வெற்றியின் ரகசியம் என்ற தலைப்பிலான இந்த எனது பேச்சை எத்தனை பேர் கேட்பார்கள் என்று தெரியாது. ஆனால் நாளடைவில் பல்லாயிரக்கணக்கானோர் கேட்டு காலம் காலமாய் தாம் செய்து வந்த நிழல் யுத்தத்தை விட்டுத்தொலைத்து தமது உண்மை எதிரியான மரணத்துடன் யுத்தம் செய்தாலே என் முயற்சி வெற்றி பெற்றதாக கருதுவேன். ஆமாம் மரணத்தின் நிழல்களான வறுமை, இருட்டு,முதுமை,காலம்,தனிமை ஆகியவற்றுடன் நாம் நிழல் யுத்தம் செய்வதால் தான் ஒவ்வொரு வாழ்வும் தோல்வியேலேயே முடிகிறது. நிழலுடன் மோதி வெல்ல முடியுமோ ? அந்த நிழல்களை ஸ்தூலமாக பார்த்தால் அவை நம் உயிரை வாங்கிவிடப்போவது ஒன்றும் கிடையாது ஆனால் நம் அடிமனதில் உள்ள மரணம் குறித்த நினைவுகளோடு இவை இணைந்து வேலை செய்வதால் தான் வறுமை, இருட்டு,முதுமை,காலம்,தனிமை ஆகியன நம் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தி நிழல் யுத்தத்துக்கு கொம்பு சீவி விடுகின்றன.
நாம் மோத வேண்டியது மரணத்துடன் இந்த வறுமை, இருட்டு,முதுமை,காலம்,தனிமை எல்லாமே மரணத்தின் நிழல்களாக நம் அடிமனது கருதுபவையே என்ற நித்திய சத்தியத்தை உணர்ந்து கொண்டால் போதும் இந்த நிழல் யுத்தம் முடிவுக்கு வரும். மனிதனி மைண்ட் செட்டே மாறிவிடும். உலகம் அமைதிப்பூங்காவாகிவிடும். மரணத்தை வெல்வதற்கு சிலவழிகள் உள்ளன.
1.நாம் உயிருடன் இருக்கும்போதே இறக்க பழக வேண்டும் (தியானம்)
2.பிறப்பை தவிர்த்தாலன்றி இறப்பை தவிர்க்கவே முடியாது (பழைய கருமங்களை தொலைத்து, புதிய கருமங்களை சேகரித்தலை தவிர்த்தல்)
3.நாம் என்றுமே இல்லாதிருந்ததில்லை, இல்லாதிருக்க போவதுமில்லை இந்த படைப்பில் ஏதோ ஒரு வடிவத்தில் இருந்தே வந்திருக்கிறோம். இருக்கப்போகிறோம் என்ற சத்தியத்தை உணர்வு பூர்வமாக,அனுபவ பூர்வமாக அறிய வேண்டும்
4.நம்மை இந்த படைப்பிலிருந்து வேறுபடுத்தி பார்ப்பதால் தான் மரணம் என்பது நம்மை அச்சுறுத்துகிறது. இதற்கு காரணம் நம் அகந்தை.
5.நம்மில் யாரும் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல . இந்த பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் முதன் முதலாய் ஏற்பட்ட ஒரு செல் அங்க ஜீவியிலிருந்தே வந்துள்ளன. உடல்கள் தாம் வேறு. உயிர் ஒன்றே என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும்
மரணத்தை வெல்ல மற்றோர் வழியும் இருக்கிறது. குழந்தைகளாக மாறுவது. குழந்தை தனம் கொண்டவர்களாக அல்ல (ஓஷோ)
ஓகே. என் பேச்சை கேட்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு என் பேச்சின் ரத்தின சுருக்கத்தை இந்த பதிவின் மூலம் வழங்கி விட்டேன். நன்றி.