Sunday, January 13, 2008

ஜூ.வி. இதழை புரட்டினால் போதும்

சரோஜா தேவி நாவல்களுக்கு கரு தேடி எங்கோ போக வேண்டிய அவசியமில்லை. கடந்த ஜூ.வி. இதழை புரட்டினால் போதும்

கானிப்பாக்க வினாயகர் தாம் புரிந்த கீழ்காணும் அற்புதங்களை தொடர்ந்தால் தமிழ் புத்தாண்டில் எனது பதிவுகள் நூல் வடிவம் பெற்று வெளி வந்த எழுத்து வியாபாரிகளின் வயிற்றை கலக்கி வெளிக்கு வர வைப்பது சாத்தியம் தான்.

நிச்சயமாக கதா காலட்சேபம் செய்யும் எண்ணமில்லை. என்றாலும் எனது சென்டிமெண்ட் காரணமாய் எங்கள் கானிப்பாக்கம் கணபதியை பற்றி சில வரிகள்.
கடந்த பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு நண்பன் தன் குட்டி கோவிலில் சதுர்த்தி சந்தர்ப்பமாக என் பேச்சை ஒலிபரப்ப விரும்பினான். பதிவு செய்தும் கொடுத்தேன்.(அதற்கான என் ஸ்க்ரிப்டை ஹேமந்த் என்ற பார்ட்டி ரீகாப்பி செய்து கொடுத்திருக்க அதை என் மகள் நடத்தும் இண்டியன் பொலிடிகல் க்ளோசப் மாதமிருமுறை இதழுக்கு கொடுத்தேன். அது 2 இதழ்கள் தொடர்ந்து வெளிவந்தது. வினாயகரை பற்றி எழுதி வெளியிட்ட புண்ணிய பலத்தால் எங்கள் மார்க்கெட் சவுக் வெங்கடேசன் ஒக்காபுலரியில் சொன்னால் பல்ப் மாட்டிக் கொண்டுவிட்டது.

சித்தூர் கிருஷ்ணா ஜுவெல்லர்ஸ் இண்டியன் பொலிடிகல் க்ளோசப் மாதமிருமுறை இதழின் சார்பாக முன்னர் வெளியிட்ட எனது மினி ஜோதிட போதினி என்ற 32 பக்க பாக்கெட் புத்தகத்தை ஸ்பான்ஸர் செய்தார்.(முதலில் 1000 பிரதிகள் என்றவர், பிறகு 5000 பிரதிகளுக்கு ரூ.3000 டவுன் பேமென்ட் கொடுத்து விட்டார். எனக்கு நாளை தான் சம்பளம். எது எப்படியோ வினாயகர் என் வினை தீர்த்து என்னை விளையாட விட்டிருப்பதாகவே எண்ணுகிறேன். இதுவல்லாது கானிப்பாக்கம் நிர்வாக அதிகாரி தினகரனுக்கு புத்தாண்டு விளம்பரம் கொடுத்து விட்ட பிறகும், முட்டி மோதி ரூ.20,100 க்கு விளம்பரம் பெற்றுவிட்டேன்,. இதில் 15 சத வீதம் என் கமிஷன். ஏற்கெனவே சேகரித்த ரூ.25,000 த்திலும் 15 சதம் கமிஷன் நிலுவையில் உள்ளது.