இந்த தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் ஆ.வியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
புத்தகங்கள் மீது வெறுப்பை காட்டுபவர்களை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கட்டுரையில் ரா.கி.குறிப்பிட்டுள்ள தினசரியை கீழே போட்டு சாப்பிடும் ஆசாமி, மனைவி புத்தகம் வாங்கினால் கிழித்துபோடும் அதிகாரி. இவர்கள் ஒரு ரகம் என்றால் என் போன்று ஒரு காலத்தில் புத்தக புழுவாக இருந்து அவற்றை எழுதினவன்களுக்கும் ,அந்த எழுத்துக்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதையும், அந்த எழுத்துக்களுக்கும் யதார்த்த உலகிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதையும் உணர்ந்து கொண்ட என் போன்றவர்கள் மற்றொரு ரகம்.
இக்கட்டுரையை எழுதுவதில் ரா.கியின் நோக்கம் என்னவாயினும், இதற்கான பின்னணியில் ஆ.வியின் மார்க்கெட்டிங் தேவைகள் இருந்தாலும் இக்கட்டுரையில் ரா.கி குறிப்பிட்டிருக்கும் ஒரு சினிமா கதை ரொம்பவே நீட். ஆனால் அந்த அளவுக்கு உடன் கட்டனை ஏறுமத்தனை வெறியூட்டும் நூல்கள் தமிழில் உள்ளனவா என்பது கேள்வி.
எனக்கு படிக்கும் போது சாப்பிடும் பழக்கம் ஏன் வந்தது என்பதற்கான உளவியல் காரணங்கள் எனக்கு தெரியாது. ஆனாலும் ஒரு நல்ல புத்தகம் கிடைக்கும் போது நல்ல உணவின் மீதும், நல்ல உணவு கிடைக்கும்போது நல்ல நூலின் மீதும் என் எண்ணம் செல்வதை தடுக்க முடிவதில்லை.
நான் படித்துக்கொண்டே சாப்பிடுகையில் யாரேனும் வந்து உனக்கு சாப்பாடு -புத்தகம் இரண்டில் ஒன்று தான் அனுமதிக்கப்படும் என்று கட்டளையிட்டால் கேள்வியே கேட்காது புத்தகத்தை துறந்துவிடுவேன்.
புத்தகம் என்பது 99.9 சதவித எழுத்தாளர்களின் விஷயத்தில் பார்க்கும்போது வெறுமனே கையாலாகாத புலம்பல்தான். எங்கோ ஓன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம். உலகத்திலேயே கையாலாகாத,பச்சோந்தி பயல்கள் யாரென்றால் அது இந்த எழுத்தாள பயல்கள்தான். அரைகுறை அணங்குகளை கற்பனை செய்து சுய இன்பம் அனுபவிக்கும் விடலைத்தனத்தை விட்டு வெளிவராத சில்லறை பயல்கள் இவர்கள்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
என்று பாட்டெழுதிய பாரதி யானை தூக்கிப்போட்ட அதிர்ச்சியை தாங்க முடியாது செத்துப்போனார். "பதவி எங்களுக்கு துண்டு மாதிரி. மானம் வேட்டி மாதிரி " என்ற அண்ணா வழி வந்ததாக எழுதி குவித்த கலைஞர் மத்திய மந்திரி பதவிகளுக்காகவும் ,மானிலத்தில் தமது அரசு தொடரவும் வேட்டியை துறந்து அம்மணமாகவே திரிகின்றார்.
அக்னி பிரவேசம் மாதிரி சிறுகதை எல்லாம் எழுதி இளைஞர்கள் மனதில் அக்னி வளர்த்து " ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர " என்று பஜனை கோஷ்டியில் சேர்ந்து கொண்டார். இந்தியாவின் அமைதிகாக்கும் படையை ஆதரித்து பிரசங்கம் செய்தார்.
இந்த எழுத்தாளர்கள், கவிஞர்களால் கெட்டு குட்டிச்சுவரான குடும்பங்கள்தான் எத்தனை எத்தனை ? பார்ட் டைமாக எழுதி ஃபுல் டைமாக இளைய சமுதாயத்தை குழப்பும் இந்த குசு பூசை (உபயம்: பாலகுமாரன்) கும்பல் தான் தொடை நடுங்கிகளாக இருந்துகொண்டு "மீசை முறுக்கு " "தொடை தட்டு" என்று கிளப்பி விட்டு விடுவான்கள். அப்பாவி இளைஞர்கள் லத்தியடி வாங்க வேண்டும். தீக்குளிக்க வேண்டும். என் கவுண்டரில் சாகவேண்டும்.
எங்கள் வீட்டில் ரமணர்,பெரியார்,கண்ணதாசன்,பாரதியார் உள்ளிட்ட புத்தகங்கள் வர்ஜியா வர்ஜியமின்றி இருந்ததால் நானும் வர்ஜியா வர்ஜியமின்றி படித்து தொலைத்துவிட்டேன். இவற்றின் பாதிப்பால் மட்டுமே என் வாழ்வை தொலைத்துவிட்டேன்.
இப்படி கிளப்பி விடுபவன்களையாவது ஒருவகையில் மன்னிக்கலாம். ஏன் என்றால் இவன்கள் கையாலாகாத பயல்களாய் இருந்தாலும் இவன்களின் எழுத்துக்களை படிக்கும் ஒருவன் (ஹி.. ஹி.. என்னை மாதிரி ) செயல் வீரனாக, மக்கள் தலைவனாக உருவெடுத்தால் இந்த எழுத்துக்கள் நாட்டின் புதிய கட்டமைப்புக்கான ப்ளூ ப்ரிண்டுகளாக கொண்டாடப்படும்.
ராஜேஷ்குமார் என்று ஒரு நபர். இவரை எழுத்தர் என்றே குறிப்பிடலாம். எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன் இவரெல்லாம் எங்கே ஆண்டார். இவர் உலகம் தனி உலகம். ஒற்றை பரிமாண பாத்திரங்கள், ஒரே களம் ஸ்டீரியோ டைப் சம்பவங்கள் . இவர் நாவல் ரத்னாவாம். இவர் கதைகளை சாமானியர்கள் ஆதரிக்கிறார்களாம். எந்த சாமன்யனின் வாழ்விலாவது இந்த ராஜேஷ்குமார் நாவலில் வரும் சம்பவங்கள் நடந்திருக்கிறதா தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பி.கு:ஈநாடு தெலுங்கு தினசரி , மொழி பெயர்ப்பு சிறுகதைகளை வெளியிடவே விபுலா என்று ஒரு மாத இதழை நடத்துகிறது . அதற்கு அன்னாரின் சிறுகதை ஒன்றையும் அனுப்ப எண்ணி (இப்போ இல்லிங்க அவர் ஃப்ரஷ்ஷா இருக்கும்போதே ) அவருக்கு கடிதம் எழுதி அனுமதி வாங்கி ஒரு கதையை மொழி பெயர்த்து அனுப்பினேன் . முடிவு என்னாச்சு தெரியுமா ? தாங்கள் அனுப்பிய படைப்பை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்.
எழுத்தாளர்கள் தான் இப்படி என்றால் பதிப்பாளர்கள் நிலை கோரம்டா சாமி. (இவர்களை மற்றொரு பதிவில் பார்ப்போம்.)