Wednesday, January 2, 2008

எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்

எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்

முதலில் நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

1.சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான
குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம், போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.

2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.

3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது.


4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.

5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.


6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வ‌ட்டி வ‌சூலிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒருவ‌ர் ச‌ம்பாதிக்க‌ குறைந்த‌து 1000 பேர் அவ‌ரை அண்டி,சுர‌ண்டி பிழைக்கிறார்க‌ள்.

இது மாதிரி இன்னும் 94 விஷ‌ய‌ங்க‌ள் கூற‌லாம். எழுத‌ வ‌ருப‌வ‌ர் இதையெல்லாம் ம‌ன‌தில் இருத்தி , த‌ன் எழுத்தை ப‌டிப்ப‌வ‌ர் இந்த‌ அமைப்பை மாற்ற‌ /சீர்திருத்த‌ முன் வ‌ரும் வ‌ண்ண‌ம், வாச‌க‌ரை மோட்டிவேட் செய்யும் வ‌ண்ண‌ம் எழுத‌ வேண்டும். இல்லாவிட்டால் பேசாம‌ல் ச‌ல‌வை க‌ண‌க்கு ம‌ட்டும் எழுதி கொள்வ‌து ந‌ல‌ம்.