Monday, August 17, 2009

சக்தி, சாகத்தான் அல்லது சாகடிக்கத்தான்

சக்தி அற்றவர் அனேகம் உண்டு. ஆனால் சக்தியை பெற விரும்பாதவர்கள் யாருமில்லை.சக்தியில் எத்தனயோ விதம். சரீர சக்தி,மனோ சக்தி,ஆன்ம சக்தி,பொருளாதார சக்தி,அரசியல் சக்தி. இப்படி சக்தி பலவிதம்.

ஆனால் சக்தியை பெற விரும்புபவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? வாழவா? தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளவா? இல்லை சாக அல்லது சாகடிக்கத்தான் சக்தியை விரும்புகிறார்கள். சாகனும் அல்லது சாகடிக்கனும் இதை தவிர வேறு அஜென்டாவே இல்லை.

மனித வாழ்வில்,மனித குலத்தின் எந்த செயல்பாட்டை,வரலாற்று சம்பவத்தை பார்த்தாலும் அதற்கு பின்புலமாக இருப்பது சக்தி.சக்தியின் சாகும் அல்லது சாகடிக்கும் இச்சை ஒன்றுதான் (உ.ம்) சீன ந்டுஞ்சுவர், தாஜ்மகாலிதையெல்லாம் ஏன் கட்டினார்கள்? கட்டும்போது அந்த மக்கள் சாகணும். எதிரகாலத்தில் அதை பார்ப்பவர்கள் சாகனும்.(எப்படி கட்டியிருப்பாண்டா என்று)

சாகவோ அல்லது சாகடிக்கவோதான் சக்தி தேவை. வாழ்வதற்கு சக்தி தேவையில்லை. அவரவர் வாழ்க்கை முறையை மனதில் வைத்து யோசித்தால் சக்தியின்றி வாழ்வில்லை என்றுதான் தோன்றும்.

அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் நாம் யாருமே வாழவில்லை. வாழ்கிறோம் என்ற மயக்கத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். "என்னத்த போராட்டம் ..கும்பல்ல கோவி்ந்தா தான் போட்டுகிட்டு இருக்கோம் என்று நீங்கள் கூறலாம்.

ஒவ்வொரு மனித உயிரும் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. தனித்தன்மை என்பது மனித இயல்பு. தன் இயல்புக்கு மாறாக கும்பலில் கோவிந்தா போடுவதும் ஒரு போராட்டம் தான்.

போராட்டத்திற்குத் தான் சக்தி தேவைப் படுகிறது. நம் வாழ்க்கை முறையை பார்ப்போம் ! நம் வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு மில்லில் மீட்டரிலும் போராட்டம் இருக்கிறது.

கருவிலிருந்தே ஆரம்பிப்போம். பனிக்குட நீரில் ஜலகிரீடை ,தொப்புள் கொடி வழியாக உணவு சப்ளை, அற்ப சங்கியைகளுக்கு யூரினல்ஸையோ,கழிவறைகளையோ தேடி ஓடவேன்டிய அவசியமில்லை. மிதமான வெப்பம்,மிதமான ஒலி,மிதமான ஒளி, திடீர் என்று மேற்படி பாதுகாப்புக்களை,இதத்தை விட்டு நாற்றம் பிடித்த அரசு மருத்துவமனையின் துருப்பிடித்த டேபிளில் விழுகிறோம்.. அந்தக் கணம் முதல் துவங்குகிறது போராட்டம்.சாகும் வரை ஓயாத போராட்டம்.

பசியிருந்தாலும்,இல்லையென்றாலும் "பாச்சி" குடித்து தான் ஆகவேண்டும். கக்கா வந்தாலும் வராவிட்டாலும் போய் தான் ஆகவேண்டும். இதற்காக குழன்ந்தையின் ஆசனத்தில் வெ.காம்பு,சோப்பு,புகையிலை சகலமும் செருகுவார்கள்.

இதுவேயல்லாது எந்த அளவுக்கு பாதுகாப்பு, எந்தஅளவுக்கு தேவை, எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்ற கேள்விகளுக்கு இடமேதராது கண்ட கண்ட தடுப்பூசிகள்.விட்டமின் கள், 60 சதவீத‌த்திற்கு மேல் ஆல்கஹால் அடங்கிய டானிக்குகள் .ஒரு உயிரின் இயல்பு நிலை சகட்டுமேனிக்கு பாதிக்கப் படும்போது அதன் வாழ்க்கை போராட்டமாகவே மாறிவிடுகிறது.

தாய் மடியிலிருந்து அதை பிடுங்கி பணம் பிடுங்கி ப்ளே க்ளாஸ்/ ப்ரிகேஜி பள்ளிகளில் "தொள்ளுவதாகட்டும்" .அக்குழந்தைக்கு தேவையா இல்லையா என்ற கேள்விகளுக்கிடமே இல்லாமல் விளையாட்டு சாமான் கள் , மூச்சு திணற வைக்கும் உடைகள், அப்பப்பா ..

இப்படி இளமை முதல் தன் இயற்கைக்கு எதிராக வளர்க்க படுவதால் அக்குழந்தையில் சக்திக்கான வேட்கை ஏற்படுகிறது. அந்த சக்தி பாலியல் சக்தியாக மாறுகிறது. பிறகு அது காதல்,கத்திரிக்காய்,ஈவ் டீஸிங், கள்ளக்காதல் என்று செலவாகிறது.

இயற்கைக்கு திரும்பிப்போங்கப்பா !