Wednesday, January 9, 2008

மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாது இந்திய மாநில அரசுகளின் நிர்வாக செலவுகளை பாதியாக குறைக்க புரட்சிகர திட்டம்

எகானமி பேக்கேஜ்

நிபந்தனை: இந்த யோசனைகள் எனக்கு மட்டுமே சொந்தம். எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட அமலுக்கு நிதி திரட்டவே தீட்டப்பட்ட திட்டம். அதற்காக அல்லாது சுயேச்சையாக இந்த யோசனைகளை அமல்படுத்த விரும்பும் மாநில அரசுகள் என் அனுமதியை பெற்ற பிறகே அமல் படுத்த வேண்டும்.

1.இந்த அரசு இயந்திரம் அமைக்கப்பட்டது ஆங்கிலேயர் காலத்தில். அவர்கள் வெளிநாட்டினர். சுதேசி உத்யோகஸ்தர்கள் மீது நம்பிக்கையின்றி அடுத்தடுத்த கட்டங்களில் மேற்பர்வை/மறு பரிசீலனை இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். இன்று நடப்பது சுதேசி ஆட்சி. எனவே மறுபடி மறுபடி மேற்பர்வை/மறு பரிசீலனைகள் இல்லாது அரசு இயந்திரத்தை வேகமாக செயல்பட செய்ய வேண்டும். இதற்கு சில பூர்வாங்க நடவடிக்கைகள் தேவை. அவை கீழ் வருமாறு:


அ)அரசு ஊழியர்களின் பல்வேறு தகுதிகளை மறு பரிசீலனக்குள்ளாக்க வேண்டும். இந்த மறு பரிசீலனை முற்றிலும் கம்ப்யூட்டரைஸ்ட் ஆக இருக்க வேண்டும். தகுதியிழந்தவர்களுக்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள லாஸ் ஆஃப் பேயில் 3 மாதம் லீவு கொடுத்து மறுபடி சோதனைக்குட்படுத்தி அதிலும் தோற்றால் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும். ஏற்கெனவே உள்ள காலியிடங்களுக்கும், மேற்படி பார்ட்டிகளால் ஏற்படும் காலியிடங்களையும் டெண்டர் அடிப்படையில் (தேவையான தகுதியிருக்க வேண்டும்/குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன் வர வேண்டும்) நிரப்ப வேண்டும்.

ஆ) பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு அரசு அலுவலகங்கள்,மருத்துவ மனைகள்,காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை தர டெண்டர் அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டிய அலுவலகத்தை நிர்ணயிக்க ஜம்ப்ளிங் முறையை பின்பற்ற வேண்டும்.


இ)18 வ‌ய‌து நிறைந்த‌ அனைவ‌ருக்கும் போலீஸ் ப‌யிற்சி க‌ட்டாய‌மாக்க‌ ப‌ட‌வேண்டும்.

ஈ)வேலைய‌ற்றோர்/அர‌சு ஊழிய‌ர்க‌ளில் எவ‌ரை எந்த‌ ப‌ணிக்கு வேண்டுமானாலும் அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும்.

உ)ம‌க்க‌ள் த‌ங்க‌ளை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ம்ப்யூட்ட‌ர் புரிந்து கொள்ளும் வ‌கையிலான‌ ,10 ரூ. முத்திரை தாளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ ப‌டிவ‌த்தில் அர‌சுக்கு அளிக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ டேட்டா பேஸ் அடிப்ப‌டையில் அர‌சு திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

(தொட‌ரும்)