதற்கு உம் போன்ற ஆணாதிக்க பேய்களே பொறுப்பு என்று நான் கூறுகிறேன். பெண்ணை தாயா வணங்கினா அவள் தெய்வமா இருந்து குலத்தை காப்பாள். பேயாக்கிராதிங்கய்யா !
உங்க ஜாதகத்துக்கு பெண்ணால தான் தோல்வி/அழிவு எல்லாமே.. மஞ்சத்துண்டு காரரே.. மஞ்சள் முகம்தான் உங்களுக்கு எமன் ..சுருக்கமா சொன்னா வுமன் தான் எமன் . பீ கேர்ஃபுல் !