Friday, August 21, 2009
பத்திரிக்கைகள் மீது சிரஞ்சீவி கடும் தாக்கு
சிரஞ்சீவி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று கூட தெரியாத நிலையில் ஈ நாடு ,ஆந்திர ஜோதி பத்திரிக்கைகள் அவரை தலை மேல் வைத்து கொண்டாடின. இதோ புலி அதோ புலி என்று (அச்சு அசலாய் ரஜினி விசயத்தில் தமிழ் நாட்டு பத்திரிக்கைகள் போலவே) பாவம் சிரஞ்சீவி இவர்கள் விட்ட டகுலு நிஜம் தான் என்று நம்பி அரசியலில் குதித்தார். கொல்ட்டிகள் என்று தமிழர்கள் கூறும் தெலுங்கு மக்கள் " நீ சினிமால வா பாத்து தொலைக்கிறோம் ,அரசியல் எல்லாம் வேணாம் கண்ணு" என்று கழட்டி விட்டார்கள். 10 கோடி மக்கள் கொண்ட ஆந்திரமானிலத்தில் சிரஞ்சீவியால் 7 லட்சம் வாக்குகளையே பெற முடிந்தது.
பஸ் ஸ்டாண்டில் புதிதாய் ஒரு பஸ் வந்ததும் எல்லோரும் நம்ம ஊரு பஸ்ஸுதான் என்று பரபரப்பார்களே அது போல் பெருந்தலைவர்களில் இருந்து, குட்டித்தலைவர்கள் வரை சிரஞ்சீவி கட்சிக்கு தாவினார்கள். ஆனால் சிரஞ்சீவியை சுற்றி ஒரு இரும்புத்திரை இருந்தது. அவரது மைத்துனர் அல்லு அரவிந்த்த்
டிக்கெட் கேட்டவர்களிடம் பண மூட்டையை பெற்றுக்கொண்டுதான் பி ஃபார்மையே வழங்கினார். இதில் தேர்தலுக்கு முன்பே சிரஞ்சீவியின் கட்சி கூடாரம் காலியாக துவங்கியது. பிட் படம் பார்க்க போனவர்கள் பிட்டை போடட்டும் பார்க்கலாம் என்று காத்திருப்பது போல் காத்திருந்தனர். பாவம் பிட்டு படம் கூட அறுவைதான் என்று மக்கள் தீர்ப்பு தந்துவிட்டதும். அவரவர்கள் இடத்தை காலி செய்ய ஆரம்பித்தார்கள்.
இன்னிலையில் ஈனாடு பத்திரிக்கை " சிரஞ்சீவி கட்சி கொடி பிடுங்கப்படுமா?" என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டது . ஆந்திர ஜோதியும் ஏறக்குறைய இதே போன்ற செய்தியை வெளியிட்டது.
சிரஞ்சீவி தேர்தலுக்கு முன் முதல்வர் கனவில் இருந்தவர். திடீர் என்று எதிர்கட்சி அரசியலில் தாளிக்க தெரியாது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் கதையாய் முதல்வருக்கு அவ்வப்போது ஜால்ரா போடுவதும், அவ்வப்போது நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழுவு என்பதாய் சீன் போட்டார்.
தமிழகத்தில் பத்திரிக்கைகளின் கதை எப்படியோ பதிவன்பர்கள் தான் கூற வேண்டும். எனக்கு தெரிந்தவரை தமிழ் பத்திரிக்கைகள் வைசிய குணம் (வேசி அல்ல) கொண்டவை. வியாபாரம் தான் முக்கியம். ஆனால் தெலுங்கு பத்திரிக்கை உலகம் அப்படியல்ல.
ஈனாடு வந்த புதிதில் ஆன ஆட்டமெல்லாம் போட்டும் கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்ந்துவிட்டது. பழைய பத்திரிக்கைகள் ஃபணால். என்.டி.ஆர் வந்தார். ஜாதி அபிமானத்திலும் , தமது காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் காரணமாகவும் ஈனாடு அதிபர் ராமோஜிராவ் என்.டி.ஆரை தூக்கிப்பிடித்தார். என்.டி.ஆர் கவர்ச்சியும் ஈனாடுவுக்கு உதவியது. 1989 தேர்தல்களின் போது உதயம் என்ற பத்திரிக்கை வந்தது. தாசரி நாராயணராவ் ஆசிரியர். பப்ளிஷர் சுப்புராமிரெட்டி . ரெட்டி எரி சாராய தொழில் அதிபர். உதயத்தை ஒழித்துகட்ட ஈனாடு மது எதிர்ப்பு ஸ்டாண்ட் எடுத்தது. உதயம் ஒழிந்து போனது . 1994 தேர்தல்களில் என்.டி.ஆர் மதுவிலக்கை அமல் செய்வேன் என்று அறிவித்தார். லிக்கர் லாபி ராமோஜியை அணுகியது . என்.டி.ஆருக்கு அழுத்தம் தரப்பட்டது. என்.டி.ஆர் அரசியலுக்கு வந்து விட்டாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்த காலத்து மனிதர். அவர் தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். எனவே லிக்கர் லாபி ராமோஜிராவை சந்திரபாபு நோக்கி உந்தி தள்ளியது. லட்சுமி பார்வதியை காரணமாய் காட்டி சந்திரபாபு என்.டி.ஆரை முதுகில் குத்தினார் . ஆட்சி,கட்சி,சின்னம் யாவும் முது கிழவரான என்.டி.ஆர் கையில் இருந்து பறிக்கப்பட்டது.
இதற்கு முன் ஒரு சிறு தகவல் (ராமோஜிராவின் பெரிய மனிதத்தனம் எப்படிப்பட்டது என்று காட்ட)
1989 தேர்தலின் போது பிரச்சாரத்துக்கு தேவையான போஸ்டர் இத்யாதியை ராமோஜிராவ் அச்சடித்து கட்சி அலுவலகத்துக்கு அனுப்பினாராம். ஒரே வாரம் தான். எட்டாவது நாள் பில் வந்ததாம். பணம் கொடுத்தால் அச்சடித்து தர ஆந்திரத்தில் அச்சகமா இல்லை. இதுதான் ராமோஜிராவ் மென்டாலிட்டி. இவரது மார்க தர்சி சிட் ஃபண்டில் ஏராளமான வரி ஏய்ப்பு, சட்ட மீறல்கள் இவற்றை காங்கிரஸ் எம்.பி.உண்டவல்லி அருண்குமார் பொது நல பெட்டிஷன் மூலம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றார். இதையடுத்து ஈனாடுவுக்கு காங்கிரஸ் என்றாலே நவத்வாரங்களும் எரிய ஆரம்பித்துவிட்டது.
ஆந்திர ஜோதி கதை ஆந்திர ஜோதியின் பழைய முதலாளிகள் அதை இழுத்து மூடிவிட சாதாரண ரிப்போர்ட்டராக இருந்த ராதாகிருஷ்ணா அதை தாம் நடத்த விரும்புவதாக முன் வந்தார். அவருக்கு சந்திரபாபு பண உதவி செய்ததாகவும், ராதாகிருஷ்ணா சந்திரபாபுவின் பினாமி என்றும் கூட கிசு கிசுக்கள் உண்டு.
இந்த 2009 தேர்தல் சமயத்தில் சந்திரபாபுவின் தெ.தேசம் கட்சி ரொம்பவே சோனியாக இருந்தது. மறுபுறம் பார்த்தால் ஆளுங்கட்சியுடனான இந்த பத்திரிக்கைகளின் மோதல் குழாயடி சண்டையாகவே மாறிவிட்டது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த இந்த பத்திரிக்கைகளுக்கு சிரஞ்சீவியின் அரசியல் பிரவேஸம் புதிய ஆசைகளை ஏற்படுத்தியது. தற்சமயத்துக்கு சந்திரபாபுவை ஓரங்கட்டி சிரஞ்சீவியை தூக்கி பிடித்தனர். தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை மாறியது. பாபு மகா கூட்டணி அமைத்தார். சிரஞ்சீவி கட்சியின் பலம் (?) என்ன என்பது ஓரளவு தெரிய ஆரம்பித்துவிட்டது.
சிரஞ்சீவி,பாபுவை இணைக்க ராமோஜிராவே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தார்.வேலைக்காகவில்லை. கடைசியில் பார்த்தால் சிரஞ்சீவி வரவு ஆளுங்கட்சிக்கே வெற்றியாக முடிந்தது. இந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஈனாடு, ஆந்திர ஜோதியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தான் சிரஞ்சீவி கட்சியில் அவர் தாவுகிறார், இவர் தாவுகிறார் என்று ஊக அடிப்படையில் செய்தி வெளியிட துவங்கி விட்டன. தனக்கு வந்தால் தான் த்லைவலி தெரியும் என்பது போல் சிரஞ்சீவி பத்திரிக்கைகளை சீறித்தள்ளிவிட்டார்.
பாவம் சிரஞ்சீவி.. முதல்வர் கனவுகளை கைவிட்டு இன்னொரு விஜயகாந்தாக காலம் தள்ள வேண்டியதாகிவிட்டது