இவை யாவும் 1987 முதல் 1991 வரை தெலுங்கு திரையிசை பாடல்களின் ட்யூனுக்கு என்னால் எழுதப்பட்ட (?) பாடல்கள்
அமுதமே புது வாசம் வீசும் குமுதமே
வானிலே பிறந்து வந்த நாதமே
மதனன் வரைந்த லிகிதமே
பூவில் பாரிஜாதமே (அமுதமே
கன்னம் கண்டு வந்த வண்டு அமரும் கண்ணே தாகம் கொண்டு
காதல் தாகம் தந்த மோகம் சொன்னேன் பாட்டு ராகம் போட்டு
காகம் போன்ற என்னிலே துள்ளி வந்த ராகமே
மானே மதியே மதியின் ஒளியே (அமுதமே
(இது சிரஞ்சீவி,ஸ்ரீ தேவி நடித்த ஜக தேக வீருடு அதிலோக சுந்தரி படத்தில் "ப்ரியத்தமா " என்று துவங்கும் படலுக்கான ட்யூனுக்கு எழுதப்பட்ட பாடல்)
ராகங்கள் ரதமாகும் சிவிகை ஏந்திடும்
சோகங்கள் மலையேறும் மாலை வந்திடும்
***
பாசமில்லே பரிவுமில்லே என்ன பெண்டாட்டி
தாலி கட்டி போயிருப்பேன் உன்னோட நான் திண்டாடி
சாவி கொடுத்த பொம்மை போலே வந்திருக்கேண்டி முன்னாடி
***
முத்தமிழில் முத்தெடுத்து மாலையாக்கினேன்
மூடிவைத்த சிப்பிகளை திறந்து வைக்கிறேன்
தேடி வந்த வார்த்தைகளை கவிதையாக்கினேன்
அவள் பார்வைபட்டு நானும் கூட கவிஞனாகினேன்