Tuesday, January 29, 2008

குற்றமயமாகிவரும் சமுதாயம்

நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் கூட எங்கள் ஊரில் (1982) குடிப்பவன் கெட்டவன் , லஞ்சம் வாங்குபவன் விரைவில் பிடிபடுவான்,வட்டி வியாபாரம் செய்பவன் விரைவில் முதலையும் இழந்து விடுவான் போன்ற நம்பிக்கைகள் இருந்தன. குடிப்பவன் நம்பத்தகாதவன், என்பதால் அவன் கிராம நீக்கம் செய்யப்பட்ட நிலையிலேயே தொடர்வான். அவனுடன் தொடர்பு கொள்பவர்கள் கூட அஞ்சி அஞ்சி தொடர்பு கொள்வார்கள். அவன் வாழ்வில் சகல நம்பிக்கைகளையும் இழந்த பிறகே,வேறு வழியின்றியே குடிக்க துணிவான். நான் 1984 ல் பீரை ருசி பார்க்க மெசானிக்கல் கிரவுண்டுக்கு போக வேண்டியிருந்தது. இப்போது குடிக்காதவனை விரல் விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. குடி,லஞ்சம்,வட்டி,தகாத உறவுகள் மிக மிக அதிகரித்திருப்பதை சமுதாயத்தால் மறைமுகமாகவேனும் அங்கீகரிக்கப்பட்டு விட்டிருப்பதை காண‌ முடிகிறது. முன்பெல்லாம் மேற்சொன்ன குறைகள் உள்ள குடும்பங்கள் தான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கும். இன்றோ இவை யாவும் ஸ்டேட்டஸ் ஆகி விட்டிருக்கின்றன.

குற்றமயமாகாத குடும்பமே இல்லை என்று கூறுமத்தனை இழி நிலைக்கு வந்திருக்கும் ஊரை எப்படி திருத்துவது?