ஒரு 99 படங்கள் (ரஜினி,கமல்,பாம்பு.ஐயப்பசாமி எல்லாம் கலந்து ) எடுத்த பிறகு 100 ஆவது படமாக எடுக்க திட்டமிட்ட கதை இது. (யாரிட்டயும் சொல்லிராதிங்க சுட்டுற போறாங்க)
ஒரு கிராமம். கிராமமத்தனை பெரிய கோவில். வருசத்துல 364 நாள் அந்த கிராம மக்கள்தான் போய் வருவாங்க . ஒரு நாள் மட்டும் ஜனாதிபதி,பிரதமர் உட்பட எல்லோரும் வருவாங்க(சும்மா அப்படி கதை தானே).
அந்த கோவில் வாசல்ல ஒரு பிச்சைக்காரன்,தேங்காய் விற்பவன் ஒருத்தன், ஒரு ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் உத்யோகஸ்தர் ஒருத்தர். இவங்களை சுத்தி தான் கதை.
(சொல்லவே இல்லையே படம் மொத்தம் கருப்பு வெள்ளை/திருவிழா மட்டும் கலர்)
ஒரு நாள் பிச்சைக்காரன் செத்துர்ரான்.அவன் பிணம் அநாதையா கிடக்கு. இதை பார்த்துட்டு தேங்காய் வியாபாரி தன் நிலை இப்படி ஆகக்கூடாதுன்னு முடிவு கட்றான்.
தினசரி கோவிலுக்கு வந்து போற ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் உத்யோகஸ்தரை அவர் வீட்டுல போய் பார்த்து பேசறான். தனக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா தன் இறுதி சடங்கை அவர் நடத்தனும்னு கேட்டு கிட்டு பணம் தர்ரான்.
பத்து நாள் கழிச்சு தே.வியாபாரிக்கு ஒரு ஆக்ஸிடன்ட் நடக்குது. ஆஸ்பத்திரில அட்மிட். சுத்தி சுத்தி பார்க்கிறான். ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் உத்யோகஸ்தரை காணோம். டிஸ்சார்ஜ் ஆனபிறகு நேரா அவர் கிட்ட போறான். வீட்டு முன்னாடி பந்தல்,
அவர் மகளுக்கு கல்யாணம் நடக்குது. இவன் போய் அந்தாளை சண்டை பிடிச்சு கொடுத்த காசை திருப்பி கேக்கிறான். அவர் மகள் கையில இருக்கிற ஒரு ஜோடி தங்க வளையலை காட்டறார். இவன் அதை பிடுங்கிகிட்டு வந்துர்ரான். வரும்போது கிராஃபிக்ஸ்ல விளையாடறோம். அந்த வளையல் பெரிசாகி கிட்டே போகுது. இவன் திணர்ரான். ஒரு கட்டத்துல அது கீழ இவன் நசுங்கி போறாப்பல காட்டனும். உடனே ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன். வளையலை திருப்பி கொடுத்துர்ரான்.
இனி 365 ஆவது நாள் திருவிழா நடக்குது. ஸ்வாமிக்கு வெண்சாமரம் போடறவன் காய்லா படுத்துர்ரான். அந்த சேன்ஸு தே.வியாபாரிக்கு கிடைக்குது ,கடைய ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் உத்யோகஸ்தர் பார்த்துக்கறார். தேர் மேல ஸ்வாமி,பக்கத்துல தே.வியாபாரி சாமரம். உலக டி.வி.,சேனல் எல்லாம் அங்கயே கிடக்கு.(ஜனாதிபதி,பிரதமர் எல்லாம் வராங்க இல்ல).
திருவிழா முடியுது. அய்யர் இறங்கிறார். தே.வியாபாரி இறங்கலை. இவர் உசுப்புறார்.அவனுடைய உயிரற்ற உடல் சரிகிறது. உடனே டைட்டில்ஸ் ஆரம்பம் எப்படி யிருக்கு?
Note:
என்னக் கவர்ந்த படம் ஆனால் நிச்சயம் ப்ளாஃப் ஆகியிருக்கும் படத்தின் பெயர் கோகுலத்தில் சீதை என்று நினக்கிறேன். சம்பளம் வாங்க வேலூர் செல்லும்போது பஸ்ஸில் பார்த்தேன். தேவதை தனமான பெண் ஒருத்தி, கர்ஸ்ட் ஃபேமிலியை திருத்துவது அரத பழசான தீம். அதிலும் அவள் எதையோ பெற இதையெல்லம் செய்வதுபோல் காட்டுவதும் பழைய டெக்னிக் தான். இதே படத்தை ஜெயராமை விட சுமார் மர்க்கெட் உள்ள நடிகர் மற்றும் சிவாஜி,கு.ப. ராஜ் கிரணை போட்டு எடுத்திருந்தால் கூட பேர் சொல்லியிருக்கும் என்பது என் கருத்து. டைரக்டரின் சாலாக்குகள் யாவும் இந்த குறைபாட்டால் போனியாகவில்லை போலும். உங்கள் கருத்து?