Tuesday, March 30, 2010

மணியம்மையை அறைந்த பெரியார்


என்.டி.ஆர் கூட தம் மனைவியை அடித்திருக்கிறார். இதை அவரே (மனைவி) சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார்.

அட இவ்வளவு ஏன் பெண்கள் சுதந்திரத்துக்காகவும், சம உரிமைக்காகவும் சமர் புரிந்த பெரியார் கூட மனைவியை அடித்திருக்கிறார்

எப்படியும் சனங்க பொங்கி எழுந்துருவாங்க. எப்போ? ஏன்? எப்படிங்கற விஷயம் அடுத்த பதிவில்

இந்த உலகத்திலேயே மனைவியை அடிக்காதவங்க ரெண்டு பேர்தான் .ஒருத்தன் பிறக்கவே இல்லை. இன்னொருத்தனுக்கு கல்யாணமே ஆகலை.

என்னைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் ரியலி ஹி ஈஸ் கிரேட். கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தாலும் ஹி ஈஸ் கிரேட் தான்.

ஒரு முறை கற்பனை செய்துகொள்ளுங்கள் எம்.ஜி.ஆரை புரட்சி தலைவர் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடியபோது கலைஞர் வகையறா ஏகத்துக்கு கிண்டலடித்தது உண்டு. ஆனால் இன்று திரும்பி பாருங்கள் அவர் வாழ்க்கையே ஒரு புரட்சிதான்.


ஆமாம்!
ஏதோஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாட வந்த ஒரு நடிகையை தனியறையில் விசேஷ நடனம் ஆடச்சொல்லி இரண்டு முது பெரும் தலைவர்கள் ரசித்ததாகவும் (அதில் ஒருவர் மூப் படைந்து போய் சேர்ந்து விட்டார். இன்னொருவரும் மூப் படைந்து நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். இதற்கு பழி வாங்கவே அந்த நடிகை ஆக்டிவ் பாலிடிக்ஸில் தூள் பறத்தினார் என்று ஒரு ஸ்கூப் உண்டு இது எந்தளவு நிஜம் தெரியாது.

உண்மையில் நான் மனிதர்களிலான சூரிய சந்திர குணாம்சங்களை விவரிக்கவே மேற்படி பதிவை போட்டேன். அதென்னவோ பாவம் எம்.ஜி.ஆர் விஷயம் குறுக்கிட்டுவிட்டது. இருக்கட்டும். அதை தொடாமலிருந்திருந்தால் இத்தனை பேர் படித்திருக்கவே மாட்டார்கள். உனக்கு 22 எனக்கு 32 தொடர் படுத்தே விட்டது. மேற்படி பதிவு ஆக்சுவலி மேற்படி தொடரின் அத்யாய முயற்சிதான். ஓகே நான் சூரிய சந்திர மனிதர்களை பற்றி தனிப்பதிவு போடுவதாய் சொல்லியிருந்தேன் அல்லவா. அந்த விவரங்களை கீழே கொடுத்துள்ளேன் படியுங்கள். ஆதரவு தொடர்ந்தால் இந்த விஷயத்தை ஆழமாக ஆராயலாம். இல்லேன்னா ஜானகியை பின்னெயிடுத்த எம்.ஜி.ஆர் மாதிரி நிறைய ஸ்கூப் கைவசமிருக்குங்கண்ணா

.. Now Go Ahead with the Speacial feauture !

உனக்கு 22 எனக்கு 32 (OR) சூரிய சந்திர குணாம்சங்கள்.




வீட்டுக்கு வந்து ஜகன் கிட்டே பேசினதை எல்லாம் மாயாகிட்டே சொன்னேன். மாயா, "ஏய் நெஜமாவா சொல்றே. நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக ஊருக்கே வீட்டை கட்டி கொடுத்தும் தங்களுக்கு சொந்த வீடு இல்லாம இருக்கிற கட்டிட தொழிலாளிகளுக்கு சொந்த வீட்டை தவணைல தர்ர மாதிரி இவ்ளோ பெரிய ப்ராஜக்டா? அதுலயும் போட்ட முதலுக்கு ஜஸ்ட் பாங்க் வட்டி கட்டுப்படியானா போதும்னு முடிவு பண்ணியா? "ன்னு மறுபடி மறுபடி கேட்டாள்.

நான் மார்புக்கு குறுக்கே கை கட்டிக்கிட்டு "யெஸ்"னேன். மாயா சட்டுனு என்னை இழுத்து அணைச்சிக்கிட்டு கன்னத்துல முத்தமிட்டாள்.

"ஏய் என்ன இது ?"

" நீ எனக்கு ஒரு பரிசு கொடுத்தே .. நான் அதுக்கு நன்றி சொன்னேன்"

"ஓஹோ .. நான் அப்படி நினைக்கல. நான் என்னவோ ஐடியல் ஹி அது இதுன்னு உன்னைவிட்டு விலகியே வந்துட்டாப்ல ஒரு ஃபீலிங். உனக்கு எப்படியாவது நெருக்கமாகனும்னு துடிச்சிக்கிட்டிருந்தேன். நீ நேத்து பேசினப்ப உன் தொலைதூர பார்வை, அதுல மிதந்த கனவு , தொனிச்ச சின்சியாரிட்டி இதெல்லாம் என்னை அசைச்சுருச்சு. இந்த ஒரு ப்ராஜக்டை மெட்டீரியலைஸ் பண்ணா போதும் மாயா குட்டி நாய் குட்டியா காலண்டை விழுந்து கிடப்பானு ஒரு நெனப்பு. அதனாலதான் கமிட் ஆனேன்"

"ச்சீய்.. உனக்கேண்டா இப்படி ஒரு நினைப்பு.. வந்தது.. நான் உன்னை இந்த நாட்டுக்கே ராசாவாக்கி பார்க்கனும்னு கனவு கண்டவள். ராசாவானா நீ என்னை விட்டு எந்தளவுக்கு விலகிப்போவேனு தெரியாதா எனக்கு?"

"அது கரெக்டுதான் கண்ணு ஆனால் நடுவுல ஒரு தடவை நான் என்.டி.ஆர் தோல்விக்கான காரணங்களை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தப்ப உனக்கு எதுக்கு இதெல்லாம்னு சொன்ன மாதிரி ஞா"

"அதுக்கு தான் பழைய தமிழ் சினிமா மாதிரி நீளமா வசனம் பேசி என்.டி.ஆர் என் வாழ்க்கைல குறுக்கிடலன்னா தெலுங்கு இல்லே. தெலுங்கு இல்லேன்னா உன்னோட காதல் இல்லேனு எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டயே"

"அப்போ நீ என்னவோ பதுங்கின மாதிரி இருந்ததே தவிர என் ப்ராஜக்ட்ல உனக்கேதும் இன்ஸ்பிரேஷன் இருந்ததா தெரியலியே?"

"அப்போ ஜஸ்ட் ஒரு தலைவனோட தேர்தல் தோல்விக்கு இந்தளவுக்கு ரியாக்ட் ஆகனுமா? இவன் ஓவர் ரியாக்ட் பண்றானு ஒரு மேம்போக்கான எண்ணம் உள்ளூற இருந்தது நிஜம்தான். ஆனால் என்.டி.ஆர் டெத் ஆனபிறகு பிரபலங்கள் அவரை பத்தி யும், அவருடனான தங்களோட அனுபவங்கள் பத்தியும் பேசினதை எல்லாம் டி.வில பார்த்துக்கிட்டிருந்தப்போதான் தெரிஞ்சது.. ரியல்லி ஹி ஈஸ் எ லெஜண்ட். மேலும் நீ ஜோஸ்ய புஸ்தகங்களை ஆராய்ச்சிபண்றப்ப மெயின்டெய்ன் பண்ண குறிப்பு நோட்டை பார்த்தேன். அதுல எவ்ரி மேன் ஈஸ் எ ப்லேனட்னு ஒரு சித்தாந்தத்தையும் என்.டி.ஆர் சூரியன், நீ சந்திரன் ங்கற உன் கஸ்ஸிங்கையும் படிச்சேன்"

"மொத்தத்துல நீ என் அலமாரிய குடையற வேலைய விடலே. இரு இரு பெரிய பூட்டா போட்டுர்ரன்"

"முதல்ல ஒழுங்கா உன் பேன்டுக்கு ஜிப் போட்டு பழகு .அப்புறம் அலமாரிக்கு பூட்டு"

"ச்சீ இதை முதல்லயே சொல்ல கூடாது"னு செல்லமா கோவிச்சுக்கிட்டு ஜிப் போட்டேன்.

மாயா, லேசா ஸ்மைல் பண்ணிக்கிட்டே மறுபடி என்னை கிட்டே இழுத்து "நீ இந்த நாட்டுக்கே ராசாவானாலும் சரி நான் இல்லாம உன்னால குப்பை கொட்ட முடியாது. அட்லீஸ்ட் நீ ஜிப் போட மறந்துட்டா ஞா படுத்த ஆள் வேணுமில்லியா?"ன்னாள்.

"அப்போ நீயும் என்.டி.ஆர் கேரக்டர்ல இம்ப்ரெஸ் ஆயிட்டே"

" நோ கண்ணா ! இன்னும் எத்தனை யுகம் போனாலும் ஆம்பளைங்களால பொம்பள மனச புரிஞ்சிக்க முடியாது. பொம்பளைக்கு எங்கயோ இருக்கிற சூரியன் , எங்கயோ இருக்கிற என்.டி.ஆர் எல்லாம் முக்கியமில்லை. அவளுக்கு மை மேன் னு சொல்லிக்க, அவளை காதலிக்க ஒரு மேன் வேணும். யாரோ சூரியன்னு தெரிஞ்சிக்கிட்டதுக்கு நான் கன்வின்ஸ் ஆகலை. அந்த சூரியனோட ஒளிய வாங்கி இதமா பிரதிபலிக்கக்கூடிய சந்திரன் நீனு தெரிஞ்ச பிறகு கன்வின்ஸ் ஆயிட்டன்."

"த பார்ரா! பொம்பளையோட இந்த சைக்காலஜிக்கு காரணம் என்ன தெரியுமா? ஷி ஈஸ் வீக். பலவீனமே பாபங்களின் கங்கோத்ரினு விவேகானந்தர் சொல்றாரு"

"இருந்துட்டு போட்டுமே. எல்லாருமே என்.டி.ஆரா இருந்துட்டா போதாது. அது மாதிரி கேரக்டரை அட்மைர் பண்றதுக்கு உன்னை மாதிரி பெண்மை குணங்கள் கொண்ட கேரக்டரும் தேவை. நீ மட்டும் இருந்துட்டா போதாது. உன்னை அட்மைர் பண்ண என் மாதிரி ஒரு பொம்பளையும் தேவை. அப்போதான் லைஃப்ல மெலோ ட்ராமா இருக்கும். வாழ்க்கைன்னா முரண்பாடுகளோட கலெக்சன் தான். முரண்பாடுகள் இல்லேன்னா மனித வாழ்க்கையே போர்டம் ஆயிரும்"

"மாயா குட்டி இப்போ பைல இருந்து பூனை குட்டி வெளிய வந்துருச்சு. உன்னோட நம்பிக்கை என்னடான்னா சூரியன் மேற்கு திசைல மறைஞ்சுட்டான். இப்போ நம்மாளு சந்திரன் மாதிரி உதிப்பான்னு முடிவு கட்டிட்டயா? அந்த பப்பெல்லாம் வேகாது. லோக்கல்ல ஒரு சூரியன் இருக்கான். அதான் ஜகன் சார். அவருக்கு ஒரு சூரியன் இருக்கார் அது ஒய்.எஸ்.ஆர்.

சூரியன் இல்லேன்னா சந்திரனால ஒரு மயிரும் பிடுங்க முடியாது. சந்திரன் தன் ஓளியில சில அல்லிமலர்களை பூக்க வைக்க முடியும், ஜஸ்ட் ஒரு இன்ஸ்பிரேஷனை தர முடியும். ஆனால் சூரியன் அப்படி கிடையாது சோலார் பவர், விட்டமின் டி, விட்டமின் ஈ, கிருமிகளை நாசம் பண்ணும், தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க உதவும். சூரியன் இல்லேன்னா பொழப்பே நாறிப்போயிரும். சூரியன் இருக்கிற வரை தான் சந்திரனுக்கு மரியாதை.

வேணம்னா ராமகிருஷ்ணரோட மறைவுக்கு பிறகு சாரதா அம்மையார் ஏத்துக்கிட்ட ரோலை ஏத்துக்கிட்டு இன்னொரு சூரியன் உதயமாற வரைக்கும் மக்களுக்கு ஆறுதல் தரமுடியும் தட்ஸால்"

"ஏய்.. இப்பத்தான் உன் அந்தரங்கமே எனக்கு புரியுது"

"அடடா.. என்ன நீ இப்படி கலாய்க்கிறே. இப்பத்தான் ஜிப் போடலன்னு சொன்னேன் .போட்டாச்சு. உள்ளாற டெண்டெக்ஸ் வேற இருக்கு. அதை மீறி அந்தரங்கம் தெரியுதுன்னா கலாய்ப்புதானே"

"அப்போ நான் சரியான பாயிண்டை பிடிச்சிட்டேனு அர்த்தம். உனக்கு என்.டி.ஆர் மேல இருக்கிற அட்மைரேஷனை விட சந்திரபாபு மேல இருக்கிற அட்மைரேஷன் தான் அதிகம்.. இரு இரு..........உணர்ச்சிவசப்படாதே. ஆக்சுவலா நீயும் சந்திரபாபுவோட கேரக்டர்தான். ஆனால் அதுக்கு மாறா என்.டி.ஆரை அட்மைர் பண்றே.இது ஆப்போசிட் போல்ஸ் அட் ராக்ட் ஈச் அதர் பிரின்ஸிபிள் படி சாத்தியம் தான். உனக்கும் யாரோ ஒருத்தரோட நேம் அண்ட் ஃபேமை உபயோகிச்சிக்கனும். யாரோ போட்ட பாதைய லேசா மராமத்து பண்ணிக்கிட்டு போயிரனும்னு ஒரு எண்ணம் இருக்கு. ஆனால் அவங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க கூடாதுங்கற மோரலும் இருக்கு. அவிக இல்லன்னா உன் பப்பு வேகாதுங்கற ப்ராக்டிக்காலிட்டி, இன்செக்யூரிட்டியும் இருக்கு"

நான் எழுந்து நின்னு படபடனு கை தட்டினேன். " கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்ங்கற மாதிரி தூள் கிளப்பிட்டே மாயா ! ஓப்பனா சொன்னா நான் சகட்டு மேனிக்கு படிச்சு கிழிச்சு மாசக்கணக்கா அனலைஸ் பண்ணிக்கிட்டிருந்த விஷயத்தை படார்னு போட்டு உடைச்சே. யுவார் கிரேட்"

" எதிராளிய, அதுவும் மனைவிய க்ரேட்டுனு சொல்ற மனப்பக்குவம் இருக்கிற ஆண்தான் கிரேட். இப்போ சொல்லு.. என்.டி.ஆர் இல்லே. ஐ மீன் சூரியன் மேற்கு திசைல மறைஞ்சுட்டான். மிச்சமிருக்கிறது சந்திரன். சந்திரனா நீ என்ன பண்ணப்போறே"

" நான் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே. ஒய்.எஸ்.ஆர். என்.டி.ஆர் கிட்டே இருந்த குண நலன்ல 70 சதவீதம் இவர்கிட்டே இருக்கு. இன்னும் சொல்லப்போனா என்.டி.ஆர் தன் பெயர் புகழுக்கு பங்கம் வர்ர மாதிரியிருந்தா தன்னையே நம்பினவங்களை கூட கழட்டிவிட்டுருவாரு.ஆனால் ஒய்.எஸ்.ஆர் அப்படியில்லே. அவர் ஆக்டர்,இவர் டாக்டர். அவர் ஸ்டேட்பார்ட்டி, இவர் சென்ட்ரல் பார்ட்டி இப்படி சின்ன சின்ன வித்யாசங்கள் தான் இருக்கு. என்.டி.ஆர் எல்லா விஷயத்திலும் ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட். ஆனால் ஒய்.எஸ்,ஆர் கில்லாடி. மாறிப்போன காலத்துக்கு என்.டி.ஆர் ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகாது. 1984ல பாஸ்கர்ராவ் எபிசோடுக்கும், 1994 சந்திரபாபு எபிசோடுக்கும் வித்யாசம் பார்த்தாலே தெரியும் காலம் மாறிப்போச்சு. சனத்துல நியாய உணர்வு குறைஞ்சிபோச்சு. ரெபல் ஆகிற தத்துவம் குறைஞ்சி போச்சு. இன்னைக்கு ஒய்.எஸ்.ஆர் தான் கரெக்ட். ஒரு தேசீய கட்சில ஆஃப்டர் ஆல் ஒரு பி.சி.சி. ( மானில கட்சி தலைவர்) சி.எல்.பி (சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்) லீடரோட இம்பாக்ட் பெரிசா இருக்க வாய்ப்பே இல்லை. ஆனா ஹி ஈஸ் டூயிங் பெட்டர். "

"அப்போ சாரதா அம்மையார் ரோலை ப்ளே பண்ண போறே. இன்னொரு விவேகானந்தர் அதாவது ஒய்.எஸ்.ஆர் வர வரைக்கும் "

"யெஸ். "

"ஒய்.எஸ்.ஆருக்கு அப்புறம்?"

"அவரோட சன் ஜகன் மோகன் ரெட்டி இருக்காரு . யங்க் சாப். சார்மிங் பர்சனாலிட்டி"

"அவருக்கு அப்புறம்?"

"அப்போ பார்க்கலாம்"

"ஏய் மொத்தத்துல நீ சந்திரபாபுவா மாறிட கூடாதுனு ரொம்ப கேர் எடுத்துக்கறே அப்படித்தானே.. ஆமா சந்திரபாபுன்னா உனக்கேன் இத்தனை வெறுப்பு?"

ஜானகியை பின்னியெடுத்த எம்.ஜி.ஆர்



எம்.ஜி.ஆர் தன் மனைவி ஜானகி எம்.ஜி.ஆரை பின்னியெடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார்.இது தொடர்பாக ஒரு மூன்றாவது நபர் தலையிட்ட போது அவருக்கு என்ன நேர்ந்தது இத்யாதி விசயங்கள் சர்வ நிச்சயமாக இந்த பதிவில் உள்ளன. பொறுமையாக படிக்கவும்.
மனிதர்கள் யாவரும் சமம் என்பது அவர்களின் அத்யாவசிய தேவைகள் நிறைவேற்றப்படும் வரையிலும்,உயிர் பாதுகாப்பு,செக்ஸ் தேவைகள் நிறைவேற்றப்படும் வரை மட்டுமே. பலருக்கு இவற்றை பெறும் தகுதி கூட இல்லாதிருக்கும். என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் இவை அவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே என் பரிந்துரை.

மற்ற படி மனிதர்கள் யாவரும் சமம் என்பது உட்டாலக்கடி. பீலா. மனிதர்களில் பல்வேறு வகையினர் உள்ளனர்.சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் ஒரு தொடரை பார்த்தேன். மனிதர்களை தாவர வகை, மிருக வகை, தாதுவகை என்று பிரித்து ஆய்ந்திருந்தார் கட்டுரையாளர். இதுவும் ஒரு கோணம் மட்டுமே. இதுவே முடிவானது அல்ல.

மனிதர்களில் பல்வேறு இழி குணங்கள் கொண்டவர்கள் உள்ளனர். அவர்களின் பிறப்பு,வளர்ப்பு,படிப்பு,பதவி,ஹோதா இவற்றிற்கும் அவர்களது இழி குணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. மேலும் இந்த குணங்கள் பகலில்,மக்கள் மத்தியில் வெளிப்படாது. அனைவரிடத்திலும் வெளிப்படாது.எவனொருவன் இவர்களை எதிர்க்கவே முடியாத நிலையில் உள்ளனரோ , எவனொருவன் திருப்பி அடிக்க முடியாத நிலையில் உள்ளானோ அவன் மீது இந்த இழிகுணங்கள் பாயும்.

எம்.ஜி.ஆரை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சட்டசபையில் கலைஞர் ஏடாகூடமாக கேள்விக்கேட்டு லொள்ளுபண்ணிவிட்டாலோ அல்லது தலைவரின் மனசு பாதிக்கும்படி ஏதேனும் சங்கதி நடந்துவிட்டாலோ வீட்டுக்கு வந்து ஜானகி எம்.ஜி.ஆரை பின்னி எடுத்துவிடுவாராம்.

ஒருதடவை ஜானகி மதுரை முத்துவிடம் இந்த குணத்தை சொல்லி அழுதாராம்."வயசாயிருச்சுப்பா அடி தாங்க முடியல"

அதிர்ந்து போன மதுரை முத்து வாத்தியார் மதுரை போனப்போ லேசா சப்ஜெக்டை தொட்டுக்காட்டி உங்களுக்கிருக்கிற இமேஜுக்கு இதெல்லாம் தகாது வாத்யாரே என்று சொல்லியிருக்கிறார்.

உடனே வாத்தியார் " நானே உங்கிட்ட இது பத்தி பேசனும்னு இருந்தேன் . நீ ஒரு தரம் சென்னை வா பேசிரலாம்"னு சொல்லியிருக்கார். முத்துவும் உற்சாகமா போனார்.

வாத்தியார் கேட் கிட்டே நின்னு முத்துவை வரவேற்றிருக்கார். வீட்டுக்குள்ளே கூட்டிப்போனார். தனியறைக்கு போனாங்க. வாத்தியாரோட பாதுகாவலர்கள் இருந்தாங்க. முத்துவை போட்டு புரட்டி எடுத்துட்டாங்க. மூஞ்சி, முகம், உடம்பு, வேட்டி,சட்டை ,அண்டர் வேர் எல்லாமே நார் நாரா கிழிஞ்சுருச்சு. அடுத்த அறைக்கு வாத்தியார் கூட்டிப்போனாரு. அங்கே புது வேட்டி,சட்டை,அண்டர்வேர், எல்லாம் இருக்கு. "முத்து ! குளிச்சுட்டு வாப்பா.. சாப்பிடலாம்"னாரு வாத்யாரு.

டைனிங் டேபிள்ள வாத்தியார் கவனிச்ச கவனிப்பு முத்துவுக்கு மாமனார் வீட்ல கூட கிடைச்சிருக்காது. இப்போ வெளிய போய் முத்து என்ன சொல்வாரு. அடி உதை வாங்கினத சொல்வாரா? இல்லே வாத்தியார் விழுந்து விழுந்து கவனிச்சதையா?

இது எந்த அளவுக்கு நிஜம்னு யாமறியோம் பராபரமே. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தா ஆச்சரியமே படமாட்டேன். ஏன்னா நம்ம எக்ஸ்பீரியன்ஸ் அப்படி..

சிலரில் சில குணங்கள் மேஜராய் இருப்பதால் அதை அடிப்படையாக கொண்டு அவர்களை தனி குழுவாய் பிரித்து வைத்து வர்ணிப்பது எளிதான வேலை .ஆனால் இது தவறு என்பது என் கருத்து.

பின்னே நீ மட்டும் சூரிய,சந்திர மனிதர்கள்னு பதிவை ஆரம்பிச்சிருக்கியேப்பானு க்ராஸ் பண்ண துடிக்காதிங்க. இந்த சூரிய, சந்திர குணாம்சங்கள் மனிதர்களில் கலந்தே வெளிப்படுகின்றன.

ஒரு குணம் ஒரு பிரிவினரில் தூக்கலாகவும், மற்றொரு பிரிவில் மங்கலாகவும் தெரிந்தாலும் மேற்படி குணங்கள் ஒரே நிலையில் இருப்பதில்லை. தலைகீழாய் மாறிவிடுகின்றன. சூரிய மனிதன், சந்திர மனிதனாயும், சந்திர மனிதன் சூரிய மனிதனாகவும் மாறிவிடுகிறான். இந்த மாற்றத்துக்கு சில நேரங்களில் சில நிமிடங்கள் கூட போதுமானதாக உள்ளது.

சூரிய மனிதர்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல். பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல். தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் ஆண்மை நிரம்பிய குணம். ஃபாதர்லி நேச்சர்.

சந்திரமனிதர்கள்:
ஒருவித குளுமை, தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும். தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும். எவரேனும் போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம். பெரிய பிரச்சினை வந்துவிட்டால் நம்பியவரை கைவிட்டு தப்பித்துக்கொள்ளுதல் இந்த சந்திரமனிதர்களின் இயல்பு. சிக்கனம். இன் செக்யூரிட்டி , சந்தேகம் இவர்களுடன் பிறந்தவையாகும். .குடும்பபாசம், க்ஷணிக காதல்கள் (கண்டதும் காதல்?). பெரிய மனிதர் வீட்டு பெண்கள் இவர்களால் சீக்கிரம் கவரப்படுவார்கள். சுருக்கமாய் சொன்னால் பெண்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.


இந்த குண நலன்கள் அமைய அவரவர் ஜாதகங்களும் ஓரளவு காரணமாகின்றன.

சந்திரன் கெட்டவர்கள் ( நீசம், 6,8,12 ல் நிற்க பிறந்தவர்கள், கேதுவுடன் சேர்ந்திருக்க பிறந்தவர்கள் ) சூரிய குணம் கொண்டவர்களாக வளருகின்றனர்.

சூரியன் கெட்டவர்கள் ( நீசம், 6,8,12ல் நிற்க பிறந்தவர்கள், ராகுவுடன் சேர்ந்திருக்க பிறந்தவர்கள். சந்திர குணம் கொண்டவர்களாக வளருகின்றனர்.

சூரிய சந்திரர்கள் இரண்டு பேருமே கெட்ட நிலையில் பிறந்தவர்கள் சிறையில், தலைமறைவு வாழ்வில் இருப்பர்.

ஆமா இந்த குணங்கள் எப்படி ஒரு நிமிடத்தில் மாறிவிடும் என்றால் சுவாசம் மாறும்போது. அதென்ன சுவாசம் மாறுவது?

அது மட்டுமே அல்லாது சூரிய சந்திரர்கள் ராசி மாறும்போதும், ராகு,கேதுக்களுடன் இணைவது உள்ளிட்ட பல காரணங்களாலும் இந்த குணங்களில் ஏத்த குறைச்சல் இருக்கும்.

உலக மக்களனைவரையுமே இந்த இரண்டு பிரிவில் அடக்கி விடலாம்.

இவர்களால் நாட்டுக்கு நன்மை ஏற்பட என்ன செய்யவேண்டும்.?

அவரவர் தனிப்பட்ட வாழ்வில் தோல்வியை தவிர்த்து வெற்றியை பெற என்ன செய்யவேண்டும்.?

இந்த கேள்விகளுக்கெல்லாம் அடுத்த பதிவில் பதிலை காண்போம்.

Monday, March 29, 2010

கிராமத்துல வளர்ந்த குட்டி

மாயா ஒரு குழந்தைக்கு தாயானதுமே அவளுக்குள்ள தந்தை பாசத்துக்கு ஏங்கற சிறுமி காணாம போயிட்டா. ஏற்கெனவே மதர்லி ஃபீச்சர்ஸ் இருந்த மாயா இப்போ எங்கப்பாவுக்கு கூட ஏன் பாட்டிக்கு கூட அம்மாவாவே பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. அதை அவிகளும் ரெகக்னைஸ் பண்ணதுதான் ஆச்சரியம். பாட்டி சதா தன் மகளையே தியானம் பண்ற பார்ட்டி. அட ஒரு கருவாடு செய்தா கூட "ஹும்.. அந்த ராணி பொண்ணுக்கு நெத்திலி கருவாடுன்னா உயிரு .அதுக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்"னு புலம்பற பார்ட்டி. ஆனால் போகபோக அதுவும் வீடு துர்கா காலனிக்கு மாறின பிறகு மகளோட வருகை குறைஞ்சிக்கிட்டே போயிருச்சு. ஆட்டோவுக்கு இருபது ரூபா கொடுத்தா வீட்டண்டை விடுவான். அஞ்சு ரூபா கொடுத்தா காலனி என்ட் ரன்ஸ்ல விட்டுருவான். ஆனா அரை கி.மீ நடக்கனும். அத்தை சுகவாசி. நடக்க மாட்டாள். போக வர நாற்பது ரூபா ஆயிருமே.. மிஞ்சி போனா பாட்டி காய்,கறி அது இதுனு குடுத்து அம்பது ரூபா கொடுப்பாள். வரவும், செலவும் சமானமுன்னு நினைச்சாளோ இல்லே தன்னால முடிஞ்சவரை என்னென்னவோ சகுனி வேலையெல்லாம் பார்த்தும் பத்த வச்சது எதுவும் எரியாத போயிட்டதேனு வெறுப்போ தெரியாது தன் என்ட் ரிய குறைச்சுக்கிட்டே வந்துட்டா. மேலும் அத்தைக்கு வாயா வார்த்தையா பேசத்தான் தெரியுமே தவிர கையால ஒரு வேலையும் செய்ய தள்ளாது.

மாயா கிராமத்துல வளர்ந்த குட்டிங்கறதால அஞ்சரைக்கெல்லாம் எந்திரிச்சுருவா. பரபரனு வீட்டு வேலைகளை சூப்பர் வைஸ் பண்ணிக்கிட்டே தானும் குளிச்சு ரெடியாயிருவாள். இது என் வேலை, இது என் வேலையில்லைங்கற பாவத்து எல்லாம் இல்லை. மரியாதையா ஒரு தடவை சொல்லிப்பார்ப்பா இல்லேன்னா தானே களத்துல குதிச்சுருவா. உடனே அப்பாவோ நானோ அலறியடிச்சுட்டு செய்யனும். இதையெல்லாம் பார்த்து பார்த்து பாட்டிக்கு அத்தை மேல அத்துப் போச்சு. எப்பயாச்சு வந்தா "மாயா! ராணி வந்திருக்கா என்னன்னு பாரும்மான்னிட்டு ஸ்ரீராமை கொஞ்ச ஆரம்பிச்சுருவா.

நானும்,மாயாவும் காலைல ஆஃபீஸ் போனா ராத்திரி எட்டரை வரையாவது இருந்து ஸ்டுடியோ, டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், பத்திரிக்கை வேலை எல்லாத்தையும்
பார்த்து செட் ரைட் பண்ணிக்கிட்டே இருப்போம். எல்லாம் சுமுகமா ஓடிக்கிட்டிருந்தது.

அரசியல்ல பார்த்தா சந்திரபாபு கவர்ன்மென்டை ஏதோ ப்ரைவேட் லிமிட்டட் கம்பெனி மாதிரி நடத்த ஆரம்பிச்சாரு. ( சந்திரபாபுவோட ஆட்சி அவலத்தை பத்தி நாளைக்கு தனிப்பதிவே போட்டுர்ரேன். ஏன்னா அது பெரிய க(வ)தைங்கண்ணா)


1999 தேர்தல் வந்தது .லோக்கல்ல இருக்கிற தெ.தே லீடர்ஸ் ஜகனை பத்தி கண்டதையும் சொல்லி பாபுவை கிளப்பி விட்டுட்டாங்க போல. மேலும் கடந்த தேர்தல்ல மாவட்டத்துக்கெல்லாம் சேர்த்து எதிர்கட்சிலருந்து ஜெயிச்ச ஒரே எம்.எல்.ஏ வா இருந்ததால ஆட்டோமேட்டிக்கா இவரை ஸ்டேட் ப்லிட் பீரோலயே டார்கெட் பண்ணாங்க.

தேர்தல் நேரத்துல ஸ்பெஷலா போலீஸை குவிச்சு, ஷேடோ பார்ட்டி அந்த பார்ட்டி இந்த பார்ட்டினு செமர்த்தியா லொள்ளு பண்ணிட்டாரு. தேர்தல் நேரத்துல கூட அவரா பாக்கெட்ல இருந்து பத்து ரூபா எடுத்து செலவு பண்ணதில்லை. எல்லாமே ஃப்ரெண்ட்ஸ் ,ஃபாலோவர்ஸ்தான் பார்த்துப்பாங்க. அதையெல்லாம் மீறி ஜெயிச்சு வர்ரதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. ஜகன் பாடு தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்ங்கற மாதிரி ஆயிருச்சு. இருந்தாலும் ஜெயிச்சுட்டாரு.மேலும் ஜகன் ஃபுல் டைம் பொலிட்டிஷியன். அவருக்குன்னு எந்த தொழிலோ வியாபாரமோ கிடையாது. அப்பா காலத்து மாவு மிஷின் ஒன்னிருக்கு அப்பா காலத்துலருந்து .மார்க்கெட் கேட் கலெக்சன் காண்ட் ராக்டிருக்கு. அதை கூட வேற யாரோ தான் பார்த்துக்கறாங்க. இருபத்து நாலு மணி நேரமும் ஜனம் ஜனம்னு ஜனம் நடுவுலயே கழிக்கிற பார்ட்டி. ஏதோ பூர்விக சொத்துக்கள் மட்டும் இருந்ததாலே அரசு தரப்புல சந்திரபாபு வால கூட அவருக்கு பெரிசா பிரச்சினை கொடுக்க முடியலை.


அதுக்குள்ள நம்ம பர்சனல் லைஃப் டப்பா டான்ஸ் ஆடற கண்டிஷன் ஆயிருச்சு. அப்பா ரெண்டாவது தடவையா ரிட்டையர் ஆகியிருந்தாரு. பாட்டிக்கு வீல் சேரே உலகம். மாயாவுக்கு ஸ்ரீராமே உலகம். ஸ்டுடியோவ பார்த்துக்கற சந்தீப், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை பார்த்துக்கற மீரா, தன்ராஜ் எல்லாமே அவங்க வேலைய மட்டும் கரெக்டா பார்க்கிற பார்ட்டிங்க. அதுக்கு மேல அவிகனால ரோசிக்க முடியாது. லோக்கல் பேப்பர் விஷயத்துல மட்டும் அதீத கவனம் செலுத்தி பிரச்சாரத்துக்கு சகட்டு மேனிக்கு உபயோகிச்சுக்கிட்டேனே தவிர மத்ததெல்லாம் க்ரோத் ரேட்டே இல்லாம ஃப்ரீஸ் ஆயிட்டிருந்தது.ஒரு நார்த் இண்டியா டூர் ப்ரோக்ராம் போட்டதுல அமாவாசைனு நினைச்சு அமாவாசைக்கு மறு நாள்ள இருந்து ஸ்டார்ட் ஆறாப்ல போட்டுட்டிருக்காங்க. 52 சீட்டுக்கு 21 சீட்டுதான் ஃபில் அப் ஆகி, குட் வில் அடிவாங்கிரக்கூடாதுனு பிடிவாதமா போய் டூர் கண்டக்ட் பண்ணதுல 1 லட்ச ரூபா காலி. ட்ராக்ஸ் அனுப்பியிருக்காங்க. புக் பண்ண பசங்க ரோக்ஸ். ட்ரைவரை அடிச்சி போட்டுட்டு ட்ராக்ஸை எடுத்து கிட்டு கண்டபடி சுத்தி ரோட்டோர மரத்துல இடிச்சு ஆக்சிடெண்ட் பண்ணி அது தனி கதை.


தேர்தலுக்கு முன்னான இந்த 3 மாச இடைவெளில மாயாவுக்கும், எனக்கும் இடையிலே ரொம்பவே இடைவெளி. செக்ஸுங்கறது ஏதோ உடல் சூட்டை , டென்ஷனை தணிக்கிற உபாயமாவோ குற்றமனப்பான்மைல இருந்து ரிலீவ் ஆறதுக்கான செயலாவோ இருந்ததே தவிர பழைய இன்டிமசி எல்லாம் இல்லை. என்னமோ பெரிசா சாதிக்கனுங்கற வெறில செய்த முயற்சியெல்லாம் தோத்து போய் டீலாயிட்ட பிறகு தான் எதையெல்லாம் இழந்து திரிஞ்சோம்னு உறைச்சது. மாயாவும் ரொம்பவே ஏங்கி போயிருந்தாள். மாயாவா, கடமையானு கொஞ்சம் ஊசலாடி சரி முதல்ல கடமைய முடிப்போம்னு வரிஞ்சு கட்டி இறங்கினேன்.

ஸ்டுடியோ,ரூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் விவகாரங்கள்ள புகுந்து வந்ததுல பதினஞ்சு நாள் போனதே தெரியலை. எல்லாத்தயும் செட் ரைட் பண்ணிரனுங்கற வெறி. அப்பா கூட "ஏண்டா உனக்கு நார்மலா ஒர்க் பண்ணவே தெரியாதாடா.. ஒன்னு கண்டுக்கவே மாட்டே இல்லேன்னா ஒரேயடியா இறங்கி குட்டைய குழப்புறது ..டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் கண்ணா"ன்னு கமெண்ட் அடிச்சாரு.

என் மனசுக்குள்ள ஒரு பிக்சர் வந்துருச்சு. ஸ்டுடியோ வேணம்னா கேல்குலேட்டட் ரிஸ்க். ஆனா டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல எல்லாமே ரிஸ்க் தான்.

அப்பாவுக்கு சொன்னேன்

"அப்பா! டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை ஊத்தி மூடிரலாம்னு இருக்கேன்."
"என்னடா திடீர்னு ஓகோ அந்த ஒரு லட்ச ரூபா நஷ்டத்துக்கு பயந்துட்டியா?"
"பயமா? அதுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது. சின்ன தப்புக்கு ஒரு லட்ச ரூபா நஷ்டம்னா யோசிக்க வேண்டிய விசயமில்லியா?"
"எவனோ ஏரிக்கு பயந்து கழுவாம போனானாம் . அந்த கதையா இருக்கு"
"அதுக்கு இல்லப்பா .. இத்தனை நாள் நீ இருந்தே நீ ஃப்ரண்ட் ஃபார் ஆல். எனிமி டி நன். ஆனால் நான் ஒரு கலரை பூசிக்கிட்டேன். நம்ம சொத்தை ரோட்டு மேல அனுப்பிட்டு வயித்துல நெருப்பு கட்டிக்கிட்டிருக்க முடியாது "
"பின்னே என்ன பண்ண போறே எல்லாத்தயும் வித்துட்டு பேங்க்ல போட்டுட்டு வட்டி வாங்கி சாப்பிட போறியா?"
"அந்தளவுக்கு நான் கோழையில்லேப்பா.. பேசாம அப்பார்ட்மெண்ட் ஒன்னு கட்டி வாடகைக்கு விடப்போறேன்."
"அப்பார்ட்மெண்டா? உனக்கென்ன பைத்தியமா? இது சித்தூர்ரா"
" எல்லா சிற்றூரும் ஒரு நாள் நகரமாகித்தான் தீரும். நாம கொஞ்சமா முந்திக்கனும் தட்ஸால்"
" நீ அப்பார்ட்மெண்ட் கட்டறப்ப மட்டும் எதிர்கட்சி ஆளும்கட்சியாயிருமா?'
"நகராட்சி இன்னும் காங்கிரஸ் கைலதானே இருக்கு"

"எப்படியோ போய் தொலை. ஸ்டுடியோவ வச்சிக்கிரமாதிரிதானே"
"அதுல என்னப்பா ரிஸ்கிருக்கு. என்ன கொஞ்சம் கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரானு அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்"
"சரி சரி .. அப்படியே இந்த பேப்பர் விஷயத்துல உன் ஆஸ்தான ப்ரிண்டர் கிராஃபிக் ரவி நிறையவே திருடறான். அவனாலயே ரொம்ப டென்ஷனாயிருதுனு மாயா சொல்றா"
"அந்த விஷயத்துலயும் கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டியிருக்குப்பா. லெட்டர் ப்ரஸ் எல்லாம் அவுட் டேட்டட் ஆகிட்டு வருது . அதையும் ஆஃப்செட் ப்ரிண்டுக்கு மாத்திர வேண்டியதுதான். வேணம்னா ஜாப் வொர்க் கூட செய்யலாம்"
"எல்லாம் சரி . மறுபடி நீ தேர்தல் பிரச்சாரம்னு போயிட்டா எப்படி?"
"அதுக்கு இன்னம் அஞ்சு வருஷம் இருக்கில்ல"

அப்பாகிட்டே க்ரீன் சிக்னல் வாங்கி என் பிரப்போசலையெல்லாம் மெட்டீரியலைஸ் பண்றதுக்குள்ள ரெண்டு 4 வருஷம் ஓடியே போயிருச்சு. அப்பார்ட்மெண்ட் விஷயத்துல ஆறு மாசம் வரை கொஞ்சம் உதறலாவே இருந்தது. கண்டுக்கற நாய்களே இல்லை. முத முதல்ல கிருஷ்ணா ஜுவெலர்ஸ் காரர் அட்வான்ஸ் பண்ணாரு. அதற்கடுத்து படபடனு புக் ஆயிருச்சு. நமக்கு ஜோசியம், வாஸ்துல இருக்கிற பரிச்சயம் பத்தின பிரச்சாரமும் இந்த பிசினஸுக்கு நல்லாவே உதவுச்சு. உற்சாகமா அடுத்த வென்சரை ஆரம்பிக்கலாமானு யோசிக்கிற சமயத்துல மாயா தடை போட்டா.

"இந்த வியாபாரம் வேணான்டா.."
"ஏன் மாயா?"
"அப்பார்ட்மெண்ட் கட்ட ஆரம்பிக்கிறப்ப கட்டிட வேலைக்கு வந்தாங்களே. ஆணும்,பெண்ணும், குஞ்சும் குளுவானுமா அவங்களுக்கு வீடு வாசல் எல்லாம் யார் கட்டி வைப்பாங்க. கட்டி வச்சாலும் அதை வாங்க அவிக கிட்ட காசு ஏது?"
"அது அவிக தலையெழுத்து .. ஒவ்வொரு மேஸ்திரி என்னா கூலி வாங்குறான் தெரியுமா? எல்லாத்தையும் குடிச்சே அழிச்சுர்ரான்"
"அதுல குடிக்காதவங்க எத்தனை பேர் இருப்பாங்க தெரியுமா? எத்தனை நாள் வேலையில்லாம இருப்பாங்க தெரியுமா? மேலும் நீ என்ன அவங்களை டைரக்டா வேலைல சேர்த்துகிட்டயா? இல்லியே. காண்ட் ராக்ட் தான் விட்டே. காண்ட் ராக்டர் என்ன கூலி தருவான்னு உனக்கு தெரியுமா?"
"இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.."
"வெறுமனே யோசிச்சா போதாது முகேஷ் எதாச்சும் செய்யனும்"
"என்ன செய்யலாம் சொல்லேன்?"
"அவங்களுக்குனு ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டேன். சின்னதா,சிங்கிள் பெட் ரூம் இருந்தாலும்.. எல்லா வசதியும் இருக்கிறாப்ல கட்டேன்"
"கட்டலாம் ... அதுல ட்ரங்கர்ஸ் இருப்பாய்ங்க. அவனுகளோட எவன் ஏகறது?"
"ஏன் ஜகன் சாரை கன்சல்ட் பண்ணேன். அவர் ஏதாச்சும் ஐடியா கொடுப்பாரு"

ஜகனை சந்திச்சு இந்த பிரப்போசலை சொன்னேன். திகைச்சு போயிட்டாரு. ஐடியா என்னவோ சூப்பர் ஐடியா தான் . இதுல நான் என்னப்பா செய்யமுடியும்? என் கிட்டே காசு கீசு கிடையாதே"

"அய்யய்யோ உங்க கிட்டே காசு கேட்கலை சார். என் கிட்டே இருக்கிற இன்வெஸ்ட்மென்ட்ல முதல் கட்டமா 500 குடும்பத்துக்கு ப்ளேஸ்மெண்ட் கொடுக்கலாம். இதுக்கு நீங்க செய்யவேண்டியது என்னன்னா உங்களுக்கிருக்கிற பப்ளிக் ரிலேஷன்ஸை வச்சு டவுனுக்கு அஞ்சாறு கிலோ மீட்டர் தூரத்துல மலிவான விலைல சைட் ஏற்பாடு பண்ணலாம். கட்டிட தொழிலாளர்களை மொபிலைஸ் பண்ணி ஒரு சங்கமா ஏற்படுத்தி அந்த சங்க நிர்வாகிகளே பெனிஃபிஷியரீஸை செலக் பண்ணி லிஸ்ட் தராப்ல பண்ணலாம்."

"இதெல்லாம் நான் செய்யறேன்பா இல்லேங்கலை. ஆனால் நான் எதிர்கட்சி. அரசாங்க எனக்கு தொல்லை கொடுக்கிறதா நினைச்சு உனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிச்சுட்டா தாங்குவயா?"

"இதெல்லாம் நகராட்சி சம்பந்தப்பட்டது. அது உங்க கைல தானே இருக்கு"

"அதெல்லாம் அதிகாரிங்க பார்த்துக்கறாங்க"

" நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. "

"பரவால்ல சொல்லு"

"நீங்க முதல் தடவை சுயேச்சையா ஜெயிச்சப்ப பம்பர் மெஜாரிட்டி, ரெண்டாவது தடவை கட்சி டிக்கட் கொடுத்தப்ப என்.டி.ஆர் அலைலயும் சுமாரான மெஜாரிட்டி வந்தது . ஆனா இப்போ ?"

" நீயே பார்த்தல்லப்பா..நம்மாளுங்களை போட்டு பிசிஞ்சு எடுத்துட்டாங்க.."

" நீங்க சொல்றதும் நிஜம் தான். ஆனால் ஃபைனான்ஷியலா கூட நிறைய பிராப்ளம் ஃபேஸ் பண்ண வேண்டியிருந்தது.."

"கரெக்டுதான் அந்த நேரம் பார்த்து நம்மாளுங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை"

"அப்படினு நீங்க நினைக்கிறிங்க.. நீங்க ஒரு ரேஸ் குதிரை மாதிரி. உங்க மேல பணம் கட்டினவங்க அப்படித்தான் நினைச்சாங்க. ஜெயிச்சு வந்தா ஜாக் பாட் அடிக்கலாம்னு
ஆனால் நீங்க முத தடவை சுயேச்சை. ரெண்டாவது தடவை எதிர்கட்சி,உங்களுக்காக தேர்தல் செலவை செய்தவங்களுக்கு எந்த லாபமும் கிடையாது. இப்பவும் எதிர்கட்சிதான். இந்த தடவையே அவனவன் கையை பின்னால கட்டிக்கிட்டு தான் பிரச்சாரத்துக்கு வந்தான் . அடுத்த தேர்தலுக்கு நிலைமை ரொம்ப மோசமாயிரும்."

"அப்போ என்னை லஞ்சம் வாங்க சொல்றியா ?"

" நான் அப்படி சொல்லலே.. இப்போ நான் அப்பார்ட்மெண்ட் கட்டனும்னு வந்தேன். என்னதான் கட்டிட தொழிலாளிக்குனு கட்டினாலும், என் மார்ஜி எனக்கு இருக்கும், அதுலருந்து ஒரு 10%உங்களுக்கு தரேன்"

"அப்போ நான் உன் அடியாளா?"

"அப்படினு ஏன் நினைக்கிறிங்க. பிராண்ட் அம்பாசிடர் மாதிரி வச்சுக்கங்க. நம்மாளுங்கள்ள எவனெவன் உண்மையிலேயே போண்டியாயிட்டான். இருந்திருந்தா செலவு பண்ணியிருப்பான்னு ஒரு லிஸ்ட் எடுங்க. அவிகளுக்கும் பிழைக்க ஒரு வழி பண்ணுங்க. அஃபிஷியலாவே ஒரு 10% ஷேர் கொடுக்க சொல்லுங்க"

"இந்த பணத்துல இருந்து அடுத்த தேர்தலப்போ ஓட்டுக்கு இவ்ளோனு செலவு பண்ணி ஜெயிக்க சொல்றே"

" நான் ஓட்டுக்கு இவ்ளோனு கொடுக்க சொல்லலே. உங்க மேல இருக்கிற மரியாதைல உங்க பின்னாடி வந்தவன் போண்டியாயிர கூடாது. தேர்தல் நேரத்துல வண்டி வாடகைக்கும், டீசலுக்கும் நாம கைய பிசைய கூடாதுனு சொல்றேன்"

"மக்கள் மத்தில கெட்ட பேரு வந்துருமேப்பா"

"சுத்தமான தங்கத்துல நகை செய்ய முடியாது. வெறுமனே நல்ல பேரை வச்சி ஜெயிக்கிறாப்பல இருந்தா காமராஜ் ஏன் தோத்தாரு, அண்ணாதுரை ஏன் தோத்தாரு. எம்ஜிஆர் கட்சி ஏன் தோத்து போச்சு"

ஜகன் யோசனைல ஆழ்ந்தார். என் திட்டத்தை விவரிக்க ஆரம்பிச்சேன். அவர் இந்த திட்டத்துக்கு சம்மதிச்சது அந்த நேரத்துக்கு அற்புதமா இருந்தாலும், அவரோட செல்வ செழிப்பை பார்த்து வளர விட்டா இனி இவன் தான் வாழ் நாள் பூரா எம்.எல்.ஏ னு ஆளுங்கட்சி காரவுக வச்ச ஆப்பு இருக்கே ..அதை இப்ப நினைச்சா கூட திகிலா இருக்கு.

(தொடரும்)

Saturday, March 27, 2010

என்றும் இளமை

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ அனாதியாய் இருந்து சனாதிகளால்
சாரம் சாகடிக்கப்பட்ட ஆன்மீக மரத்தின் விழுது.
அவர்கள் சேரி  பாலரை பட்டினி போட்டு
செய்தனர்  பாலபிஷேகம்
நீ..பாற்கடலே இறங்கி வந்தாலும்
சோமாலியா வரை அதை
அஞ்சல் செய்து மிஞ்சியதை கொட்டுங்கள்.
வாங்கிக்கொள்வது
சிலுவையா சிவலிங்கமா என்பது முக்கியமல்ல
கொட்டும் சமுதாயத்தின் சுபிட்சமும்,
அதன் பின்னான பாவமுமே முக்கியம்
என்பது உன் ஆணை

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
மேலுலகின் அதிர்வுகள் உன்னை அண்டாத போது
தீண்டத்தகாதவனாய்  , நெஞ்சில் இருள் மண்டியிருந்ததுண்டு
அதிர்வுகள் துவங்கியது

பகிர்வுகள் துவங்குவது வழக்கம் தானே
உன் கவிதையின் இடைவெளிகளில் ஓங்கார முழக்கம் தானே

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
உன் கவிக்கும் மக்கள் செவிக்குமான
கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து மகிழும் மண்டூகங்கள்
மண்மூடிப்போகும்.
கண் மூடி யோசி
இறையருள் யாசி

காசியில் குடிபுகுந்தாலும்
பாவம் தொலையாத பாதகருக்கும் சேர்த்துத்தான் சுபிட்சம்
அதுதானே உன் மனோ பீஷ்டம்

பாவம் அவர்களது வானொலிகளில் வான் ஒலி அஞ்சலாவதில்லை
எனவேதான் உன் ஆணைகளை இவர்கள் கெஞ்சலாக பார்க்கின்றனர்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ இந்த திரைக்கதையின் முடிவு தெரிந்தவன்.
மரை கழன்ற மந்தர்களின் செவியில் மறையின் மறை பொருள்  உணர்ந்த
உன் உரை புகுமோ?

மாவரைக்கும் மிஷின் களாய், துளை போடும் ட்ரில்லர்களாய்
தொந்தி கொழுத்து மூட்டுக்கள் கழன்று
சுவர்கத்து கதவுகளின் பூட்டுக்கான சாவிகளால்
காது குடையும் முடை நாற்றமெடுத்த கிடையில்
உன் விடைக்கு விலை ஏது?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

இணையம் கண்டாலும் இவர்களை பிணைத்த தளைகள் தளர்வதில்லை
வலைப்பூக்களே மலர்ந்தாலும் சூடிக்கொள்ள முடியாத "சோ" தலையர்கள்
ஆயிரம் பதிவுகள் போட்டாலும் கடந்த பிறவிகளின் பதிவுகளே
இவர்களை பாதிக்கின்றன.

ஊதும் சங்கை ஊதிவை.
விழிக்கும் மாந்தர் விழிக்கட்டும்.
மந்தர்கள் பழிக்கட்டும்
மண்ணுலகை அழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
உன்னுள் உறை பரமனுக்கு முகமன் சொல்லி
முத்தமிழ் கடல் மூழ்கி முத்தெடுத்து வலைப்பூவில் பதித்து
பூக்களை தொடுத்து மாலையாக்கு
தேடிவந்த வார்த்தைகளை கவிதையாக்கு
கவிதைக்கு பொருள்
வாழ்க்கையில்
என்றரற்றி பொருளுக்காக வாழ்க்கையையும் வாக்கையும்
அடகு வைத்து வீண முத்தர்கள் ஆகிப்போன
வாணி புத்திரர்களை மறந்துவிடாதே
நெஞ்சக்கழல் துறந்துவிடாதே
மேகத்துக்கப்பாலிருந்து
கொட்டும் வார்த்தைகளை வாங்கி வை
நினைவில் தேங்க வை
பண்ணில் மானுடம் ஓங்க வை

நீயா எழுதுகிறாய்.
படியளுக்கும் பெருமான் கொட்ட
படியெடுக்கும் பணியாள் நீ
தரணிமிசை தவிக்கும் தனியாள் நீ
பார் முழுக்க பல்லாயிரம்
சாதியார்
ஆசை தணியார்
பரமனுக்கு பணியார்
அடக்கம் அணியார்
சற்றேனும் கனியார்

இவர்களுக்காக கண்ணீர் சிந்து
அவனிடம் கப்பறை ஏந்து

காத்தவன் இழப்பான்
இழப்பவன் பெறுவான் இதுதான் நியதி
உனக்கென்ன என்றும் இளமை பொங்கும் யயாதி

பிறப்புக்கு முன்பே திறப்பு
கருப்பை கிழிப்பு
மனிதமனத்து மாசாய் கருதி
உணவின் சத்து நீக்கி
சக்கையுண்டு இளமையில் முதுமை
எதிலும் இயலாமை
கருசுமக்க ஆள் தேடுவோர்
இனி கருவாக்கவும் தேடுவரோ?

சகதியை யொத்த சங்கதி பலவுண்டு
சக்தி இழந்துவிட்டார்.
சிவனார் போல் தானே
மண வாழ்வை மயானமாக்கி
சிவ தாண்டவம் புரிகின்றார்.

உனக்கென்ன வேடிக்கை பார்க்க வந்தாய்
வாடிக்கையாய் சில வாக்கியங்கள் கூறிவிட்டு
உன் இறை தேடி மறை புகுவாய்

வாழும் மாந்தரை பார்
வீழும் வீணரை பார்
ஆரும் இளைத்தாரில்லை
சகதியில் சலித்தாரில்லை

முள்ளை மேய்ந்திருக்கும் ஒட்டகம் போல் தானே
பெட்டகம் காக்கின்றார்
நோய்கள் தமக்கு தமை தாரை வார்க்கின்றார்
நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?


நாளைய புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காகவேணும்
எழுது
சமகாலர்கள் சமாதிகளின் மீதாவது
உன் கவிதைகள் அபாய விளக்குகளாய் ஒளிரட்டும்

நாளைய சமூகமேனும் செழிக்கட்டும்.

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
ஆகப்போவதென்ன ஆண் பிள்ளை அழுது ........
புதிதாய் பாழாகப்போவதென்ன
மனிதனே பழுது

காதலனை ஆசிட் வீசி கொன்ற பெண்

எதிர்வினைகள்
ஓஷோ என்னமோ எதிராளி வினைக்கு எதிர்வினை செய்தா நீ அவனுக்கு அடிமைனு அர்த்தங்கறார். என்ன செய்ய ? நம்மால எதிர்வினை செய்யாம இருக்க முடியமாட்டேங்குதே. நானும் ஓஷோ ஸ்டைல்ல சித்தம் போக்கு சிவன் போக்குனு தொடர் கதையும், வர்ஜியா வர்ஜியமில்லாம தனிப்பதிவுகளும் போட்டுக்கிட்டிருந்தேன். . இருந்தாலும்   நாட்டு நடப்புக்கு எதிர்வினை செய்யறது ஒரு சமூக பொறுப்புங்கற உத்தேசமும் ரெஸ்பாண்ட் ஆகாம இருக்கிறதுல ஒருவித கில்ட்டியும் இருக்கறதால இந்த பதிவை போட்டுக்கிட்டிருக்கேன்.

மகளிர் மசோதா:

இதை பத்தி விரிவா  ஒரு பதிவே போட்டதா ஞா. ஆண் ஆணாவும், பெண் பெண்ணாவும் வாழ்ந்தாலே போதுமானது. பெண்மை மிளிரும் ஆண்கள்,ஆண்மை மிளிரும் பெண்கள் விதிவிலக்கு. விதி விலக்குகளை மனதில் வைத்து இட ஒதுக்கீடு செய்வதெல்லாம் இயற்கையோடு விளையாடும் விபரீத விளையாட்டு.

மேலும் மசோதாவை எதிர்த்து ஓட்டு போட்ட ஒரே ஒரு ஆசாமி அயனான பாயிண்டை கொளுத்தி போட்டிருக்காரு.

ஆண் எம்பிக்கள் என்னைக்கோ ஒரு நாள் இந்த தொகுதியும் மகளிர் தொகுதியாக போகுதுனு நெக்லெக்ட் பண்ணிருவாங்கங்கறார். நிஜம் தானே!

இரட்டை உறுப்பினர்:

வேணம்னா ஒரே தொகுதிக்கு ஆண்,பெண் என்று இரண்டு எம்.பிக்களை தேர்ந்தெடுக்கலாம். ட்ரெயில் ரன் மாதிரி . யார் என்ன கிழிக்கிறாங்கனு பார்ப்பம். ஆண்,பெண் வித்யாசமெல்லாம் ரொம்ப ப்ரிலிமினரி. எஸ்.ஐன்னா எஸ்.ஐதான். பெண் எஸ்.ஐ இருக்கிற ஸ்டேஷன்லயும் லாக்கப் சாவு நடக்கலாம். எம்.பின்னா எம்பிதான். பெண் எம்பி கூட காசு வாங்கிக்கிட்டு கேள்வி கேட்கலாம்.
( எம்.பிங்க நெம்பர் டபுளாயிருச்சுன்னா செலவு இரட்டிப்பாயிருமேனு கேட்க சிலர் கமெண்ட் ஃபாரத்துக்கு போயிட்டது தெரியுது. தமிழக சட்டமன்றம்ங்கற தலைப்புல வச்சிருக்கேன் ஆப்பு. அதை பார்த்துட்டு வேணம்னா கிழிங்க.

சட்டப்படி:

நித்யானந்தா தன் மேலான குற்றச்சாட்டை  சட்டப்படி  எதிர்கொள்ளப்போறதா சொல்லிக்கிட்டிருக்கிற தருணத்துல சுப்ரீம் கோர்ட் லிவிங்க் டு கெதர் ( கண்ணாலம் கட்டிக்காம சேர்ந்து வாழறது ) சட்டப்படி குற்றம் கிடையாதுனு வியாக்யானம் பண்ணியிருக்கு.

நடிகை ரஞ்சிதாவோட சேர்ந்து "வாழ்ந்ததா" சொல்லிக்கிடலாம். ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் சேர்ந்து வாழறதை நீதிக்கு (மோரல்) புறம்பான  செயலா சொல்லியிருக்கு.
நித்யானந்தா சன்னியாசி ஆறதுக்காக குறிப்பிட்ட டிப்ளமா படிச்சு டிகிரி வாங்கி சன்னியாசி ஆகலே. ஜஸ்ட் மக்களோட மோரல் கன்செர்னோட சன்னியாசியா வலம் வந்தாரு.  பிரம்மச்சரியத்தை உபதேசிச்சாரு. தான் மட்டும் டீ ஷர்ட் ,ஜீன் போட்டுக்கிட்டு நைட் க்ளப்ல குத்தாட்டம் போட்டாரு. இது இம்மாரல் மட்டுமில்லே. இவர் தன் ஆகா ஓகோ கொள்கைகளை பிரச்சாரம் பண்ணித்தான் கூட்டம் சேர்த்தாரு. பைசா வாங்கினாரு. ஆனா அவர் அப்பாவி மக்களை மயக்க எடுத்துவிட்ட தத்துவத்தையெல்லாம்  காத்துல விட்டுட்டாரு. ( அதுக்குதான் கதவை திற காற்று
வரட்டும்னாரு போல) . மேலும் தான் அந்த பொறம்போக்கு வேலைய செய்யலைனு
வாதம் பண்ணல. அது தப்புன்னோ,தவறுன்னோ ஒத்துக்கிடவுமில்லே. அந்த அஜால் குஜால் வேலைக்கு ஆராய்ச்சினு கலர் வேற கொடுத்து கவர் பண்றார். ஜஸ்ட் அதுக்காக வருத்தம் கூட தெரிவிக்கல.

இதெல்லாம் சட்டப்படி குற்றமில்லேனு எந்த அடிப்படைல சொல்றாருனு தெரியலை. சாமியார் மடத்துக்கு ரூ 100 நன்கொடை  தந்த பார்ட்டி கூட கன்ஸ்யூமர் ஃபோரத்துக்கு போகலாம்.

சாமியார் ஆஃபர் பண்ண சர்வீஸ் என்ன? உங்களை ஸ்வர்கத்துக்கு அனுப்பறேன் சாரி.. இதெல்லாம் அந்த காலத்து சாமியாருங்க ப்ராமிஸ். இவரு உங்களுக்கு இங்கயே ஸ்வர்கத்தை காட்டறேன்னு தான் சொல்லியிருப்பாரு. கல்கியே மேல் தமிழ் சினிமால ரஜினி மாதிரி சொன்னதை செய்துட்டாரு போல (போதை மருந்து கொடுத்தாரோ பேதி மருந்து கொடுத்தாரோ அவிகள பார்த்தா ஸ்வர்கத்துல இருக்கிற மாதிரியே இருக்குது.)  ஆனால்.  நித்யானந்தா தான் மட்டும் ஸ்வர்கத்தை பார்த்துட்டாரு. இது ரெஃப்யூசல் ஆஃப் சர்வீஸ், டெஃபிஷியன்சி ஆஃப் சர்வீஸ்.

நம்ப வச்சு ஏமாத்தனதால இது 420 செக்சன் கீழவும் வரலாம். ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்டும் வருது. குறிப்பிட்ட மத நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைய சீர் குலைச்ச செக்சன்லயும் கொண்டுவரலாம்.

ஒரு நம்பிக்கை என்னடான்னா கர்னாடக ஹை கோர்ட்டு  நித்யாவோட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி பண்ணியிருக்கு.


ஆமாண்ணே ...குமுதத்தில் தொடரும் நித்யானந்தா தொடரை படிக்கிறிங்களா? ஹும்.. இதையெல்லாம் எழுதி என்ன பிரயோஜனம். ரஞ்சிதாவோட மேற்கொண்ட ஆராய்ச்சியை பத்தி எழுதினாலும் நல்லாருக்கும். நமக்கும் எதுனா லேட்டஸ்டா விஷயம் கிடைக்கும்.


வேறு ஒருத்தியை மணக்க இருந்த கள்ளக்காதலனை ஆசிட் வீசி கொன்ற திருமணமான  பெண்.இப்படி ஒரு செய்தி கடந்த வாரம் தெலுங்கு நியூஸ் பேப்பர்ல வந்தது.  பரவாயில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலாறதுக்குள்ளவே மிச்ச சொச்ச விஷயத்துல எல்லாம் மகளிர் தாங்களே உரிய இடத்தை பிடிச்சுருவாங்க போல.


தினமணி அடித்த அபாயமணி:

தினகரனும்,தினத்தந்தியும் போடற போடுல எத்தை தின்னா பித்தம் தெளியுங்கற ஸ்டேஜுல ஒட்டு மொத்த வலைப்பூக்களுக்கு வர்ர ஹிட்ஸை மோனோபலியா சுட்டு வெப் எடிஷனையாவது நெம்பர் ஒன் ஆக்க  திட்டம் போட்டாப்ல இருக்கு.  இணையத்தால் தமிழ் பாழா போகுதுனு ஐட்டம் போட்டு பதிவர்கள்+வலைய்லக கவனத்தை கவர்ந்திருக்கு தினமணி.  ஒரு காலத்துல தினமணில வெளிவந்த வேலூர் டாக்டர் கண்ணப்பர் எழுதின நம் நாட்டு மூலிகைகள் தொடர் ஒரு புரட்சியையே கொண்டுவந்தது.

இப்ப ஞா இணைப்பா வர்ர தினமணி கதிரை ஒரு காலத்துல சனம் காசு கொடுத்து வாங்கிக்கிட்டிருந்தது எத்தனை பேருக்கு தெரியும்?

நல்ல நேரத்துல அடி முட்டாளுக்கு கூட அயனான யோசனைகள் வருமாம். கெட்ட நேரத்துல சித்தூர்.முருகேசனே உனக்கு22 எனக்கு 32 கதைல என்.டி.ஆரை கொண்டுவந்து மொக்கையாக்கிரலாம்.

என்ன தினமணி வலைதளத்துல உங்க வலைப்பூவை என்னை மாதிரியே  பதிவு பண்ணிட்டிங்க தானே.

ஸ்டாலின் அழகிரி பஞ்சாயத்துலருந்து அரசியல் கட்சிகள் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு நீதி என்னன்னா கட்சில உள்கட்சி ஜன நாயகம்ங்கறது ரொம்ப முக்கியம். தலைவனை கட்சி தான் நிர்ணயிக்கனுமே தவிர , தலைவன் நிர்ணயிக்க கூடாது. இப்படி ஒரு பழக்கத்தை வச்சுக்கிட்டா ஸ்டாலின், அழகிரி மட்டுமே இல்லை நாளைக்கு இவிக பேரன் மார் காலத்துல கூட தொடரும்.

பென்னகரம் இடைதேர்தல். ஹும்னு ஒரு பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. பென்னகர வாசிகள் கொடுத்து வச்சவுக.

பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் நாவலை ஞா படுத்திக்கொள்ளுங்கள். அதன் மலிவுப்பதிப்பை  கண்ணன் அய்யங்காருக்கு  சமர்ப்பணம் செய்திருப்பது ஞா வருதா?
பாலகுமாரன் பெயரால் (?) நண்பர்கள் ஏற்படுத்திய வலைப்பூ ஒன்னு மலர்ந்திருக்கு. ஆமாம் பாலகுமாரன் டாட் நெட்னு ஒரு வெப்சைட் இருந்ததே என்னாச்சு?

தமிழகத்தின் புதிய சட்டமன்ற வளாகம் பத்தி எல்லாரும் எழுதி கிழிச்சிட்ட நேரத்துல அச்சாணியமா ஒரு கேள்வி. இப்பத்தான் ஐ.டி துறை கொடி கட்டி பறக்குதுல்லயா?
சட்டமன்ற கூட்டத்தை பேசாம வீடியோ கான்ஃப்ரென்சிங் முறையில்  நடத்தலாம்லியா? என்னத்துக்கு டம்மியா ஒரு கூரை உண்மையா ஒரு கூரைனு தண்டசெலவு?

Thursday, March 25, 2010

தத்துவமா புடி.......

 நம்ம தத்துவம்:

1.ரெண்டு ஒதகாத நாய் சேர்ந்து எதாச்சும் பண்றேனு புறப்பட்டா தடை சொல்லாதே.உருப்பட்டா ரெண்டும் உருப்படும். இல்லேன்னா ரெண்டு நாசமுத்து போகும் நாட்டுக்கு நஷ்டமில்லே.
2.ஒரு ஒதகாத நாய் ஒரு  நல்ல மனுஷனோட சேர்ந்து எதானா பண்றேன்னு சொல்லுதா .. அந்த நல்ல மன்சனுக்கு சொல்லு " தலீவா! சுத்த தங்கத்துல நகை செய்ய முடியாது. அதுக்குனு ஓவரா கலப்படம் பண்ணினா மதிப்பு குறைஞ்சுரும் பார்த்து நடந்துக்கனு சொல்லு.
3ஒவ்வொரு .மனுஷனும்  அவன் சேர வேண்டிய விலாசம் அச்சாகியிருக்கிற
போஸ்ட் கார்டு மாதிரி . அவனை இன்னொரு அட்ரஸுக்கு டைவர்ட் பண்றதெல்லாம் வேண்டாத வேலை. முடியாத வேலை
4. நீ சக்ஸஸ் ஆகனும்னு விதி இருந்தால் உன் கிட்டே இருக்கிற அத்தினி மைனஸ் பாயிண்ட்ஸோட சக்சஸ் ஆவே. நீ ஃபெயிலியர் ஆகனும்னு விதி இருந்தா உன் கிட்டே இருக்கிற அத்தீனி ப்ளஸ் பாயிண்ட்ஸோடவே ஃபெயிலியர் ஆயிருவ
5. நல்லவன் காஞ்ச திராட்சை மாதிரி . காஞ்சானா தெரிவான். ஆனால் லாங் லைஃப். கெட்டவன் பச்சை திராட்சை மாதிரி . தள தளனு இருப்பான்.ஆனால் அழுகிருவான்.
6.தண்ணி போடறியா தனியா போடு. பலான இடத்துக்கு போறியா நாலு பேரோட போ
7.தம்மடிக்கிறவனோட தம்மு மட்டும் அடி. டீ சாப்பிடறவனொட டீ மட்டும் சாப்பிடு .புட்டி போடறவனோட புட்டி, குட்டி போடறவனோட குட்டி மட்டும் போடு. ஒருத்தனோடவே டீ சாப்டு,அவனோடவே தம்மடிச்சு அவனோட புட்டி போட்டு ,குட்டி போட்டு வியாபாரமும் அவனோடவே பண்ணாதே
8.நம்மக்குனு நாலு பேர் இருந்தா போதும்னு நாலு பேரோட மட்டும் சகவாசம் பண்ணாதே. அது மூத்திர குட்டைல மீன் பிடிச்ச மாதிரி . சீக்கிரமே நாறிப்போகும். குறைஞ்சது 30 சர்க்கிள் இருக்கனும். லாட்ஜு வைத்தியர் மாதிரி ஒவ்வொரு சர்க்கிளுக்கு ஒவ்வொரு சாயந்திரத்தை அலாட் பண்ணு. அதுல ஒரு நாலு பேர் தேறினா தேறட்டும். அவிகளுக்கு கூட மாசத்துக்கு ஒரு நாள்தான்.
9.ஒவ்வொரு இதயத்துலயும் ஒரு ரணம் இருக்கு. மனுஷனோட பேச்சு டூ இன் ஒன். அதுவே ரோஜா , அதுவே முள். உன் பேச்சு ரோஜாவா இருந்தா ரிலேஷன் ஷிப் ஓகே .முள்ளா இருந்தா கோவிந்தா..
10.யாரோ ரெண்டு பேர் பிரிஞ்சிட்டா அவிகள சேர்த்து வைக்கபாரு. இல்லாட்டி அவிக என்னைக்கோ ஒரு நாள் சேர்ந்துருவாங்கனு நினைச்சி ரெண்டு பேரிட்டயும் பழகு
11. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான செல் அழிஞ்சி போவுது. புது செல் உண்டாகுது. வயசு ஆக ஆக புது செல் உற்பத்தியாறது குறைஞ்சிக்கிட்டே வரும். முக்கியமா மூளையில உள்ள செல்கள். அதனால  100 வருஷ வாழ்க்கைக்கு தேவையான அறிவை  18 வயசுக்குள்ளவே மைண்ட்ல ஃபீட் பண்ணிவச்சுக்க. ஆக்சிடெண்ட் நடந்த பிறகு எந்த இன்ஷியூரன்ஸ் கம்பெனியும் பாலிசி தராது
12.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதும்பாங்க. புத்தகம் இன்னொருத்தன் நமக்காக செய்த தவத்தோட பலன். படி. சமைத்து பார் புஸ்தவம் மாதிரி. படிச்சி முடி. படிச்சதோட சாரத்தை புடி. அப்ளை பண்ணு. உன் அனுபவத்தை சேர்த்து மூளையில பத்திரப்படுத்து.
13.மனச்சிக்கலை விட மலச்சிக்கல் கொடுமை. ஏன்னா உனக்கு மனச்சிக்கல் வந்துட்டா அதன் விளைவை பிறர் தான் அனுபவிப்பாங்க. மலச்சிக்கல் வந்துட்டா அதன் விளைவை நீதான் அனுபவிக்கனும். மனச்சிக்கல் இலவச இணைப்பா வந்துரும்
14. நீ ஏதும் புது வாழ்வை வாழலை. கோடிக்கணக்கான சனம் வாழ்ந்த அதே உதவாக்கரை வாழ்வத்தான் வாழறே. உனக்கு வர இன்ப,துன்பம் எதுவும் புதுஸு கிடையாது.அதானால எது வந்தாலும் அலட்டிக்காதே!
15.உலகத்திலான மனித  வாழ்க்கைய பத்தின அராய்ச்சியோட  வெரி லாங்க் அண்ட் ஓல்ட் லேப் ரிப்போர்ட் தான் சரித்திரம்.  நமக்கு முன்னே வாழ்ந்தவங்க விட்டுட்டு போன இடத்துல இருந்து ஆராய்ச்சிய ஆரம்பிக்கனுமே தவிர முதல்ல இருந்து ஆரம்பிப்பேங்கறது முட்டா.....தி தனம்.  வேணம்னா ரேண்டமா செக் பண்ணிட்டு ஆராய்ச்சிய துவங்கலாம் தப்பில்லை.
16.புராணம், சரித்திரம் எல்லாத்தயும் ஒரு தாட்டி புரட்டுங்க. அதுல மனுஷன் பண்ணாட தப்பு ஏதாச்சும் இருந்தா பண்ணுங்க. அதனனோட விளைவ மனிதகுலம் தெரிஞ்சுக்கும். அதை விட்டுட்டு நான் புடுங்கி. அவனெல்லாம் தண்டம். நான் தப்பா செய்தாலும் சரியா வரும்னு நினைச்சா உன் வாழ்க்கைங்கற ரயில் ஒரு லைஃப் டைம் லேட்டாயிரும்.
17.ஒவ்வொரு தப்பையும் நாமே பண்ணி திருந்தனும்னா வாழ் நாள் போதாது.
18.மனுஷனோட குண நலனை  அவன் ஆணா,பெண்ணாங்கறது முதற்கொண்டு, அந்த சமயம் சாப்டானா இல்லையா? உச்சா போனானா இல்லையாங்கறது வரை  பாதிக்கும்.


சனங்க தத்துவம்:
1.கெட்ட பழக்கம் கெஸ்ட் மாதிரி வரும். போக போக நமக்கு ஓனராயிரும்.டேக் கேர்
2. எதிரிக்கு தெரியக்கூடாத விஷயத்தை நண்பனுக்கு கூட சொல்லாதே . முகம் தெரியாதவன் விரோதியாறதில்லே. இன்றைய நண்பன் தான் நாளைய எதிரி
3.பக்தி,காதல்ல நீ என்ன பண்றேங்கறது முக்கியமில்லே எந்த உணர்வோட பண்றேங்கறதுதான் முக்கியம்
4.துன்பத்துல இருக்கிறவன் துன்பத்தை தான் கொடுப்பான்.
5.பயத்துல இருக்கிறவந்தான் எதிராளிய பயமுறுத்துவான்.
6.எந்த வீட்லயாவது நாயையோ,பூனையையோ உயிரோட கொளுத்தினதா கேள்வி பட்டிருக்கிங்களா? ஆனால் பெண்ணை கொளுத்தறத ?
7.கணவன் மின் உபகரணம். மனைவி ஸ்டெபிலைசர் மாதிரி .சில கேஸ்ல அவன் ஃபேன் மாதிரி இருப்பான், மனைவி கண்டென்சர் மாதிரி இருப்பா. கண்டென்சர் புட்டுக்கிட்டாலும் பிரச்சினைதான். ஸ்டெபிலைசர் வேலை செய்யலன்னாலும் பிரச்சினைதான்.
8.பணம்,பேர்,புகழ்,நண்பர்கள்,படை,பலம் எல்லாம் இருக்கும் போது நீ எப்படி இருக்கியோ அது உண்மையான நீ இல்லே. அதெல்லாம் போன பிறகு நீ எப்படி இருக்கியா அதான் உண்மையான நீ
9.ஹீரோன்னா ஜெர்கின் கோட், ரேபான்  போட்டு லட்ச ரூபா பைக்ல பறக்கறவனில்ல. எவன் ஒருத்தன் தன்னவர்களுக்காக தன்னையே பலி செய்ய தயாராகிறானோ அவந்தான் ஹீரோ

நிர்வாணமும் பெண்களும்

வணக்கம் தலை ! வழக்கம் போல தலைப்பை பார்த்து என்ட்ரி கொடுத்த பார்ட்டியானா சிகப்புல இருக்கிறத மத்தும் படிச்சுருக..

தத்துவம்னு ஒரு தனிபதிவும் போத்திருக்கேன். அதை படிக்க CLICK HERE.


"ஏய் ! நீ தானே ஒரு சந்தர்ப்பத்துல சொன்னே .பெண் பலான நேரத்துல கண்ணை மூடி தனக்கு விருப்பமானவனை கற்பனை பண்ணிக்கிறான்னு"

"இந்த உலகத்துல எல்லாமே உண்மைதான். எல்லாமே பொய் தான்.ஆனால் எந்த பொய்யும் 100 சதம் பொய் கிடையாது. எந்த நிஜமும் 100 சதம் நிஜம் கிடையாது. எந்த பொய்யும் 24 மணி நேரம்,365 நாளும் பொய்யா இருக்க முடியாது. எந்த நிஜமும் 24 மணி நேரம்,365 நாளும் நிஜமா இருக்க முடியாது. மாறாதது எதுவுமில்லே மாற்றத்தை தவிர"

" ஏய் இந்த குழப்பற வேலையெல்லாம் வேணா உண்மைய சொல்லு. அந்த நேரத்துல பெண் ஏன் கண்ணை மூடிக்கிறா?"

"சமஸ்கிருதத்துல பஞ்சேந்திரியானாம் நயனம் பிரதானம்னு ஒரு வாக்கியம் உண்டு. மனிதனோட சக்தி பல வகைல வீணாகுது. அதிலயும் கண்வழியா அதிகம் வீணாகுது. உலகம் கடல் மாதிரி. மனித மனம் படகு மாதிரி. படகுக்கு கீழே கடல் நீர் இருக்கலாம். ஆனா படகுக்குள்ள கடல் வரக்கூடாது.மனித மனம்ங்கற படகுக்குள்ள உலகங்கற கடல் நீரை அனுப்பற முக்கிய,பெரிய ஓட்டை கண். கண் திறந்திருக்கும்போது ரேடியோல வர்ர வாய்ஸ் யாருதுனு கூட சரியா கெஸ் பண்ண முடியாது. அட் தி சேம் டைம் கண்ண மூடிட்டு கேட்டா பி.ஜி.எம்.ல வர்ரது வயலினா வீணையானு கூட கெஸ் பண்ணலாம். கண் மனிதனோட மனோ சக்தியை வெளியே அனுப்புது. சக்தி குறைஞ்சா உன்னால உன் பார்வைய உள் நோக்கி திருப்ப முடியாது. பெண் இன்ட்ராவர்ட் அவளுக்கு தனக்குள்ள ,தன் அறைக்குள்ள, தன் வீட்டுக்குள்ள என்ன நடக்குதுங்கறத கவனிக்கிறதுலதான் ஆர்வம். ஏன்னா அவளோட இன உறுப்பின் அமைப்பே அப்படி. செக்சுங்கறது மனித உடலோட மையம் மட்டுமில்லே. மனித மனதோட மையமும் அதான்.அதனால தான் தியானம் பண்றவங்க கண்களை மூடிக்கிறாங்க. ஊனக்கண்ணை மூடும்போது உன் கவனம் குவியுது. கான்சன்ட்ரேஷன் அதிகரிக்குது. ஷி வில் பிகம் மோர் ரெசிப்டிவ். அதாவது அவள் மேலும் உள்வாங்குபவளா மாறிர்ரா.பை தி பை பலான நேரத்துல பெண் மல்லாந்து படுத்திருக்கிறப்ப கண்ணை மூடினா அது மேல் நோக்கி செருகும். அப்போ அவளோட கவனம் ஆட்டோ மெட்டிக்கா ஆக்னா சக்கரத்து மேல போயிரும்.அப்போ உடலுறவு ஒரு யோகமா, தியானமா மாறுது. அதனால தான் உடலுறவுக்கு பின்னாடி கூட பெண் ஆக்டிவா இருக்கமுடியுது. "

" நீ உண்மைய சொல்றியா பீலா விடறியான்னே தெரியமாட்டேங்குது. நீ கண்ட புஸ்தவத்தையும் படிக்கிறியே தவிர நீ சொல்ற எதுவுமே அந்த புக்ஸ்ல இல்லே"

"த பார்ரா .. நான் இல்லாதப்ப அன் அலமாரிய எல்லாம் குடையறனு அர்த்தம்"

"சே .. போன வெள்ளிக்கிழமை நீ முன்னாடி போய்ட்டே .. உங்கப்பா சஷ்டி பஞ்சாங்கத்தை எடுத்து சஷ்டி எப்ப வருது பாரும்மான்னாரு. நான் பஞ்சாங்கத்தை பிரிச்ச உடனே கண்ல பட்ட முதல் பக்கத்துல சாந்தி முகூர்த்தம் பத்தி தான் போட்டிருந்தது. பெண் ருதுவாகி குளித்து சுத்தமான ஐந்து நாட்கள் கழித்துனு போட்டிருந்துச்சு. இதென்னடா தலையெழுத்துனு சஷ்டி எப்போனு பார்த்துட்டு மூடி வச்சுட்டேன். ஞாயிற்றுக்கிழமை நீ ஊர்ல இல்லாத நேரத்துல உன் புக்ஸை எல்லாம் புரட்ட ஆரம்பிச்சேன். "

"அப்படி போடு அரிவாளை.. மொத்தத்துல செக்ஸு சப்ஜெக்டுக்குள்ள இழுத்துருச்சுனு சொல்லு"

" சீ போ உனக்கு வேற எண்ணமே கிடையாது"

"மொத்தத்தையும் படிச்சு என்னதான் புரிஞ்சிக்கிட்டே "

"எனக்கு ஒன்னுமெ புரியலை. ச்சும்மா ஹிண்டு பேப்பர் படிக்கிற மாதிரி படிச்சேன் . நீ பேச பேச ..........."

"தினத்தந்தி மாதிரி புரியுதுங்கறே.. ஜெய் ஆதித்தனார்"

"நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை. நீ சொல்றதெல்லாம் நிஜமா ? இல்லே பீலாவா?"

"அது எனக்கேதெரியாது..இந்த ஜோசிய புஸ்தகங்கள படிச்சதுல கொஞ்சமா குழம்பிட்டேன். எனக்கு லக்னத்துல குரு உச்சம். அதனால தெய்வீக ப்ரேரணை இருக்குமாம். சூரியன் ஆத்மகாரகன், புதன் வித்யாகாரகன் இவிக ரெண்டு பேரும் சேர்ந்ததால தெரியாத விஷயத்தையெல்லாம் தொட்டு கலக்குவேனாம். ஆத்மாலருந்து வித்தை அப்படியே இடைதேர்தல் நடக்கிற தொகுதில பணம் மாதிரி கொட்டுமாம்.தர்கத்துக்கு அதிபதியான செவ்வாய் ஜீவனாதிபதியாகி வித்யாஸ்தானத்துல ஞான காரகனான கேதுவோட சேர்ந்ததால வெறுமனே தர்க்கத்தை வச்சே சத்தியத்தை பிடிச்சுருவனாம். போன ஜென்மத்துல கத்துக்கிட்ட வித்தையெல்லாம் ஞா வந்துருமாம்................."

"அப்பாடாஆஆஆஆஆஆ ஆச்சா ..இன்னம் இருக்கா? எனக்கு அதெல்லாம் தேவையில்லை. நீ இந்த நாட்டுக்கு தலைவனாவியா?"

"ஆனாலும் ஆகலாம் உயிரோட இருந்தா"

"ஆர் யு ஜோக்கிங்?"

" நோ ..ஸ்டேட் போலீஸ்லருந்து ,இன்டலிஜென்ஸ் வரை என்னை வலை வீசி தேடப்போறாங்க"

"எப்படிடா இவ்ள கன்ஃபார்மா சொல்றே?"

"என்னோட கடக லக்னத்துக்கு குரு டூ இன் ஒன். சத்ரு ,ரோக ,ருண வாதைகள தரவேண்டியதும் அவர்தான். தூர தேசங்கள்ளருந்து உதவிய தந்து உயர்ந்த பதவிய தரவேண்டியதும் அவர்தான். என் ஜாதகத்துல பத்துல ராகு இருக்கார். அதனால தலைமறைவு வாழ்க்கை கூட வாழவேண்டி வரலாம். மேலும் 9ல சனி இருக்கிறதால முன்ன பின்ன தெரியாத பஞ்சை பராரிங்க என்னை போஷிப்பாங்க. லக்னாதிபதி ரெண்டுல இருந்து எட்டை பார்க்கிறதாலயும், பாதகாதிபதியோட சேர்ந்ததாலயும் வாழ்க்கைல பல தடவை செத்துருவனாம், ஆனால் அந்த பாதகாதிபதி சுக்கிரங்கறதால அவரு சஞ்சீவி மந்திரத்தை வச்சிருக்கிறவர்ங்கறதால பிழைக்க வச்சுருவாராம். நான் பீலா விட்டாகூட என் வார்த்தைகள் நிஜமாயிருமாம்."

"அய்யோ அய்யோ என்ன நீ ஹோட்டல்ல சர்வர் லிஸ்ட் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டே போற.முதல்ல இந்த புக்ஸையெல்லாம் பழைய பேப்பர் கடைக்கு போட்டுர்ரன். உனக்கு உன்.........னத பதவியும் வேணா.. பஞ்சை பராரிகளோட தலைமறைவு வாழ்க்கை வாழறதும் வேணா"

"ஷிட் என்ன பேசறே நீ எனக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்னு டாக்டர் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்னு வை. அந்த சர்ட்டிஃபிகேட்டை கிழிச்சு போட்டுட்டா ஹெச்.ஐ..வி நெகடிவ்னு ஆயிருமா?"

மாயாவை லாஜிக்கலா பேசி மடக்கினப்ப நான் சொன்னதெல்லாம் நடந்துர
போகுதுனு நெனச்சி கூட பார்க்கலை. ஆனா நடந்தது. தமிழக அரசியலையும்,ஆந்திர அரசியலையும் ஒப்பிட்டு எழுதும்போது ஒருதரம் என்.டி.ஆர் ஆந்திர எம்ஜி.ஆர் இல்லே ஆந்திரத்து பெரியார்னு நகர தூதால கட்டுரை எழுதினேன். தன்னிலிருந்த பெரியாரின் குண நலன் களுக்கு சிகரம் வச்ச மாதிரி என்.டி.ஆர் டிவோர்சி+ வளர்ந்த பையனுக்கு தாயான லட்சுமி பார்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

ஆளுங்கட்சில இருந்தும் கோஷ்டி அரசியல் காரணமா இந்த நாலு வருசத்துல ஜகன் சாரும் ரொம்பவே அல்லல் பட்டாரு. லோக்கல் இஷ்யூஸுக்காக (குடி நீர் , பஸ் ஸ்டாண்டை மாத்த கூடாது இத்யாதி) தொடர் உண்ணாவிரதமெல்லாம் இருந்தாரு. நான் கட்சி கிட்சியெல்லாம் தூர வச்சிட்டு போய் மாலை போட்டு வாழ்த்திட்டு வந்தேன்.

தேர்தல் வந்தது. என்.டி.ஆர் வெற்றி வாகை சூடினாரு. லோக்கல்ல மாவட்டத்துல நின்ன காங்கிரஸ் ஜாம்பவானெல்லாம் காலி. அடிச்சு பிடிச்சு சீட் வாங்கின ஜகன் சாரு மட்டும் ஜெயிச்சாரு. நானும் மாயாவும் போய் வாழ்த்திட்டு வந்தோம்.


"யோவ் ! உன் கேரக்டரே புரியலய்யா. எலக்சன் எதிர்த்து வேலை பார்க்கிறே . ஜெயிச்சா வாழ்த்த வந்துர்ரே. சரி உன்னை என்.டி.ஆர் நல்லா மயக்கி வச்சிருக்காரு .. நீ என்ன பண்ணுவே"ன்னு நக்கலடிச்சு அனுப்பினாரு.

ஆட்சிய பிடிச்ச என்.டி.ஆர் சந்திரபாபுவ நிதிமந்திரியாக்கினாரு. பிற்காலத்துல சி.எம்.ஆகிஅமல் படுத்தி செருப்படி வாங்கின பொருளாதார சீர்திருத்தங்களையெல்லாம் என்.டி.ஆர் முதல்வரா இருக்கிறப்பவே நிதி மந்திரிங்கற ஹோதால அமல் செய்ய பார்த்தார். என்.டி.ஆர் அந்த ஜீ.ஓக்களை நிறுத்தி வைக்க உத்தரவு போட்டார். பாபுவோட ஈகோ அடி வாங்கிருச்சு.



லட்சுமி பார்வதியை சாக்கா வச்சு கோஷ்டி சேர்க்க ஆரம்பிச்சாரு. இதுக்கு என்.டி.ஆரோட வெள்ளந்தியான குண நலனும் காரணம். முதல் தடவை அரசியல்ல குதிச்சு வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிச்சுட்டு தன் பேச்சு பதிவு செய்யப்பட்ட ஆடியோ கேசட்டை ஆளுக்கொன்னா கொடுத்து அனுப்பிட்டாரு.
அப்போ இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலைல கண்டக்டர், டாக்சி ட்ரைவரெல்லாம் ஜெயிச்சு வந்துட்டாங்க.


1983க்கும், 1994க்கும் இடையில 11 வருஷம் கடந்து போயிருச்சே. அரசியல் எந்த அளவுக்கு கரப்ட் ஆகியிருக்கும். தேர்தல் செலவு எந்தளவுக்கு எகிறியிருக்கும். இதை யெல்லாம் யோசிக்காம மறுபடி ஆளுக்கொரு காசட்டை கொடுத்து அனுப்புவாராம்.


என்.டி.ஆர் சாம்பர்லருந்து "எப்படியோ சீட் கிடைச்சுருச்சு. தேர்தல் செலவுக்கு என்னடா பண்றதுன்னு கேண்டிடெட் நொந்து போய் வரப்ப தன் சேம்பருக்கு வரச்சொல்லி சந்திரபாபு கூப்டனுப்புவாராம். பணத்துக்கு "ஏற்பாடு" பண்ணுவாராம்.


இப்போ சந்திரபாபுவுக்கு அவிக ஈல்ட் ஆகித்தானே ஆகனும். இப்படியாக 1994 ஆகஸ்டுல ஜகத் பிரசித்தமான சந்திர பாபுவின் முதுகில் குத்தும் எபிசோட் நடந்தேறிச்சு. ஆட்சி போச்,கட்சி போச்.

நான் அவசர அவசரமா அவரோட ஜாதகத்தை ஆராஞ்சி தை மாசம் மூணாவது வாரத்துல உங்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டாங்கனு தந்தி கொடுத்தேன்.

ஜில்லா ஜில்லாவா போய் கூட்டம் போட்டு நடந்ததை மக்களுக்கு சொல்றேனு என்.டி.ஆர் சவால் விட்டாரு. கூட்ட செலவுக்கு செக் போட்டு அனுப்பினப்ப வங்கில அக்கவுண்டை நிறுத்தி வச்சிருக்கிறதா சொல்லிட்டாங்க.

அவர் அரசியலுக்கு வர்ரப்பவே பாக பிரிவினை எல்லாம் பண்ணிட்டு என் கிட்டே ஒன்னுமில்லேனு சொல்ட்டுதான் வந்தாரு. கட்சி மெம்பர்ஷிப் காசு டெப்பாசிட் ஆகியிருக்கிற வங்கிக்குதான் செக் அனுப்பினாரு. கோர்ட் லீவா இருந்தாலும் ஹவுஸ் மோஷனோ யூரினோ எல்லா தகிடுதத்தமும் செய்து செக் என் கேஷ் ஆறத நிறுத்திட்டாங்க.

ஜனவரி 18 ஆம் தேதி "என்.டி.ஆர் திடீர் மரணம்"னு தினசரிகள்ள செய்தி. கேவலம் ஒரு தேர்தல்ல அவரு தோத்துப்போனதுக்கே நொறுங்கி போன எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சி பாருங்க.

நான் ஒரு சாமானியன். ஜொள்ளு பார்ட்டி. குழப்ப வாதி. வில் பவர் இல்லாத ஆசாமி, சந்தேக கேஸு, மதில் மேல் பூனை, தாழ்வு மனப்பான்மை உள்ள பார்ட்டி. இதையெல்லாம் ஓவர் கம் ஆறதுக்குதான் என்.டி.ஆரை என் ரோல் மாடலா ஏத்துக்கிடேன். ஏதோ யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி ஓரளவுக்கு மோல்ட் ஆனேன்.. அவர் ஃபார்முலா சக்ஸஸ் ஃபார்முலான்னிட்டு அதுவே என் ப்ளூ ப்ரிண்ட்டுன்னு டிசைட் ஆயிட்டன். அந்த நேரம் பார்த்து கட்சி தோத்து போச்சு. இருந்தாலும் என்னை நான் தேத்திக்கிட்டேன். என் மனசை கொஞ்சமா உறுதிப்படுத்திக்கிட்டு பாசிட்டிவா யோசிச்சு அவரோட தோல்விக்கான காரணங்களை ஆராய்ச்சி பண்ணி தலைவர் வெற்றிக்கு ஒரு ப்ளூ ப்ரிண்ட் தயாரிச்சு அனுப்பினேன். எப்படியோ ஜெயுச்சுட்டார். ஆச்சு போச்சுனு இருந்தப்ப படக்குனு செத்தே போயிட்டாரு. தாளி அவரு ஒரு மூனு மாசம் உயிரோட இருந்திருந்தா சந்திரபாபுவுக்கு ஆனல் செக்ஸ் பண்ணியிருப்பாரு அது வேற கதை . செத்தே போயிட்டாரு.ஆட்டம் க்ளோஸ்.

என்.டி.ஆர்ங்கறது என்ன? மூணெழுத்தா? அவர் உடம்பா? அவர் உயிரா? அவர் கொள்கையா? எனக்கும் என்.டி.ஆருக்கும் என்ன சம்பந்தம்? இப்படி என்னென்னவோ யோசனைகள் குழப்பங்கள்.

கொஞ்ச நாள் அவர் சம்சாரம் லட்சுமி பார்வதி சில எம்.எல்.ஏக்களை வச்சுக்கிட்டு அரசியல் பண்ணுச்சி. எதுவும் போனியாவல.1999ல அடுத்த தேர்தல் வந்தது . தாளி எம்.எல்.ஏங்களை பிடிச்சி சி.எம் ஆயிர்ரது இல்லே கண்ணா இப்புடு சூடுனு களத்துல குதிச்சேன். ஜகன் சாருக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்தது. நான் நேர போய் "சார் ! நான் காங்கிரஸ் கொடிய பிடிக்க மாட்டேன். என்னோடது தனி ஆவர்த்தனம். சந்திரபாபு தலைமைல இருக்கிற தெ.தே. என்.டி.ஆரோட தெ.தேசமில்லை. அதை தோற்கடிங்கனு தான் பிரசாரம் பண்ணுவேன்"னு சொல்லிட்டு வந்தேன். சொன்னதை செய்யறது எவ்ளோ கஷ்டம், தடைகளை மீறி சொன்னதை செய்துட்டா எவ்ளோ கஷ்டங்கறதெல்லாம் அப்புறம்தான் புரிஞ்சது. ரோட்டுக்கு வந்த பிறகு...

ஆணை ஈர்க்கும் நிர்வாணம்

தலைப்புக்கேத்த சேதி மட்டும் போதும்னா இதே பதிவுல சிகப்பு நிறத்துல இருக்கிற பார்ட்டை மட்டும் படிச்சிருங்கண்ணா. காலச்சக்கரம் பத்தி ஒரு வினோதமான விதிய விவரிச்சு தனி பதிவு ஒன்னு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க‌

மாயா வெட்கமும் கோபமுமா சேம்பர் கதவை திறந்துக்கிட்டு வெளிய போனாள்.

அன்னைலருந்து 15 நாள் முன் போலவே லைப்ரரிங்க மேலயும் ,பப்ளிகேசன்ஸ் மேலயும் படையெடுத்தேன். ஒரு பக்கம் ஜோதிஷம் தொடர்பான புக்ஸ். இன்னொரு பக்கம் மனிதனோட எதிர்காலத்தை அதுலயும் டெசிஷன் மேக்கிங்கை நிர்ணயிக்கிற கான்செப்ட்ஸ் எதுவா இருந்தாலும் அது தொடர்பான புக்ஸ். ஜெனட்டிக் இஞ்சினீரிங், தியரி ஆஃப் கர்மா, சைக்காலஜி, மெடிசின் இப்படி சகல சாதிலயும் வாங்கினேன். ஜோதிஷம் சம்பந்தப்பட்ட புக்ஸை மூட்டை கட்டி வச்சுட்டேன்.

மத்ததையெல்லாம் விடியல்லயும், ஓய்வு நேரங்கள்ளயும் படிச்சி பார்த்தேன். ரஃபா ஒரு ஐடியா வந்தது. பேரன்ட்ஸ்,டீச்சர்ஸ்,கொலிக்ஸ், என்விரான்மென்ட், க்ளைமேட், ஒலி,ஒளி,ஸ்மெல், தொடுகை இப்படி ஹ்யூமன் மைண்டை பாதிக்கக்கூடிய கான்செப்ட்ஸ் என்னென்னனு ஒரு லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணேன். ஏண்டான்னா நாளைக்கு ஜோதிஷம்ங்கற கலர் என் மைண்ட்ல ஒட்டிக்கிட்டா இதெல்லாம் பெரிசா தோணாம போயிட கூடாதுல்லயா.

அப்புறம் தான் ஜோஸ்ய புஸ்தவங்களை எடுத்தேன். இந்த நட்சத்திரமா இதான் பலன் புடி, பலான ராசியா இதான் பலன் படி, இப்படியே லக்னத்தை பொருத்தும், கிரகங்கள் நின்றது பொருத்தும்,கிரகங்கள் சேர்ந்தது பொருத்தும் ஏராளமான பலன்கள், யோகங்கள், அரிஷ்டங்கள், சமஸ்கிருதம் நனைந்த சொல்லோவியிங்கள்.முதலில் அந்த ஒகாபலரியே புடிபடலை.

புது சப்ஜெக்ட்ல இறங்கரச்ச, புது பாஷை கத்துக்கறச்ச ஒரு டெக்னிக் யூஸ் பண்ணுவேன். அதுல பலான விஷயங்களை முதல்ல தேடிக்கிட்டே போவேன். அதே மாதிரி ஜோசியத்துலயும் பலான விஷயங்களை தேடி படிக்க ஆரம்பிச்சேன்.

சேம்பிளுக்கு ஒன்னு ( நீங்க நம்பமாட்டிங்க ஆனாலும் இது உண்மை) எந்த ராசி பெண் எந்த இடத்துல வயசுக்கு வருவானு ஒரு கான்செப்ட். நொந்து போனேன். இதை போய் எவ கிட்டே கேட்டு உறுதி படுத்திக்கறது. மாயாவ வேணம்னா கேட்டுரலாம் . பாட்டிய கேட்டா கட்டையால அடிப்பா.

ஜொள்ளு பார்ட்டிகளுக்காக மேலும் ஒன்னு ஒரு குறிப்பிட்ட கிரக நிலையில் பிறந்த பெண் எத்தனை ஆண்களூடன் கூடினாலும் திருப்தியடைய மாட்டாளாம். ஆண் உறுப்பின் வடிவத்தில் செய்யப்பட்ட கருவியை கொண்டே திருப்தியுறுவாளாம்.
ஜாதகத்தை வச்சு எவன் சுய இன்பம், எவன் ஹோமோ, எவன் ஓரல் செக்ஸு,எவன் அடுத்தவன் பெண்டாட்டியயே பார்ப்பான் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் விலாவாரியா இருந்தது.

எல்லாம் ஓகே. ஆனால் புஸ்தவம் சொல்ற பலன் எப்படி மெட்டிரியலைஸ் ஆகுது, எப்படி உண்மையில நடக்குதுங்கறதுக்கு தர்க ரீதியான ஒர்க் அவுட் எங்கேயும் கிடைக்கல.

நானும் உலகத்தலைவர்களோட பிறப்பு விவரங்களையெல்லாம் சேகரிச்சு ஆராஞ்ச்சிட்டேன். அக்கம் பக்கம், நம்ம கிட்டே வேலை செய்யறவன் இப்படி ஆராஞ்சி பார்த்ததுல கடந்த காலம் மட்டும் 70 சதவீதம் வரை உண்மைனு தோனுச்சு. ஆனால் முப்பது சதவீதம் பல்லை இளிக்குது. அதே நேரத்துல ஃப்யூச்சர் பத்தின கணிப்புகள் வெறும் முப்பது சதவீதம்தான் உண்மையாறத அடுத்த 6 மாசத்துலயே என்னால உணரமுடிஞ்சது. இந்த பரிகாரங்கள் விஷயமும் அதேதான்.

கிரக பலன் உண்மையாறதையே எப்படி உண்மையாகுதுனு அதுக்கான ப்ளூ ப்ரிண்டை கொடுக்க முடியாத பட்சத்தில் பரிகாரங்கள் எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு எப்படி எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியும்?

ஜோசிய புஸ்தவங்களை மறுபடி தூரவச்சேன். கண்ணுக்கு தெரியாத கிரகங்களை பக்கத்துல வச்சிட்டு சூரிய சந்திரர்களை பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன்.

சூரியனை பார்த்து தாமரை மலருது ஓகே. சூரியகாந்தி பூ சூரியனிருக்கிற திசைய நோக்கி திரும்புது. சரி.. தாமரைக்கும், மனித உடலுக்கும் எதுனா ஒற்றுமை இருக்கா? சூரிய காந்தி பூவுக்கும் மனித உடலுக்கும் எதுனா ஒற்றுமை இருக்கா?

சூரியன்ல இருந்து சோலார் பவர் கிடைக்குது, மாலை வெய்யில்லருந்து விட்டமின் இ கிடைக்குது, டெம்பரேச்சர் கிடைக்குது. கிருமிகள் சாகுது.மாலை வெய்யில் மாமருந்துங்கறாய்ங்க. இப்படி எத்தனையோ இருந்தாலும் டைரக்டா மனித உடல், மனிதனுடைய டெசிஷன் மேக்கிங் மெல சூரியனுடைய இம்பேக்ட் என்ன?

சூரிய ஒளி கிடைக்காதப்ப மனித உடல்,மனதோட செயல்பாடு என்ன?

சந்திரனை பார்த்தா அல்லி மலருதுங்கறாங்க. ஜோசியப்படி அவரு மனோகாரகர். சந்திர ஒளில (அதுலயும் பவுர்ணமி நிலவுல) காதல் ஊற்றெடுக்கும்ங்கறாங்க. படுத்த படுக்கையா இருக்கிற பேஷண்ட்ஸ், மன நிலை பாதிக்கப்பட்டவங்க பவுர்ணமி அமாவாசை சமயத்துல எப்படி இருக்காங்க.. அதுக்கு முன்னே பின்னே என்ன நிலைமை? இப்படி எத்தனையோ கேள்விகள். இந்த கேள்விகளுக்கு பதில் பெற நான் ரொம்பவே மெனக்கெட வேண்டி வந்தது.

(இந்த தொடர் இதே ரேஞ்சுல போனா மொக்கையாயிருங்கண்ணா! அதுனால ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ணி உடைச்சி திருப்பறேன் - சித்தூர்.எஸ்.முருகேசன்)

சூரிய சந்திரர்களை பற்றின ஆராய்ச்சில ஸ்தூல உலகத்தை வச்சே , சைன்ஸை ஆதாரமா காட்டியே நிறைய விஷயங்களை நிரூபிக்க முடிஞ்சது. மற்ற கிரகங்கள் சாயா கிரகங்களை பொருத்தவரை அந்த கிரகங்களோ எஃபெக்ட்ஸ் மனித உடல் மேல, மனசு மேல எப்படி வேலைசெய்யுதுனு தர்க ரீதியா, கெஸ் பண்ண முடிஞ்சது. உ.ம்: ராகு கேதுன்னா விஷம் . மனுஷ உடம்புல விஷம் எப்படி வரும்? அந்த விஷம் ராகு,கேது நல்ல நிலையில உள்ளவுகளை ஏன் பாதிக்கறதில்லை. சர்ப்பதோஷம் உள்ளவுகளை மட்டும் ஏன் பாதிக்குது எப்படி பாதிக்குது . செவ்வாய்க்கும் கோபத்துக்கும் என்ன சம்பந்தம்/ இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க , ரிஷிகள்,மகரிஷிகள் தங்களோட தவப்பயனால அறிஞ்சு போட்டு வச்ச கோட்டோவியங்களுக்கு வண்ணம் பூச முடிஞ்சது. அது ஒரு புது உலகமா என் முன்னாடி விரிஞ்சது. ஓரளவு மருத்துவம், மனோதத்துவம், ஆந்த்ரபாலஜி மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத சப்ஜெக்ட்ஸ்ல எனக்கிருந்த மினிமம் பேலன்ஸ் தனமான் அறிவு இந்த ஆராய்ச்சிக்கும் ரொம்ப உதவுச்சு.

அதே சமயத்துல மனுசன் கிரகங்கள் கையில பொம்மை இல்லைன்னு ஸ்தாபிக்கவும், வெற்றிக்கு தனி மனிதனோட முயற்சி, போராட்டம் கூட தேவைனு நிரூபிக்கவும். மனிதன் நினைச்சா கிரகங்களுக்கே பாய்லா காட்டி ஏமாத்தி சாதிக்கமுடியும்னு ருசுப்படுத்தவும் அனேக ஆதாரங்கள் எனக்கு கிடைச்சது.

இந்த ஹடாவுடில ( அடாவடிங்கற பிரயோகம் தப்பு. அர்த்தமும் தப்பு தம்பிங்களா! ஹடாவுடின்னா வேகம், பரபரப்புனு அர்த்தம்) மாயாவுக்கு எனக்கும் லேசா கேப் விழ ஆரம்பிச்சுருச்சு.

நான் பிளாட்ஃபாரங்கள், அமரராகிவிட்ட போன தலைமுறை ஜோசியர்களின் வீடுகள் இந்த மாதிரி இன்னும் பல பாயிண்ட்ஸ்ல இருந்து பிக் அப் பண்ண புஸ்தவங்களை சரோஜா தேவி நாவல் மாதிரி படிச்சிக்கிட்டு குறிப்பெடுத்துக்கிட்டிருக்கிறத பார்த்து
மாயா அப்பப்போ கலாய்ப்பா.

"ஆராய்ச்சில உனக்கு இருக்கிற இன்டரஸ்ட் எனக்கு ஏன் வரமாட்டேங்குது?"

" நான் தான் சொன்னேனே ஆராய்ச்சிங்கறதென்ன உண்மைய சுத்தி இருக்கிற ஆடைய உருவறது. நிர்வாணப்படுத்தறதுல ஆணுக்கிருக்கிற இன்டரஸ்ட் பெண்ணுக்கு இருக்காது கண்ணு.. உடலுறவு சமயத்துல கூட ஆண்தான் பெண்ணை நிர்வாணப்படுத்தி பார்க்க துடிப்பான். அவன் நிர்வாணமாவே இருந்தாலும், தன்னை நிர்வாணப்படுத்தினாலும் பெண் எந்த நிர்வாணத்தையும் பார்க்கிறதில்லை. கண்ணை மூடிக்கிறா.."

கால சக்கரம் ரொம்ப கவர்ச்சியானது.

ஒரு மகா வெடிப்பின் காரணமாகவே  ஈரேழு பதினான்கு லோகங்கள்  என்று பவுராணிகர்கள் கூறும் அனைத்து உலகங்களும் அடங்கிய இந்த விஸ்வம்  தோன்றியதாய் சொல்கிறார்கள்.மேற்படி வெடிப்பின் காரணமாய் ஏற்பட்ட வெப்பம் காரணமாக ஒரு புறம்  இது மேன்மேலும் விரிவடைந்தபடியே, மறு புறம்  மேற்படி வெப்பம் குறைந்து வருவதால் இன்னொரு புறம் சுருங்கியபடியே இருப்பதாயும் கூறுகிறார்கள். இதை ஒரு ப்ராக்டிக்கல் பர்சனாக முழுமையாக நம்புகிறேன்.


இந்த படைப்பு இல்லாத காலமே இல்லை என்றும் ஒரு ஸ்வாரஸ்யமான வாதமும் செலாவணியில் இருக்கிறது. கீழ் காணும் சமாச்சாரத்தை படிச்சத்லருந்து இதையும் நம்பலாமானு யோசிச்சிட்டிருக்கேன். நீங்களும் தான் படிச்சு பாருங்களேன்.

ராமனின் கணியாழியுடன் அனுமார் சீதையை தெடி ஆகாய மார்கமாக போகிறார். அப்போது அகஸ்திய முனிவர் "வாப்பா இப்படி தம்மாத்திக்கிட்டு போவே" என்று கூப்பிடுகிறார்.அனுமார் மரியாதைக்கு கீழே லேண்ட் ஆகி  ட்யூட்டி கான்ஷியசோட "இல்ல சார் .. சாரி..இன்னொரு தடவை பார்க்கலாம்" ங்கறார். சரி போவட்டும்" கையில என்ன?"ங்கறார். அனுமார் கணையாழிய காட்ட முனிவர் படக்குனு வாங்கி தன் கமண்டலத்துல போட்டுட்டு நீ சாப்டுதான் போவனும். இல்லேன்னா கணையாழிய மறந்துருனு கலாய்க்கிறார். வேற வழியில்லாம  அனுமார் சாப்பிட உட்காருகிறார். சாப்டு முடிச்சு" சார்! மோதிரம் கொடுங்க"ன்னு கேட்கிறார்.அகஸ்தியர் "அந்த கமண்டலத்துல இருக்கு எடுத்துக்க"ங்கறார்

அனுமார் ஆர்வமா கமண்டலத்துல கைவிட அதுல கணக்கில்லாத மோதிரங்கள் ஒரே மாதிரி மூழ்கி கிடக்கு. ஷாக் ஆகி "சார் ! நான் வச்சிருந்த மோதிரத்தை கொடுங்க"னு  கேட்கிறார்.

அகஸ்தியர்" அட போய்யா உன் ராமனுக்கும் சீதைக்கும் வேற வேலையில்லை. எத்தனை தடவைதான் இந்த  நாடகமோ ஏதோ ஒரு மோதிரத்தை எடுத்துக்கிட்டு போ"ங்கறார்.

சரி .. இது புராணம் . புருடானு வச்சிக்கலாம். ஜூலியஸ் சீசர் பத்தி ஆ.வி. மதன் பதிலகள்ள படிச்சேன். அவருக்கு வாழ்க்கை கொடுத்த குருவுக்கு ஆப்பு வச்சிட்டு குருவுக்கு சிலை வைக்கிறார் சீசர் . ஆனால் செனட்ல ப்ரூட்டஸ் மற்றும் நண்பர்கள் திடீர்னு சீஸரை கத்தியால குத்தறாங்க. தடுமாறி சீசர் குருவோட சிலையின் பாதங்களில் விழறார்.

இது புராணமில்லே. புருடாவும் இல்லே .சரித்திரம்.

சந்திரபாபுவுக்கு என்.டி.ஆர் வாழ்வு கொடுக்கிறார். பாபு என்.டி.ஆருக்கே ஆப்பு வைக்கிறார்.பாபு என்.டி.ஆருக்கு சிலை வைக்கிறார்.1995லருந்து 1999 வரை என்.டி.ஆர் ப்ரஸ்தாவனையே கிடையாது.1999 தேர்தல்ல கூட என்.டி.ஆர் ஜஸ்ட் ஊறுகாய் தான்.
2003 மே வரதுக்குள்ள பார்ட்டிக்கு எல்லாமே ரிவர்ஸாயிருச்சு. திருப்பதி மாநாடுல என்.டி.ஆர் சிலைய எல்லாம் வச்சு அச்சு அசல் என்.டி.ஆர் மாதிரி விவசாயி, நெசவாளி,ஏழைகள் பத்தியெல்லாம் விலாவாரியா பேசினார்.(அதாவது என்.டி.ஆர் சிலையோட கால்ல விழுந்தார்) இருந்தாலும் சனம் ஆப்பு வச்சிட்டாங்க.  சீசர் கத்தி குத்து வாங்கின பிறகு குருவோட சிலை கால்ல விழுந்தான். பாபு தேர்தல்ல (சொந்தமா சந்திக்கிற ரெண்டாவது தேர்தல்ல ) ஆப்பு வாங்கறதுக்கு முன்னாடி தன் அரசியல் குரு என்.டி.ஆர் கால்ல விழுந்தார்.

சரித்திரம் பைத்தியம் மாதிரி ஒன்றையே மாற்றி மாற்றி பினாத்தும்னு ஒரு பிரபல பொன்மொழி உண்டு. இதையெல்லாம் பார்க்கும் போது தான் கால சக்கரம், அதன் சுழற்சியில் உள்ள ஒழுங்கு எல்லாம் உறைக்குது.

இத்தனைக்கும் கம்யூனிஸ்டுங்க, டி.ஆர்.எஸ் எல்லாத்தயும் சேர்த்துக்கிட்டு மகா கூட்டணி வச்சாரு. தேர்தல் உடன்பாடே தேர்தல் நாள் வரை இழுத்தது. கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்கள் எக்சேஞ்ச் ஆகலை. கூட்டணி காரணமா சீட் குறைஞ்சது. நிறைய ஆஸ்பிரண்ட்ஸை திருப்தி படுத்த முடியலை. இப்படி எத்தனையோ காரணங்களால பாபு காலி.

சீசர்,பாபு கதைகளுக்கிடையில என்ன பெரிய்ய வித்யாசமிருக்கும். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

கால சக்கரம் ரொம்ப கவர்ச்சியானது. இதை பத்தி நிறைய சொல்லவேண்டியிருக்கு பார்ப்போம் !

Wednesday, March 24, 2010

பதிவை படிங்க! ரூ.100 பரிசை பிடிங்க!!

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இந்த பதிவை பத்து பேரோட ஷேர் பண்ணிக்கறதுதான்.

இந்தியாவோட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு இந்த ஐந்து அம்சங்கள் . இவற்றை நான் 1987 முதல் பிரச்சாரம் செய்து வருகிறேன். இது குறித்து இளைஞர்கள் கவனம் கவரத்தான் இத்தனை நாளும் அடல்ட் ஜோக், செக்ஸாலஜி என்று தாளித்து வந்தேன். இந்த ஐந்து அம்சங்கள் அமலானால் கிளம்பக்கூடிய புது பிரச்சினைகளில் ஒன்றை கூறி ஆதார பூர்வமாக நிரூபித்தாலும் அவர்களுக்கு ரூ.100 பரிசாக தர காத்திருக்கிறேன்.

சுய இன்பம், ஈவ் டீசிங், முறையற்ற உறவுகள், க்ரைம், தீவிரவாதம் என்று வழி தவறும் 10 கோடி இந்திய இளைஞர்கள்+ இளம்பெண்கள் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று மணமுடித்து இன்பமாக வாழ செய்ய வேண்டியதெல்லாம் இந்த பதிவை பத்து பேருடன் ஷேர் பண்ணிக்கொள்வதே

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

Monday, March 22, 2010

உடலுறவும் கான்சரும்

.உடலுறவும் கான்சரும் என்ற தனிப்பதிவை படிக்க வந்த பார்ட்டி, அவசரப்படற பார்ட்டின்னா இதே பதிவுல சிவப்பு எழுத்துல உள்ள விஷயத்தை மட்டும் படிச்சுட்டு போயிருங்கண்ணா.


கொஞ்சம் பொறுமையுள்ள பார்ட்டி , அதிலயும் உனக்கு 22 எனக்கு 32 தொடரை தொடர்ந்து படிக்கிற பார்ட்டின்னா மொத்த பதிவயும் படிச்சுருங்கண்ணா. ஏன்னா இதுதான் மேற்படி தொடரோட லேட்டஸ்ட் அத்யாயம்
 பாமரன் கூட என்னை............காய்ச்சி ங்கற தலைப்புல  தனிப்பதிவையும் (?)போட்டிருக்கேண்ணா.. அதை படிக்க இங்கே அழுத்துங்க‌

ஜோசியருன்னதும் எனக்கு புஸ்ஸுனு ஆயிருச்சு. இதுக்கு காரணம் இல்லாம இல்லே. எங்கப்பா வீடு கட்டிக்கிட்டிருந்தப்போ மார் வரை தாடியும், உச்சிக்குடுமியுமா ஒரு பார்ட்டி அடிக்கடி வரும். அப்பா  அந்தாளு பேச்சை கேட்டுக்கிட்டு வீடு கட்டி முடிஞ்ச பிறகு யக்னம்,யாகம்லாம் கூட செய்தாரு. ஆனாலும் என்ன எங்க அம்மா போய் சேர்ந்துட்டாங்க. பெரிய அண்ணன் ஹாஸ்டல் வாசத்தால ஐசோலேட் ஆயிர, சின்ன அண்ணன் சினிமா பைத்தியத்துல எந்த வேலைலயும் ஸ்திரமா இல்லாம போயிட்டான். ஏதோ மாயா வந்து என்ட்ரி கொடுத்த பிறகு மாமனார் வச்சு குடுத்த ஹார்ட் வேர் கடைய பார்த்துக்கிட்டு வீட்டோட மாப்பிள்ளையாவாச்சும்  இருக்கான். தம்பி முதலிரவன்னைக்கே ஹார்ட் அட்டாக்ல போய்ட்டான்.

இருந்தாலும் வளையாபதியோட திருப்திக்காக கே .வி சாருக்கு ஒரு வணக்கம் போட்டேன்.  நமக்கு முன்னாடி டஜனுக்கு மேல சனம் வெய்ட்டிங். ஒரு மூலைல போய் உட்கார்ந்தோம். ஆள் ஏதோ மெஸ்ஸுக்கு வந்து ஃபுல் மூல்ஸும், மட்டன் சிக்கனுமா  சாப்டுட்டு மேல் பைல இருக்கிற  பணம் போதாம வேட்டிய விலக்கி பட்டா பட்டி ட்ராயர்ல இருந்து பெரிய நோட்டா உருவி தர்ர கிராமத்தான் மாதிரிதான் இருந்தார். நாலு முழ வெள்ளை வேட்டி, அதே நிறத்துல சாதாரண துணில அரைக்கை சட்டை . நெத்தில விபூதி குங்குமம் எதுவுமில்லே.

அவர் பிறருக்கு சொல்றத உன்னிப்பா கவனிச்சிட்டிருந்தேன்.அவரோட வியூகம் ரொம்ப சிம்பிள். முதல்ல பாஸ்ட். அதுலருந்து ரெண்டு சமாச்சாரத்தை அவுத்து விடறது. அப்புறம் ப்ரசண்ட் பத்தி ரெண்டு பாயிண்ட். ஃபைனலா இன்னம் இத்தன மாசம் இத்தனை நாளுக்கு இப்படித்தான் இருக்கும். பலான கோயில் இத்தனை நாள் சுத்துங்க.

அந்த அறைய ச்சும்மா அப்படி PAN  பண்ணா எவனோ கம்ப்யூட்டர் ஜாதக காரன் கொடுத்த வால் க்ளாக்.ஏ4 சைஸ்ல ஒரு சாமி படம். பிள்ளையார்,லட்சுமி,சரஸ்வதி டூ இன் ஒன். பக்கத்துல விவேகானந்தர் கைய மார்ல குறுக்கால கட்டியிருக்கிற படம். ஒரு சின்ன அலமாரி. ஏதோ புக்ஸ். இடது கை பக்கமா ஒரு பிளாஸ்டிக் தண்ணி ஜக். ஒரு அம்பாரம் வெத்திலை ,பாக்கு. அடடா நாம வாங்கிட்டு வரலையேனு வளையாபதிக்கு சைகை காட்டினேன். அவரு ஒன்னும் பிரச்சினையில்லை ..ன்னு சைகை காட்டினார்.


அரை மணி நேரத்துல டஜனுக்கு மேல இருந்த சனம் ஓடிப்போயிருச்சு.  எங்க டர்ன் வந்ததும்  மறுபடி ஒரு வணக்க்ம் போட்டேன். அவரு லேசா கைய உயர்த்திட்டு ஜாதகம் எதாவது கொண்டு வந்திருக்கிங்களான்னாரு.

 நான்," இல்லிங்க சார் . டேட் ஆஃப் பர்த் தெரியும் சொல்லட்டுமா"ன்னேன். தலையாட்டினார். சொன்னேன். பொன்னியின் செல்வன் கலெக்ஷன் பைண்டிங் மாதிரி இருந்த புக் ஒன்னை எடுத்து ச்சும்மா அப்படி பார்த்தார். அதை மூடி வச்சுட்டு

பட படனு என் கடந்த காலத்தை பத்தி நாலு பாயிண்ட் விட்டு யெஸ் ஆர் நோனு கேட்டார். நாலும் எஸ் தான். எனக்கு ஷாக் !

"நீங்க எழுத்தாளரா?"
"ஆமாம் சார்!"
"அரசியல்ல ஆர்வமுண்டா?"
"முதல்ல இல்லே சார். சமீபகாலமா இருக்கு"
"நீங்க உங்களை விட வயசுல பெரிய்ய பெண்ணை மணந்திருக்கனுமே?"
"ஆ.........மா சார்'
"உங்களுக்கு அடுத்து பிறந்தவர் இப்ப இல்லிங்களா?"
"ஆமாம் சார்"
"இப்ப உங்க கேள்விகளை கேளுங்க"
சார்! என் வாழ்க்கைல எனக்குனு ஒரு லட்சியமும் கிடையாது சார் . என்னை  நான் ஒரு மனுஷனா மோல்ட் பண்ணிக்க உதவின என்  தலைவனோட படைல அணி வகுக்கனும் அவ்ளதான்"
அது வரைக்கும் தலைய குனிஞ்சிக்கிட்டு மூக்கை தடவிகிட்டே சொல்லிட்டிருந்தவரு நிமிர்ந்து பார்த்துட்டு "அதாருங்க உங்க தலைவரு"ன்னாரு "என்.டி.ஆர்"னேன். உடனே அவர் முகத்துல பிரகாசம்.

" இப்ப உங்க உதவியெல்லாம் அவருக்கு தேவையில்லிங்க. அதிகபட்சம்  பிரதமராவே ஆனாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. குறைஞ்ச பட்சம் அவர் கை காட்டற ஆசாமிதான் பி.எம். ஆனால் உங்க உதவி தேவைப்படற நேரம் ஒன்னு வரும் ஆனால் அப்ப அவர் இருக்கமாட்டார்"

"வேற ஏதாச்சும் சொல்வாரானு வெயிட் பண்ணேன். ஊஹூம்.. ஒன்னும் பேரல.

மறுபடி ஒரு வணக்கம் போட்டுட்டு வந்துட்டோம். வளையாபதி "என்.டி.ஆர் பேரை சொன்னதுமே அவர் முகத்துல ஒரு பிரகாசம் வந்துருச்சி பார்த்தியா ? ஏன் சொல்லு பார்க்கலாம்"னாரு. அவரும் "என்.டி .ஆர் ஃபேவரட்டா?" இல்லே "இவரும் என்.டி.ஆர் கேஸ்ட் தான்"

அதுவரைக்கும் அவர் மேல என் மனசுல உருவாகியிருந்த மரியாதை ஃபணாலாயிருச்சு. வளையாபதியோட ஒரு டீ,சிகரட் சாப்டுட்டு ஆஃபீஸுக்கு போயிட்டேன்./

மாயாவுக்கு விஷயத்தை சொன்னதும் " நம்ம ஸ்ரீராம் பத்தி என்ன சொன்னாரு"னு பதைப்போட கேட்டா..

"அவங்கம்மா மாதிரியே பொறுமை, அன்பு, சைல்டிஷ் பிஹேவியரோட இருப்பான்"னாரு

"ஏய் நான் கேட்டது அவனோட எதிர்காலம் பத்தி?"

"அதெல்லாம் சூப்பரா இருக்குமாம்"

"இவ்ளதானா சொன்னாரு?"

"இவ்ளதான் அது கூட வளையாபதியோட போனதால. இல்லேன்னா இது கூட பேராது"

"முகேஷ்.. முகேஷ் நாளைக்கு என்னையும் கூட்டு போயேன்"

" நோ .. சுஜாதா  நாவல் மாதிரி எதையும் ஒரு முறை தான் செய்யனும்"

"என்ன முகேஷ் .. நீ அவர் தான் பாஸ்ட்,ப்ரசண்ட்  எல்லாத்தயும்ம் கரெக்டா சொன்னாருன்னியே. இன்னும் ஒரு தடவை எனக்காக ..ப்ளீஸ் ப்ளீஸ்"

" நோ மாயா! அவர் என் மனசுல புதிய கேள்விகளை விதைச்சுட்டாரு. ஐ ஹேவ் டு சர்ச் ஃபார் தி ரைட் ஆன்சர்"

"அப்படி என்ன கேள்வி? "

"எங்கயோ இருக்கிற கிரகம் என் எதிர்காலத்தை நிர்ணயிக்குதுன்னா அது எனக்கு மட்டுமில்லே. என்னை படைச்ச அந்த கடவுளுக்கும் அவமானம். என்னை பொருத்தவரை லைஃப் மீன்ஸ் ஆப்ஷன்ஸ். எவ்ரி செகண்ட் ஈஸ் அ ஜங்ஷன் பாயிண்ட். மனுஷனுக்கு தன் எதிர்காலத்தை தான் வடிவமைச்சுக்கற வாய்ப்பு இருக்கும்னு நம்பறேன். ஏன்னா சரித்திரத்தை புரட்டினா எத்தனையோ பேர் எப்படியோ முடிஞ்சி போயிருக்க வேண்டிய  தங்கள் வாழ்க்கைய மாத்தி காட்டியிருக்காங்க. மனித வாழ்க்கைய எத்தனையோ விஷயங்கள் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது .அதுல இந்த கிரகங்களும் ஒன்னுனு சொன்னா ஐ வில் அக்ரி. வெறுமனே கிரகம்தான்னா .. நோ ..ஐ கெனாட் ..இது என் சுயமரியாதையை பாதிக்கிற விஷயம்"

"த பார்ரா..மறுபடி ஆராய்ச்சியா? வேண்டாம் முகேஷ்..லைஃப்ல எவ்ள குறைவா தெரிஞ்சிக்கறமோ அந்த அளவுக்கு நிம்மதி. நீ வேணா இனி அஸ்ட் ராலஜர்ஸ் கிட்டே போகாம இருந்துரு. இது எலக்சன் இயர். நீ தேர்தல் வேலைய பார்ப்பயா ? இல்லே ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ணுவயா?"

"என்.டி.ஆர் தோத்துப்போறதுக்கு வெறுமனே கிரகம்தான் காரணம்னா நீயே ஆராய்ச்சின்னதும்  சலிச்சுக்கற அளவுக்கு  அத்தனை மாச தேடலே தேவையில்லே. கர்ணன் சாவுக்கு எத்தனை காரணங்கள் இருந்ததோ என்.டி.ஆரோட தோல்விக்கு அத்தனை காரணங்கள் இருந்தது. என் ரிப்போர்ட்டை நீயும் தானே படிச்சே"

"அதுக்கில்லே முகேஷ்!  அப்பாவும் வீட்டோட இருந்துர்ரார். எப்பயோ ஒரு தடவை தான் ஆஃபீஸ் வரார்.ஸ்ரீராம் பிறந்த பிறகு என்னாலயும் 100% கான்சன்ட் ரேட் பண்ண முடியல. நீ எப்படி இதுக்கெல்லாம் டைம் ஸ்பெண்ட் பண்ணமுடியும்?"

"நீ நக்கலடிப்பே இல்லே. உன் தலைவன் 2.30 க்கு எந்திரிச்சு 4 மணிக்கு ஃபுல் மீல்ஸ் அடிக்கிறாரு. நீ மட்டும் எட்டரைக்குதான் எந்திரிக்கிறேன்னு.. ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடி எந்திரிச்சிட்டா போச்சு. ஜஸ்ட் 6 மாசம் ஐ வில் கம் அவுட் வித் எ ரிப்போர்ட்"

"ஏன் முகேஷ் நீ மட்டும் இவ்ளோ சென்சிடிவா இருக்கே. ஒரு வேளை நாளைக்கு உன் ஆராய்ச்சில மனுசங்க எல்லாம் ஜஸ்ட் ஃபுட்பால் தான் . கிரகங்க உதைச்ச திசைல ஓடித்தான் ஆகனும்னு தெரிய வந்தா என்ன பண்ணுவே"

"மாயா கண்ணு! நீ பார்க்கிற உடம்பு முகேஷோட தா இருக்கலாம். ஆனால் மைண்ட் எல்லாம் என் தலைவன் தான் இருக்கான். சின்ன ஃப்ளாஷ் பேக் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க. சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகத்தையே கூட்டிக்கிட்டு தார் பாலைவனத்துக்கு போயிட்டாரு. குருக்ஷேத்திரம்ங்கற பேர்ல மகாபாரதத்தை படமா எடுக்கிறதா ப்ளான். தலைவரு காத்தால மட்டும் ஒரு சுருட்டு அடிப்பாராம். அப்படி புகை போட்டுக்கிட்டிருந்தப்ப ஏதோ ஸ்பார்க் ஆச்சு போல . தான வீர சூர கர்ணானு ஒரு படம் எடுக்க டிசைட் பண்ணாரு. சொந்த காசு போட்டு கிருஷ்ணாவால பேக் பண்ணிட்டு போக முடியாத ஒன்னு ரெண்டு ஆக்டர்ஸ், அவரால ரிஜெக்ட் பண்ணப்பட்ட ஆக்டர்ஸ், தன்னோட ஃபேமிலி மெம்பர்ஸ். இவிகள வச்சு ஒரு படம் எடுத்து உட்டாரு . இன்னைக்கு குருக்ஷேத்திரம்னு ஒரு படம் வந்ததானு கேட்டா எவனும் யோசிப்பான். ஆனால்  தான வீர சூர கர்ணா சரித்திரத்துல நின்னுருச்சு. வில் பவர் தான் முக்கியம். காந்தி கூட யு ஃபைண்ட் அ வில். தி வில் ஃபைண்ட்ஸ் தி வேன்னாரு. விவேகானந்தா என்ன சொன்னாரு தெரியுமா? உன்னை விட உயர்ந்த பொருள் இந்த படைப்புலயே கிடையாது. அப்படி ஏதாவது உனக்கு உயர்வா பட்டா உன் மனசு வீக்கா இருக்குனு அர்த்தம்"

"என்னவோ போ.........வர வர கிழவாடி ஆயிட்டிருக்கே. எப்ப பாரு ஆராய்ச்சி"

"ஆராய்ச்சின்னா என்ன ? உண்மைய மறைச்சிருக்கிற திரைய கிழிக்கிறது. கன்னித்திரைய கிழிக்கிறதுல இருக்கிற த்ரில்லை விட  உண்மைய மறைச்சிருக்கிற பொய்திரைய கிழிச்சு உண்மையான உண்மைய தரிசிக்கிறதுதான் உண்மையான ஆண்மை "

"ச்சீ .. என்ன பேசிட்டிருந்தோம் .. நீ எந்த சப்ஜெக்டுக்கு தாவறே பாரு..செக்ஸ விட்டா வேற சப்ஜெக்டே கிடையாதா?"

"இதான் ஹிப்பாக்ரசி. மனுஷ உடம்போட மையம் செக்ஸ், மனுஷன் மனசோட மையம் செக்ஸ். ஆணோட உடல்ல தயாராகிற உயிரணு செக்ஸ்ல வெளிப்பட்டே ஆகனும். இல்லேன்னா கான்சர் வந்துரும்"

"ஏய்.. இது உன் கண்டுபிடிப்பா?"

" நத்திங் டூயிங்க். விஞ்சானிங்க உண்மைஅ கண்டு பிடிப்பாங்க. முகேஷ்  அதை ப்ராக்டிக்கல் லைஃப்ல உபயோகத்துக்கு கொண்டுவருவான். ஆணுக்கு எரக்சன்ல (குறி விரைத்தல்) பிரச்சினை வர்ரதுக்கும் , இதய கோளாறு வர்ரதுக்கும் சம்பந்தமிருக்குனு ஒரு கண்டுபிடிப்பு. உபயோகிக்காட்டா மூளை ,மூட்டு, ஜன்ய பாகமெல்லாம் உபயோகமில்லாம போயிரும்னு ஒரு கண்டு பிடிப்பு. ஆண்களுக்கு விந்து வெளிப்படற குழாய்ல விந்துவை வெளித்தள்ள  ஒரு ஏற்பாடு இருக்கு.அதோட பேரு ப்ராட்டஸ்டட்டோ என்னமோ சரியா ஞா வரலை. வயசான காலத்துல அது ஏகத்துக்கு வளர்ந்துருமாம். அதனால தாத்தாக்களுக்கு சதா யூரினல்ஸ் போகனும் போலவே இருக்குமாம். அங்கயும் கான்சர் வர வாய்பிருக்கு. பெண்களுக்கு மார்பகம், கருப்பை வாய்ல கான்சர் வர வாய்ப்பிருக்காம். கான்சனா என்ன ஒழுங்கில்லாத வளர்ச்சி. மனித உடல்ல குறுகிய காலத்துல வேகமா வளர்ர பார்ட்ஸ் என்னெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கான்சர் அட்டாக் ஆக  வாய்ப்பிருக்கு. மனிதன் வெறுமனே மாமிசமா ,மாமிச ஆசைகளோடவே வாழ்ந்துட்டுருந்தா கூட பரவாயில்லே. அதது கரெக்டா வேலை செய்துட்டுருக்கும். மனசுல காமமிருந்து,உடம்புல தெம்பிருந்து அந்தந்த வயசுக்கு ஏத்தாப்பல அதது நடந்து போக அனுமதிச்சா நோ ப்ராப்ளம்.  ஜஸ்ட் ஹிப்பாக்ரசியால வேஷம் போட்டுட்டிருந்தா கான்சர் என்ன ஜுஜுபி. மன நலமே மட்டாஷ். பைத்தியம்தான். உனக்கு தான் அந்த பிரச்சினையே கிடையாதே லேசா ஹீட் தெரிஞ்சா போதும். யு.எஸ்.ஏல சாம்பிராணி புகைக்கே ஃபயர் இஞ்சின் வந்த்ர்ர மாதிரி முகேஷ் வந்துர்ரான்.."

"சீ சீ ..........என்ன இது என்ன தான் நம்ம சேம்பருக்கு  கண்ணாடி டோர் இருந்தாலும்
இப்படியா பேசறது"

"நீ ஏன் ஓவரா ரியாக்ட் பண்றே . என் பேச்சு வெளிய கேட்காது. ஆனால் உன் கன்னத்து சிவப்பு தெரியும். முதல்ல இந்த கண்ணாடிக்கு ஃபிலிம் ஒட்டச்சொல்லனும்"

"ஸ்ரீ ராமுக்கே அஞ்சு வயசு . கியாபகம் வச்சுக்கோ..'

" அதை பத்தி நீ கவலைப்படாதே கண்ணு.. பையனுக்கும் அப்பனுக்கும் ஒரே முகூர்த்தத்துல முதலிரவு நடக்கும்"

மாயா வெட்கமும் கோபமுமா சேம்பர் கதவை திறந்துக்கிட்டு வெளிய போனாள்.

அன்னைலருந்து  15 நாள் முன் போலவே லைப்ரரிங்க மேலயும் ,பப்ளிகேசன்ஸ் மேலயும் படையெடுத்தேன். ஒரு பக்கம் ஜோதிஷம் தொடர்பான புக்ஸ். இன்னொரு பக்கம் மனிதனோட எதிர்காலத்தை அதுலயும் டெசிஷன் மேக்கிங்கை  நிர்ணயிக்கிற கான்செப்ட்ஸ் எதுவா இருந்தாலும்
அது தொடர்பான புக்ஸ். ஜெனட்டிக் இஞ்சினீரிங், தியரி ஆஃப் கர்மா, சைக்காலஜி, மெடிசின் இப்படி சகல சாதிலயும் வாங்கினேன். ஜோதிஷம் சம்பந்தப்பட்ட புக்ஸை மூட்டை கட்டி வச்சுட்டேன்.

மத்ததையெல்லாம்  விடியல்லயும், ஓய்வு  நேரங்கள்ளயும் படிச்சி பார்த்தேன். ரஃபா ஒரு ஐடியா வந்தது. பேரன்ட்ஸ்,டீச்சர்ஸ்,கொலிக்ஸ், என்விரான்மென்ட், க்ளைமேட், ஒலி,ஒளி,ஸ்மெல், தொடுகை இப்படி ஹ்யூமன் மைண்டை பாதிக்கக்கூடிய கான்செப்ட்ஸ் என்னென்னனு ஒரு லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணேன். ஏண்டான்னா நாளைக்கு ஜோதிஷம்ங்கற கலர் என் மைண்ட்ல ஒட்டிக்கிட்டா இதெல்லாம் பெரிசா தோணாம போயிட  கூடாதுல்லயா.

பாமரன் கூட என்னை ............. காட்டமா காச்சி

சம்பவங்கள் தான் மனிதனை தேடிவருது மாதிரி குழப்படிய புரிஞ்சிக்கிட்டு அதுக்கு ஓட்டும் போட்டு பிரபல பதிவா மாத்தின நண்பர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி. பதிவு தவறுதலா பிரபலமாகறத கூட குதர்க்கமா பார்த்து குயுக்தியோட விமர்சிக்கிற அன்பர்களை பசித்த புலி தின்னட்டும்.

இந்த பதிவை பிரபலமாக்க வாக்களிப்போருக்கு வடக்கு திசையிலிருந்து செக்கும் (ரப்பர் செக் இல்லிங்கண்ணா) , கிழக்கு திசையிலிருந்து  நல்ல தகவலோ ( வயசுக்கேத்த)  வரும். சரி காண்ட்ரா வர்சியெல்லாம் எதுக்கு?  இந்த பதிவுல ஹ்யூமன் மைண்டை எதெல்லாம் பாதிக்குதுனு ஒரு ஏரியல் வ்யூ பார்க்கலாம்.

எழுதுவதெல்லாம் எழுத்தல்லங்கற தலைப்புல எழுதற பாமரன் கூட ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல என்னை மாதிரி"பலான " பார்ட்டிகளை காட்டமா காச்சி பிறகு அந்த பதிவை நீக்கிட்டதா ஒரு சம்சயம்.  இதை நான் இங்கே ரெஃபர் பண்ண காரணம் இன்னைக்கு சரினு பட்டது நாளைக்கு தவறுன்னும் படலாம்.ஸோ நான் எழுதறது எல்லாமே உங்க பரிசீலனைக்குத்தான். இதெல்லாம் ஜஸ்ட் வாதங்கள். தீர்ப்பு? நீங்க தான் கொடுக்கனும் மை லார்ட்! இந்த வேண்டுகோள் இந்த பதிவுக்கும் பொருந்தும்.

இந்த உலகத்துல எல்லாமே உண்மைதான். எல்லாமே பொய் தான்.ஆனால்  எந்த பொய்யும் 100 சதம் பொய் கிடையாது. எந்த நிஜமும் 100 சதம் நிஜம் கிடையாது. எந்த பொய்யும் 24 மணி நேரம்,365 நாளும் பொய்யா இருக்க முடியாது. எந்த நிஜமும்  24 மணி நேரம்,365 நாளும் நிஜமா இருக்க முடியாது. மாறாதது எதுவுமில்லே மாற்றத்தை தவிர.


மனுஷன்  யோசிக்கிறது ஒன்னு. இவன் யோசனைக்கு கூட சிக்காதது வேறொன்னு
பேசறது ஒன்னு .. செய்யறது ஒன்னு. செய்ததா சொல்லிக்கிறது ஒன்னு. இதனால இவனோட மனோபலம் சிதறி சின்னாபின்னமா கிடக்கு. உடைஞ்சி சிதறிப்போன பவர் க்ளாஸ் வழியா பார்த்தா எப்படி காட்சி துண்டு துண்டா தெரியுமோ அதே இழவுதான் இவன் பார்வையிலயும் சாவெடுக்குது.

 நானும் ஒரு காலத்துல இதே சாதியாதான் இருந்தேன். ஏதோ அந்த நேரத்துல மைண்ட் ஃப்ரெஷ்ஷா இருந்ததாலே இப்படியே காலத்தை ஓட்டினேன்.ஆனால் போக போக வறுமை காரணமா பொய் மேல பொய் சொல்லி,அதனால மேலும் கேலிக்கு இடமாகி , பொய்யால உபயோகம் கூட இல்லேனு  சலிச்சு போய், சனங்களோட  பொய்க்கு வெறுத்து போயி தாளி நம்ம கிட்ட பணம் தான் இல்லே வேற எப்படி இவிகளை பீட் பண்றதுன்னு எதிராளிய அதிர்ச்சிக்குள்ளாக்கற பிரயத்தனமா உண்மைய கசிய விட ஆரம்பிச்சேன். சனங்க ரெஸ்பான்ஸு தூளா இருக்கவே போட்டு உடைக்க ஆரம்பிச்சேன்.

இது எந்த அளவுக்கு போயிருச்சுரான்னா எவன் கிட்டேனா கடன் வாங்க போனா கூட கான்வர்சேஷன் இப்படி தான் நடக்கும்.

 "வாங்க சாமி என்ன இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு"
"ஹும்.. உன்னை ஏற்கெனவே ஒரு நூறு ரூபா ஏமாத்தியாச்சு. வேற சில சர்க்கிள்ள ஏமாற ஆளிருந்தது அதையெல்லாம் ஒரு ரவுண்டு முடிச்சுட்டு வந்தேன். மேலும் உன்னை ஏமாத்தினத நீ மறக்கனுமே அதுக்காக தான் கேப் கொடுத்து வந்தேன். இப்போ ஒரு நூறு ரூபா ஏமாந்தா நல்லாருக்கும்."

எதிராளியோட எதிர்வினை எப்படியிருக்கும்னு பாருங்க.

இப்படி உண்மைகளை போட்டு உடைக்க உடைக்க மைண்ட் காலியாயிருச்சு. வீடு கட்டறப்ப கூட எலிவேஷன் விடறோம். ஹார்ட் டிஸ்க்ல இருக்கிற ட்ரைவ்ஸ்ல ஃபைல்ஸ் லோட் பண்றப்ப கூட கொஞ்சமாச்சும் காலி விடறோம். ஆனால் மூளைய மட்டும் பொய்களால நிரப்பி வச்சா என்ன ஆகும். பிராசஸ் லேட்டாயிரும்.

மனித மூளைய ஆகா ஓகோனு புகழறாங்க. ஆனால்  மெமரி எப்பவுமே நம்பிக்கைக்குரியதல்ல,ஏண்டான்னா .............

மனுசன் எது சொல்லப்படுதோ அதை மட்டும் கேட்கறதில்லை.
எது காட்டப்படுதோ அதை மட்டும் பார்க்கிறதில்லை.
அதுல கலப்படம் பண்ணித்தான் உள்ளே அனுப்பறான்.
வெளிய விடறப்பவும் கலப்படம் பண்ணித்தான் அனுப்பறான்.

ஹ்யூமன் மைண்டை பாதிக்கிற முதல் விஷயம் அவனோட தன் முனைப்பு, ஈகோ. ஈகோவை சிம்பிளா எக்ஸ்ப்ளெயின் பண்ணனும்னா.. ஈகோயிஸ்டான மனிதனோட பார்வை  கலர் கண்ணாடி வழியா பார்த்தமாதிரி இருக்கும். சுஜாதா கதைல ஒரு டாக்டர் வருவார்.  சில்ட் ரன் ஸ்பெஷலிஸ்ட் .ராயரோ என்னவோ பேரு. அவருடையது பூச்சிகள் நெளியும் உலகம்.கதைல ஹீரோ கடுமையான மனச்சிக்கல்ல வருவான்.மனச்சிக்கலால வரிசை கொலைகள் செய்யப்போறவன் அவன். டாக்டர் அவனுக்கு பேதி மாத்திரை எழுதி கொடுத்தனுப்புவார்.

இதை படிச்சி சிரிக்கிற நீங்களும், இதை ரெஃபர் பண்ண நானும் கூட பல சந்தர்ப்பத்துல இப்படித்தான் பிஹேவ் பண்றோம். ப்ரம்மங்காரு தன் சிஷ்யன் சித்தய்யாவ கேட்டாராம் " சித்தா ! லோகம் எட்டா உந்திரா?"( உலகம் எப்படியிருக்கு?)
அதுக்கு சித்தய்யா சொன்னாராம்" எவரி லோகம் வாரிதி குருதேவா.." (அவனவன் உலகம் அவனவனுது)

நாமளும் அப்படித்தான் இருக்கோம். மனைவிகள் உலகம் தனி. கணவர்கள் உலகம் தனி. குழந்தைகள் உலகம் தனி. அதிலயும் பெண் குழந்தைகள் உலகம் தனி. ஆண் குழந்தைகள் உலகம் தனி. கலைஞரோட உலகம் தனி. எந்த பேரனுக்கு எந்த பதவி வாங்கி கொடுக்கலாங்கறது தான் அவர் முன்னாடி இருக்கிற இமாலய பிரச்சினை.

உங்க பார்வை , என்னோட பார்வைய பொறுத்து காட்சி மாறாது. காட்சி ஒன்னுதான். நாமதான்  யானைய தடவின குருடங்க மாதிரி தூண், கயிறுனு கதை பண்ணிக்கிட்டிருக்கோம்.

இந்த ஈகோவுக்கு பலர் பல வியாக்யானங்கள் செய்துக்கிடறாங்க.

"என் வயசென்ன ? உன் வயசென்ன? எனக்கு இவன் சொல்லவந்துட்டான்"

அய்யா வயசாளி..  பழைய உலகத்தை பொருத்தவரை எங்களை விட நீ சீனியரா இருக்கலாம். ஆனா புது உலகத்தை பொருத்தவரை  நீ ஜூனியர்தானு சொன்னா பார்ட்டி நொந்துரும். சொன்னவனை "திமிர் பிடிச்சது"னு ஹிட் லிஸ்ட்ல வச்சுரும். காரியவாதிங்க "அய்யா! நீங்க அனுபவசாலி. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்"னு  காரியத்தை முடிச்சுக்கிட்டு வெளிய போய் டீ கடைலயோ டாஸ்மாக்லயோ உங்களை பத்தி நக்கலடிச்சிக்கிட்டிருப்பான்.

" நான் சிட்டீஸ்லயே வேலை செய்தவன் எனக்கு இவன் சொல்லவந்துட்டான்"
"நான் பார்க்காத குட்டியே இல்லை எனக்கு இவன் சொல்லவந்துட்டான்"
" நான் அடிக்காத சரக்கே இல்லை எனக்கு இவன் சொல்லவந்துட்டான்"

இப்படி அனேகம். இதுல உச்சக்கட்டம் என்னன்னா " எனக்கு ஈகோவே கிடையாதுங்க"

இந்த உலகத்துக்கு உங்களை மைய புள்ளியா வச்சி யோசிக்கிறிங்களே அதான் ஈகோ.

உண்மையான உலகத்துக்கு ஒபாமா கூட மையப்புள்ளி கிடையாது. ஃபெடல் காஸ்ட் ரோவோட வெள்ளை தாடி மயிரை கூட பிடுங்க முடியாம போயிருச்சு அமெரிக்காவால.

உஸ் அப்பாடா......................மொக்கைலயே ஒரு பதிவை முடிச்சாச்சு. ஆமாங்கண்ணா உனக்கு 22 எனக்கு 32 ல என்.டி.ஆர் வியாபிச்சதால ஒன்ற முடியலயா? இல்லே அதுவும் மொக்கையாயிருச்சா.. என்.டி.ஆர் இடத்துல வேற ஒரு பார்ட்டிய (உங்களுக்கு பிடிச்ச) கற்பனை பண்ணிக்கிட வேண்டியதுதானே......

Sunday, March 21, 2010

சம்பவம் தான் மனுஷனை தேடி வருது

வணக்கம்னா ! வணக்கம் அக்கா!
இன்னைக்கு இந்த பதிவை போட்டு சனங்க கிட்டே நன்னா  வாங்கிகட்டிக்கப்போறேன். பை தி பை "உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க‌

"போதுமென்ற மனமே பொன்செய் மருந்து". "இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே", "ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்", பருகெடுதூ பாலு தாகடம் கன்னா கூர்ச்சுனி நீள்ளு தாகடம் மேலு  ( ஓடிக்கிட்டே பால் குடிக்கிறத விட உட்கார்ந்துக்கிட்டு தண்ணி குடிக்கிறது மேலுனு அர்த்தம்) (டாஸ் மாக் சரக்கு இல்லிங்கண்ணா) இதெல்லாம் கையாலாகாதவங்க பேச்சாயிருச்சு. சாமியாருங்க கூட அத்தனைக்கும் ஆசைப்படுனு சொல்ற காலமாகிப்போச்சு.

"ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்"னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார். உன் ஆசையே உன் துன்பங்களுக்கு  காரணம்னு சொல்லலே. உன் ஆசையா என் ஆசையானு ஸ்பெஷலைஸ் பண்ணாம மொட்டையா உலக துன்பங்களுக்குன்னு ஆரம்பிக்கிறார்.

இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல  லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது  கருக ஆரம்பிச்சாலும்  நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)

இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு  ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்)  இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.

உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட  ஒத்துழைப்ப கொடுக்குதுங்க.

இதையெல்லாம் படிச்சுட்டு முருகேசன்  என்னவோ நம்மள கலாய்க்கிற மாதிரி இருக்குனு சந்தேகம் வருதா? இல்லே ராசா.. ரொம்ப  நாளா ஒரு குன்ஸா என் மூளைத்திரைல ஃப்ளாஷ்  நியூஸ் கணக்கா ஓடிக்கிட்டிருந்த விஷயம். இதை உங்களோட பகிர்ந்துக்க இப்பத்தான் வேளை வந்தாப்ல இருக்கு.

இந்த விதிப்படி பார்த்தா  நாமெல்லாம் மண்ணாந்தைங்க. நாம ஃப்ளாட்டு, வீடு, டி.வி, கம்ப்யூட்டர் மாதிரி பொருட்களை பார்த்து இதை வாங்கிரனும்பா, இத மட்டும் வாங்கிட்டா போதும்னிட்டு நினைக்கிறோம். தப்பி தவறி  அங்கே போடு, இங்கே வை. அங்கே நிற்க வைனு (முட்டாள் தனமா) பேசறோம்.

ஆனால் நான் என்ன நினைக்கிறேன்னா இந்த பொருட்கள்தான் அப்படி நினைக்க வைக்குதா? நம்மை கமாண்ட் பண்ணுதானு  ஒரு சம்சயம்.

ஒரு உதாரணத்தோட இதை விளக்க முயற்சி பண்றேன். நீங்க ஒரு காலனில இருக்கிங்க. அங்கே 200 ஃபேமிலி இருக்குனு வைங்க. அங்கே வர்ர 2010, ஜூன் 21 ஆம் தேதி ஒரு குடும்பம் வரவுக்கு மேல செலவு பண்ணி, கொண்டாடிட்டு, பட்ஜெட்ல விழற துண்டை ஈடு கட்ட பொருளாதார குற்றங்கள்ள ஈடுபட்டு போலீஸ்ல மாட்டி தற்கொலை  செய்துக்கிடனும்னு  இயற்கையோட நிகழ்ச்சி நிரல்லே இருக்குனு வைங்க.

இந்த மெசேஜை பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடியே கூட  அந்த ஜில்லால, அந்த ஸ்டேட்ல சில சமயம் அந்த நாட்ல , சில சமயம் உலகத்துல இருக்கிற எல்லா பொருட்களும் எப்படியோ ரிசீவ் பண்ணிக்கிடுதுங்க.

குறிப்பிட்ட சீக்வென்ஸை க்ரியேட் பண்ண எல்லா பொருட்களும் முயற்சி பண்ணுதுங்க. நான் என்ன நினைக்கிறேன்னா மேற்படி நிகழ்ச்சி நிரல்ல குறிப்பிட்ட காலனில,குறிப்பிட்ட அப்பார்ட்மென்ட், அதுல குறிப்பிட்ட வீடுன்னெல்லாம் இருக்காதுன்னு தான் நினைக்கிறேன் ,

ஏன்னா..நிறைய சம்பவங்கள்ள பார்த்திருப்பிங்க கடைசி செகண்ட்ல கூட டிஸீஸ்ட் (சாகறவன்) மாறிர்ராங்க. ஒரு தடவை கிராஃபிக் ரவிங்கற எல்டர் ஃப்ரெண்டு  தன் நண்பர்கள் மூணு பேரோட டூவீலர்ல வெளியூர் போனார். ரெண்டு வண்டில வண்டிக்கு ரெண்டு பேரா புறப்பட்டாங்க. ஒரு இடத்துல யூரின் பாஸ் பண்ண இறங்கினாங்க. காரியத்தை முடிச்சுட்டு மறுபடி ஏர்ரப்ப  ரெண்டாவது வண்டில பின்னாடி உட்கார்ந்து ட்ராவல் பண்ண பார்ட்டி அதுவரைக்கும் க்ராஃபிக் ரவி பின்னாடி உட்கார்ந்து ட்ராவல் பண்ண வண்டிக்கு மாறிட்டாரு. அவர் ஏறின வண்டி அடுத்த திருப்பத்துலயே ஒரு லாரியோட மோத ஓட்டினவனுக்கு சின்ன கீறல் கூட இல்லே பின்னால உட்கார்ந்திருந்தவரு மட்டும் காலி. இந்த சம்பவத்துல செத்திருக்க வேண்டியவன் ரவி. ஆனால் அவன் சாகலை.இது மாதிரி நிறைய சம்பவங்கள்.

இதுலருந்து நான் புரிஞ்சிக்கிட்டதென்னன்னா இயற்கையோட அஜெண்டால ஒரு கொலை, ஒரு தற்கொலை,ஒரு விபத்துன்னு மொட்டையா  இருக்கே தவிர ஓம்கார் சுவாமிகள், சென்னப்பன் ,முருகேசன் இப்படி பர்ட்டிகுலரா இருக்கிறதில்லை.


இந்த ஐ.பி ,கொலை, தற்கொலை, விபத்துங்கற இழவெல்லாம் ஒரு மியூசிக்கல் சேர் மாதிரி. எவன் தன் நெஞ்சுல ஆசைங்கற வேக்குவத்தை  வச்சிக்கிட்டு வேகமா ஓடறானோ  அவனுக்கு ஒரு  சேர் கிடைச்சுருது.ஐ.பி ,கொலை, தற்கொலை, விபத்துக்கு இலக்காயிர்ரான். என்னடா விளையாட்டு இது , ஏன் இப்படி இரைக்க இரைக்க ஓடறோம்னு யோசிச்சிக்கிட்டே ஓடறவன் ஆட்டத்துல கோட்டை விட்டுர்ரான்.( அதாவது க்ரேட் எஸ்கேப்)


1982 ல நான் பத்தாம் வகுப்பு . பரீட்சைல 72 % மார்க் கிடைச்சது. இந்த 72 % ஐ நான் தேடிப்போகலை. அதுவா தேடிவந்தது. சுயம்வரம் மாதிரி வச்சிக்கங்களேன். குறிப்பிட்ட 72 சதவீதமோ, விபத்தோ, சாவோ கைல மாலைய வச்சுக்கிட்டு சுயம்வர மண்டபத்தை சுத்தி சுத்தி வருது. தனக்கு பிடிச்சவன் கழுத்துல போட்டுருது. எனக்கு எனக்குன்னு முண்டியடிக்கிறதால ஒரு இழவும் கிடைக்காது.

நான் சொல்லவந்தது என்னன்னா .. சம்பவம்தான் மனுஷனை தேடி வருதே தவிர, தேடிப்போற மனுஷனை சம்பவம் ரெகக்னைஸ் பண்றதில்லை. இதே விதிதான் பாராட்டு, அவார்டு, காதலி மாதிரி விஷயங்கள்ளயும் இயற்கை வேலை செய்யுது.

1982ல தானா தேடி வந்த 72 சதவீதத்தை கொண்டாடாம பழைய மாதிரியே இருந்திட்டிருந்தா இன்னும் பல சமாச்சாரங்க கூட  என் லைஃப்ல என்னை தேடி வந்திருக்கலாம். ஆனால் சனம் உசுப்பேத்தி விட்டதுல மெய் மறந்துட்டன். (மெய் என்ற வார்த்தைக்கு உண்மை,  உடம்புன்னு ரெண்டு  அர்த்தம் இருக்கு)

தமிழ் சினிமால ரஜினி ,மாதிரி நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புனு நினைக்க ஆரம்பிச்சுட்டன்.

1982 ல நான்  ஸ்கூல் செகண்ட். முதலா வந்த பார்ட்டி கிறிஸ்துவ குடும்பம். சினிமாபார்க்க மாட்டான். பேசமாட்டான். நாக்கை கடிச்சிக்கிட்டு குண்டு குண்டா எழுதிக்கிட்டே இருப்பான். அந்த காலத்து எம்.ஜி.ஆர் தனமான சிகையலங்காரம்(?) முகத்துல எண்ணெய்.

 நாம "ஊரை சுத்தின மாதிரியுமிருக்கனும், அண்ணனுக்கு பொண்ணு பார்த்தமாதிரியும் இருக்கனும் டைப்பு. அதுக்கே "முக்கனிகளில் முதல் கனி, இங்கிலீஷ் மாதத்தில் 5 ஆவது மாதம், தமிழ் மாதத்தில் பத்தாவது மாதம்"னு பட்டம் வந்துருச்சி.
அது வந்தப்ப போடாங்கோ என்று விட்டு நான் என் சுதர்மத்தை பின்பற்றியிருந்தா நாறியிருக்கமாட்டேன். எவனை வெறுத்தேனோ அவன் எதையெல்லாம் இழந்து முதலிடத்தை பிடிச்சானோ அவனோட கருமமெல்லாம் என்னை சுத்திக்க ஆரம்பிச்சுருச்சு. அந்த முதலிடம் எல்லா தளத்துலயும், களத்துலயும் கிடைக்கனும்னு ஆசை பட ஆரம்பிச்சேன். நாறிட்டேன்.


அந்த நாளாவது பரவாயில்லை 72 சதவீதத்துக்கே மாமேதை பட்டம்.இப்ப பாருங்க. 99.99%ன்னா இது போதுமா யோசிக்கிறான்.

எந்த அப்பனை பாரு எம்புள்ள ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுங்கறான். ,எந்த அம்மாவ பாரு எம்புள்ள ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுங்கறா. அப்ப ரெண்டாவது மூணாவது வரதுக்கெல்லாம் ஆள் வேணாமா?

படி படி ...இதைவிட்டா பசங்க கிட்டே வேற வார்த்தையே பேசாத பேரன்ட்ஸ் அதிகமாயிட்டாங்க. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு படிச்ச நாய்ங்களே பெத்தவுகள நடுத்தெருவுல விடறகாலம்.இதுல ரேங்கு படிப்பு படிக்கிற புள்ளைங்க எங்கே அப்பா அம்மாவ காப்பாத்த  போவுது.

நான் படிக்காதிங்கனு சொல்லலே . படிங்க. வேணாங்கல. உங்களை சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிட்டே படிங்க. உங்களுக்கு முன்னாடி படிச்சவன் நிலையெல்லாம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு படிங்க. உங்க படிப்புக்கு அப்பா அம்மா என்ன செலவு பண்றாங்க? அவிகளுக்கு அந்த பணம் எப்படி வருது? அரசாங்கம் உங்க படிப்புக்காக என்ன செலவு பண்ணுது? அந்த பணம் எப்படி வருது? தெரிஞ்சிக்கிட்டே படிங்க.. படிச்ச பிறகு என்ன பண்ண போறிங்க? அதனால வீட்டுக்கு என்ன லாபம்? நாட்டுக்கு என்ன லாபம்னு தெரிஞ்சிக்கிட்டே படிங்க.

அப்படியா படிக்கிறாய்ங்க? இல்லையே..இவிக படிக்கிற படிப்புக்கும் வாழ்க்கைக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா? இல்லையே. எத்தனை மேஸ்திரி தேவை, எத்தனை இஞ்சினீர் தேவைனு ஒரு கணக்கு போட்டு பாருங்க. மேஸ்திரிங்க ரேஞ்சுல இஞ்சினீருங்க தயாராகிட்டிருக்காங்க. இவிகளுக்கு என்ன வேலை தரப்போறிங்க.

சரி இஞ்சினீர் ஆனவனெல்லாம் என்ன பண்றான்? லஞ்ச ஒழிப்பு ரெயிட்ல மாட்டறவன்ல நிறைய பேர் இஞ்சினீர்தான்.

மனுஷனுக்கு வர்ர துன்பத்தை விட அது தனக்கு வரக்கூடாத துன்பம்ங்கற அவனோட நினைப்புதான் அவனுக்கு துன்பத்தை தருது.

இந்த படைப்போட பிரம்மாண்டத்தையும் தன்னையும் மனுஷன் ஒப்பிட்டு பார்த்துக்கனும். "இத்தரை கொய்யா பிஞ்சு நாமிதிற் சிற்றெறும்பு"ன்னார் கவிமணி . அது கூட ஜாஸ்திதான். புதுசா கற்பனை பண்ண வேண்டியிருக்கு.

வாத்தியார் ஒரு படத்துல "உலகம் பிறந்தது எனக்காக"ன்னு பாடுவாரு. சனமும் விசிலடிச்சுட்டு  மறந்துட்டாங்க. உலகம் நமக்காக பிறந்திருந்தா அது வாஸ்து சாஸ்திரப்படி சதுரமாவோ, செவ்வகமாவோ இருந்திருக்கும்.

உலகம்ங்கற வார்த்தை  நாம வாழற இந்த பூமிய மட்டும் குறிக்குதுனு நினைக்கிறேன். விஸ்வம்னா ஓரளவுக்கு இந்த படைப்போட பிரம்மாண்டம் உறைக்கும் போல. அண்ட சராசர பிரபஞ்சங்கள்னும் ஒரு பிரயோகம் உண்டு. இதெல்லாம் நாளுக்கு நாள் ஒரு பக்கம் விரிவடைஞ்சுகிட்டு இன்னொரு பக்கம் சுருங்கிக்கிட்டு வருதாம்.

(ஆமாம் பெண்ணோட முட்டைக்கருவுக்கு கூட அண்டம்னு பேரை வச்சது யாருங்க? ஓகோ ..அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறத தாண்டி அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்னு கூட தெரிஞ்சு வச்சிருந்தாங்களோ என்னமோ? பெரியாளுங்கப்பா)

இதுல நாம எங்கே கணக்கு எதுல கணக்கு?   நான் அனுபவத்துல தெரிஞ்சி,புரிஞ்சி, செரிச்சிக்கிட்டத ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி சிம்ப்ளிஃபை பண்ணி சொல்றேன்.  ஆசையே உலகதுன்பங்களுக்கு காரணம். நீ ஆசைப்படறதால எதுவும் வந்து சேரப்போறதில்லை. சில நேரங்கள்ள ஜஸ்ட் நம்ம வில் பவரால சிலதை சாதிக்க முடியலாம். ஆனால் அது ஹாட் வாட்டர் ஊத்த கழுவி வச்சிருக்கிற ஃப்ளாஸ்க்ல ஊத்தின ஐஸ் வாட்டர் மாதிரி. காலம் தன் ஏற்பாட்டின் படி தன் வேகத்துல ஃப்ளாஸ்கை கவிழ்த்துட்டு தான் ஊத்த நினைச்ச   ஹாட் வாட்டரை ஊத்திருது. ஃப்ளாஸ்க் டமாலாயிருது.

 நீ தேடிப்போறது கிடைக்காது. கிடைச்சாலும்  நாறிப்போயிருவ. தானா வர்ரது கிடைக்காம போகாது. அது கிடைக்காட்டாலும் நஷ்டமில்லே.

உங்களுக்கு இந்த ஸ்தூல உலகத்துல நிறைஞ்சிருக்கிற ஸ்தூலமான ஆபத்துகளே முழுசா தெரியாது. ஆனால் சூக்ஷ்ம உலகம் வேற ஒன்னிருக்கு அதுக்கு ஒரு அஜெண்டா இருக்கு.அதுல கை வச்சி திருத்தற கெப்பாசிட்டி ஒரு கடவுளுக்குதான் உண்டு. கடவுள் ஒன்னும் கலைஞர் இல்லே எவனெவன் பாராட்டு விழாவுக்கு வந்தானு கணக்கு போட்டு ஃபேவர் பண்ண.

ஒருத்தன் பசி,பட்டினி,சொறி,சிரங்குமா அவதிபடறான்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் இருக்கும். அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

ஒருத்தன் பெண்டாட்டியால இம்சை பட்டு  கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன்னு ஏறியிறங்கறான்னா அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

இதுக்கெல்லாம் வேர் ஜோதிட சாஸ்திரத்துல இருக்கு. வாழ்க்கைல மனுஷங்களுக்கு வர்ர ஏன்?எதுக்கு? எப்படி?ங்கற கேள்விக்கெல்லாம் இதுல பதில் இருக்கு.

ஜோதிஷம் ஆன்மீக பயணத்தின் முதல் படி
இதன் இறுதி இலக்கு ஆன்மீகம்.

( என்ன தலை தலை கிர்ருனு சுத்துதா? எனக்கும் தான் .. என்ன செய்ய சில சமயம் சில ஆவிங்க வந்து எழுதுரா இதைனு தலைல உட்கார்ந்துக்கிட்டு எழுதவச்சுருதுங்க. நாம ஜஸ்ட் ஃபுட்பால் மாதிரி. எது எதை நோக்கி உதைச்சாலும் ஓடறதுதானே வேலை. )

உனக்கு 22 எனக்கு 32 தொடர் கதை

மாயாவோட கவனம் அந்த புது பிரஜை மேல திரும்பிருச்சு. இது ஒருவித ஜெலஸ கொடுத்தாலும் நான் என் ஆராய்ச்சியை தொடர்ந்துக்கிட்டே இருந்தேன்.இதென்னடா  எவனோ ஒரு அரசியல் தலைவன் தோத்துப்போயிட்டா இவன் என்னத்த அந்த  தோல்வியை  ஆராய்ச்சி பண்றதுனு நீங்க கடுப்பாகலாம்.

இதே கேள்வி ஒரு தடவை மாயா கிட்டே இருந்து கூட வந்தது. அன்னைக்கு ஏறக்குறைய எங்களுக்குள்ள ஒரு விவாதமே நடந்தது.

அப்போ மாயாவுக்கு மூணாவது மாசம். சாதாரணமா மனுஷன் ஒரு பொருளோ,மனிதரோ அவெய்லபிளா இருக்கிற வரை அது மேல/அவர் மேல  அந்த அளவுக்கு அக்கறை காட்டமாட்டான். அதை இழந்த பிறகோ அது லேசா ஸ்பாயில் ஆனப்பவோ /அந்த மனிதரோட ரிலேஷன் டிஸ்டர்ப் ஆனப்பவோ அதை நெக்லெக்ட் பண்ணிட்டமோனு ரொம்பவே ஃபீல் ஆயிருவாங்க. அதுக்கப்புறம்  அதுமேல கொஞ்சம் எக்ஸ்ட் ரா கேர் எடுத்துக்குவாங்க.

அதுலயும் என்.டி.ஆர் வந்து என் ரத்தம்,சதைல , நரம்புல, ஏன் ஒவ்வொரு அணுவுலயும் கலந்துட்ட பார்ட்டி. இதெல்லாம் ஸ்தூலமான விஷயம் கிடையாது. சைக்கலாஜிக்கல்.

அதனால ஒரு வித கில்ட்டில எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கிட்டேன்.. என் உத்தேசம் ஒன்னுமில்லே அவரோட தோல்விக்கான காரணங்களை தோண்டி எடுத்து அவருக்கு அனுப்பிரனும். அவ்ளதான் என் மைண்ட்ல இருந்தது. இது  அவருக்கு செய்யற  உதவிங்கற எண்ணமில்லே. அவர் ஜெயிச்சுரனும். அவ்ளதான். 

அவர் நடிகரா இருந்தப்பவோ, அவர் கட்சி ஆரம்பிச்சு ஜெயிச்சு வந்தப்பவோ அவரை பத்தி முழுக்க தெரிஞ்சிக்கனுங்கற எண்ணமெல்லாம் கிடையாது. அவர் ஒரு லெஜண்ட். அவர் சரித்திரத்துல தோல்விங்கறது கிடையாதுங்கற எண்ணத்துல ஓரளவு நெக்லெக்ட் பண்ணேனு கூட சொல்லலாம் .

அவரோட தோல்விய அனலைஸ் பண்ற சாக்குல அவரை முழுக்க தெரிஞ்சிக்கனுங்கற துடிப்பு வந்து பக்கத்து மாவட்டங்கள்ள  இருக்கிற லைப்ரரிங்க மேல யெல்லாம் படையெடுக்கிறது. என்.டி.ஆர் பத்தின செய்திகளை சேகரிக்கறதுமே வேலையா இருந்த காலம். அதுக்காக ரொட்டீனை விட்டுட்டு போற பாவத்தெல்லாம் கிடையாது. வாரத்துல ஒரு நாள். சேகரிப்பு. தினசரி ராத்திரி ஒரு மணி நேரம் சார்டிங். அனலைசிங் அவ்ளதான்.

மாயாவோடது லேட் ப்ரக்னன்ஸி+ ஃபர்ஸ்ட் ப்ரக்னன்சிங்கறதால அவளுக்குள்ள எனென்னமோ பயங்கள் ,சந்தேகங்கள் நானும் என்னால ஆன மட்டும் தைரியம் சொல்லிக்கிட்டுதான் இருந்தேன். ஆனால் நாளுக்கு நாள் அவளோட கேள்விகள் அதிகமாச்சே தவிர குறையற மாதிரி காணோம். பெட் ரூம்ல நைட் லேம்ப் வெளிச்சத்துல  நான் ஏதோ பழைய பேப்பரோட ஜெராக்ஸை சீரியசா படிச்சு குறிப்பெடுத்துக்கிட்டிருக்கிற நேரம்  மாயா , முகேஷ்! முகேஷ்! னு கூப்டுக்கிட்டே இருந்தாள். நான் "மாயா! வில் யு ஷட் அப்"னேன்.

அவ்ளதான் மாயா பயங்கர கடுப்பாயிட்டா ' என்னடா நீ என்ன நினைச்சிட்டிருக்கே உன் மனசுல ?  என்.டி.ஆர்னா ஒரு நல்ல நடிகர் நானும் ஒத்துக்கறேன். கட்சிய ஆரம்பிச்ச சில மாசத்துல  ஆட்சிய பிடிச்சு கின்னஸ் புக்ல கூட இடம் பிடிச்ச பார்ட்டி ஒத்துக்கறேன். அந்தாளு  தோத்துப்போனதுல எனக்கும் வருத்தம் தான். அதுக்காக கட்டின பெண்டாட்டி வாயும் வயிறுமா இருக்கேன். முகேஷ்.. முகேஷ்னு கூப்டுக்கிட்டே இருக்கேன் .பதில் பேசமாட்டேங்கறே .. மறுபடி கூப்டா வில் யு ஷட் அப்ங்கறே..அப்போ நீ இத்தனை நாள் காட்டின அன்பு,காதல் எல்லாம் பொய்யா"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டா.

எனக்கும் பயங்கர கடுப்பு நான் படிச்சிக்கிட்டிருந்த விஷயம் அப்படி..அதை கடைசில சொல்றேன். முதல்ல சிகரட் பாக்கெட்டை தேடி ஒரு சிகரட்டை எடுத்து பத்த வச்சுக்கிட்டேன். ஆழமா ஒரு தம் இழுத்துட்டு பேசஆரம்பிச்சேன்.

"த பாரு மாயா ! நான் தமிழ்காரன். நீ தெலுங்குக்காரி. என் கூட பழக ஆரம்பிக்கறதுக்குமுந்தி உனக்கு சுட்டு போட்டாலும் தமிழ் வராது. ஏதோ என் கூட பழகி தமிழ்ல டபுள் மீனிங் டைலாக் பேசினா கூட புரிஞ்சிக்கிற ரேஞ்சுக்கு தேறிட்ட.   நம்மை சேர்த்து வச்சது நான் கத்துக்கிட்ட தெலுங்கு. என் தெலுங்கு அவர்கிட்டே இருந்து வந்தது,,  என்னடா இவ நம்மை விட பெரிய வயசா இருக்காளே இந்த காதல் கல்யாணத்துல முடியுமானு யோசிக்காம ப்ரொசீட் ஆனேனே.. அந்த தன்னம்பிக்கை வந்தது அவர் கிட்டே இருந்து தான். உன்னை கவர்ந்த என்  சுய கவுரவம், ஓரளவாவது விடா முயற்சி, ஓரளவுக்காவது டிசிப்ளின் இதெல்லாம் வந்ததும் அவர் கிட்டே இருந்துதான்.

 ஒரு நாள் உங்கப்பாவ பத்தி ஒரு விஷயம் சொன்னே.உன்னை பெண் பார்க்க வர இருந்தவங்களுக்கு உன் காதலன் ஏதோ கச முசானு லெட்டர் போட்டுர அவிக வராமயே போயிட்டாங்க. நீ கொல்லைப்புறம் போய் துணி துவைக்கிற  கல் மேல உட்கார்ந்து அழுதுக்கிட்டிருந்தே. அப்போ உங்கப்பா வந்து உன் தலை மேல கைய வச்சு "யம்மாடி நீ அழாதடா.. நான் செத்து பிறந்துவரதுக்கு லேட்டாயிரும் . அதனால ஒன்னு பண்றேன் . நான் செத்து ஒரு நல்ல பையன் மனசுல புகுந்து உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு தரேன்னு சொன்னாருன்னே. பேசிக்கிட்டே இருக்கும் போது என் கைய எடுத்து உன் தலை மேல வச்சிக்கிட்டு ஆனந்த கண்ணீர் விட்டே. உன்னை  எனக்குள்ள உங்கப்பாவ ஃபீல் பண்ண செய்த மெச்சூரிட்டி, ஃபாதர்லி நெஸ் இதையெல்லாம் கொடுத்தது என்.டி.ஆர்.  இப்போ படிச்சிக்கிட்டிருக்கேனே அவரோட வாழ்க்கை இதுதான்  என் ஆன்மீகத்துக்கு கூட பிள்ளையார் சுழி போடப்போகுது . சிம்பிளா சொன்னா ஏற்கெனவே பல தரம் சொன்னமாதிரி என்னோட ஐடியல் ஹி. சின்னப்பசங்களுக்கு சூப்பர் மேன் மாதிரி, ஜெய் ஹனுமான் மாதிரி என்.டி.ஆர் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் தோத்து போவாருனு நான் கனவுல கூட நினைக்கலே. அவர் தோத்த் போனதை என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியலை.

 யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி  நான் என்.டி.ஆரா மாறி பல காலமாச்சு. அவரோட ஃபார்முலாதான் என் ஃபார்முலா. அவர் வெற்றி என் வெற்றினு ஆகிப்போச்சு. அவர் ஜெயிச்சே ஆகனும். இல்லேன்னா சைக்கலாஜிக்கலா நான் நொறுங்கி போயிருவன். அப்படி நான் நொறுங்கி போனா பரவாயில்லேன்னா இன்னும் கத்து..  என் பிரச்சினை உனக்கு சைல்டிஷா தோணலாம். இருந்தாலும் அதை புரிஞ்சிக்கிட்டு என்னை என் போக்குல விட்டுரனும் . அதான் காதல். . உன்னோட கற்பனை பயங்களை  நான் ஒதுக்கி தள்ளலையே மூணுமாசமா மூவாயிரம் தடவை  அதே கேள்விகளை கேட்டாலும் புதுசா கேட்ட மாதிரி பாவிச்சு உனக்கு பதில் சொல்லிட்டு தானே இருந்தேன்.  உன் குரலுக்கு  நான் ரெஸ்பாண்ட் ஆகலன்னா என்னையும் மீறி, உன் மேலான ஈர்ப்பையும் மீறி வேறு ஏதோ கான்செப்ட் என்னை கட்டிப்போட்டிருக்குன்னு புரிஞ்சிக்கிட வேணா . "

மூச்சு விடாம நிதானமான குரல்ல நான்  பேசினதை மாயா கண் சிமிட்டாம பார்த்துக்கிட்டே  இருந்தா. மெதுவா என்னை நோக்கி நடந்துவந்து  "ரியலி  சாரிடா"ன்னாள்.

"மாயா யு டின்ட் ஹேவ் கமிட்டட் எனி சின்.யு நீட் நாட்  பெக் ஃபர் சாரி.   நான் இவ்ள நேரம் பேசினதெல்லாம் ஜஸ்ட் என்னை புரிஞ்சிக்க சொல்லி நான் வச்ச வேண்டு கோள். இந்த சமுதாயம் வேணம்னா என் பெர்சனாலிட்டிய மட்டும்  மட்டும் பார்க்கலாம். இந்த வார்த்தை முகமூடிங்கற அர்த்தத்தை தரக்கூடிய ஒரு  வேர் சொல்ல இருந்து வந்த வார்த்தை. ஆனால் நீ என்னோட பெட்டர் ஹாஃப் இல்லியா உனக்கு என்னோட அசலான முகம் தெரியனுமில்லியா. என்  நொய்மை, பலகீனங்கள் தெரியனும்லியா அதனாலதான் இவ்ள நீளமா பேசினேன்.. "

மாயா தன்னிச்சையா என் மார்ல முகத்தை புதைச்சுக்கிட்டாள். இந்த சம்பவத்துக்கப்புறம் இந்த விசயத்துல எங்க ரெண்டு பேருக்குள்ள எந்த விவாதமும் வந்ததில்லே.

சில சமயம் கலாய்ப்பதுண்டு. "ஆமாடா அன்னைக்கு என்னவோ யத்பாவம் தத்பவதி நான் தான் என்.டி.ஆர் அது இதுனு டயலாக் பேசினே. அவர் விடியலுக்கு  முந்தி ரெண்டரைக்கு எந்திரிச்சு யோகா பண்ணுவாராம். நீ என்னடான்னா எட்டரைக்கு தானே எந்திரிக்கிறே."

"அந்த நேரத்துல குருவுக்கும் சிஷ்யனுக்கு வித்யாசமிருக்கனும்ல அதான் விட்டு வச்சிருக்கேன்"னு கழண்டுக்குவேன். 

தமிழ் சினிமாலன்னா காலண்டர் காகிதங்கள் படபடத்திருக்கும். ஒரே சீன்ல எங்க பையன் ஸ்ரீராம் கான்வென்ட் வேன்ல ஏறிக்கிட்டு  டாட்டா சொல்லியிருப்பான். 

ஆனால் வாழ்க்கைனு பார்க்கறப்ப கால சக்கரம் ரொம்ப நிதானமாதான் சுழலுது. நாலு வருஷங்கள் ஓடினது நாலு யுகம் மாதிரி தெரிஞ்சது.

 நம்ம டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல  ரெண்டு பஸ் நாலு பஸ்ஸாச்சு. மக்கள்ள ஒரு க்ரூப்  52 பேரோட சேர்ந்து போறத விட தங்கள் குடும்பம் மட்டும் சேர்ந்து போனா போதும்னு நினைக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு டாட்டா சுமோ, ரெண்டு ட்ராக்ஸ் வாங்கி சேர்த்தோம். மேனேஜ்மென்டுக்கு ஆள்  தேவைப்பட ஸ்டுடியோல ஒர்க் பண்ற சந்தீப் தன் அப்பாவை ரெகமண்ட் பண்ணான்.. கொஞ்சம் அதிகமா பேசினாலும் பழைய ட்ரைவர்ங்கறதால நல்ல சர்க்கிள் இருக்குனு தெரிஞ்சது. அவரோட பொறுப்புல விட்டோம்.

இதற்கிடைல சந்தீப்போட  காதல் எபிசோட் . சின்னதா பஞ்சாயத்து பண்ணி கல்யாணம் செய்து வச்சோம். ட்ராவல்ஸ்ல ரிசப்ஷனின்ஸ்டா சேர்ந்த மீரா கொஞ்சமா பணம் சேர்த்து வச்சிருக்கிறதா சொல்லி வீடு வாங்க உதவி கேட்க மாயா ஸ்ட் ராங்கா ரெகமண்ட் பண்ண ஒரு லட்ச ரூபா ஒரு ரூபா வட்டிக்கு கொடுக்க ஏற்பாடு செய்தேன் .மீரா இன்னும் சின்சியரா வேலை செய்ய ஆரம்பிச்சா.

லோக்கல் பேப்பரும் சிக்கலில்லாம போய்க்கிட்டிருந்தது.ஆமுதால முரளி முதல்ல இதென்னடா ஓசி பேப்பருன்னு அசால்ட்டா இருந்தது நிஜம்தான். ஆனால் பிஸினஸ் டெவலப் ஆக ஆக  ஸ்டேட்டஸ் ஜாஸ்தியானதால பெரிய சர்க்கிள் எல்லாம் நம்ம பேப்பர்ல விளம்பரம் தர ஆரம்பிச்சாங்க. வருமானம் கூட என்.டி.ஆர் என் ஞான தந்தைனு ஒரு சீரியல ஆரம்பிச்சோம். கட்சி சர்க்கிள்ளயும் நம்ம பேப்பர் பிரபலமாக ஆரம்பிச்சது.  ஏம்பா .. உங்க பேப்பரை ஃப்ரீயா வாங்கிக்க கில்ட்டியா இருக்குப்பா .. ஒரு ரூபா விலை வைக்கலாமில்லையானு நிறைய பேர் சொல்ல ஆரம்பிச்சாங்க.
அதையும் அப்ளை பண்ணோம். பேட்டை சரவணன்னு ஒருத்தர் அறிமுகமாக அவரை சர்க்குலேஷனுக்கு அப்பாயிண்ட் செய்தேன். அவர் ஜில்லா ஜில்லாவ போய் ஒர்க் அவுட் பண்ண சர்க்குலேஷன் பிச்சிக்கிச்சு. மேஜர் டெய்லீஸ்ல விளம்பரம் தர சந்தாவும் நல்லாவே சேர ஆரம்பிச்சாங்க. இந்த கான்செப்ட் சக்ஸஸ் ஆனத பார்த்து நிறைய பேரு ஸ்டார்ட் பண்ணி பாதில விட்டாங்க.

ஸ்ரீராம் பிறந்து 3 மாசம் ஆகறதுக்குள்ளயே அப்பா "டே முகேஷு.. இதுக்கு முன்ன மாதிரி இப்ப தள்ளல. ரவுண்ட் தி க்ளாக்கெல்லம் என்னால ஆஃபீசுல இருக்க முடியாது"ன்னிட்டாரு. பாட்டியும், அப்பாவும் ஸ்ரீராம பார்த்துக்கறதாவும் மாயா பழைய படி  ஆஃபீஸ் வரதாவும் அரேஞ்ச் பண்ணிக்கிட்டோம்.

மானில அரசியல் கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிக்க ஆரம்பிச்சது. சப்சிடி ரைஸோட விலை ஏறுச்சு. என்.டி.ஆரோட ஸ்கீம்ஸ் எல்லாம் உடைப்புக்கு போக ஆரம்பிச்சது. என்.டி.ஆரும் தான் எம்.ஜி.ஆருக்கு டூப்ளிக்கேட் இல்லேன்னு நிரூபிக்கிற விதமா எதிர்கட்சி தலைவரா கூட தன் முத்திரைய பதிக்க ஆரம்பிச்சாரு. கூடவே ரெண்டு படம் கூட பண்ணாரு. ஆனால் எதுவும் பேர் சொல்லல.   மறுபடி பழைய அத்யாயம் அரங்கேறுச்சு. முதல்வர் மாறினாரு. புது முதல்வர் சப்சிடி ரைஸ் வாங்கறவன்லாம் ஏழையில்லே போலி  ரேஷன்  கார்டுகள் அதிகமா இருக்குனு சொல்லி  சர்வேக்கு ஆர்டர் போட்டு ரேஷன்  கார்டுகளை பறிமுதல் பண்ணாரு  .மக்கள் மத்தில ஆளுங்கட்சி மேல அதிருப்தி அதிகமாச்சு. என்.டி.ஆர் நல்லாவே கீர் போட ஆரம்பிச்சாரு.

இதுக்குள்ள என்.டி.ஆர் தோல்விய பத்தின என் ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது. நீட் ரிப்போர்ட் ஒன்னு ப்ரிப்பேர் பண்ணி வீட்டு விலாசத்துக்கு ரெஜிஸ்தர் தபால்ல அனுப்பினேன். மறுதபால்ல " என் மேலும், கட்சி மேலும், மானில முன்னேற்றத்தின் மேலும் அக்கறை கொண்டு தாங்கள் மேற்கொண்ட ஆய்வும், முயற்சியும் பாராட்டுக்குரியன. முதல் கட்டமாக தாங்கள் தெரிவித்திருக்கும் யோசனைகளில் சிலவற்றை அமல் செய்கிறோம். பிற யோசனைகளை நேரம் வரும்போது நிச்சயம் அமல் செய்வோம்னு என்.டி.ஆர் கையெழுத்தோட லெட்டர் வந்தது.

இந்த கடித பிரதியை பத்திரிக்கைகளுக்கும் கொடுத்தோம். விஷயம் தெரிஞ்சு ஜகன் (சுயேச்சை எம்.எல்.ஏ) கூப்பிட்டனுப்பினார். நீ யாருக்கு டெடிக்கேட்டடா இருக்கேங்கறது முக்கியமில்லப்பா. ஐ பௌ டு யுவர் டெடிகேஷன். காலம் வரும். நிச்சயம் நீ என் பக்கத்துல இருப்பேனு வாழ்த்தினார்.

என்.டி.ஆர் லோக்கல் பார்ட்டி மெஷினரிக்கும் ஏதோ சிக்னல் கொடுத்தாப்ல இருக்கு அவிக கூப்டு அனுப்பினாங்க. பிரச்சார கமிட்டில ஏதோ மெம்பர் மாதிரி ஏதோ சப்பயான போஸ்டிங் போட்டாங்க. நமக்கு கட்சி,கட்சி பதவியா முக்கியம். தலைவரோட வெற்றிதான் முக்க்கியம்னு ஏத்துக்கிட்டேன். தொகுதிக்குள்ள சுத்தி வந்து  லோக்கல் வி.ஐ.பி களோட போக்கால ஹர்ட் ஆகி  கட்சில இருந்து ஒதுங்கியிருந்தவுகள எல்லாம் மொபிலைஸ் பண்ணேன்.  ஜகன் சாருக்கே ஒரு கட்டத்துல எரிச்சலாயிருச்சுன்னா பார்த்துக்குங்களேன்.

அப்பதான் வளையாபதினு என் அண்ணனோட ஃப்ரெண்ட் ஒருத்தர் என்.டி.ஆர் மறுபடி சி.எம் ஆகனும்  அவ்ளதானே வா நாம கே.வி சார் கிட்டே போலாம்னாரு.

போய் பார்த்தா அவர் ஒரு ஜோசியர். எனக்கு புஸ்ஸுனு ஆயிருச்சு. அவர் முகத்துல மூக்குதான் பிரதானமா இருந்தது.

(தொடரும்)