Saturday, August 1, 2009

உறங்காத இரவுகளும் பீடிக்கட்டும்

உறங்காத இரவுகள் உறங்கும் நினைவுகளை எழுப்பி விட்டு விடுகின்றன. அவை தலைவிரித்தாடும்போது ஒரு கட்டு பீடி இருந்தால் அவற்றை ரசிக்கலாம் அ தொகுக்கலாம் கு.ப வேடிக்கை பார்க்கலாம். சோடி இல்லா இரவையும் தன் கையே தனக்குதவி என்று சமாளித்து விடலாம் .பீடி இல்லாத இரவை சமாளிப்பது தான் இம்சை. இன்று அப்படித்தான் ஆகிவிட்டது. பஸ்,ரயில் நிலையங்களில், கல்யாண வீடுகளில் இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த உ.இ களை எதிர்கொள்ளாத ஆணே இருக்கமாட்டான். அப்படி எவனாவது இருந்தால் அவன் இந்த தெலுங்கு சொலவடையை படித்து பின் பற்றியே ஆகவேண்டும் .

"திரிகி செடிந்தி ஆடதி.. திரக்க செட்டாடு மகவாடு"

இதற்கு பொருள்: ஊர் சுற்றி கெட்டாள் பெண். சுற்றாது கெட்டான் ஆண்.பெண்ணுரிமை வாதிகள் இதை எதிர்க்கலாம். ஆனால் இது புழக்கத்தில் உள்ள பழமொழி பழக்க தோஷத்தில் குறிப்பிட்டு விட்டேன்.

இது போன்ற இரவுகளில் பீடிக்கட்டு, எழுதுவதற்கு விஷயம், எழுதுமத்தனை வசதி,பொறுமை இருந்தால் அமர காவியம் உருவாகா விட்டாலும் வெட்டி ....ழ் நித்திரைக்கு கேடு என்ற கதையாகி விடாதிருக்கும்.

இப்போது நேரம் 4 மணி. ஒட்டுத் தூக்கமா பொட்டு தூக்கமா என்ற குழப்பமிருந்தாலும் உறக்கம் மட்டும் இல்லை.

வழக்கமான சால்ஜாப்புகள் ஏதும் பலிக்கவில்லை. உறக்கம் கெட ஸ்தூலமாக எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் மாதத்தில் ஒரு நாளேனும் இப்படி அமைந்து விடுகிறது. ஹிட்லர் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் தான் தூங்குவானாம். ஒரு நாள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு அதிக நேரம் தூங்கிய போதுதான் முதல் தோல்வியை சந்தித்தானாம். கண்ண தாசன் இது போன்ற ஆசாமிகளை நம்பவே கூடாது என்பார்.இது நிஜம் தான் போலும். என்னதான் பாசிட்டிவ் ஆசாமியாக இருந்தாலும் சில நெகட்டிவ் எண்ணங்கள் இதுமாதிரி உ.இ களில் மின்னத்தான் செய்கின்றன.

என் மனைவி வாயை திறந்து கொண்டுதான் உறங்குகிறாள். என் ஆரம்ப நாள் காதலி ஒருத்தியின் தங்கை கண்களை திறந்து கொண்டே உறங்குவாள். நாம் தூக்கம் கெட்டு அவதி படுகையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் உலகத்துக்கு எதிரான எண்ணங்கள் மின்னுவது சகஜம் தான் போலும்.

தூக்கம் கெடுத்தான் ஆக்கம் கொடுத்தான் என்பார் வள்ளலார். ஒரு இரண்டாம் கை சைக்கிளும், பையில் சில்லறையும் இருந்ததால் நைட் கடைக்காரன் என்று இல்லா விசேஷமாய் பீடிக்கட்டு விற்க சம்மதித்ததால் இந்த இரவில் சாரி விடியலில் எஸ்.ராமகிருஷ்ணன் சார் பாணியில் ஒரு கட்டுரை உருவாகிக்கொண்டிருக்கிறது.
(ஆமாம் அவர் கட்டுரைகளில் ஏன் ஓரிடத்திலாவது மூத்திரம் பற்றிய பிரஸ்தாவனம் வருகிறது?)

இது போன்ற உ.இ.கள் அனேகமாய் அனைத்து சாதனைகள்,முயற்சிகளுக்கு பிறகு திருமணத்துக்கு முன் எனில் ஒரு சுய இன்பத்திலோ திருமணத்துக்கு பின் எனில் ஒரு உடலுறவிலோ தான் முடியும். ஆனால் திருமணமாகி 17 வ. ஆகிவிட்ட நிலையில் "காதல் ஒருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கை கொடுத்தே" என்ற வரிகளை கேட்க கூட வாய்ப்பில்லாத/மனமில்லாத ஒரு அடம் பிடித்த ,அழும்பு பிடித்த மனைவியிடம் அதற்காக சரணடைய தன் மானம் இடம் கொடுப்பதில்லையாதலால் உ.இ கள் தொங்கலில் முடிந்து விடுகின்றன.

பீடி புகைக்க ஆரம்பித்ததுதான் என் நடுத்தர வர்கத்து ஜீன்களின் மீது நான் செய்த முதல் புரட்சி. ரிக்ஷாக்காரரிடம் பீடி வாங்கி குடித்தது புரட்சியின் உச்சம். ஆனால் பீடிக்காகவே அக்மார்க் வால் பிடி,கால் பிடி சந்தர்ப்பமும் வாய்த்தது உண்டு.கணிணியில் ஒரு ஜன்னலில் இருந்து (எதிர் வீட்டு ஜன்னல் இல்லிங்கோவ் ! விண்டோஸை சொல்றேன்) மற்றொரு ஜன்னலுக்கு மாற உபயோகிக்கும் ஆல்ட் டாப் போன்றதே பீடியும்.

மனிதர்கள் கணத்துக்கு கணம் தம் பேச்சின், செயலின் போக்கை ஒடித்து திருப்பி விடுகிறார்கள். நானோ உணர்வு பூர்வமாக ஈடுபடுபவன் . அம்மாதிரி சந்தர்ப்பங்களில் என்னை நானே மடை மாற்ற உபயோகிக்கும் மண்வெட்டி பீடி. நான் உணர்வு மயமானவன். ஆனால் உ.வசப்படுவதை இந்த உலகம் பெண் தன்மையாக பார்ப்பதோடு பலவீனத்தின் அடையாளமாகவும் பார்க்கிறது. எனவே கண்ணீரை மறைக்க தமிழ் சினிமா கதா நாயகன் கருப்புக்கண்ணாடி அணிவது போல் நான் பீடியை அணிந்து கொள்கிறேன்.

1987 முதல் எத்தனையோ நாதாரிகள் என்னுடன் ஈயும் பீயுமாய் இருந்துள்ளன . ஆனால் இன்று வரை தொடர்வது என் பீடிக்கட்டு தான். அதுவும் ஒரே பிராண்டு. சேலை கட்டிய மாதரை நம்பினால் தேம்பி திரிய வேண்டியதுதான் என்ற சித்தர் பாடலை மறந்ததால் காதல் கடிமணத்தால் அப்பாவின் பொருளாதார பாதுகாப்பை துறந்து திரிந்துள்ளேன். அது சிறிய காலகட்டம் தான் என்றாலும் (1991 நவம்பர் முதல் 1992 மார்ச் வரை) அதே காலகட்டம் 1994 ல் என் தந்தையின் மரணத்துக்கு பிறகும் ஒரு பாட்டம் தொடர்ந்தது. அந்த கட்டத்தில் என் துணை என் பீடிக்கட்டுதான்.

நான் புகைக்கும் பீடி ஒரு மல்டி பர்ப்பஸ் பிராஜக்டு மாதிரி. பசியும்,பட்டினியுமாய் கழிந்த காலங்களில் அன் டைம் க்ளையண்ட்ஸ் தரும் ஃபீசை (நான் ஒரு ஊரை ஏமாற்றாத ஜோதிடன் என்பதை ஞா படுத்திக்கொள்ளவும்) மனைவியிடம் கொடுத்து சோறாக்க சொல்லிவிட்டு வெளியே வரும்போது "இன்னா சாமி சாப்டாச்சா" என்ற கேள்வியை சமாளிக்கவும் இந்த பீடிதான் கை கொடுத்தது. (ஆச்சுபா ..சும்மா ஒரு தம் போட்டு போலாம்னு அப்படீ ..வந்தென்"

உணவுக்கு முக்கியத்துவம் தரும் வசதி இல்லாமையாலும், உணவுக்கு முக்கியத்துவம் தரும் மடமை இல்லாததாலும் அதற்கு மின்னான புகையே முக்கியம் என்ற பக்குவத்துக்கு பீடியே கை கொடுத்தது. உறங்காத இரவுகள் என்று தலைப்பு கொடுத்துவிட்டு பீடி புராணம் பாடறான் பாரு என்று அலுத்துக்கொள்ளாதீர்கள் . உ.இரவுகளுக்கும் பீடிக்கும் அப்படி ஒரு உறவு.