ராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுவார்: சாதகனின் சாதனையை பொறுத்து ஆள்வோர் மனம்,உட் பட யுகம் கூட மாறிவிடுமாம். அது நிஜம்தான் என்பதை என் அனுபவத்தை கொண்டே நிரூபிக்கமுடியும். (அதை பின்னர் பார்ப்போம்)
தெய்வங்களின் மொழி எனக்கு புரிய ஆரம்பித்து பல காலம் ஆயிற்று. நேற்று ஹோட்டல் குருவில் பார்ஸல் மாறி , 4 பரோட்டாக்கள் கிடைத்தததை கூட நான் தெய்வத்தின் திருவிளையாடலாகவே பார்க்கிறேன். ஹோட்டல் பெயர் குரு. மேலும் மேலும் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள குருக்களின் படங்களில் முதல் படமே பிரம்மங்காருவின் படம் தான்.
என் மகள் நடத்தும் சிறு பத்திரிக்கையில் அன்னாரின் உபதேசங்களை தொகுத்து எழுதினேன் . அதற்குண்டான கூலிதான் பரோட்டா பார்சல். அதே சமயம் பிராக்டிக்கலாகவும் சிந்திக்கிறேன். நான் அந்த கோட்டலின் ரெகுலர் கஸ்டமர். அதன் ஓனர் என் நண்பனின் நண்பன் நாளையே சென்று விஷயத்தை சொல்லி துண்டு விழும் பணத்தை கொடுத்து விடுவேன் அது வேறு விஷயம்.
ஆனால் தெய்வம் /குரு என் திருப்பணியை ஏற்று சன்மானமும் தருவது போன்ற உணர்வை நான் ஏன் இழக்க வேண்டும்.
எனக்கு எந்த விஷயத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் இது என் கடைசி பிறவி என்பதில் மட்டும் சந்தேகமில்லை.இதில் நான் வசூலிக்க வேண்டிய யாவும் வசூலாகிவிடும். என்னிடம் வசூலிக்கப்படவேண்டியவை யாவும் வசூலிக்கப்பட்டுவிடும்.
என் வாழ்வு என் பிடியை விட்டு நழுவி எத்தனையோ காலமாகிறது. ஜங்ஷன் என்பார்களே அது போன்ற ஜங்ஷனில் தவறான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டேனோ என்ற சந்தேகம் இப்போதும் அவ்வாப்போது எழுவதுண்டு. ஆனால் ஓஷோ சொல்வது போல் சகலமும் ஒரு புள்ளியை நோக்கியே என்னை செலுத்தியிருப்பதை உணர முடிகிறது. என் வாழ்வு பிறர் கண்களுக்குமோசமாக எடிட் செய்யப்பட்ட படம் போல் தோன்றினாலும் என்னை பொறுத்தவரை இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி மிக சரியாக புரிகிறது.
இறைவனும் நானும் ஒரே கட்சி. எம்.ஜி.ஆர்/காளிமுத்து போல . நான் காளிமுத்து
தலைவன் தடுத்தாலும் விடேன் என்று ஆர்பரிப்பது உண்மைதான். இதுவும் எம்.ஜி.ஆரின் அனுமதி பேரில்தான் நடக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். அவர் இந்த உலகை அழிக்க இருப்பதும் உண்மை. நான் அதை தடுக்க/கு.ப. அதன் விளைவுகளை குறைக்க எண்ணுவதும் செயல் படுவதும் உண்மை . அதை இறைவன் வேடிக்கை பார்ப்பதும், அவ்வப்போது தடைகளை உண்டாக்குவதும் உண்மை. அழிவு உண்மை. என்னால் ஒரு ...ம் பிடுங்க முடியாது என்பதும் உண்மை.
எப்படியோ என் பேச்சுக்கும் எழுத்துக்கும் என் மக்கள் செவி சாய்த்து என்னை மக்கள் தலைவனாக்கி என் தலைவனிடமிருந்து விலக்கிவிடாது மூட பக்தனாகவே தொடரச்செய்யும் என் விதிக்கு நன்றி