Sunday, August 2, 2009

ராசா ஜூ.விக்கே தடை கேட்டிருக்கலாம்.

1.ராசா தன் பற்றிய செய்திகளுக்கு தடை கோரியதை விட ஜூ.வி யில் வெளிவரும் பலான தொடர்களை சுட்டிக்காட்டி ஜூ.விக்கே தடை கேட்டிருக்கலாம். தப்பு பண்ணிட்டிங்களே ராசா
2.தேவி வார இதழ் ஆந்திரமானிலம் கொவ்வூர் எம்.எல்.ஏ டி. ராமாராவ் குறித்து வெளியிட்டுள்ள செய்தி ஆதாரமற்றது. அவர் நடத்தும் நர்சிங் கல்லூரியில் ஒரு மாணவி கற்பழித்து கொல்லப்பட்டதாகவும், மக்கள் முற்றுக்கையிட்டு ஓவர் ஹெட் டாங்கின் கீழ் ஒளிந்திருந்த எம்.எல்.ஏ வை பிடித்து வந்ததாகவும் போலீஸ் அவர் உயிரை காப்பாற்றியதாகவும் அளந்து விட்டிருப்பதை கண்டிக்கிறேன். சுவற்றில் ரத்தக்கறையிருந்ததாம். அட டுபாகூருங்களே அது ரெட் ஆக்ஸைடு கறைனு க்ளூஸ் டீம் உறுதிப்படுத்தியாச்சு. எல்லா மாணவிகளும் உயிரோட தான் இருக்காங்கயா
கேரளா போய் அவிங்களை கூட்டி வந்து ஹோம்மினிஸ்டருக்கு மனு கொடுக்க வச்சிருக்காங்க இதெல்லாம் அரசியல் லந்து கண்ணா ..

ஒழுங்கா விசாரிச்சு எழுதுங்கய்யா .. நீங்க தொடர் விளம்பரம் வெளியிடற அக்பர் கவுசர் பத்தி ஆயிரம் இருக்கு தரேன் போடுவியளா ?