Tuesday, January 15, 2008

பாரத தேசத்திலிருந்து பசியை விரட்டமுனைந்தேன்

பாரத தேசத்திலிருந்து பசியை விரட்டமுனைந்தேன்
சுரண்டலுக்கு சுறுக்கிட முயன்றேன்..அவ்வளவே!

பெரியசூதாட்டமே ஆடிவிட்டேன்.
இதில் பசி என்னை உண்ணட்டும் என்று
என் உணவை மட்டுமல்ல
மண் உண்ணட்டும் என்று என்னையே பணயம் வைத்தேன்.

வெற்றி தான் கிட்டவில்லை.
வடக்கில் வெள்ளம், தெற்கில் வறட்சி
நதிகளை இணைப்போம் என்றால்,
அந்த திட்டத்தை சிகப்பு நாடா சுருக்கிட்டே கொன்று போடுவார்கள்.

10 கோடி வேலையற்றஇளைஞர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்திடகனவு கண்டேன்.

என் கனவுக்கு 20 வருடஉழைப்பை உணவாகதந்தேன். அதன் பகாசுரபசி தீர்வதாயில்லை.

ஆட்சி முறை மாறினால் வழி பிறக்கும் என்று அதிபர் முறை தேர்தலுக்கு குரல் கொடுத்தேன்.

என் தொண்டை வறண்டது.
அதை நனைக்கதண்ணீர் கிடைக்கவில்லை. ஒரு ரூபாய் செலவழித்து மினரல் வாட்டர் வாங்குவதை விடயாரேனும் இரண்டு தலைவர்களுக்கு 9999 ஆவது முறையாகஇரண்டு தபால் கார்டாவது எழுதலாமே என்று தாகத்தை தள்ளிப்போட்டேன்.

வீட்டு உரிமையாளர்களின் உரிமையில்(?) தலையிடும் துணிச்சல் இல்லாததால்
நள்ளிரவுகளில் நாட்டுத்தலைவர்களுக்கு தாக்கீதுகள் தயாரிக்கஎன்னைப்போன்றே தானுருகி, ஒளிபெருக்கும் மெழுகுவர்த்திகளை உபயோகித்தேன்.

இந்தஉழைப்பு தந்தநிறைவில் என் பிழைப்பையும் மறந்தேன்.

நாட்டின் தலையெழுத்தை மாற்றும் உத்வேகத்தில் என் தலையெழுத்தின் தரத்தை தரம் கெட்டவரும் தட்டித் தரம் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டேன்.

என் லட்சியத்தை அலட்சியம் செய்தவர்களைப் பற்றி என்றுமே நான் அலட்டிக்கொள்ளவில்லை

கேவலம் சுயநலத்துடன் முழு முட்டாள்கள் தொடர்ந்து வென்றாலும்
மாசு மருவற்றஎன் பொது நலத்துடன் முப்போதும் நான் தோற்றாலும்
கவலையுற வில்லை.

உழுதவனுக்கு உழக்கும் மிஞ்சாதநிலை மாற்றகூட்டுறவு பண்ணை விவசாயத்துக்கு வாதாடினேன்.
கருப்புப்பணத்தை கருவறுக்கபுதியகரன்சி அறிமுகம் என்றேன்.

வழுக்கை தலையர்கள், தம் சோடா புட்டி கண்ணாடிகள் வழியாக என் திட்டத்தை பார்த்து ஓட்டைகளை தேடுவார்கள் என்று தெரியும். அதற்காகவே பொருளாதாரதத்துவங்களை புரட்டினேன்.

எனக்கு கலைமகள் அருள் இருந்ததே தவிர, அலைமகள் அன்றும், இன்றும் மருள் தவிரவேறேதும் தந்ததில்லை, பாரதிக்கு சக்தியை தந்தஅதே சக்தி கொடுத்தசக்தியில் பாரத பாராளுமன்றத்தின் கதவுகளை பலமாகவே தட்டினேன்.

ஆந்திரமுதல்வர் அலுவலககுப்பை கூடைகளுக்கு தெரியும், என் திட்டம் பற்றி நான் எழுதிய நினைவூட்டு கடிதங்களின் எண்ணிக்கை.

மேற்படி நினைவூட்டு கடிதங்கள் எழுதியநேரத்தில் ஸ்ரீராமஜெயம் எழுதியிருந்தால் ராமன் என்னிடம் கொத்தடிமையாகஇருந்திருப்பான்.

சரி பாரதத்தின் வறுமை நிலை கண்டு என் நெஞ்சு வேதனையில் வேகவேண்டும், வெந்து சாகவேண்டும் என்பது விதியானால் டோன்ட் கேர் ..