வெற்றிப்பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்
வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்
என்று கவிதை எழுதியவன் நான்.
ஊரே அஞ்சி நடுங்கும் சி.கே.பாபுவுக்கே இன்னும் 2.5 வருடங்களுக்கு உங்கள் உயிருக்கு ஆபத்திருக்கிறது என்று சுய விலாசத்துடன் கடிதம் எழுதியவன் நான்.
ஆனானப்பட்ட சந்திரபாபு முதல்வராயிருக்கும்போதே அவர் மீது நுகர்வோர் மன்றத்துக்கு புகார் கொடுத்தவன் நான்.
கடக லக்னத்தில் பிறந்ததாலோ என்னமோ இந்த சந்திரன் நீசம் பெறும் போது மட்டும் சற்றே தடுமாற்றம்.(உள்ளூறத்தான்)
அதே நேரம்" கைது பண்றோம்" என்று காவல் துறை வந்தால் "சோற்று பிரச்சினை தீர்ந்தது" என்பேன்,
"தூக்குல போடப்போறோம்" என்றால் "வாழ்க்கை பிரச்சினை தீர்ந்தது" தீர்ந்தது என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவேன் என்பதும் நிஜம்.
என் எழுத்துக்கள் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறேன். அந்த நம்பிக்கை நசிந்த மறுகணம் நான் வாழ்வதே வீண் என்று முடிவு செய்து என் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதுவது திண்ணம்.
என்னமோ..எழுத்து வியாபாரிகள் பாடு ஜாலி..கொடுத்து வைத்தவர்கள்.