Monday, January 7, 2008

ஆண்,பெண் என்ற ஒரே எண்ணம் உந்தி தள்ள ப்டுத்து கொள்கிறார்கள்.

ஆனந்த விகடனில் புரட்சி இலக்கியம். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஆணும் ,பெண்ணும் படுத்துக் கொள்கிறார்கள். ஜஸ்ட் ..எல்லாவற்றையும் மறந்து ஆண்,பெண் என்ற ஒரே எண்ணம் உந்தி தள்ள ப்டுத்து கொள்கிறார்கள். இது தான் கதை. தமிழ் கூறு நல்லுலகு இன்னும் இது போன்ற புரட்சி இலக்கியங்களுக்கு தயாராகவேண்டும். என்னடா இது தமிழ் இலக்கியத்துக்கு பிடித்த சனி. ஏதோ தொலக்காட்சி கலாச்சாரத்துடன் போட்டியிட படங்களாய் (அதுவும் ஃபேஷன் டி.வி.பிச்சை வாங்கணும் போல)வெளியிட்டு தள்ளுகிறார்கள் என்று மனதை ஆற்றிகொண்டால் இப்போது வெளியிடும் கதைகளிலும் புரட்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

மனிதனில் மனிதத்தை வளர்க்கத்தான் இலக்கியம் என்பதை இந்த புரட்டர்களுக்கு வேறு எந்த மொழியில் தான் சொல்வதோ?

மனிதனை மிருகமாக்க சரோஜா தேவி நாவல் போதும். அதற்கு பொன்விழா கண்ட விகடன் தேவையா?