அவனவன் கோடிகள் கொள்ளையடித்து ஜீரணம் செய்து விட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி இருந்து விடுகிறான். அது என்ன இழவோ என் விஷயத்தில் மட்டும் ஒரே ஒரு ரூபாய் சும்மா வந்தாலும் கிரகண காலத்தில் பறவைகள் போல் என் சிந்தனை ஒடுங்கி விடுகிறது. ஒரு வித அச்சம்,உதறல் வந்து விடுகிறது. ஜோதிடம் குறித்த 32 பக்க கையேட்டை கிருஷ்ணா ஜுவெல்லர்ஸ் ஸ்பான்ஸ்ர் செய்து 5000 பிரதிகள் அச்சிட்டு வழங்க உள்ளனர். பேப்பர்,பிரிண்டிங்,பைண்டிங் யாவும் ஒப்பந்த அடிப்படையில் நானே செய்தேன். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 200 ரூ மிச்சமாகியிருக்கும். இத்தனைக்கும் நானும் கூலிக்காரன் போல் கஷ்டப்பட்டேன். என் குறைந்த பட்ச கூலியாக கூட கொள்ளலாம். ஆனாலும் ஒரு கில்ட்டி.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்து,அரசு பள்ளி,கல்லூரியில் படித்துவிட்டு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு எதுவுமே செய்ய முடியாது,நடக்கும் அநியாயங்களை அலி போல்,கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று ஒரு வித ஆத்திரம்.
எனது ஆப்பரேஷன் இந்தியா அமலானால் உலகை உலுக்கும் தீவிரவாதம் முதல் மக்களின் மலச்சிக்கல் வரை யாவும் தீர்ந்து விடும். அந்த என் திட்டத்தை மக்கள் முன் வைக்க நான் எத்தனை பெரிய ஊழல் செய்தாலும் பாவம் சேராது என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க இது போன்ற வரவுகள் கூட என்னை குற்ற மனப்பான்மைக்கு ஆளாக்குவது விசித்திரமாக உள்ளது.