எனது எழுத்துக்கள்
இணைய உலகத்தில் தமிழ் தெலுங்கு வாசகர்களிடையே ஓரளவு அறிமுகம் இருந்தாலும் நான் பிரபலன் இல்லை. இருந்தாலும் அவ்வப்போது சுயசரிதை தனமாக எழுதும் துடிப்பை என்னால் தவிர்க்க முடிவதில்லை. வயதாகி கொண்டிருப்பதின் அடையாளம் இதுதான் போலும்.
ஆரம்பத்தில் என் தகுதி ,முயற்சிகளுக்கு பொருத்தமற்ற ,ஓரளவு சரித்திர தனமான சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளதால் அவற்றை பகிர்வதால் இன்று அன்றைய என் நிலையில் இருக்கும் அன்பர்களுக்கு அவை வழிகாட்டி உதவும் என்ற பரோபகார எண்ணமும் இந்த பதிவின் நோக்கங்களுல் ஒன்றாகும்.
முதலில் ஒரு சில சரித்திர தனமான சம்பவங்கள்:
1.எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் கிருபானந்த வாரியாரின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து பரிசளிக்க அவர் வைத்திருந்த பாக்கெட் புத்தகங்கள் எலலாம் தீர்ந்து போய் முழங்கை உயர மலை வாழைப்பழம் பரிசாக கொடுத்தது
2.பத்தாம் வகுப்பு படிக்கும்போது கட்ட கடைசி வகுப்பு முடிந்ததும் மாணவிகள் அனைவரும் ஆட்டோகிராஃபுக்காக என்னை முற்றுக்கையிட்டது
3.இண்டர் இரண்டாம் வருடம் படிக்கும்போதே " உணர்ச்சியற்ற இலக்கியம் மெழுகினால் ஆக்கப்பெற்ற ஆரணங்க்காகுமே தவிர கவிதை கன்னியாகிட ஒரு போதும் முடியாது " என்று பேசி பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்றது. இந்த பேச்சால் கவரப்பட்டு அப்போதைய பெண் விரிவுரையாளர் மீரா ஷண்முகம் கல்லூரி ஆண்டு மலருக்கு கவிதை எழுதச்சொல்ல எழுதியது. டிகிரி மூன்றாம் வருடம் படிக்கையில் புதுசு என்ற பெயரில் பத்திரிக்கை துவங்கி அதே விரிவுரையாளரின் சிறுகதையை எடிட் செய்து வெளியிட்டது
ஒவ்வொரு குழந்தையிலும் அளவில்லாத சக்தியுடன் இருக்கும்.அந்த சக்தியை எப்படி செலவிடவேண்டும் என்ற முதிர்ச்சி இல்லாததால் ஓடுவதும்,குதிப்பதும் ,விழுவதும்,எழுவதும் ,கண்டதை குடைவதுமாயிருக்கும். ஆனால் அது பெற்றோராலும்,ஆசிரியர்களாலும்,அக்கம் பக்கத்தவர்களாலும் ஹிட் லிஸ்டில் வைக்கப்பட்டு சகட்டு மேனிக்கு திட்டும் உதையும் வாங்கிக்கொண்டிருக்கும். இது சாதாரண அசமஞ்ச குழந்தைகளுக்கான விதி. என் போன்ற மேதைகள் பாலியத்தில் (சரியாக படிக்கவும் பாலியலுக்கும் இதற்கும் தொடர்பில்லை) எப்படி இருப்பார்கள் என்பதை சொல்லத்தேவையில்லை. துஷ்டத்திலும் துஷ்டன். படு கிட்டன்.
எனது சகாக்களின் டேஸ்டுகள் அந்தந்த வயதில் அந்தந்த வயதுக்கேற்ற வகையிலேயே இருக்க என் ரசனை மட்டும் இறக்கை கட்டி பறந்தது. அந்த அதி வேகத்தால் தானோ என்னவோ இந்த 42 வயதுக்கே லோகாயத விஷயங்களை பற்றி என்னிடம் அளக்கும் மனிதர்களை கண்டால் கொலை வெறியும், பரிதாபமும் ஒருசேர எழுகின்றன. ஆக அந்தந்த வயதில் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத ரசனையும்,கருத்துக்களுமே என்னை எழுத தூண்டின.
மேலும் நான் நிஜ வாழ்க்கையில் பயங்கர சொதப்பல் மன்னன். அவ்வப்போது சொதப்பல்களால் சோர்ந்து போன நிலையில் நடந்தவற்றை அசை போடவும், எதிர்காலத்தை திட்டமிடவும், கற்பனை செய்யவும் எழுத்து உதவியுள்ளது.
என் சகாக்கள் கிணற்று நீச்சலுக்கும், மாங்காய் தோப்புக்கும், ஆற்றில் மீன் பிடிக்கவும் அலைந்து கொண்டிருந்த போது என்னை விட பல வயது மூத்த பெண்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும் என்னை எழுத்தாளனாக்கியது என்று நம்புகிறேன்.
பெண்ணுக்கும் இயற்கைக்கும் அனேக ஒற்றுமைகள் உண்டு. இரண்டையும் வெகு எளிதாக ஆக்கிரமிக்க முடியும். ஆனால் ஆக்கிரமிப்பு மட்டும் அவை குறித்த ஞானத்தை தராததோடு , பெரும் சிக்கல்களிலும் ஆழ்த்திவிடுகிறது. இயற்கை மற்றும் பெண் குறித்த விரிவான புரிதல் ஒன்றே ஆணை பக்குவப்படுத்துகிறது என்பதை சிறு வயதிலேயே புரிந்து கொள்ள முடிந்ததில் நான் பாக்யவானானேன். எழுத்தாளனானேன்.
எனது எழுத்து நடை:
என் லக்னம் கடகம். லக்னாதிபதியான சந்திரன் சூரியனின் ஒளியை பெற்று பிரதிபலிப்பது போல் அவ்வப்போது ஒவ்வொரு எழுத்தாளரை நகலெடுத்தாற்போல் எழுதி வந்ததும் உண்டு. ஆனால் பாக்யாவில் முதல் கதை பிரசுரமாவதற்குள் இந்த நகல் நோய் மறைந்து ஓரளவேனும் சொந்தமான நடை ஒன்று ஏற்பட்ட்விட்டது. இப்போதும் நான் என் நடையில் வெறுக்கும் தன்மை நீ............ள வாக்கியங்கள் தான்
முதல்கதை:
வயது முதிர்ந்தவருடனான இளம்பெண்ணின் திருமணம் பற்றியது. பன்ச்: இதைக்காட்டிலும் அப்பெண்ணை பாழும் கிணற்றில் தள்ளியிருக்கலாமே ! (முதல் கதைங்க)
தற்போதைய கருத்து:
அந்த வ.முதிர்ந்தவர் இன்றைய இளைஞர்களை போல் பான்,பீடி,சிகரட்,சுய இன்பம், ஹோமோ ,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இத்யாதிகளை தொடாதவராய் வாழ்ந்திருந்தால் மனதை சற்றே ரீ ரைட்டபிள் சிடி தனமாய் வைத்திருந்தால் அது சூப்பர் சோடியாகியிருக்கும். பெண் ஆணில் தன் தந்தையை தான் தேடுகிறாள் என்று ஃப்ராய்டு கூறுகிறார்.
மற்றொரு துறையில் நிபுணரான எல்டர் ஃப்ரெண்ட் ஒருவருடன் இந்திய திருமண,தாம்பத்ய வாழ்விலான சிக்கல்களை அலசி பிரச்சினைகளுக்கு தீர்வா நான் செய்த ப்ரபோசலை இங்கே எழுதினால் கொலையே விழலாம். அட கொலையே விழுந்தாலும் என்ன போச்சு..சொல்லியே உடறேன். அதாவது ஒவ்வொரு இளைஞனும் தன்னைவிட கு.ப. 15 வயது பெரிய பெண்ணுடன் கெட் டு கெதர் செய்யனும். (கு.ப. 2 வருடம்) அதற்கு பிறகு 2 வயது குறைந்த பெண்ணை மணந்து கொள்ளலாம். அதே போல் பெண்ணும் தன்னைவிட கு.ப 15 வயது மூத்த ஆண்மகனுடன் கெட் டு கெதர் செய்யனும் (கு.ப.2 வருடம்) இது எப்படியிருக்கு ?
கலைஞரின் வான் கோழி:
எட்டாம் வகுப்பு படிக்கிறப்பவே பத்திரிக்கைகளுக்கு என் படைப்புகளை அனுப்பத்துவங்கி விட்டேன். சில மாதங்களில் வெக்ஸ் ஆகி குங்குமத்துல யாரோ முருகன் எழுதின கதைய என் கதையா பீலா விட்டுட்டன்.
(இந்த சந்தர்ப்பத்துல கலைஞர் எம்.ஜி.ஆரை மனதில் வைத்து எழுதிய வான் கோழி என்ற கதை நினைவுக்கு வருகிறது. அதில் கதானாயகனுக்கு கவிதை எழுதி பேர் வாங்க ஆசை. ஆனால் எழுதற ஸ்டஃப் கிடையாது . சேரிக்கு போய் கவிதைய வாங்கி வந்து தான் எழுதினதா பேர் பண்ணீ ........பேர் வாங்கறார். அவருக்கு ஆண்மை கிடையாது. ஆனால் கல்யாணம் பண்ணிக்கிறார். முதலிரவு. பெட் ரூம்ல இருக்கிற பாத்ரூம்ல வேலைக்காரனை ஒளிச்சு வச்சுர்ரார். இவரு பந்தாவா உள்ளாற போய் கொஞ்சி குலவிட்டு பாத்ரூம் போயிர்ரார். வேலைக்காரனை வேலை எடுக்க அனுப்பிராரு.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை கேவலமான கற்பனை பாருங்க ! அதிலயும் ஹீரோவுக்கான வர்ணனைகள் அப்படியே எம்.ஜி.ஆரை உறிச்சு வச்சிருக்கும்.