சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் நிர்வாகத்த்துக்கு கடிதம் எழுதினேன்.
அதன் சுருக்கம் வருமாறு:
ஐயா ! உங்கள் பத்திரிக்கையை ஒரு வாசகன் வாங்கிப் படிக்க வேண்டுமென்றால் அவனது பொருளாதார நிலை மேம்பட வேண்டும். அது நிகழ்ந்தாலன்றி விற்பனை உயராது. எனவே வாசகன் 10 ரூபாய் சம்பாதிக்கவோ,சம்பாதித்ததை பெருக்கவோ தேவையான விஷயங்களை பிரசுரிக்க பாருங்கள்.
பணம் குறித்த மனோதத்துவ,அரசியல்,சமூக,பொருளாதார,ஆன்மீக உண்மைகளை பற்றிய என் தொடரை இணைத்துள்ளேன் பரிசீலிக்கவும்.
முதலில் பணம் பற்றிய தொடர் ஒன்று ஆரம்பமானது.( நான் எழுதி அனுப்பிய என் தொடர் அல்ல) பின்பு ஜூனியர் விகடனில் நாணய விகடன் என்று ஒரு பகுதியை ஆரம்பித்தார்கள். இன்று நாணயம் விகடன் தனி யிதழாகவே வெளிவருகிறது. இதற்கு ஆரம்பப்புள்ளி என் கடிதம். ஆனால் இதுவரை ஒரு வரி நன்றி தெரிவிக்கும் கடிதம் கூட அனுப்பாத விகடன் நிறுவனம் தொடர்ந்து தனது பிட் நோட்டீஸ்களை என் விலாசத்துக்கு அனுப்பி என்னை கடுப்பேற்றி வருகிறது.
இனியாவது என் விலாசத்துக்கு (மெயில் உட்பட) விளம்பரங்களை அனுப்புவதை நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பின் குறிப்பு:அம்மன் பாடல்களில் ஓங்காரி, ஆங்காரி என்ற வார்த்தைகள் வருவதை கவனித்திருப்பீர்கள்.ஓங்காரி என்ற வார்த்தைக்கு ஓம் என்னும் ஓங்கார வடிவம் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். ஆங்காரி என்ற வார்த்தைக்கு ஆம் என்ற பீஜ வடிவம் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். மேலும் அகங்கார வடிவம் கொண்டவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
சாக்தேயத்திற்கு திரும்பும் முன்னிருந்து எனில் அகம் அதிகம். அதையும் பாஸிட்டிவாக உபயோகித்துக் கொள்வது என் வழக்கம். நான் ஒருவன் இருக்கையில் என் நாடு நலிவடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுந்ததே ஆப்பரேஷன் இந்தியா. நான் இருக்கையில் என் மக்கள் நச்சு எழுத்துக்களுக்கு பலியாகிவிடக் கூடாது என்ற அகங்காரத்தில் எழுந்ததே என் எழுத்து.
இன்றைய எழுத்துக்களில் சமூக நோக்கத்தை விட வணிக நோக்கம் தான் அதிகம் தென்படுகிறது.