Friday, January 4, 2008

ஆட்சியாளர்கள் அவசரமாக "மாத்தி" யோசிக்காவிட்டால் கதை கந்தல் தான்.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற ஆசாமிக்குத் தான் புத்தி மட்டாக இருக்க வேண்டும். இன்றுள்ள உலகமயமாக்கல்,தனியார்மயம்,கார்ப்போரேட் நிறுவங்களின் படையெடுப்பில், ஆட்சியாளர்கள் அவசரமாக "மாத்தி" யோசிக்காவிட்டால் கதை கந்தல் தான். பாக்கிஸ்தானில் பெனாசிரை போட்டுத் தள்ளிவிட்டார்கள். இது எந்த நாட்டிலும் எந்நேரமும் நடக்க வாய்ப்பிருக்கிறது. தீவிரவாதம் என்பது ஆகாயத்தில் இருந்து குதித்து வரவில்லை. வறுமையும் சுரண்டலும் பெற்று போட்ட குழந்தைதான் தீவிரவாதம். எவருக்குமே இன்றைய உலக போக்கில் உடன் பாடில்லை. தீவிரவாதி கூட இந்த ஆசாமி ஒழிந்தால் உலகம் மேலும் பிரகாசமாகும் என்றுதான் போட்டு தள்ளுகிறான்.

நாம் இந்த உலகத்தில் சில காலம் (அண்டர்லைன்) வாழந்து விட்டு போகத்தான் வந்தோம். அதை மறந்து விட்டதால் தான் இத்தனை தொல்லைகள். இன்றைய சாலை விபத்துகள்,எயிட்ஸ்,கொலைகள்,கலவரங்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்துகின்றன. சுகாதாரமான குடிநீர்,வடிகால் வசதி,கழிவறை இல்லாத காரணத்தாலேயே லட்சக்கணக்கான மக்கள் செத்து போகிறார்கள். செக்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாததால் எத்தனை எத்தனை சாவுகள்,கொலைகள்,தற்கொலகள் .ஷிட் !

நாம் நாகரீகமடைந்துவிட்டோம் என்று சொல்ல வெட்கப் பட வேண்டும். உலகம் உடனடியாக திருந்தாவிட்டால் அதிரடியாக திருத்தப்படும். இங்கே முஷாரஃபா? ஷெரீஃபா ? என்பது கேள்வியில்லை. இந்துவா? முஸ்லீமா ? என்பது கேள்வியில்லை.உலகம் நிலைத்திருக்குமா? இல்லையா? என்பதே கேள்வி. க்ளோபல் வார்மிங் காரணமாய் ஜல பிரளயம் வருமோ? கோலா கம்பெனிகள் குடிநீரை ராட்சத இயந்திரங்களால் உறிஞ்சி எடுத்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப ஏற்படும் வாயு சுழற்சியால் பூகம்பம் ஏற்படுமோ? அமெரிக்காவின் அரைவேக்கட்டு தனமான செய்ல்பாடுகளால் மூன்றாவது உல‌க‌ யுத்த‌ம் ஏற்ப‌ட்டு விடுமோ சொல்ல முடியாது.


ஆனால் நாம் மாற்றி யோசித்தால் இதையெல்லாம் த‌விர்க்க‌ முடியாவிட்டாலும் த‌ள்ளிப் போட‌லாம் என்ப‌தில் என‌க்கு எந்த‌ ச‌ந்தேக‌மும் கிடையாது.