Saturday, August 1, 2009

அதோ மரணம் என்னை நெருங்குகிறது

இதோ உயிர் பறவையின் சிறகுகள்
கருகிப்போய் கொண்டிர்க்கின்றன.
பறவையின் சிறகுகளை ஒத்த ஓயாது
அசைந்த காற்றுப்பை பைபிளை நீக்கிவிட்ட
பிளாஸ்டிக் உறையாக ஒட்டி நிற்கிறது

அதோ மரணம் என்னை நெருங்குகிறது
நிழலாய் ...நிஜமே போல்
மரணம் என்னை நெருங்குகிறது

இந்த இந்த கணத்தை
கலங்காது சமாளிக்கும் தயாரிப்புக்காகத்தான்
என் மொத்த வாழ்க்கையை
தாரை வார்த்தேன் . வாழ்ந்தேன்
குறைந்த பட்சம் வாழ முயன்றேன்

ஏனோ வாழ்க்கையால் வாழப்படும்
திரு நங்கைத்தனம் எனக்கு பிடிக்காமலே போய்விட்டது
என் வாழ்க்கை படகின் சுக்கானை நானே கைப்பற்றினேன்
இந்த நூல் கண்டின் முனையை தேடி முழுமூச்சோடு தான் புறப்பட்டேன்
புறம் பேசியோரும், புற உறவுகளும் என்னை குப்புற தள்ளின
நான் உதிர்த்த முத்துக்களை புறம் தள்ளின
இருந்தாலும் என்ன அவள் என்னை அள்ளிக்கொண்டாள்
என் மனதை கிள்ளித்தந்தேன்
அவளோ அவளையே தந்தாள்
எவளிலும் அவளை அரைக்கணமேனும் காணும் நிலை தந்தாள்
கலை என் கவனம் கலைத்தாலும்
அதனால் என் உடல் இளைத்தாலும்
என்னில் முளைத்தது முழுமையின் முதல் நாற்று
என்னில் புறப்பட்டது பிரபஞ்ச ப்ரேமையின் ஊற்று
இருண்ட உள்ளத்தை உலுக்கியது தேவ கிருபையின் கீற்று
என் புற வாழ்வை புறம் பேசிய உலகம்
என் அக வாழ்வை அகழ மறுத்தது
ஒழியட்டும்.
வாழ்க்கை பந்து மரண கோலை(Goal) நோக்கி விரைகிறது
எந்த பந்துக்கும் கோல் (Goal)ஒன்றே
இந்த பந்து அதை அங்கீகரித்தது
இதர பந்துகள் அம்மாவுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குரங்காட்டியின்
குரங்குகளாக

நான் நாயகியை யாசித்தேன்
சித்தம் கலங்க யோசித்தேன்
புதுமையை பூசித்தேன்
பழமையின் கருவை நேசித்தேன்

ஏன் ஏன் என்று துடித்தேன்
வாழ்வின் போக்கை படித்தேன்
மாயச்சுவரை இடித்தேன்
தருமத்தின் மருமத்தை தரிசித்தேன்
அவணி மிசை பவனி வரும் பவானியை
அர்ச்சித்தேன்
கள்ளம் கண்ட போதெலாம் கர்ஜித்தேன்
என் உளமிசை கள்ளம் கண்ட போது மூர்ச்சித்தேன்
நான் தொட்டது எல்லாம் பொன்னாகியிருந்தால்
என்னாகியிருப்பேனோ ?
அறிவுப்பசிக்கு தீனியின்றி ஞானியாகிட வழியின்றி
கொழுத்து அழுகி இருப்பேன்
மன நல விடுத்திக்கே ஓடியிருப்பேன்
என் புறப்பாட்டுக்கு முன்பே நான் புதுப்பாட்டு என்றறிவேன்
என் கண்களில் கண்ணீர் கருக்கொண்டிருக்கலாம்
என் இதயமோ என்றும் இறைத்தது அமுதம்
அமுதம் இறந்தோரை உயிர்ப்பிக்கும்
பொய்யில் உறைந்தோரை எழுப்புமோ ?

நான் கன்றுக்குட்டி கனவுகளை விட்டு வளரவில்லை
என்று மன நல நிபுணர்கள் நிர்ணயிக்கலாம்
இந்த படைப்பே ஒரு தாயாக இருக்க நான் சேயாக இருப்பதில்
யாருக்கு வலி