Saturday, January 12, 2008
எண்டமூரி வீரேந்திரநாத்துக்கு கல்தா !
எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார். ஒரு காலத்தில் தெலுங்கில் பெண் எழுத்தாளர்கள் உயரமான,அழகான, தலை முடி நெற்றியில் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பற்றி நாவல் எழுதிக்கொண்டிருந்த போது சற்றே யதார்த்த வாழ்வை களமாக கொண்டு நாவல் எழுதிய ஆசாமி.
வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.
இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.
இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.
அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?
நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட இழவே உனக்கு வந்த மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்பம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்பத்திரியில் சேரனுமாம். பை.காரனை தவிர வேறு எவராவது இது போல் பதில் எழுதுவார்களா?
அட இழவே.. இதற்கும் போலீசுக்கும் என்ன சம்பந்தம்? நான் மாநில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் அனுப்பியவன்.( நடவடிக்கையும் எடுக்கப்பட்டது ,நிச்சயம் இது என் செல்வாக்குக்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல). போலீஸ் என்னத்த பிடுங்க முடியும்? அதுவும் இந்த விஷயத்தில்.
பி.கு: சித்தூர் கிருஷ்ணா ஜுவெல்லர்ஸ் காரர்கள் இந்த ஆசாமியை சில நிகழ்ச்சிகளுக்கு அழைத்து விட்டு பார்சல் செய்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டு கல்தா கொடுத்துவிட்டது ஊரறிந்த ரகசியம்.