Sunday, January 13, 2008

ரஜினி உளறிக்கொட்டுவது புதிய விஷயம் அல்ல.

ரஜினி என்ற லெஜென்ட் இப்போது டிட்டர்ஜென்ட் போட்டு வெளுத்த ரேஞ்ஜில் உளறிக்கொட்டுவது புதிய விஷயம் அல்ல. ரங்கா படத்தில் ரஜினி பேசிய வசனம் (இதோ பார் குரு! உங்களை மாதிரி 100 வயசு வாழனும்னுல்லாம் நான் ஆசைப்பட மாட்டேன் என் இஷ்டப்படி 40 வயசு வரை வாழ்ந்துட்டு போறேன்) இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. நீண்ட ஆயுள் கொண்ட லெஜென்டுகளின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிப்பது சரித்திரத்தில் சகஜமான ஒன்று தான். லேட்டஸ்டாக அந்திமழை யில் அன்னார் உதிர்த்த முத்துக்களை படித்தேன். அரிக்குதுய்யா! புல்லரிக்குது..


இடம்:சிவாஜி பட வெள்ளி விழா

கபில முனி என்பவர் சொன்னாராம் (அதை ரஜினி எடுத்து கூறுகிறார்)

"ஆசைப்படு.ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை.அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்து...அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி...அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் . மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு "

இத‌ற்கும் யோக‌த்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? சாங்கிய‌ யோக‌ம் இதைத்தான் கூறுகிற‌தா? என்ன‌ இழ‌வு இது?

ஆசை என்ப‌து தோன்ற‌ கார‌ண‌ம் ம‌னித‌னையும் ,இந்த‌ ப‌டைப்பையும் வேறுப‌டுத்தும் அக‌ந்தைதான். நான் த‌னியில்லை. இந்த‌ ப‌டைப்பின் பிரிக்க‌ முடியாத‌ பாக‌ம் நான். என்ற‌ உண‌ர்வுட‌ன், ப‌டைப்பில் த‌ன்னையும், த‌ன்னில் ப‌டைப்பையும் பார்ப்ப‌வ‌ன் ம‌ன‌தில் ஆசை என்ப‌து தோன்றாது. என்.டி.ஆர் சினிமாவில் வில்லன் " டேய் இந்த ஊரே என‌க்கு சொந்தம் என்று சொல்வார் . அதற்கு என்.டி,.ஆர் "ஈ தேச‌மே நாதி"(இந்த‌ நாடே என்னுடைய‌து) என்று ப‌தில் சொல்வார். ஒரு நாட்டை என்னுடைய‌து என்ற‌ எண்ண‌மே இத்த‌னை பெருமித‌த்தை,திருப்தியை த‌ரும்போது இந்த‌ ப‌டைப்பே என்னுடைய‌து என்ற‌ உண‌ர்வும், அனுப‌வ‌மும் ஏற்ப‌ட்டு விட்டால் அந்த‌ உன்ன‌த‌ நிலையை த‌ங்க‌ள் க‌ற்ப‌னைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த‌ ப‌டைப்பே தான், தானே இந்த‌ ப‌டைப்பு என்று உண‌ர்ந்துவிட்ட‌ யோகி , அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு, இந்த பிண்டத்தில் உள்ளதை கொண்டு அண்டத்தை கட்டுப்படுத்தும் கலையறிந்த ஒரு யோகி "ஆசைப்படு" என்று சொன்னதாக ர‌ஜினி சொல்வ‌தை ப‌டித்த‌து சிரித்து விட்டேன். அடுத்து பாருங்க‌ள் க‌பில‌ முனி சொல்கிறாராம் ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை. எதை சேர்த்து வைப்ப‌து உண்மையிலேயே புரிய‌வில்லை. ஆசையையா இல்லை. ஆசைப்ப‌ட்ட‌தை அடைவ‌த‌ற்கு விஷ‌ய‌த்தை சேர்த்து வைக்க‌ வேண்டுமாம். (என் குறுகிய‌ மூளைக்கு ஆசை என்ற‌துமே பெண்ணும், விஷ‌ய‌த்தை சேர்த்து வைத்த‌ல் என்ற‌தும் பிர‌ம்ம‌ச்ச‌ர்ய‌மும் தான் ஸ்பார்க் ஆகிற‌து.(அபிஷ்டு..)

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்த‌ வேண்டுமாம். இவ‌ர் என்ன‌த்தை சொல்கிறார். ஒருவேளை ஓஷோ கூறும் காம‌த்திலிருந்து க‌ட‌வுளுக்கா ?

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவிங்கறார்....அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் என்றும் சொல்கிறார். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு என்று முடிக்கிறார்.

துன்ப‌ம் வ‌ருகையிலே சிரிங்க‌ என்ப‌து க‌ண்ண‌தாச‌ன் வாக்க‌ல்ல‌வா?

க‌பில‌ முனி(?) அழ‌கே இத்த‌னை அழ‌காக‌ இருக்கிற‌து. இதில் ர‌ஜினியும் கொட்டேஷ‌ன் விடுகிறார்.(என்ன‌ங்க‌டா இது த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்த் கேடு)

அடுத்து ர‌ஜினி கோட்டேஷ‌னை பார்ப்போம்

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக் கொண்டால் , உடம்பு கெட்டுப்போய்விடும் . சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால் , வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

இதை ரஜினி தனது டேபிள் கண்ணாடி கீழே தட்டச்சி வைத்திருந்தால் ரஜினி 25 விழாவில் 75 ரூபாய் வாட்ச் ர‌ஜினி ப‌ட‌ம் போட்டு 250 ரூபாய்க்கு விற்ற‌ கொடுமை ந‌ட‌ந்திருக்காதே...